அயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டு பெண்கள் மீது தேச துரோக வழக்கு!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பில் அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பு குறித்து ‘வன்முறையை தூண்டும் விதத்தில்’ பேசியதாகவும் மதத்தின் பெயரால் இரு சமூகங்களுக்கிடையே பகையைத் தூண்டியதாகவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரு பெண்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் தகவல்படி, சாயிதாபாத்தைச் சேர்ந்த ஜிலி ஹுமா, அவருடைய தங்கை சபிஸ்டா ஆகியோர் உஜாலேசா ஈத்காவில் பெண்கள் சந்திப்பில் ‘வன்முறையை தூண்டுவிதத்தில் பேசியதோடும், முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர். அதே இடத்தில் பாபர் மசூதி கட்டுவோம் என்றும் ராமர் கோயிலை இடிப்போம் என்றும் அவர்கள் பேசினர்” என்கிறார் சாயிதாபாத் ஆய்வாளர் கே. சீனிவாஸ்.

இந்துக்களுக்கு ஆதரவாக ஆயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஹூமா விமர்சித்ததாகவும் போலீசு தரப்பு கூறுவதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாயிதாபாத் துணை ஆய்வாளர் தீன் தயால் சிங், நிகழ்விடத்தில் இருந்ததாகவும் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 124A, 153A, 505, 295 மற்றும் 109ன் படி தேச துரோகம், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துக்கு எதிராக  தூண்டுதல் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

முசுலீம்களுக்கு எதிராக நாளொரு மேனி வெறுப்புப் பிரச்சாரங்கள் செய்யும் இந்துத்துவ காவிகளுக்கு ‘பாராட்டுக்கள்’ ஆளும் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில், தாங்கள் பெரும்பான்மை சமூகத்தால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்கிற விரக்தியில் வெளிப்படும் வார்த்தைகளுக்குக்கூட தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படுவது, முசுலீம் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. 

”கம்யூனிஸ்ட் தலைவர் டி. ராஜா தன் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும்” ரத்த தாகம் கொண்ட எச். ராஜாவின் பேச்சு

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.  ராஜா, சனிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “டி. ராஜா உண்மையான தேசபக்தராக இருந்தால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும். என் மகள் அந்த ஆர்ப்பாட்டத்தில் நின்றிருந்தால் நான் அதைத்தான் செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். எச். ராஜாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
Arunan Kathiresan

ரத்த தாகம் கொண்ட பா. ஜ. க. வின் எச் ராஜா

“கம்யூனிஸ்டு டி ராஜா தனது மகளை சுட்டுக் கொல்லச் சொல்ல வேண்டும், யெச்சூரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பா ஜ க வின் தேசியச் செயலாளர் எச் ராஜா. ஏனிந்தக் கொலைவெறி ? தோழர் டி ராஜாவின் மகள் “இந்தியாவை உடைப்போம்” என்று கோஷம் போட்டாராம்! அத்தகைய மாணவர்களை
யெச்சூரி ஆதரித்தாராம்! இந்திய கம்யூனிஸ்டுகள் நாட்டின் ஒற்றுமையைக் காப்பதில் தங்கள் இன்னுயிரைத் தத்தம் செய்தவர்கள் என்பதை பஞ்சாபின் வரலாறு சொல்லும். 
பிரிவினைவாத பிந்திரன்வாலா கோஷ்டியை தொடக்கம் முதல் இறுதிவரை எதிர்த்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தாம் என்பதை நாடறியும். காஷ்மீரிலும் பிரிவினைவாதிகளை  எதிர்த்து போராடி வருகிறவர்கள் அவர்கள்தாம்.

ஆனால் பஞ்சாபிலும் காஷ்மீரிலும் பிரிவினைவாதிகளை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளோடு பதவிஅரசியல் ஆதாயத்திற்காக உறவு வைத்திருக்கும் கட்சி சாட்சாத் பா ஜ கதான். பாபர் மசூதியை இடித்து இந்திய மக்களின் மனங்களை மதரீதியாகப் பிளக்க முயன்றதும் பாஜ கதான். அந்தக் கட்சியின் தலைவருக்கு தேச ஒருமைப்பாடு பற்றி எங்களுக்கு புத்திசொல்ல எந்த யோக்யதையும் கிடையாது.

தோழர் டி ராஜாவின் மகள் மட்டுமல்ல ஜே என் யூ மாணவர் தலைவர் கன்னய்யா குமாரும் அத்தகைய பிரிவினை கோஷங்களை எழுப்பவில்லை, அதைச் செய்தது சதிகார பா ஜ க மாணவர் பிரிவுதான் எனும் உண்மை இப்போது வெளியாகியிருக்கிறது. அப்படியும் ரத்த தாகம் கொண்டலைகிறார் பா ஜ க தலைவர். அந்தக் கட்சியின் கோரமுகம் வெளிப்பட்டுப் போனது ; தமிழகத்தின் ஜனநாயகக் கட்சிகள் எச்சரிக்கை கொள்ளட்டும்.

பெத்தப்புள்ளய சுட்டுக்கொல்லச்சொல்லி அப்பனே கேட்கனும்னு சொல்ற இந்த கொலைவெறியனை நம்பி பக்கத்தில படுத்து தூங்கிறாதீங்க, தலையில கல்லைத் துக்கிப் போட்டு கொன்னுப்புட்டு நாட்டுக்காக செஞ்சேன்னு ரீல் விட்டுருவான். மோசடியாக போலி வீடியோவை பரப்பி நாட்டில் அமைதியின்மையையும் பதற்றத்தையும் உருவாக்கியிருக்குற எச்ச ராஜா கும்பல்தான் நாட்டைவிட்டு ஓடணும் இல்லேன்னா நாண்டுக்கிட்டு சாகணும்.

இந்தக் கொலைவெறியும் ரத்தவெறியும் பீதி உண்டாக்குகிறது. இவர்கள் எல்லாம் மனிதர்கள்தானா? ஒரு மனித உயிர் இவர்களுக்கு அத்தனை துச்சமா? இந்தப் பேச்சைவிட வேதனை அளிப்பது இந்த வெறித்தனத்தை ஆதரிக்கவும் இந்த நாட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதுதான்.

அபராஜிதா குறித்து தி டைம்ஸ் தமிழின் பதிவு: தேசவிரோத குற்றவாளியா டி.ராஜாவின் மகள்…?

அபராஜிதாவின் பேச்சு இங்கே: