”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்”

”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசின் செயலற்ற தன்மையை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகுக்கே உணவு படைத்து வாழ வைக்கும் கடவுளராக போற்றப்படும் விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும் இறக்கும் கொடுமை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய முதலமைச்சரும், அமைச்சர்களும் அதை செய்யாமல், தங்கள் … Continue reading ”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்”

“தர்ம யுத்தம் தொடரும்”!

"தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் எது நடக்கக் கூடாது என நல்லவர்கள் நினைத்தார்களோ, துரதிருஷ்டவசமாக அது தான் நடந்திருக்கிறது. தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான பாமகவின் தர்ம யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்த தேர்தலில் பா.ம.கவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள … Continue reading “தர்ம யுத்தம் தொடரும்”!

விருத்தாச்சலம் பிரச்சாரக்கூட்டத்தில் தொண்டர்கள் மரணம்: ஜெயலலிதா சொல்லும் காரணமும் எதிர்க்கட்சியினரின் கண்டனமும்

இரக்கம் அற்ற அரக்க குணம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று விருத்தாசலத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உரை ஆற்றிய பிரச்சாரக் கூட்டத்தில், நான்கு பேர் உயிர் இழந்தனர் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்தக் கூட்டத்திற்கு ஆள் திரட்டுவதற்காக ஆயிரக்கணக்கான வண்டிகளில் ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்தனர். சுட்டெரிக்கும் நெருப்பு வெய்யிலில் காலை 10 மணிக்கே அவர்களை உட்கார வைத்தனர். வெய்யிலின் கொடுமை தாங்காமல் நிழல் தேடிச் செல்ல முனைந்தபோது, அண்ணா திமுகவினரும், காவல்துறையினரும் அவர்களைத் … Continue reading விருத்தாச்சலம் பிரச்சாரக்கூட்டத்தில் தொண்டர்கள் மரணம்: ஜெயலலிதா சொல்லும் காரணமும் எதிர்க்கட்சியினரின் கண்டனமும்

“ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது; ஆனந்த விகடனும் தி இந்துவும்தான் உதாரணங்கள்” ராமதாஸ் கடும் தாக்கு

பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை தி. நகரின் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஊடகங்கள் அனைத்தும் திமுக ஆதரவு ஊடகங்களாக மாறிவிட்டன; ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகிறது என குற்றம்சாட்டினார். அப்போது நிருபர்கள், “ஜனநாயகம் விலை போய்விட்டதாக எதை வைத்துச் சொல்கிறீர்கள்” எனக் கேட்டனர். அதற்கு, “ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது, அடிச்சி. அடிச்சி அடிச்சி சொல்றேன். ஆனந்தவிகடன் குழுமம், தி ஹிந்து அதுக்கு உதாரணங்கள்” என்றார். அதற்கு … Continue reading “ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது; ஆனந்த விகடனும் தி இந்துவும்தான் உதாரணங்கள்” ராமதாஸ் கடும் தாக்கு

அடிக்கடி தொலைபேசியில் ‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா’ என பேசி எரிச்சலூட்டுகிறார்: ராமதாஸ்

“ஜெயலலிதா வாட்ஸ்-அப் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா?” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வினவியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராத முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யும், தேனும் கலந்து தயாரிக்கப்பட்ட ஓர் உரையை ‘வாட்ஸ்-அப்’பில் படித்தார். உண்மையை குழிதோண்டி புதைத்து விட்டு, அரசியல் லாபம் தேடும் ஒற்றை நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த … Continue reading அடிக்கடி தொலைபேசியில் ‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா’ என பேசி எரிச்சலூட்டுகிறார்: ராமதாஸ்

கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழகம் பரபரத்துக்கொண்டிருக்க, முதல்வர் வேட்பாளர் இங்கே கபடி விளையாடுகிறார்!

பாமக நிறுவனரும் அப்பாவுமான ராமதாஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ‘தீவிர’மாக ஈடுபட்டிருக்க, அவருடைய மகனும் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் ரிலாக்ஸாக கபடி ஆடுகிறார். சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி ஒன்றியம் மாத்தையாம்பட்டியில் கபடி போட்டியை தொடங்கி வைத்து, கபடி போட்டியில் அன்புமணி பங்கேற்று விளையாடிய வீடியோ இதோ... http://www.youtube.com/watch?v=VO283bK-WBg

ஜல்லிக்கட்டு போராட்டம் ரத்து; திமுக முடிவை பகடி செய்யும் பாமக

“ஜல்லிக்கட்டு பிரச்சினையில் மத்திய அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதத்தை ஒத்தி வைப்போம்” என திமுக தலைவர் மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது என்று உச்ச நீதி மன்றம் 7-5-2014 அன்று தீர்ப்பளித்ததோடு, கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் உச்ச நீதி மன்றம் ரத்து செய்து விட்டது. கடந்த ஆண்டு இந்தத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து 12-1-2015 அன்று அதுபற்றி நான் அறிக்கை விடுத்தேன். … Continue reading ஜல்லிக்கட்டு போராட்டம் ரத்து; திமுக முடிவை பகடி செய்யும் பாமக

உலக வர்த்தக மாநாட்டு உடன்படிக்கை இந்திய விவசாயத்தை அழிக்கும். இதோ காரணங்கள்…

கென்யத் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 10 ஆவது அமைச்சர்கள் மாநாட்டில் கடந்த 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக ஏற்கனவே இந்தியாவில் விவசாயம் பாதிக்கப்பட்ட காரணமாக இருந்த உலக வர்த்தக அமைப்பு, இப்போது இந்தியாவில் உழவுத் தொழிலையும், உணவுப் பாதுகாப்பையும் அடியோடு ஒழிக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. உலக அளவில் வணிகத்தை பெருக்குவதற்காக 1995-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட … Continue reading உலக வர்த்தக மாநாட்டு உடன்படிக்கை இந்திய விவசாயத்தை அழிக்கும். இதோ காரணங்கள்…

Video: “தரமான நிருபரா ஆகுங்க” சாதிச் சங்கம் குறித்த கேள்விக்கு ராமதாஸ் பாய்ச்சல்

இளையராஜாவிடம் பீப் பாடல் பற்றி கேள்விக் கேட்தற்கு அவர் பதிலளித்த விதம் சர்ச்சையானது. இதுபோல் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு நிருபர் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் நடத்தியிருக்கிறார்.  இந்த விடியோவைப் பாருங்கள்... http://www.youtube.com/watch?v=GwrhMUIwmR0  

தேமுதிகவுடன் பாஜக நெருக்கம்: பாஜகவை வெட்டிவிட்ட பாமக!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜனும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும்  தேமுதிக தலைவர் விஜயகாந்தை சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். இந்த திடீர் சந்திப்பு அரசியல் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாரதிய ஜனதாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.  திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போது ராமதாஸ் இப்படி சொல்லியிருக்கிறார். தேசிய ஜனநாயக் கூட்டணி கடந்த மக்களவைத் தேர்தலை சந்தித்த தேமுதிகவும் பாமகவும் தேர்தல் முடிந்த பிறகு ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டுகளை … Continue reading தேமுதிகவுடன் பாஜக நெருக்கம்: பாஜகவை வெட்டிவிட்ட பாமக!

அவசியம் படியுங்கள்: “இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஊழல் பணம் வசூலிக்கப்படுவது யாருக்காக?”

“சென்னை மற்றும் புறநகர் பகுதிகளையும், கடலூர் மாவட்டத்தையும் மூழ்கடித்த மழை, வெள்ளத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், 15 நாட்களாக அவர்களை எட்டிக்கூட பார்க்காத ஜெயலலிதா இப்போது வாட்ஸ்-அப் மூலம் அவர்களின் துயரத்தை நினைத்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவின் ஆறுதலைக் கேட்கும் போது, துக்க வீட்டில் கொலை காரன் வந்து ஆறுதல் கூறும் போது என்ன உணர்வு ஏற்படுமோ, அதே உணர்வு தான் ஏற்படுகிறது.” என தமிழக முதல்வர் வெளியிட்ட வாட்ஸ் அப் … Continue reading அவசியம் படியுங்கள்: “இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஊழல் பணம் வசூலிக்கப்படுவது யாருக்காக?”

“ரூ.40 கோடிக்கு சாப்பாடு செலவு: வெள்ள நிவாரணத்திலும் ஊழலா?”

“கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மட்டும் ரூ.40 கோடி செலவாகியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மழை ,வெள்ள நிவாரணப் பணிகள் எதுவுமே நடக்காத நிலையில் அதற்காக ரூ.100 கோடி செலவழிக்கப் பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், “வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் … Continue reading “ரூ.40 கோடிக்கு சாப்பாடு செலவு: வெள்ள நிவாரணத்திலும் ஊழலா?”

‘வெள்ள பாதிப்புக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண உதவி போதுமானது அல்ல!’

“தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை அரசு அறிவித்திருக்கிறது. வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த நிவாரண உதவி யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதை விட மிகவும் குறைவாகும். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது”