வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வன்னியர் இடஒதுக்கீடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. … Continue reading வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம்

பாசிசத்தை ஒழிக்க வந்த பாசிஸ்டுகள்: வாசுகி பாஸ்கர்

வாசுகி பாஸ்கர் நடந்து முடிந்த தேர்தல் நேரத்தில், "பாசிச பாஜக வந்துடும்" என்று சொல்லிக்கொண்டே பல பேர் பாசிஸ்டுகளாக மாறியிருந்தார்கள். இதை தேர்தல் நேரத்திலேயே எழுதியிருக்கலாம், ஒரு பாதகமுமில்லை. ஆனால் தங்களின் முகநூல் பதிவுகள் மூலம் தான் மக்கள் திரண்டுபோய் வாக்களிப்பதாக நம்பிக்கொண்டிருந்த பலர் ஏற்படுத்திய கருத்துருவாக்கத்திற்கு நானும் மதிப்பளித்து, இதை தேர்தல் முடிவடைந்ததும் எழுதுவது என்று திட்டமிட்டுக்கொண்டேன். அம்பேத்கரை அம்பேத்கரின் எழுத்துக்கள் வாயிலாகவே புரிந்துக்கொள்ள நாம் முயன்றோமானால், ஜனநாயகம் / அதிகாரம், இவையிரண்டையுமே அவர் எப்படி … Continue reading பாசிசத்தை ஒழிக்க வந்த பாசிஸ்டுகள்: வாசுகி பாஸ்கர்

துரைமுருகனின் ஜாதிய உணர்வு திமுகவுக்கு எதிரி!

வேந்தன். இல ஆரம்பத்திலிருந்து விசிக திமுகவின் கூட்டணியில் இணைவதை முகம் சுழித்த பார்வையோடே துரைமுருகன் அவர்கள் பார்த்து வருவது அவரது பேச்சின் வாயிலாக எளிமையாக தெரிந்து கொள்ளலாம். 'இன்னும் கூட்டணியே முடிவாகல..' 'இன்னும் தாலியே கட்டல..' போன்ற நக்கல் தொணி பேச்சுகள் எல்லாம் கடைசி நேரத்தில் கூட விசிக வை தவிர்த்துவிட முடியாதா என்ற அவரின் ஏக்கத்தை தான் வெளிப்படுத்துகின்றன. அவரது கறார் வாதப்படியே 'கூட்டணி என்பது தொகுதி உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு தான் அது கூட்டணி' … Continue reading துரைமுருகனின் ஜாதிய உணர்வு திமுகவுக்கு எதிரி!

இந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஜி. கார்ல்மார்க்ஸ் இப்போது என்ன நடக்கிறதோ அதேதான் நடந்திருக்கும். இந்த நீட் போன்ற தரப்படுத்துதல்கள் எல்லாம் நாம் அனுமதித்திருக்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஒரு அங்கம். மன்மோகன் சிங்கைப் பற்றி நமக்குத் தெரியும். தனது எஜமானர்கள் காலால் இட்டதை தலையால் செய்யும் மாண்புடையவர் அவர். ஆனால் பிராந்தியக் கட்சிகளின் தயவுடன் ஆட்சியில் இருக்கிறபோது, இவ்வளவு மூர்க்கமாக இதை செயல்படுத்தியிருக்க முடியாது. பல மக்கள் விரோத நடவடிக்கைகள் சென்ற காங்கிரஸ் அரசால் முன்னெடுக்க முடியாமல் போனதற்கு அரசியல் ரீதியாக … Continue reading இந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

’நீட் தேர்வு – மாணவர்களை நட்டாற்றில் விடக்கூடாது’

அரசியல் லாபத்திற்காக நீட் தேர்வில் தமிழக மாணவர்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை நட்டாற்றில் தள்ளிவிடும் பாவத்தை தமிழக அரசு செய்யக்கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை பாதுகாப்பதற்கான இந்த … Continue reading ’நீட் தேர்வு – மாணவர்களை நட்டாற்றில் விடக்கூடாது’

அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி?: விசாரணை தேவை

அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக ரூ.1000, ரூ.500 தாள்களை செல்லாது என அறிவித்த மத்திய அரசின் திட்டம் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக எதிர்மறை திசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றை வைத்துப் பார்க்கும் போது எந்த பயனும் ஏற்படாது என்றே தோன்றுகிறது. இந்தியாவில் ரூ.8.58 லட்சம் கோடி மதிப்புள்ள 1716.50 … Continue reading அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி?: விசாரணை தேவை

காவிரி வாரியம் : கர்நாடகத்தின் குரலாக  ஒலித்து தமிழகத்திற்கு துரோகம் செய்வதா?

“காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை  நாளைக்கும் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், வாரியத்தை அமைக்க முடியாது என்றும், அதுதொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இம்முடிவு கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: < div>பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்சினை குறித்து 1990 … Continue reading காவிரி வாரியம் : கர்நாடகத்தின் குரலாக  ஒலித்து தமிழகத்திற்கு துரோகம் செய்வதா?

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிலேயே அதிமுகவுக்கு ஆதரவு நிலை: ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாளே வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு சாதகமாகவும், மற்ற கட்சிகளுக்கு பாதகமாகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்கள் அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக … Continue reading உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பிலேயே அதிமுகவுக்கு ஆதரவு நிலை: ராமதாஸ்

பாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்?

அண்மையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலித் மாணவர்கள் மீது சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமையை கடைப்பிடிப்பதாக இரண்டு ஆசிரியர்கள் மீது பள்ளி மாணவர்கள் புகார் அளித்தனர். அவர்கள் இருவரையும் பள்ளியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய கல்வி துறை அதிகாரிகளிடம் ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவர்கள் பேசினர். வன்னியர் சாதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற ஆசிரியர் தலித் மாணவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்குவதாகவும் … Continue reading பாமக தொண்டருக்கு 9-ஆம் வகுப்பு மாணவி ஐயிட்டமாகத் தெரிகிறார்: பெண்களின் பாதுகாப்புக்கு யாரால் அச்சுறுத்தல் திரு. ராமதாஸ்?

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்

தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி குரல் கொடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப் பட்டது. இந்தக் கடிதத்தில் ராமதாஸ் எழுதியுள்ளவை:   வணக்கம்! தமிழ்நாட்டின் இன்றைய பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்கவும், பெண்கள் பாதுகாப்புக்காகவும், பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுக்குமாறு உங்களை … Continue reading தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ராமதாஸ் கடிதம்

“குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா  மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். “குடிசை கொளுத்தியே வெளியேறு” “சாதிவெறிக்கு சிவப்பு கம்பளமா?” போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டம் செய்தனர். … Continue reading “குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்திய சாதிய கட்சியைச் சேர்ந்த அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேன்யூவில் பேசுவதா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேஎன்யூ  மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித். ஓபிசி ஃபாரம் ஏற்பாடு செய்திருந்த சமூக நீதி குறித்த கருத்தரங்கில் பேச அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் காலித் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மபுரி எம்பியான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து … Continue reading “தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்

ராமதாஸின் நாடகக் காதல் பட்டியல்: ”வெத்துப் பேப்பர்ல எழுதி வெச்சிக்கிட்டு எத்தனை நாளைக்கு பீலா விடுவீங்க” ஆதவன் தீட்சண்யா

அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாமக நிறுவனர் ராமதாஸ், நாடகக் காதல் தமிழகத்தில் எங்கெல்லாம் நடந்துள்ளது என பட்டியல் போட்டிருந்தார். அதுகுறித்து நியூஸ் 7 சேனலுக்கு அளித்த பேட்டியில் எழுத்தாளரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளருமான ஆதவன் தீட்சண்யா, “வெத்துப் பேப்பர்ல எழுதி வெச்சுக்கிட்டு எத்தனை நாளைக்கு பீலா விடுவீங்க. பட்டியல் காட்டுங்க” என பேசியுள்ளார். இணைப்பில் உள்ள வீடியோவில் பாருங்கள். https://www.facebook.com/news7tamil/videos/1408767645852106/

கருத்து: ’பொதுவானவர்’களின் அமைதிக்கு என்ன காரணம்?

செம்பறை வார்த்தைகளே இல்லை என்பார்களே, அதைவிட மிகுதியான அதிர்ச்சியில் உறையவைக்கின்றன, பெண்கள் மீதான அண்மைய வன்கொடுமைகள்! தஞ்சை சாலியமங்கலம் எனும் ஊரில் கலைச்செல்வி எனும் இளம்பெண் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம், அவரின் படுகொலை! அந்தக் கொடுமை ஏற்படுத்திய துயரத்தின் வாட்டம் நீங்கிவிடாத நிலையில், விழுப்புரம் நவீனாவின் மரணச்செய்தி! இரண்டு நிகழ்வுகளுமே அப்பட்டமான பாலினரீதியிலான கொடிய வன்முறை; பாதிக்கப்பட்டவர்கள், அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாத அடித்தட்டுப் பிரிவினர்..! கடந்த இரண்டு நாட்களாக இச்சம்பவங்களை கவனிப்பவர்கள் கலங்கிப்போய் இருக்க.. வழக்கம்போல இதிலும் … Continue reading கருத்து: ’பொதுவானவர்’களின் அமைதிக்கு என்ன காரணம்?

“மாயாவதியை இழிவுபடுத்தும் பா.ஜ.க.  தலைவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது!”

மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக தலைவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியை  அம்மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் தயாசங்கர் சிங் தனிப்பட்ட முறையில் தரம்  தாழ்ந்து விமர்சித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத் தக்கது. இதற்காக பாரதிய ஜனதா தலைமை  வருத்தம் தெரிவித்ததுடன், தயாசங்கரை கட்சியிலிருந்தும் நீக்கியிருப்பது சரியான நடவடிக்கையாகும். அரசியல் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை … Continue reading “மாயாவதியை இழிவுபடுத்தும் பா.ஜ.க.  தலைவரின் பேச்சு கண்டிக்கத்தக்கது!”

கோயில் திருவிழாவில் வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு; காரணம் ‘சாதி’!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற சிவனடியார் தமிழில் பாட முயன்றதற்காக தீட்சிதரால் அடித்து வீசப்பட்டார். பல ஆண்டுப் போராட்டங்களுக்கு பின் நீதிமன்றம் சென்று, திருச்சிற்றம்பல மேடையேறி தமிழில் பாட அரசாணையும் கிடைத்து அவர் பாடியபோது, 5000 ஏக்கர் கோயிலை கழுவி தீட்டு கழித்தனர். அந்த ஆறுமுகசாமி வன்னியர். அவருக்காக ஆலய பிரவேசத்திற்கான போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானவர்களில் மூவர் விசிக வினர்.  இந்த நிலையில்,  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள குமாரபாளையம் கோயில் விழாவில் கரகம் … Continue reading கோயில் திருவிழாவில் வன்னியர்கள் கரகம் எடுக்க நாயுடுக்கள் எதிர்ப்பு; காரணம் ‘சாதி’!

சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி. வீரலட்சுமி 14083 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளருக்கு அடுத்த படியாக வந்துள்ளார். மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வீரலட்சுமி போட்டியிட்டார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. ஆர். சரஸ்வதியின் வெற்றியை இவர் வெகுவாக பாதித்திருக்கிறார். சரஸ்வதி 90, 000 வாக்குகளும் திமுக வேட்பாளர் 1லட்சத்து 11 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். கி.வீரலட்சுமி குறித்து … Continue reading சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!

காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவனை தோற்கடிக்க காங்கிரஸ் வேட்பாளர் பாமகவுடன் ரகசிய பேரம்!

வி.சி.க தலைவர் தொல்.திருமாவின் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் எதிர்த்து போட்டியிடும் மணிரத்னம் என்பவரை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். காங்கிரஸ், பாமக என மாறி மாறி வருபவர். இப்போது காங்கிரஸ் சார்பில் திருமாவளவனை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இப்போது அவர் பா.ம.க வின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து தனக்கு வாக்களிக்க பேரம் பேசி வருவதாகக் கேள்வி. அரசியலில் தேர்தல் நேரத்தில் உருவாகும் கூட்டணிகள் இடையே வெளியில் சொல்லப்படாத சில ஒப்பந்தங்கள், நிர்பந்தங்கள் இருக்கும். இந்த திரைமறைவு பின்னணி வேலைகள் வாக்களிப்பின் போதும் … Continue reading காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவனை தோற்கடிக்க காங்கிரஸ் வேட்பாளர் பாமகவுடன் ரகசிய பேரம்!

அண்ணா அறிவாலயத்திலும் அம்மா ஆலயத்திலும் எழுதப்படும் கருத்துக் கணிப்புகள்!

“மழைக்காலத்தில் முளைக்கும் காளான்களைப் போல தேர்தல் காலத்தில் கருத்துக்கணிப்புகளை நடத்தி வெளியிடுவதற்காக ஏராளமான கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் கடை விரிக்கின்றன. உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வார்க்கப்படும் தோசைகளைப் போல, இந்த கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் தங்களின் அரசியல் முதலாளிகளின் விருப்பப்படி கருத்துக்கணிப்பு முடிவுகளை தயாரித்து வெளியிடுகின்றன. இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும்” கருத்துக் கணிப்புகள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. முழுவதும்... “சென்னை லயோலா கல்லூரி சார்பில் ஒரு காலத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் கிட்டத்தட்ட சரியாக இருந்தன. … Continue reading அண்ணா அறிவாலயத்திலும் அம்மா ஆலயத்திலும் எழுதப்படும் கருத்துக் கணிப்புகள்!

மரத்தை வெட்டு; அமைச்சரின் கார் கண்ணாடி உடை! மாற்றம்-முன்னேற்றம்-பாமக!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டபேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் நத்தமேடு, மோட்டாங்குறிச்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.  அமைச்சரை இந்த கிராமங்களுக்குச் செல்லவிடாமல்  பாமகவினர் பனை மரங்களை வெட்டி சாலையில் போட்டும் கற்களை போட்டும் தடுத்தனர். அதோடு, அமைச்சரின் கார் மீது கல்லெறிந்ததில் கார் கண்ணாடி உடைந்துள்ளது. இந்த தாக்குதலில் அமைச்சருடன் வந்த ஒரு சிலருக்கு காயம் ஏற்பாட்டதாக கூறப்படுகிறது. இதனையெடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினரின் … Continue reading மரத்தை வெட்டு; அமைச்சரின் கார் கண்ணாடி உடை! மாற்றம்-முன்னேற்றம்-பாமக!

அன்புமணிக்கு சொந்தக் கார்கூட இல்லை; மனைவிக்கோ ரூ. 32 கோடி சொத்து!

பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி தனது வேட்புமனு தாக்கலின்போது சொன்ன சொத்துகள் பற்றிய விவரம்: கையிருப்பு 50 ஆயிரம் ரூபாய். தங்க நகைகள் உள்பட 30 லட்சத்து 1‌2 ஆயிரத்து 915 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் அன்புமணி கூறியுள்ளார். சொந்தமாக கார் இல்லை; அசையா சொத்துகளும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். அன்புமணியின் மனைவி சௌமியாவிற்கு கையிருப்பு 55 ஆயிரம் ரூபாய் எனவும், தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்கள் என 6 கோடியே … Continue reading அன்புமணிக்கு சொந்தக் கார்கூட இல்லை; மனைவிக்கோ ரூ. 32 கோடி சொத்து!

சாலை விபத்தால் தவித்த பாமக நிர்வாகி குடும்பத்துக்கு உதவிய திருமாவளவன்!

25.4 2016 சிதம்பரதில் இருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் வழியில் திருநாரையூர் என்னும் இடத்தில் சாலை விபத்தில் அடிபட்டு கணவன் மனைவி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அரைமணி நேரமாக யாரும் உதவிக்கு வராமல் மயங்கி கிடந்த அவர்களை மீட்டு தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் வாகனத்தில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அரசியல் களத்தில் சாதி அரசியலுக்காக விசிக எதிர்க்கும் பாமகவின் நிர்வாகி அவர் என்று பின்னர் தெரியவந்துள்ளது. தகவல்: அகரன்

விஜயகாந்தை எதிர்த்து களமிறக்கப்படும் பாமக வழக்கறிஞர் பாலு: சிறு குறிப்பு

விஜயகாந்துக்கும் பாலுவுக்கும் ஏழாம் பொருத்தம். விஜயகாந்த் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் தமிழகம் எங்கும் பயணம் செய்தார். அப்போதைய கூட்டங்களில் கடுமையாக பாமக வழக்கறிஞர் பாலு  குறித்து பேசுவார். பாலுவும் தொலைக்காட்சி விவாதங்களில் விஜயகாந்தை காய்ச்சி எடுப்பார்.  பாமகவின் கோட்டையை கைப்பற்றி விட்டோம் என விஜயகாந்த் பேசியதையும், மக்களவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த பாமக, தங்களுக்காக தேர்தல் பணியாற்றவில்லை என்பதையும் பரஸ்பரம் காரணங்களாக கூறிகொள்கின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் … Continue reading விஜயகாந்தை எதிர்த்து களமிறக்கப்படும் பாமக வழக்கறிஞர் பாலு: சிறு குறிப்பு

”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!

2013-ஆம் ஆண்டு ராமதாஸுக்கு கருப்புக் கொடி காட்டி, அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த 10 எண்ணிக்கைக்குள் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் கட்டுப்பாட்டையும் மீறி ”தே...பசங்களா! க...பசங்களா!” எனக் கூறி நீண்ட கட்டையை எடுத்து அடிக்கப் பாய்கிறார் இரா. அருள். இவர் பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர். தற்போது பாமக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.  ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத பொழுதே, காவல்துறையினரை மிரட்டி கட்டுப்படுத்தி தங்கள் கட்சித் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை … Continue reading ”தே…பசங்களா! க…பசங்களா!” என ராமதாஸுக்கு கருப்புக்கொடி காட்டியவர்களை அடிக்கப் பாய்ந்த இரா. அருள், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர்!

எங்கிருந்து வந்தது முதலை? விளம்பர தட்டியில் தெறிக்க விட்ட பாமகவினர்…

பாமக திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் நேற்று அக்கட்சியின் , மதுரவாயல் தொகுதி செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடந்த தனியார் திருமண மண்டபத்திற்குள் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டியில் "முதலமைச்சர் வேட்பாளர்" என்பதற்கு பதிலாக "முதலை"மைச்சர்,  என்று எழுதப்பட்டிருந்தது கூட்டத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது .   கூட்டத்திற்கு வந்த மாவட்ட செயலாளர் டெல்லி பாபு, அந்த தவறை சுட்டிக்காட்டியதை அடுத்து, பேப்பர் ஒட்டி "முதலை"  மறைக்கப்பட்டது.

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?

வி. சபேசன் சீமான் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு நேர்காணல் சமூக வலைத்தளங்களில் பெருமளவு கிண்டலடிக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் சீமான் தான் எப்படி ஈழத்திற்கு போனேன் என்றும், தலைவர் தனக்கு எப்படி துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளித்தார் என்றும் சொல்கிறார். யாரும் உயிரோடு இல்லை என்கின்ற அசட்டுத் தைரியத்தில் சீமான் சற்று அதிகமாகவே 'ரீல்' விட்டிருப்பது தற்பொழுது சமூகவலைத்தளங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. சீமானுடைய அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சில உண்மைகளை நேர்மையாக ஒத்துக் … Continue reading சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?

தலித் படுகொலை: “அறிக்கை விடாத மத்தவங்களையும் கேளுங்க; எங்களை மட்டும் ஏன் கேட்கறீங்க?”: அன்புமணி ராமதாஸ்

தேவர் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்பதற்காக தலித் இளைஞர் சங்கர், உடுமலைப் பேட்டையில் பகல் நேரத்தில் நடுசாலையில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார். அவர் மணந்த கவுசல்யாவுக்கு அரிவாள் வெட்டுகள் விழுந்தன. இந்த சம்பவம் குறித்து உங்களுடைய கருத்தென்ன என்று பாமக நிறுவனர் ராமாதாஸிடம் தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “இதைவிட எவ்வளவு செய்தி இருக்கு அதைப் போடுங்க” என்று சொல்லி கிளம்பினார். இதையும் படியுங்கள்: ’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் … Continue reading தலித் படுகொலை: “அறிக்கை விடாத மத்தவங்களையும் கேளுங்க; எங்களை மட்டும் ஏன் கேட்கறீங்க?”: அன்புமணி ராமதாஸ்

’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் பேசலாம்”தலித் இளைஞர் படுகொலைப் பற்றி ராமதாஸ் கருத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதி சங்கர், கவுசல்யா ஆகியோரை நடு சாலையில்  பகல் நேரத்தில பல பேர் முன்னிலையில் மூன்று பேர் படுகொலை செய்தனர். சாதி மறுத்து தலித் இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் கவுசல்யாவின் தந்தை, இந்த படுகொலைகளை ஆள் வைத்து செய்ததாகச் சொல்லி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸிடன் இந்த படுகொலை குறித்து நியூஸ் 7 நிருபர்  வேலூரில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது கருத்து கேட்டிருக்கிறார்கள். … Continue reading ’எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கேன்..மொதல்ல இதப் போடுங்க; பிறகு அதபத்திப் பேசலாம்”தலித் இளைஞர் படுகொலைப் பற்றி ராமதாஸ் கருத்து

’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!

கதிர்வேல் 1. பிரேமலதா பேச்சு சூப்பர்ப். 2. கேப்டன் ஒருவழியா சஸ்பென்சை உடைச்சதுல நிம்மதி. 3. ஸ்டாலினோட ஓவர் கான்ஃபிடன்ஸ் பலூன்ல ஊசி குத்திருக்கார் கேப்டன். 4. கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலைன்னா, தேர்தலுக்கு அப்புறம் சம்மதிக்க போறீங்க என்பது கேப்டன் மெசேஜ். 5.தேமுதிக இதனால் இழக்க எதுவும் இல்லை. 6. திமுக இதனால் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கிறது. 7. இன்னும் நேரம் இருக்கிறது திமுக இறங்கிவர. 8. ஈகோ தடுத்தால் அம்மாவுக்கு அதிர்ஷ்டம். 9. … Continue reading ’கூட்டணி ஆட்சிக்கு இப்ப சம்மதிக்கலனைன்னா அப்புறம் சம்மதிப்பீங்க’ என்பது கேப்டனின் மெஸேஜ்!

ஊர் சுவரில் ஒட்டியதுபோக பெயர்ப்பலகையை ஆக்கிரமித்த ”அன்புமணி ஆகிய நான்…”

அண்மையில் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணியை முன்னிலைப்படுத்தி வெளியிடப்பட்ட போஸ்டர் சோளிங்கர் அருகே ஐப்பேடு கிராம பெயர்ப் பலகையின் மேல் ஒட்டப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு தாங்கள் மாற்றாக இருப்போம் என சொல்லிக்கொள்ளும் பாமக, அதே வழியில் பொது இடங்களிலும் அதற்கு மேலே போய் பெயர்ப் பலகையிலும் போஸ்டர் ஒட்டியிருப்பதை சமூக ஊடகங்கள் பகடி செய்கின்றன. படம்:Surendran Sugi

எதிர்க்கட்சிகளே இல்லாத தமிழ்நாடு!

தேமுதிக திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த் அதிமுக அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். தேமுதிகவின் மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்தும் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கடுமையாகப் பேசினார். இந்த மாநாடு முடிந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்றும்கூட கருதாமல் தேமுதிக அதிப்ருதி எம் எல் ஏக்கள் உள்பட அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த 10 பேர் பதவி விலகினர். தேமுதிகவை சேர்ந்த விருதுநகர் எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன், திட்டக்குடி தொகுதி உறுப்பினர் தமிழழகன், திருத்தணி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியன், பேராவூரணி … Continue reading எதிர்க்கட்சிகளே இல்லாத தமிழ்நாடு!

“திமுகவுக்கு தினமலர் தீவிர ஆதரவாமே? திமுக திருந்திவிட்டதா அல்லது தினமலர் கெட்டு விட்டதா?”

“தேர்தலுக்குப் பிறகு பாமக இருக்காது” என திமுக துணை பொதுச் செயலாளர் சொன்ன கருத்து தினமலர் நாளிதழ் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துகொண்ட அவர், தினமலர் நாளிதழை கடுமையாக பகடி செய்துள்ளார். https://twitter.com/drramadoss/status/697308690525736960 https://twitter.com/drramadoss/status/697308597936521216 https://twitter.com/drramadoss/status/697308300249968640 https://twitter.com/drramadoss/status/697308024860377088  

’சுப்ரமணியம் சுவாமியின் சக்கர வியூகம்: திமுக வைக் காட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்வதே!’

நரேன் ராஜகோபாலன் மேலாண்மை புத்தகங்களில், கிழக்கில் முக்கியமான ஒரு புத்தகம் சுன் ட்சு(Sun Tsu) எழுதிய Art of War. சுன் ட்சு ஒரு ராணுவ ஸ்ட்ராடஜிஸ்ட், அவர் கிட்டத்திட்ட கி.முவில் எழுதிய புத்தகம் இன்றளவும் மேலாண்மை பைபிள்; குறிப்பாக எதிரிகளை வீழ்த்துகின்ற வியூகங்களையும், யுக்திகளையும் உள்ளடக்கிய மனித குல வரலாற்றின் முக்கியமான புத்தகம். அதன் ஐந்தாவது அத்தியாயம் - சக்தி (Energy). அதில் ஒரு முக்கியமான வாசகம் வரும் “The whole secret lies in … Continue reading ’சுப்ரமணியம் சுவாமியின் சக்கர வியூகம்: திமுக வைக் காட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்வதே!’

மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?

அ. மார்க்ஸ் 1.ஏப்ரல் 25, 2013 அன்று மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டிற்கு அச்சசங்கத்தினர் சென்ற போது மரக்காணத்தில் நடை பெற்ற சாதிக்கலவரத்தில் கொல்லப்பட்ட பா.ம.க வைச் சேர்ந்த செல்வராஜ் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் கொலைக் குற்றத்தை உறுதி செய்து ஆறு தலித்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க நிறுவனர் தீர்ப்பை வரவேற்றுள்ளார். வி.சி.க தலைவர் திருமாவளவன் தீர்ப்பை ஏற்கவில்லை; தண்டிகப்பட்டவர்கள் அப்பாவிகள் எனக் கூறியுள்ளார். இது விசாரனை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு. … Continue reading மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?

சமூக வலைதளம்: ’ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் கேட்கும் ராமதாஸ் ஆணும் பெண்ணும் காதலிப்பதை அங்கீகரிப்பாரா?’

“ஓரினச் சேர்க்கையாளர்களை ஏன் அங்கீகரிக்கக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் - சரியான கேள்வி... ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்!” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். https://twitter.com/drramadoss/status/694038217180340224 ராமதாஸின் பதிவுக்கு முகநூலில் வந்த எதிர்வினைகள்... Nagaa Athiyan முதலில் ஒரு ஆணும்,பெண்ணும் சுதந்திரமாய் காதல் செய்வதை அங்கீகரிக்க அரசியல்வாதியான நீங்கள் சிந்திக்க வேண்டும்! Prakash JP அவர் சொல்லவந்தது ஒரே சாதியை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர்களாக இருக்கும்.. :)) முகப்புப் படம்: இளவரசன் என்கிற தலித்தை … Continue reading சமூக வலைதளம்: ’ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் கேட்கும் ராமதாஸ் ஆணும் பெண்ணும் காதலிப்பதை அங்கீகரிப்பாரா?’

உயிர்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி: தேமுதிக, பாமக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக டைம் ஆஃப் இந்தியா செய்தி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புத்துயிரூட்டப்பட்டிருப்பதாகவும், பா.ம.க.வுக்கு 70 இடங்களையும், தே.மு.தி.க.வுக்கு 113 இடங்களையும் ஒதுக்க பாரதிய ஜனதா முன்வந்திருப்பதாகவும், மீதமுள்ள இடங்களில் அக்கட்சி போட்டியிடவுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.   இந்தச் செய்தி குறித்து மறுப்பு வெளியிட்டுள்ளது பாமக. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதன் மூலம் பா.ம.க மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை குலைக்க முடியாது; பா.ம.க. ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முடியாது; … Continue reading உயிர்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி: தேமுதிக, பாமக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக டைம் ஆஃப் இந்தியா செய்தி!

சாதிச்சட்டையை உரிக்க பிரயத்தனப்படும் பாமக: உண்மையில் சாதிக் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியுமா?

Sivasankaran Saravanan விழுப்புரத்தில் பாமக வின் மண்டல மாநாடு. மருத்துவர் ராமதாஸ், பாமக ஒரு சாதிக்கட்சி இல்லை என்பதை ஒரு சில உதாரணங்களோடு விளக்கிக்கொண்டிருந்தார். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை அது, தான் ஒரு சாதிக்கட்சி இல்லை என்பதை நிறுவுவதற்கு பிரயத்தனப்பட்டதே இல்லை. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சாதிக்கட்சி என்கிற அந்தஸ்தை அது விரும்பவில்லை. டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிற … Continue reading சாதிச்சட்டையை உரிக்க பிரயத்தனப்படும் பாமக: உண்மையில் சாதிக் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியுமா?

விஜயகாந்த் எந்த வகையில் மாற்று அரசியல் செய்கிறார்? ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா?

கார்ல் மாக்ஸ் தொண்ணூறுகளில் வடமாவட்ட கிராமங்களில் பயணம் செய்ய வாய்ப்பிருந்தவர்கள் கவனித்திருக்கலாம். திமுக, அதிமுக கொடிக்கம்பங்களுக்குப் பிறகு விஜயகாந்தின் ரசிகர்மன்ற போர்டுகள் எல்லா ஊர்களிலும் இருக்கும். ஊடகங்கள் எல்லாம், ரஜினியின் புகழை ஊதிப்பெருக்கிக் கொண்டிருந்த அதே தொண்ணூறுகளில், யதார்த்தத்தில் கிராமங்களில் புகுந்திருந்தது விஜயகாந்த் தான். தென்மாவட்டங்களில் அவர் ஒரு மதுரைக்காரர் என்ற பிம்பம் சாதாரணமாகவே அவர்மீதான ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களில் கவனிக்கத்தக்கவை என்றால் ஒன்று, பாமக திராவிடக் கட்சிகளுடன் … Continue reading விஜயகாந்த் எந்த வகையில் மாற்று அரசியல் செய்கிறார்? ஊழலிலா, வாரிசு அரசியலிலா, சமூகநீதி சார்ந்த மாற்றுப் பார்வையிலா?

தேமுதிகவுடன் பாஜக நெருக்கம்: பாஜகவை வெட்டிவிட்ட பாமக!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜனும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும்  தேமுதிக தலைவர் விஜயகாந்தை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். இந்த திடீர் சந்திப்பு அரசியல் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாரதிய ஜனதாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.  திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போது ராமதாஸ் இப்படி சொல்லியிருக்கிறார். தேசிய ஜனநாயக் கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலை சந்தித்த தேமுதிகவும் பாமகவும் தேர்தல் முடிந்த பிறகு ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டுகளை … Continue reading தேமுதிகவுடன் பாஜக நெருக்கம்: பாஜகவை வெட்டிவிட்ட பாமக!