வரலாற்றுப் பிழையான ஜெயமோகன்: விகடன் தடம் நேர்காணலுக்கு தமிழ்நதி எதிர்வினை

தமிழ்நதி  ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ‘தடம்’ இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெயமோகன். “முதலில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை… எந்தவோர் அரசும் தமக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது.” இனப்படுகொலை குறித்து எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாத ஒருவரால்தான் இவ்வாறு மொண்ணைத்தனமாக பேச இயலும். இனப்படுகொலை என்றால் என்ன என்பதை வரையறுப்பதற்குக் காரணமான ஆர்மீனிய … Continue reading வரலாற்றுப் பிழையான ஜெயமோகன்: விகடன் தடம் நேர்காணலுக்கு தமிழ்நதி எதிர்வினை

#புத்தகம்2016: ‘எல்லாக் கனவும்போல இதுவுமொரு கனவாயிருந்துவிடக்கூடாதா?’ பார்த்தீனியம் நாவலிலிருந்து…

தமிழ்நதி இருந்தாற்போல சுபத்திரா கதைக்கத் தொடங்கினாள். வயிற்றுக்குள் புரட்டிக்கொண்டிருக்கும் வாந்தியை ஓங்காளிக்கும் வேகத்துடன் சொற்கள் சீறிவந்தன. “இந்தியனாமி யாழ்ப்பாணத்தைப் பிடிச்சாப்பிறகு கொஞ்சச் சனங்கள் அகதிமுகாமிலை இருந்து திரும்பித் தங்கடை வீடுகளுக்கு வந்திட்டுதுகள். நாங்கள் இரவிலை வீட்டிலை படுக்கிறேல்லை. இரவுச் சாப்பாட்டை முடிச்சிட்டு பக்கத்து வீட்டை போயிடுறனாங்கள். அங்கைதான் படுக்கை. அண்டைக்குப் போறதுக்குக் கொஞ்சம் பிந்திப் போச்சுது. இரவு எட்டு மணியிருக்கும். றெயில்வே லைன் பக்கம் நாய் குலைச்சுச் சத்தம் கேட்டுது. அவங்கள்தானெண்டு தெரியும். வீடு வீடாய்ப் போய் … Continue reading #புத்தகம்2016: ‘எல்லாக் கனவும்போல இதுவுமொரு கனவாயிருந்துவிடக்கூடாதா?’ பார்த்தீனியம் நாவலிலிருந்து…

விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம்

தமிழ்நதி முள்ளிவாய்க்காலிலிருந்து நாங்கள் ‘விடுவிக்கப்பட்டதாக’ அரசு உலகுக்கு அறிவித்தபோது சாவின் கவிதைகளை எழுதிக்கொண்டிருந்த துப்பாக்கிக் கருந்துளைகளின் முன் கைகளை உயர்த்தியபடி ‘ஆமென் சுவாமி’என்றோம். பிறகு முட்கம்பி வேலிகளுள் விடுதலையானோம். கூரைகளைப் பிடுங்கிக்கொண்டு வழங்கப்பட்ட கூடாரங்களுள் ஒன்றுபோலவே நெளிந்துகொண்டிருக்கிறார்கள் புழுக்களும் குழந்தைகளும் ‘விடுவிக்கப்படுவதன்’முன் போராளிகளாக இருந்த பெண்களை நகக்குறிகளுடனும் பற்தடங்களுடனும் முகாமின் மூலைகளில் சடலங்களாகக் கண்டுபிடிக்கிறோம் ஆயினும் புத்தர் சாட்சியாக எதையும் நாங்கள் பார்க்கவில்லை! எங்களது விடுதலையை எப்போதும்போல சளைக்காமல் பிரகடனம் செய்துகொண்டிருக்கிறது அரசு. வதைமுகாம்களின் சுவர்களில் தெறிக்கிறது … Continue reading விடுவிக்கப்பட்டவர்களின் இரகசிய வாக்குமூலம்