வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர் காசிபாண்டியன் திமுகவில் இணைந்தார். திமுக தலைமைக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் திமுகவில் இணைந்தார் காசிபாண்டியன். கோபி, நாங்குநேரி பாமக வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு பாமக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!

கோபிச்செட்டிப்பாளையம் பாமக வேட்பாளர் குப்புசாமி, செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். வெள்ளிக்கிழமை நாங்குநேரி வேட்பாளர்  திருப்பதி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. குப்புசாமி இதுபற்றி பேசியபோது, அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு பாமக தேர்தல் அறிக்கையைவிட அதிக ஆதரவு கிடைத்ததால் அதிமுகவில் இணைந்ததாகக் கூறினார்.

பாமக சிவகாசி வேட்பாளராக கவிஞர் திலகபாமா!

கவிஞர் திலகபாமா, பாட்டாளி மக்கள் கட்சியின் சிவகாசி வேட்பாளராக அரசியலில் களமிறங்கியிருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்தத் தொகுதி பாமக சிவநாதபாபுவுக்கு மாற்றாக திலகபாமாவை அறிவித்துள்ளது பாமக தலைமை.