மங்களூருவில் போலீசு துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் பலி: உறுதி செய்தது போலீசு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூருவில் நடந்த போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் பலியாகியுள்ளனர். இதை மங்களூரு போலீசு உறுதி செய்துள்ளது.

போராட்டங்களை அடுத்து மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை களைக்க போலீசார் முதலில் தடியடி நடத்தியதாகவும், பின்னர் போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வீச்சு சம்பவங்களை தடுக்க துப்பாக்குச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதில் இருவர் பலியானதாகவும் போலீசு தரப்பு கூறுகிறது.

இந்த பலிக்கு பாஜகவினர் உண்டாக்கிய அசாத்திய சூழலே காரணம் என முன்னாள் எம்.எல்.ஏ. தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

‘இரண்டு குஜராத்தி குண்டர்கள்’: மோடி – ஷாவை விமர்சித்தவர் பாஜகவிலிருந்து நீக்கம்!

“இரண்டு குஜராத்தி குண்டர்கள் மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்” என பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த உத்தரபிரதேச பாஜக தலைவர் ஐ.பி. சிங் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து ’நாம் அமைதியாக இருக்கும்போது, இந்தி பேசும் மாநில மக்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக இரண்டு குஜராத்தி குண்டர்கள் ஏமாற்றி வருகிறார்கள்’ என எழுதியிருந்தார்.

‘இந்த நாடு பிரதம அமைச்சரை தேர்ந்தெடுத்ததா அல்லது விளம்பர விளம்பர அமைச்சரை தேர்ந்தெடுத்ததா? நாட்டின் பிரதமர் டீ-சர்ட் மற்றும் தேநீர் கோப்பைகளை விற்பதைப் பார்க்க நன்றாகவா உள்ளது? என வினவுயுள்ளார் அவர்.

இந்த விமர்சனம் காரணமாக திங்கள்கிழமை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டிருக்கிறார் ஐ.பி.சிங். தனது நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் முப்பது ஆண்டுகள் இந்தக் கட்சிக்காக உழைத்திருக்கிறேன். உட்கட்சி ஜனநாயகத்தை இழந்திருக்கும் நிலையில் உண்மையைப் பேசுவதுகூட குற்றம்தான்” எனக் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி வரும்நிலையில், பாஜகவினரில் சிலரும் மோடி -ஷா மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

போர்க்களத்தில், எதிரி பலவீனமாகிற சூழலில்,முன்னேறித் தாக்கி அழிக்கிற உக்தியும்(War of Movement),எதிரி பலமாக உள்ள சூழலில், பின்வாங்கிச் சென்று,தாக்குதலுக்கான தயாரிப்புகளை செய்துகொள்கிற நிலை பதிந்த போர்(War of Position) உத்தியும், போர்க்கள வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற இரு முக்கிய இராணுவ உக்திகளாகும்.

இந்த இராணுவ போர்க்கள உக்திகளை, அரசியல் சூழலுக்கு பொருத்தி,இக்கருத்தாக்கத்தை வளர்ந்த்தெடுத்த கிராம்சியின் புரட்சிகர சிந்தனைகளை இந்துத்துவ பாசிசத்தின் காலத்தில் பகுப்பாய்வு செய்வது பொருத்தமானதாக தெரிகிறது.

1
அரசியல் களத்தில் “நிலைபதிந்த போர்” மற்றும் “முன்னேறித் தாக்கும் போர்” குறித்த சில நடைமுறை உதாரணங்களை முதலில் காண்போம்.

கிழக்கிந்திய கம்பெனியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பின் நாட்டையே முழு காலனியாக மாற்றிய இங்கிலாந்தின் காலனியாதிக்க வரலாற்றை எடுத்துக் கொள்வோம்.1757 ஆம் ஆண்டு முதலாக 1857 ஆம் ஆண்டு வரையிலும், இங்கிலாந்து ஆட்சியாளர்கள் இந்தியாவின் மீது முன்னேறித் தாக்கும் போரை மேற்கொண்டார்கள்.இதற்கடுத்த 90 ஆண்டுகளுக்கு பெரும்பாலும் தனது காலனியாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள, நிலை பதிந்த போர் உக்தியை கையாண்டார்கள்.1900 களின் தொடக்கத்தில் இருந்து 1940 கள் வரையிலும் இந்தியாவில் எழுந்த காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டங்கள், இங்கிலாந்து ஆட்சியாளர்களை நிலைபதிந்த போர் உக்திக்கு தள்ளியது.(இவ்வுதாரணம் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அஹமதுடையது)

1940 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தப் போக்கு, இரண்டாம் உலகப் போரின் தொடக்க காலம் ஆகியவை இந்தியாவை மேலும் காலனியாதிக்க நாடாக நிர்வகிக்க முடியாத நெருக்கடி இங்கிலாந்திற்கு ஏற்பட்டது. இந்த சூழலில் தனது காலனியாதிக்க பிடியை தளர்த்திக் கொண்டு சமரசமாக இங்கிலாந்து பின்வாங்கியது. சமுதாய சக்திகளின் பரஸ்பர உறவில் ஏற்பட்ட மாற்றத்தில் இருந்து இந்த அரசியல் மாற்றமும் ஏற்பட்டது தெளிவு.

ரஷ்யாவில் ஜார் ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் செயல்பாடுகள் தொடக்க காலத்தில் நிலைபதிந்த போர் உக்தியானதாக இருந்தது. புரட்சிகர தயாரிப்பு கட்டங்களில் பல்வேறு மார்க்சிய படிப்பு வட்டங்களின் மூலமாக மார்க்கிய தத்துவத்தை பயின்றது,பின்பு ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியை லெனின் நிறுவியது,ஜார் ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தது என தொடர்ந்தது. அதன் பின்னரும் 1905 தொழிலாளர் எழுச்சியின் தோல்வியிலிருந்து 1911-12 வரையிலும் ஜார் ஆட்சியின் கையே ஓங்கி இருந்தது. இந்த காலகட்டத்தில் பாட்டாளி வர்க்க,விவசாய வர்க்க நேச அணியை ஜார் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரட்டுவதில் போல்ஷ்விக் கட்சி கவனம் செலுத்தியது. சமூகத்தின் அரசியல் உணர்வு மட்டுப்பட்டிருந்த சூழலில் டூமாவில் (ரஷ்யாவின் பாராளுமன்றம்) பங்கேற்கவும் செய்தது.

இந்தக் கட்டம் வரையிலும் முன்னேறித் தாக்கும் போரை மேற்கொள்வதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டிருந்த காலமாக கருதலாம். அதன் பிறகு, முதல் உலகப் போர் வெடித்தவுடன் நாட்டில் ஏற்பட்ட புரட்சிகர அலையானது போல்ஷ்விக் கட்சியின் நிலைபதிந்த போர் உக்தியை கைவிட வைத்தது. சோவியத் எனும் மாற்று அதிகார மையத்தை, ஜார் ஆட்சிக்கு எதிராக நிறுவி ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தை முன்னேறித் தாக்கும் போர் உக்தியின் மூலமாக போல்ஷ்விக் கட்சி கைப்பற்றியது வரலாறாகியது. (இது கிராம்சியின் உதாரணம்)

இத்தாலியில் 1917 ஆம் ஆண்டு முதலாக 1926 ஆண்டு வரையிலான காலகட்டங்களில் பாசிஸ்ட்கள் முன்னேறித் தாக்கும் போரை மேற்கொண்டார்கள். இந்த காலகட்டத்தில் பாசிஸ்ட்கள் டூரிங் தொழிலாளர்கள் எழுச்சியை வன்முறையால் ஒடுக்கினார்கள். பாராளுமன்றத்தை கைப்பற்றினார்கள், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட்களை வேட்டையாடி எதிர் முகாமை நிர்மூலமாக்கினார்கள் அரச நிறுவனங்கள் அனைத்தையும் பாசிசமயமாக்கினர்கள். (இவ்வுதாரணம் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அஹமதுடையது)

அந்தந்த வரலாற்றுக் கட்டத்தில் நிலவுகிற சமுதாய சக்திகளுக்கு இடையேயான பரஸ்பர உறவுகளை கணக்கில் கொண்டும், அன்றைய வரலாற்றுக் கட்டத்தின் நிலவுகிற அரசியல் பொருளாதார கட்டமைப்பு நிலைமைகளைக் கவனத்தில் கொண்டும் முதலாளித்துவ சக்திகள் ஆனாலும் சரி பாசிச சக்திகள் ஆனாலும் சரி புரட்சிகர சக்திகள் ஆனாலும் சரி, ஆட்சி அதிகாரத்தை முன்னேறித் தாக்கி கைப்பற்றுவதா அல்லது தயாரிப்பு செய்துகொள்கிற,தற்காலிக சமரசம் செய்துகொள்ளுகிற நிலை பதிந்த போரை மேற்கொள்வதா என்பதை திட்டமிடுகின்றன, செயல்படுகின்றன.

இந்த வரலாற்று அனுபவத்தில் இருந்து இந்தியாவில் ஆர். எஸ்.எஸ். பாஜகவின் வலதுசாரி நிகழ்ச்சி நிரலை பகுப்பாய்வு செய்யலாம்.

2

இந்தியாவின் இந்துத்துவ பாசிச சக்திகள் தங்களுக்கென இந்து ராஷ்டிர திட்டமென்ற ஒரு அரசியல் வேலைத் திட்டத்தை கொண்டுள்ளார்கள். அது எத்தகைய அழுகிய கருத்துமுதல்வாத கற்பனாவாத தத்துவமாக, மானுட நாகரிகத்திற்கு எதிரானதாக, ஜனநாயகத்திற்கு எதிரானதாக, பிற்போக்கு குப்பைக் கூளமாக இருந்தாலும், ஆர். எஸ். எஸ். சக்திகளைப் பொறுத்தவரை அத்திட்டத்தை அமலாக்குவதை, தன் கடமையாகக் கொண்டுள்ளது. அதற்காக ஊழியர்களைத் தேர்வு செய்கிறது.தனது கருத்துக்களை பிரச்சாரம் செய்வதற்கு தயார் செய்கிறது, ஊர்வல அணிவகுப்பு நடத்துகிறது, பிரச்சார கட்டமைப்பை உருவாக்குகிறது. ஒரு இயக்கமாக, சமூகத்தின் பண்பாடு, கல்வி, கலை இலக்கியம், பொருளாதாரம், தகவல் தொடர்பு என அனைத்து துறைகளிலும் ஊடுருவுகிறது.சிவில் சமூகத்தின் அனைத்து வர்க்கத்தையும் தனது திட்டத்திற்கு உடன்பட அணியப்படுத்துகிறது.

ஆர். எஸ். எஸ். அமைப்பின் அரசியல் முன்னணியாக, முதலில் ஜன சங்கமாகவும் பின்னர் தற்போதைய பாரதிய ஜனதா கட்சியாகவும் செயல்படுகிறது.வெளித்தோற்றத்திற்கு பாஜக தனித்த கட்சி கட்டமைப்பாக தோன்றினாலும், ஆர். எஸ். எஸ். சின் சித்தாந்த வழிகாட்டுதலின் பேரிலேயே பாஜக செயல்படுகிறது. ஆர். எஸ். எஸ். ஒரு அரை-ரகசிய அமைப்பாகவும் பாஜக வெளிப்படையான அரசியல் கட்சியாகவும் இயங்குகிறது. பாராளுமன்ற ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான/தக்க வைப்பதற்கான சட்டப் பூர்வ கட்சியாக செயல்படுகிறது.

ஆர். எஸ். எஸ். அமைப்பு இங்கிலாந்து காலனியாதிக்கத்திற்கு எதிரான தேசிய அலையடிக்கிற காலகட்டத்தில் 1925 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் ஊழியர்களை திரட்டி தன்னை நிலைப்படுத்த, தயார் செய்யத் தொடங்கியது. காந்தி படுகொலைக்கு பின்பான 1948 காலம் முதலாக நேருவின் மறைவு 1964 வரையிலும் காங்கிரசின் இந்திய தேசிய நீரோட்டத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட்களின் பாராளுமன்ற எண்ணிக்கை பலம் மற்றும் தொழிற்சங்க பலத்தால் பெரிதாக செல்வாக்கு செலுத்த முடியாத நிலையில், ஆர். எஸ். எஸ். தயாரிப்பில் கவனம் செலுத்தியே இயங்கியது.

பின்னர் 1970களில் ஏற்பட்ட இந்தியப் பொருளாதார நெருக்கடி அதைத்தொடர்ந்த் எமெர்ஜென்சி காலகட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்துகொண்ட ஆர். எஸ். எஸ்.,தனக்கான வலுவான வெகுஜன அடித்தளத்தை உருவாக்கிக்கொண்டது.

எமெர்ஜென்சிக்கு பிந்தைய தேர்தலில் அமைக்கப்பட்ட ஜனதா அரசாங்கத்தில் முதல்முறையாக பாராளுமன்ற அவையில் இடம்பெற்றது. அரசியல் முன்னணியின் பதவி அதிகார துணையுடன், வெகுஜன செல்வாக்கு பரப்பை, வலைப்பின்னலை வலுப்படுத்தியது. பின்னர் ரத யாத்திரை வடிவத்தை கையிலெடுத்து தனது பிரச்சாரத்திற்கான கருத்தியல் சமூக உடன்பாட்டை உறுதிப் படுத்திகொண்டு, தனது அணிகளை அறைகூவி அழைத்து, அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு என்ற முன்னேறி தாக்கும் போரை நடத்தியது.

பாபர் மசூதி இடிப்பிற்கு பின்னாலான காலங்களில் பாஜக நாடுதழுவிய கட்சியாக பரிணமித்தது.இதன் தொடர் விளைவாக,முதல் முறையாக வாஜ்பாய் தலைமையிலான பாஜகவின் கூட்டணி ஆட்சி அதிகார சகாப்தம் தொடங்கியது. இடையில் காங்கிரசின் தொடர் பத்தாண்டு ஆட்சிக்கு பிறகு 2014 இல் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி 2019 தேர்தலிலும் வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துகொண்டது.

தொகுத்துப் பார்ப்பின், சமுதாய சக்திகளின் பரஸ்பர உறவு அதன் அரசியல் பொருளாதார பிரதிபலிப்பு ஆகியவை ஆர். எஸ். எஸ். இன் முன்னேறித் தாக்கும் போர் உக்தியையோ நிலைபதிந்த போரையோ தீர்மானிக்கின்றது.

ஜனநாயக நீரோட்டங்கள் பலவீனப்படுகிற நிலையில், புறநிலை தனக்கு சாதகமாகிற சூழலில், ஆர். எஸ். எஸ்.-பாஜக, முன்னேறித் தாக்குகிற போரை மேற்கொண்டுவருவதை கண்டு வருகிறோம். அவ்வகையில் 2014-19 கால பாஜக ஆட்சியில் தனது நிலைகளை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, தேசியம், தீவிரவாதம் என்ற கவர்ச்சிகர பிரச்சாரம் மூலமாக சமூக உடன்பாட்டை உருவாக்கிக் கொண்டு பாராளுமன்ற வடிவத்திலும் அதற்கு வெளியிலும் தனது திட்டத்தை தீர்மானகரமான முறையில் அமல் படுத்த முன்னேறித் தாக்கும் போரை மேற்கொண்டு வருகிறது.

மோடி அரசின் முதல் சுற்று ஆட்சி அதைத் தொடர்ந்த இரண்டாம் சுற்று ஆட்சியின் தொடக்க காலத்திலேயே தனது உக்தியை முன்னேறித் தாக்குகிற முறைக்கு மாற்றியுள்ளதாக நாம் அவதானிக்கிறோம். இந்த சில காலகட்டத்தில் அவை மேற்கொண்டவை எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்குவது என்ற முழக்கத்தின் பேரில் காங்கிரசை உடைத்து அதன் வெகுஜன அணிகளை தன்வயப்படுத்துகிற முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது.

நீதிமன்றம், தேர்தல் ஆணையம், மத்திய ரிசர்வ் ஆணையம், கல்வி நிறுவனங்கள உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு நிறுவனங்களை வேகமாக கைப்பற்றிவருகிறது. பெயரளவிலான மாநில அதிகாரங்களை பறித்து, ஒற்றை மைய அரசின் கீழ் அனைத்து அதிகாரத்தையும் மையப்படுத்திக் கொண்டது.

கல்விக் கொள்கையை மாற்றியமைப்பது.

சம்ஸ்கிருத இந்தி மொழியை நாடு எங்கிலும் திணிப்பது.

இட ஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைப்பது

இராணுவத்தையும் அரசையும் கட்சியும் நெருங்கச் செய்வது பின்னர் இணைப்பது.

பசு குண்டர்களின் வன்முறையை நடவடிக்கையை ஊக்கப்படுத்துவது.

அறிவியலுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது.

தேசிய பாதுகாப்பு சட்டம்,UAPA சட்டம் போன்ற ஆள்தூக்கி சட்டங்களை வலுப்படுத்தி, ஜனநாயக செயல்பாட்டை நசுக்க சட்டபூர்வ வடிவத்தை பயன்படுத்துவது.

முத்தலாக் சட்டத்தை அமலாக்கியது

ஆர். எஸ். எஸ். அமைப்பின் நீண்டகால இலக்கான காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு 370 ஐ அராஜகமாக நீக்கியது.அங்கு ராணுவத்தை குவித்து காஷ்மீர் மக்களை அச்சத்தில் வைத்திருப்பது…

என அடுத்தடுத்த முன்னேறித் தாக்கும் உக்தியால் நாடாளுமன்ற ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேவும் தனது திட்டத்தை நடைமுறையாக்குகிற முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது.

ஜனநாயக சக்திகளைப் பொறுத்தவரை, உடனடியாக தனது ஆற்றலை குவிமையப்படுத்தி, பாசிச தாக்குதலுக்கு எதிராக வினையாற்ற இயலாமல் சிதறுண்டு உள்ளன.ஜனநாயக அரசியல் அணியின் பலவீனங்கள் முறையே நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டுவருகிற மசோதாக்களை தடுத்த நிறுத்துகிற அளவில் பெரும்பாண்மை எண்ணிக்கை பலமானது ஜனநாயக சக்திகளுக்கு இல்லாமல் இருப்பது.

நாடாளுமன்றத்திற்கு வெளியே,வெகுஜன மக்களை திரட்டி பாஜகவை தடுக்கிற ஆற்றலும் திட்டமும் எந்தக் கட்சிக்கும் இல்லை.

தேர்தல் அரசியல் களத்தில் முறியடிக்கப்படவேண்டிய சக்தியாக பாஜகவை எதிர்கட்சிகள் மதிப்பிடுவது. பாஜகவை மாநில சுயாட்சிக்கு எதிரான, மாநில மொழிக்கு எதிரான ஒற்றை, மைய ஆட்சியை திணிக்கிற, ஒற்றை மொழியை திணிக்கிற அரசியல் அதிகார சக்தியாக மட்டுமே சுருக்கிப் பார்ப்பது.

பாஜக ஆட்சியின் ஏகாதிபத்திய ஆதரவு, கார்ப்பரேட் ஆதரவு ஆகிய பொருளாதார அம்சங்களை கணக்கில் கொண்டு அதன் இந்து ராஷ்டிர திட்டத்தை சுத்தமாக கவனத்தில் கொள்ளாதிருப்பது.

பாஜகவை மொழி இன பண்பாட்டு மேலாதிக்க சக்தியாக மட்டுமே கவனத்தில் கொண்டு அதன் ஏகாதிபத்திய ஆதரவு-கார்பரேட் ஆதரவு மற்றும் வெகுஜன செல்வாக்கை கவனத்தில் கொள்ளாதிருப்பது.

ஆர். எஸ். எஸ். –பாஜக ஆட்சியானது பாசிசமா,பாசிசப் பண்பை கொண்டுள்ள அரைப் பாசிசமா, சர்வாதிகாரமா போன்ற பல்வேறு தத்துவார்த்த நிலைப்பாடுகளில் ஒத்த கருத்து வர இயலாதது, அதன் முன்னேறித் தாக்குகிற உக்திக்கு எதிரான உடனடி எதிர்வினை நடைமுறைப் போராட்டத்தை மேற்கொள்ளாமல் காலதாமதம் செய்கிறது.

மேற்கூறிய பல்வேறு போக்குகள் வலது புரட்சிக்கு சாதகமாக உள்ளன. வலது புரட்சிக்கு எதிரான ஒன்றுபட்ட பாசிச எதிர்ப்பு -ஜனநாயக திட்டத்தை மேற்கொள்வதற்கு சவாலாக உள்ள காரணிகளாக உள்ளன.

இந்துத்துவ பாசிசத்தின் முன்னேறித் தாக்கும் போருக்கு எதிராக தற்போதைய சூழலில் ஜனநாயக சக்திகள், நிலைபதிந்த போர் உத்தியை மட்டுமே மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏனெனில் இந்திய தேசியம் குறித்த தவறான பொது புத்தி உருவாக்கம், வர்க்கங்களின் பின்தங்கியுள்ள அரசியல் உணர்வு குறிப்பாக நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் பின்தங்கிய அரசியல் உணர்வு, நாடுதழுவிய அளவில் ஜனநாயக சக்திகளுக்கு ஒரு வலைப்பின்னல் இல்லாமை ஆகிய காரணங்களால் பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக போராட்ட சக்திகள் சிறுபான்மையாகவே உள்ளனர்.

பாசிசத்திற்கு எதிரான ஜனநாயகப் போராட்ட உக்திகளும் நீண்ட நெடுங்காலம் பிடிப்பவை.பல நெளிவு சுழிவுகளை கொண்டவை. நமது உடனடி தேவை போல்ஷ்விக் உறுதியும், அமெரிக்க நிபுணத்துவத்தை கொண்ட கட்சியின் வழிகாட்டுதலின் கீழ், ஒருமுகப்பட்ட பிரச்சார முறைகளை நாடுதழுவிய அளவில் மேற்கொள்ளவேண்டியதுதான்.

ஆதாரம்:

கிராம்சி: புரட்சியின் இலக்கணம் – எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா
Fascism and National Culture: Reading Gramsci in the Days of Hindutva- Aijaz Ahmad

அருண் நெடுஞ்செழியன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.

முகப்புப் படம் நன்றி: Anastasya Eliseeva

எக்சிட் போல் முடிவுகள் உண்மையா? உள்நோக்கமுடையதா?

கா. ஐயநாதன்

இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்த சில நிமிடங்களிலேயே “மீண்டும் மோடி ஆட்சியே அமையப் போகிறது” என்று கூறும் வாக்குக் கணிப்பு முடிவுகள் (Exit Poll Results) தொலைக் காட்சிகளில் வெளியாகியுள்ளன.

முன் திட்டமிடப்பட்டுபோல் எல்லா தொலைக்காட்சிகளின் வாக்குக் கணிப்பு முடிவுகளும் மோடியின் தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு அமையும் என்று கூறியுள்ளன.
பாஜக தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணி 247 முதல் 336 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 86 முதல் 168 இடங்கள் வரை பெறும் என்றும் இவ்விருக் கூட்டணிகளிலும் இடம்பெறாத கட்சிகள் 148 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் பல்வேறு தொலைக்காட்சிகளின் வாக்குக் கணிப்புகள் கூறியுள்ளன.

இந்த கணிப்புகள் யாவும் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் சில நூறு முதல் ஆயிரம் வாக்காளர்களிடம் கேட்டு முடிவை அறிந்து தொகுக்கப்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி சில நூறு / ஆயிரம் வாக்காளர்களிடம் கேட்டு இந்நாட்டின் 90 கோடி வாக்காளர்களில் 67% வாக்களித்த தேர்தல் முடிவுகளை இவ்வளவு துல்லியமாக கூற முடியுமா என்று கேட்டால் புள்ளியியல் வழிமுறைகள் (Statistical Methodology) படித்தவர்கள் நிச்சயம் சிரிப்பார்கள். ஏனென்றால் வாக்களித்த 67% வாக்காளர்களின் எண்ணிக்கையானது 60.30 கோடி பேர்! அவர்களின் வாக்கு முடிவுகளைத் சில இலட்சம் வாக்காளர்கள் சொன்னதை வைத்து நிச்சயம் கூற முடியாது என்றே கூறுவார்கள்.

ஆனால் இந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் யாவும் இதே தொலைக்காட்சிகள் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை ஒட்டியே அமைந்துள்ளன என்பது ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இப்படியான கருத்துக் கணிப்புகளும் வாக்குக் கணிப்புகளும் ஏற்கனவே பல தேர்தல்களில் வெளியாகியிருக்கின்றன. அவை யாவும் இறுதியில் வெளியான தேர்தல் முடிவுகளை பிரதிபலித்ததா என்றால் நிச்சயம் இல்லை என்பதே வரலாறாகும். அப்படியிருந்தும் எதற்காக இப்படிப்பட்ட வாக்குக் கணிப்புகள் வெளியிடுகிறார்கள்? பிசினஸ், பெரும் பிசினஸ்.

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை விட வாக்குக் கணிப்பு முடிவுகள் மக்களை பெரிதும் ஈர்க்கின்றன என்பதை அறிந்து அதனை பெரும் வருவாய் பார்க்கும் வர்த்தக வாய்ப்பாக இதை நடத்தும் நீல்சன், சி வோட்டர், சாணக்கியா போன்ற நிறுவனங்களும் அவற்றோடு ஒப்பந்தம் போட்டு வெளியிடும் தொலைக்காட்சிகளும் பெரும் பயன் ஈட்டியுள்ளன. இந்த அமைப்புகள் எதுவும் தேர்தல் முடிவு வெளியாகி அந்த முடிவுகள் இவர்கள் அளித்த முடிவுகளுக்கு மாறாக அமைந்தபோதெல்லாம் அது பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தை ஏற்றமும் முதலீடும்!

விளம்பரங்களால் கிடைக்கும் இலாபம் மட்டுமேயல்லாமல் மற்றொரு இடைக்கால பெரும் இலாபத்தையும் இந்த வாக்குக் கணிப்புகள் உருவாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, நேற்று இந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் மீண்டும் மோடியின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று கூறிய பிறகு, இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை இன்று காலை வர்த்தகத்தை தொடங்கிய ஒரு நிமிடத்த்திலேயே அதன் குறியீடு 900 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேச பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டியும் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது!

இதன் வணிக முக்கியத்துவம் என்ன தெரியுமா? இன்று காலை முதல் சில மணி நேரங்களில் இந்தியப் பங்குச் சந்தைகளில் 3 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது!

கடந்த இரண்டு வருடங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த இந்தியப் பங்குச் சந்தையின் குறியீடுகள் பெருமளவிற்கு குறைந்திருந்தன. மும்பை பங்குச் சந்தை 39,000 புள்ளிகளுக்கு மேல் இருந்த நிலை மாறி 37,000 புள்ளிகளுக்கு இறங்கியிருந்து. மக்களவைத் தேர்தலின் 4வது கட்டத் தேர்தல் முடிந்தபோது தேர்தல் முடிவுகள் இப்போதுள்ள ஆட்சிக்கு எதிராக வரும் என்று செய்திகள் வந்தபோது பங்குச் சந்தை வர்த்தகத்தில் இறக்கம் ஏற்பட்டது, குறியீடுகள் குறைந்தன. இந்த நிலையில்தான் நேற்று வந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் மீண்டும் மோடி ஆட்சிதான் வரும் என்று கூறியதன் விளைவாக காலை வர்த்தகத்திலேயே சற்றேறக்குறைய ஆயிரம் புள்ளிகள் உயர்ந்துள்ளது. பல இலட்சம் கோடிகளுக்கு பங்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

இப்படி சில நிமிடங்களில் பங்கு வர்த்தகக் குறியீடுகள் உயர்ந்துள்ளதன் பின்னணியை கூர்ந்து நோக்கி வருவதாக பங்குச் சந்தை வர்த்தக கண்காணிப்பு அமைப்பான செபி கூறியுள்ளது. ஆக மீண்டும் மோடி ஆட்சிதான் என்ற நம்பிக்கையை உருவாக்கியதன் பின்னணியில் இந்த அளவிற்கு வர்த்தகம் பெருகியுள்ளது. 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் மாறினால்…? அதன் விளைவாக பங்கு வர்த்தகத்தில் இன்றைக்கு ஏற்பட்ட உயர்வு அன்று சரிவாக மாறும். அதனால் இன்று முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அப்படியானால் யாருக்கு இதனால் இலாபம்? கண்காணிப்பு அமைப்பான செபி என்ன சொல்லப் போகிறது என்று பார்ப்போம்.

இப்படிப்பட்ட வாக்குக் கணிப்பு முடிவின் மற்றொரு கோணம் என்ன என்பதைத்தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கையாக கூறியுள்ளார். மோடி ஆட்சிதான் மீண்டும் அமையும் என்று சொல்வதன் மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது முடிவுகளை மாற்றும் சதிகள் அரங்கேற்றப்படலாம் என்று எதிர்க்கட்சிகளை மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். இதில் பொதிந்துள்ள உண்மையை உணர வேண்டும்.

வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள பொத்தான்கள் எதை அழுத்தினாலும் வாக்கு தாமரைக்கு விழுந்த பல நிகழ்வுகள் செய்திகளாக வந்துள்ளன. அதேபோல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் – தேவைக்கும் அதிகமாக அங்கும் இங்கும் கொண்டு வரப்பட்டதும் செய்திகளாக வந்துள்ளதைக் கண்டோம். இந்தக் கூடுதல் இயந்திரங்களின் வருகை எதற்காக என்கிற கேள்வி தேர்தல் நிகழ்வுகளை உற்று நோக்கும் எவருக்கும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்து தீர்ப்பை மாற்றி எழுதிட முடியும் என்பது கடந்த தேர்தல்கள் வரை பல இடங்களில் நடந்துள்ளதை ஒரு பத்திரிகையாளனாக அறிந்தவன் நான். இதையே பரவலாக செய்ய முடியும் என்றால் நாட்டின் தலையெழுத்து மாற்றப்படுமே? என்கிற கவலையும் எனக்குண்டு. இயந்திரங்கள் எப்போதும் இயந்திரங்களே… அதனை இயக்குபவரே விளைவுகளை உருவாக்குகிறார் என்பதை நன்கு அறிந்துள்ளோம். எனவே தேர்தல் ஆணையத்தில் இருந்து தேர்தலை நடத்தும் அலுவலர்கள் வரை நம்பகத்தன்மை என்பது கேள்விக் குறியாகவுள்ள இன்றைய நிலையில் இப்படிப்பட்ட வாக்குக் கணிப்பு முடிவுகள் அப்படிப்பட்ட தேர்தல் முடிவுகளை நியாயப்படுத்த உதவும் அல்லவா?

“தேர்தல் கருத்துக் கணிப்புகள் மற்றும் வாக்குக் கணிப்பு முடிவுகளை ஒட்டியே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன” என்று ஒற்றை வாக்கியத்தில் எல்லாவிதமான தகிடுதித்தங்களையும் நியாயப்படுத்திட முடியுமன்றோ? அதுவும் ஆளும் கட்சியினரின் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயமானவை என்று வாதிடுவதற்கான அறிவார்ந்த பெருமக்கள் அருகிப் பெருகியுள்ள நமது நாட்டில் எதையும் நியாயப்படுத்த முடியும் அல்லவா? எனவேதான் மம்தா பானர்ஜியின் எச்சரிக்கை அர்த்தமுடையதாகிறது.

தங்களுக்கான அரசை தாங்களே வாக்களித்து தீர்மானிக்கும் உரிமைதான் சுதந்திரம் பெற்றதன் மூலம் இந்நாட்டு மக்கள் பெற்றுள்ள மாபெரும் உரிமையாகும்.

அவர்கள் வாக்களித்து அதன் முடிவு ஒரு தொங்கு மக்களவை ஏற்பட்டாலும், மக்கள் அளித்த முடிவுகளை ஒட்டியே அடுத்த ஆட்சி அமைவது நடக்க வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பை இயந்திரங்களைப் பயன்படுத்தி மாற்றியமைப்பது போன்று எவ்விதமான தகிடுதித்தங்கள் நடந்தாலும் அது இந்நாட்டு மக்களுக்கு உரிய ஜனநாயக உரிமையை நேரடியாக பறிக்கும் அடாத செயலாகும். அதனை ஏற்கவும் முடியாது, அதை செய்யும் அரசியல் கட்சிகள் இந்நாட்டு அரசியலில் நீடிக்கவும் கூடாது என்பதில் ஜனநாயக விரும்பிகள் உறுதியாக நிற்க வேண்டும்.

23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் மக்களின் தீர்ப்பும் எதுவாக இருப்பினும் அதனை நேர்மையாக ஏற்பதே கட்சிகள் அனைத்தும் ஏற்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பாகும். எனவே திசைதிருப்பல்களுக்கு மதிப்பளிக்காமல் மக்கள் தீர்ப்புக்காக காத்திருப்போம்.

கா. ஐயநாதன், அரசியல் விமர்சகர்.

இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ்.

கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே நிறுத்தப்படவில்லை என்பதை எப்படி பார்க்கிறீர்கள் ?

பதில் : இன்றைக்கு ஆர்எஸ்எஸின் தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது. தமிழ்நாட்டில் நீங்கள் வளர்ச்சி அடைந்துவிட்டதாகச் சொல்றீங்களே எந்த ஒரு தொகுதியிலாவது கூட்டணி இல்லாமல் உங்களால் வெற்றி பெற முடியுமா என ஒரு ஆர்.எஸ்.எஸ்காரரைக் கேட்டால் அவர் சொல்றார்:

“பிஜேபி ஜெயிக்க வேண்டும் என்று நாங்கள் வேலை செய்வதில்லை. அது எங்களுக்கு அவசியமும் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் ராமன் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் நடத்தினார். இன்றைக்கு எந்த அரசியல் கட்சியும் அதைச் செய்ய முடியாது. பேசக் கூட முடியாது இதுதான் எங்களுடைய வெற்றி” என்கிறார். அதுதான் உண்மையும் கூட. எந்த அரசியல் கட்சிகளும் இன்று தாங்கள் சிறுபான்மையினரின் நியாயங்களை பேசுகிறோம் என்று சொல்லுவதற்குத் தயாராக இல்லை. இது ஆபத்தான போக்கு.எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூட ‘நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை’ என்று சொல்லுவதும் , ‘நான் கோவிலுக்குப் போகவில்லை என்றாலும் என் மனைவி போகிறார்’ என்பதும் இதையேதான் காட்டுகிறது.தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பிஜேபியை எதிர்ப்பவர்கள் நிலையான ஆட்சி தேவை என்று சொல்லி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜகவை ஆதரிக்கும் அபாயமும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் 6 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் இரண்டு முதல் மூன்று தொகுதிகளில் ஒவ்வொரு கூட்டணியும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இருக்க வேண்டும். அதேபோல கிறிஸ்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் அளித்திருக்கலாம்.. அவர்களும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஆறு சதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளனர். சிறுபான்மையோருக்கு எதிரான ஒரு அரசியல் வெளிப்படையாக இயங்கும்போது சிறுபான்மை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு இவர்களுக்கு உண்டுதானே. கடந்த காலங்களில் அப்படி ஒரு நிலைமை இருந்ததே. கம்யூனிஸ்டுகளாவது அடையாளத்திற்கு ஒரு சிறுபான்மை இனத்தவரை அறிவித்து இருக்கலாம். மனுஷ்ய புத்திரனுக்கோ, சல்மாவிற்கோ திமுக இடம் கொடுத்து இருக்கலாம். அவர்கள் திமுகவில் பணிபுரிபவர்கள்தானே? இன்று தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள பல வாரிசுகளைவிட மனுஷ்யபுத்திரன் திமுக அரசியலை முன்னெடுக்கவில்லையா? பிரச்சாரம் செய்யவில்லையா? எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லையா?

Marx Anthonisamy

கேள்வி : பாஜக 2014 ல் ஆட்சியைப் பிடித்த போது, “பாசிசம் இப்போது ஹிட்லர் காலத்தில் இருந்தது போல இருக்காது”. என எழுதியிருந்தீர்களே?

பதில் : 1930 களில் பாசிசம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது போல இப்போது தன்னை அது வெளிப்படுத்திக் கொள்ளாது. இரண்டாம் உலகப் போரில் பாசிசம் என வெளிப்படையாகச் சொல்லிக் கொண்ட அரசுகள் வீழ்த்தப்பட்டன. போருக்குப் பின்னர் இந்தியா முதலான நாடுகள் விடுதலை அடைந்தன; கிழக்கு ஐரோப்பிய நாடுகள், சீனா போன்றவை சோஷலிசம் பேசின. பாசிசம் என யாரும் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் பாசிஸ்டுகள் ஆங்காங்கு இரகசியமாக இயங்கிக் கொண்டுதான் இருந்தனர். ஹிட்லரை இலட்சிய மனிதனாக ஏற்று இயங்கிய ‘சாவித்திரி தேவி’ பற்றிய என் கட்டுரையில் அதை எல்லாம் விளக்கியுள்ளேன்.

அறுபதுகளுக்குப் பிறகு இந்தியா போன்ற சுதந்திரமடைந்த நாடுகளிலும் மக்கள் புதிய ஆட்சியின் ஊடாகப் பெரிய பயன்கள் ஏதும் கிடைக்காமல் அதிருப்தி அடைந்தனர். கம்யூனிஸ்டு நாடுகளின் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை மக்கள் ஏற்காமல் அந்த ஆட்சிகள் தூக்கி எறியப்பட்டு மாற்றங்கள் நடந்தன. இன்று சீனாவையும் கம்யூனிஸ்டு நாடு என்றெல்லாம் சொல்ல முடியாது.

1942 க்குப் பிறகு subtle ஆக(நுட்பமாக) வேலை செய்து வந்த பாசிசம் இந்த மாற்றங்களுக்குப் பின், குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்காங்கு வெளிபடையாகப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படத் தொடங்கியது. ஒரு பக்கம் முஸ்லிம் எதிர்ப்பாகவும் (இஸ்லாமோபோபியா), இன்னொருபக்கம் “அந்நியர்” எதிர்ப்பாகவும் (நியோ நாசிசம்) வெளிப்படத் துவங்கியது.. பிரான்ஸ், இங்கிலாந்து, முக்கியமாக அமெரிக்கா முதலான நாடுகளில் இந்த நிலைமை இருக்கிறது. இன்று ஆங்காங்கு தீவிரமான தேசியமாகவும், இந்தியாவில் மதவாத தேசியமாகவும் பாசிசம் வெளிப்படுகிறது. நியூசிலாந்தில் சமீபத்தில் ஐம்பது முஸ்லிம்கள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியும். டாக்சியில் ஏறி உட்கார்ந்த ஒருவன் டிரைவர் முஸ்லிம் என்பதனாலேயே அவனைக் கொடுமையாகத் தாக்கினான் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. தொழுகைக்குப் பள்ளிவாசல்கள் கட்டுவதை அமெரிக்க நாஜிகள் எதிர்க்கிறார்களே.

கம்யூனிசத்தின் வீழ்ச்சியின் இடத்தில் இப்போது இத்தகைய பிற்போக்குத் தேசிய வாதங்கள் தலை எடுக்கின்றன. வர்க்க முரண்பாடு இனி சாத்தியமில்லை. முரண்பாடுகள் என்பது இனிமேல் “நாகரிகங்களுக்கு இடையில்தான்” என சாமுவேல் ஹட்டிங்டன் (Samuel P.Huntington) போன்றோர் கொண்டாடுகிறார்களே. அமெரிக்காவில் அது கிறித்தவ அடையாளத்துடன் கூடிய முஸ்லிம்எதிர்ப்பாக, இந்தியாவில் அது இந்து அடையாளத்துடன் கூடிய சிறுபான்மை எதிர்ப்பாக இருக்கிறது. பாசிசம் அதே பழைய தன்மையிலும் வடிவத்திலும் வெளிப்படாது என நான் சொன்னது இதைத்தான். மதச்சார்பற்ற நியாயங்களைப் பேசுவதே இன்று ஆபத்து என்கிற நிலை இன்று உருவாகி விட்டதே. .

கேள்வி : நீங்கள் ரொம்ப காலமாக கோரி வந்த ‘சம வாய்ப்பு ஆணையம்’ என்ற கோரிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது. இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

பதில் : உலகமயத்திற்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி அப்படியான கோரிக்கைகள் முன்வைக்கப்படும் நிலை ஏற்பட்டது. நிரந்தரமான வேலை, ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, இட ஒதுக்கீடு போன்றவைகள் கேள்விக்குரியதாகிக் கொண்டு இருக்கும் சூழலில் இது முக்கியத்துவம் பெறுகிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு இல்லை. ஆகவேதான் பன்மைத்துவ குறியீடு ( Diversity Index) என்ற ஒன்றை ஒவ்வொரு நிறுவனமும் வெளியிட வேண்டும் என்கிற நிலை இன்று பிற நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் 1000 பேர் வேலை செய்கிறார்கள் என்று சொன்னால் அதில் 150 பேராவது முஸ்லிம்கள் இருக்கவேண்டும். அதே போல கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மொழிச்சிறுபான்மையினர் ஆகியோரும் அவர்களுக்கு உரிய அளவில் இருக்க வேண்டும். தகுதி, திறமை இருந்தும் ஒருவருக்கு முஸ்லிம் என்பதாலோ, தாழ்த்தப்பட்டவர் என்பதாலோ வேலைவாய்ப்பு மறுக்கப்படுமானால் அது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக கருதப்பட வேண்டும். வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளில் இப்படி ஒவ்வொறு நிறுவனமும் தங்கள் நிறுவனத்தில் எப்படி இந்தப் பன்மைத்துவம் நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைப் புள்ளி விவரங்களுடன் வெளியிட வேண்டும் என ஒரு ஏற்பாடு உள்ளது. இதனை நாங்கள் 15 வருடங்களுக்கு முன்பாகவே பேசினோம். இது குறித்த போபால் பிரகடனத்தை மொழியாக்கி வெளியிட்டோம்.

ஆனாலும் இன்று தலித் அல்லது முஸ்லிம் கட்சிகள் கூட இதற்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்தக் கோரிக்கையைச் சேர்த்துக் கொள்ளுவதும் இல்லை. ஆனால் காங்கிரஸ் இதைத் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்றுக் கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தனது தேர்தல் அறிக்கையில் இம்முறை காங்கிரஸ் கட்சி பல நல்ல அம்சங்களைச் சேர்த்துள்ளது. அவைகளை அது அமலாக்க வேண்டும். தவறினால் நாம் அதை வலியுறுத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சியும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கட்சிதான். கல்வியை வணிகமயமாக்க, ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தை அமலாக்க விரும்பும் கட்சிதான். ஆனாலும் இப்படியான வரவேற்கத்தக்க சில கொள்கைகளைத் தனது அறிக்கையில் கொண்டுள்ளது. தலித் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் தலித் பண்பாடு முதலியன பாடப்புத்தகங்களில் இடம் பெறும் என்பது போன்றும் அளித்துள்ள வாக்குறுதிகளும் பாராட்டுக்கு உரியன. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 72000 ரூபாய் வருமான உத்தரவாதம் என்கிற வாக்குறுதி ஏழை மக்களை அதிகாரப்படுத்தும் எனவும், இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றுதான் எனவும் அமர்த்தியா சென், ஜீன் டிரெஸ் போன்ற பொருளாதார வல்லுநர்கள்களும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் இந்த திட்டத்திற்கு ஒட்டு மொத்த GDPயில் 1.3 சதம்தான் செலவாகும். இந்த 72000 ரூபாயை அம் மக்கள் வெளிநாட்டு வங்கிகளில் போடப் போவதில்லை. இங்குதான்அதைச் செலவழிக்கப் போகிறார்கள். அது உள்நாட்டு வளர்ச்சிக்குத்தான் பயன்படும். மோடி, அருண் ஜெட்லி போன்றவர்கள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை “ஜிகாதிகளும், நக்சலைட்டுகளும் தயாரித்துள்ளனர்” என்று செல்லுவதில் இருந்தே காங்கிரஸ் அறிக்கை சில நல்ல விடயங்களைக் கொண்டுள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பழங்குடி மக்கள் விரட்டப்பட்டு கனிவளம் மிக்க நிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. அங்கு தினசரி போராட்டம் நடக்கிறது. தினசரி பழங்குடி மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் ஆதிவாசிகளின் நிலம் பாதுகாக்கப்படும், ஆள் தூக்கித் தடுப்புக் காவல் சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்படும் என்றெல்லாம் சொல்வதால்தான் காங்கிரஸ் அறிக்கையை அவர்கள் நக்சலைட்டுகள் எழுதிக் கொடுத்தது என அலறுகிறார்கள்.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் பற்றி பெரிதாக அது பேசவில்லை என்பது உண்மைதான். ஆனால் முஸ்லிம் எதிர்ப்புக் கருத்துக்கள் அதில் இல்லை. அசாம் மாநிலத்தில் உள்ள 40 இலட்சம் முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது என்கிற பா.ஜ.க அறிவிப்புகள் போல காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. மாட்டுக்கறியின் பெயரால் சிறுபான்மை மக்கள் அடித்துக் கொல்லுதல் (Lynching) போன்ற குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை, தனிச் சட்டம் போன்றவற்றை அது பேசவில்லை என்கிற குறைபாடுகள் இருந்தபோதும் எளிய மக்களை அதிகாரப்படுத்துகிற பல அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருப்பதை நான் வரவேற்கிறேன்..

கேள்வி : வரவிருக்கிற தேர்தலின் முடிவில் பாஜக செய்த தவறான நடவடிக்கைகளையெல்லாம் காங்கிரஸ் கட்சி சரி செய்துவிடுமா ?

பதில் : காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்பதே இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறையலாமே ஒழிய அது அறவே தீர்ந்துவிடும் என்று சொல்லுவதற்கு இல்லை. தாங்கள் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்ததால்தான் சென்ற முறை தங்களுக்குத் தோல்வி ஏற்பட்டது என்று சோனியா காந்தி சொன்னார். இன்று ராகுல் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்வதில் மும்முரம் காட்டுகிறார். ‘நான் ஒரு காஷ்மீர பார்ப்பனன்” என்கிறார். ஆர்.எஸ்.எஸ். இன்று மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்து உள்ளது. இந்தியா போன்ற பல சமூகங்கள் வாழும் நாட்டை ஒரு ஒற்றை அடையாளமுள்ள சமூகமாக மாற்றி அமைக்க முனைகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் மோடி அரசு அரசியல் சட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முதலான அமைப்புகள் மீது ஒரு யுத்தத்தையே நடத்தியுள்ளது. பா.ஜ.க என்பது முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மட்டும் எதிரான கட்சியல்ல. தலித்களுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, பழங்குடிகளுக்கு எல்லாம் எதிரான கட்சி. இது குறித்து 22 கட்டுரைகளை எழுதி எனது முகநூலில் பதியவிட்டேன். அது ஒரு ‘ இ- புத்தகமாக’ வந்துள்ளது. ஓரிரு நாளில் அது அச்சு வடிவிலும் வரும்.

பா.ஜ.க மட்டும்தான் இந்திய அரசியல் சட்டத்தையே ஒழித்துக் கட்டும் திட்டத்தை வைத்துள்ள கட்சி. நான்கு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீதிக்கு வந்து நீதித்துறையில் அரசுத் தலையீட்டைக் கண்டிக்க வேண்டிய நிலை மோடி ஆட்சியில்தான் ஏற்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்..பத்தாம் வகுப்பில் மாணவர்களைத் தரம் பிரித்து இரண்டு வகையான படிப்புகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த அரசு. அதாவது நல்லா படிப்பவர்களுக்கு என்று ஒரு வகுப்பும் மற்றவர்களுக்கு வெறும் திறன் பயிற்சிக்கான (Skills) கல்வியும் என ஆக்கப்படுமாம். ஐந்தாம் வகுப்பில் தேர்வில் வெற்றி, தோல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.அப்படிச் செய்தால் தோல்வியுற்ற மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்துவார்கள். அதனால் பாதிக்கப்படப் போவது அடித்தளச் சமூக மக்கள்தான். வருணாசிரம முறையை மீண்டும் கொண்டுவரும் முயற்சிதான் இது. இன்று உயர் கல்விக்கான உதவித் தொகைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளன.

.ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிஎச்டி, எம்பில் ஆராய்ச்சி இடங்களின் எண்ணிக்கையை 2000 லிருந்து 400 ஆகக் குறைத்துவிட்டது. இதே போலத்தான் எல்லா மத்திய பல்கலைக் கழங்களிலும் நடந்துள்ளது. பஞசாப் மத்திய பல்கலைக்கழகம் கட்டணத்தை 1000 மடங்கு உயர்த்தி விட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் கட்டணத்தை முப்பது மடங்கு உயர்த்தி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் சாதாரண மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழலை உருவாக்கும் திட்டமிட்ட முயற்சிகள்தான்.

விவசாயிகள் இரண்டு முறை பேரணி நடத்தியும் பலனில்லை. மோடி அரசு விவசாயிகளுக்குக் கொண்டுவந்த பயிர் காப்பீட்டுத் திடத்தின் மூலம் கோடி கோடிகளாய் லாபம் சம்பாதித்தது அம்பானி போன்ற இன்சூரன்ஸ் கார்பொரேட்கள்தான். விவசாயம் அழிந்தவர்களுக்குக் காப்பீடாக வெறும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என வழங்கப்பட்ட கொடுமையைத் தமிழக விவசாயிகள் சொல்லிப் புலம்பியது ஊடகங்களில் வெளியானது. பணமதிப்பு இழப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி ஆகியவற்றைத் தம் சாதனைகளாகச் சொல்லி இன்று அவர்களே வாக்கு கேட்பதில்லை. சொன்னால் மக்கள் அவர்களைத் துரத்தி அடிப்பார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று தொழிற்சங்கங்கள் பலமிழந்து கிடக்கின்றன. இதனை எல்லாம் மக்கள் மத்தியில் பலமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ஆனால் இவை போதிய அளவு மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை.

கேள்வி : மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தயாநிதி மாறன் நிற்கிறார். அவரை நீங்கள் ஆதரிக்கவில்லை. தினகரன் ஆதரவோடு போட்டியிடும் எஸ்டிபி கட்சியைச்சார்ந்த தெஹ்லான் பாகவியை ஆதரிக்கிறீர்கள் ?

பதில் : அகில இந்திய ரீதியில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் அதுதான் நிலை. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகளை திமுக புறக்கணித்துவிட்டது. முஸ்லிம் லீகிற்கு கூட ஒரு இடம்தான் ஒதுக்கியுள்ளனர். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான அரசியல் கட்சி அகில இந்திய அளவில் உருவாகவில்லை. முஸ்லிம் லீக் கட்சியும் பெயரளவுக்குத்தான் அகில இந்தியக் கட்சியாக இருந்தது..பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்தவர்கள என்ற குற்றச்சாட்டு முஸ்லிம்கள் மீது இருந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்தான் பெரிய அளவில் அம் மக்கள் இயங்கத் தொடங்கினர்.

இட ஒதுக்கீடு முதலான கோரிக்கைகளை முன்வைத்துத் தீவிரமாக இயங்கும் நிலையும் அப்போதுதான் ஏற்பட்டது. இந்த நிலையில் ஓரளவு பல மாநிலங்களிலும் தங்கள் இருப்பை அடையாளப்படுத்தக் கூடிய கட்சியாக SDPI உருவாகியது. சிறுபான்மையினர் மட்டுமின்றி தலித், ஆதிவாசிகள் முதலானோரின் பிரச்சினைகள், மனித உரிமைகள் எனப் பல தளங்களில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் அவர்களைப் பா.ஜ.க அரசு குறிவைத்துத் தாக்கத் தொடங்கியது. அவர்களது அமைப்பு ஜார்கண்டில் இன்று தடை செய்யப்பட்டுள்ளது. இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள கூட்டணியில் அவர்களுக்கு ஒரு இடம் கட்டாயம் ஒதுக்கி இருக்க வேண்டும். தி.மு.க அதைச் செய்யவில்லை. இந்நிலையில்தான் அவர்கள் தனியாக நிற்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாயினர். .

திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கலாநிதி மாறன் ஒரு கார்ப்பரேட் ஊழல்வாதி. அவர்மேல் பல வழக்குகள் உள்ளன. மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தன் நிறுவனத்திற்குப் பயன்படும்வகையில் தன் பதவியை பயன்படுத்திக் கொண்ட மனிதர் அவர். பதவியில் இல்லாத இந்த ஐந்து ஆண்டு காலத்தில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும், மக்கள் போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டதில்லை. தானுண்டு, தனது கார்பொரேட் ராஜாங்கம் உண்டு என இருந்த அவரைப் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்களாக இன்றுள்ளனர். பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெல்வது மக்களுக்கு ஆபத்தானது. அந்தத் தொகுதியில் போட்டி இடுபவர்களில் இன்று தெஹ்லான் பாகவிதான் ஊழல் கறைகள் இல்லாதவர். மக்கள் போராட்டங்களில் அவர்களோடு நின்றவர். அந்த வகையில் அவரைத்தான் அந்தத் தொகுதியில் ஆதரிக்க முடியும்.

கேள்வி : சிறிய கட்சி வேட்பாளர்களை, திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தங்கள் கட்சிகளின் சின்னத்தில் நிற்க வைப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உதாரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார். திருமாவளவன் பானை சின்னத்தில் நிற்கிறாரே ?

பதில் : சிறிய கட்சிகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு அதில் உள்ளவர்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக செயல்பட வைப்பது என்பது கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் உள்ளதுதான். வி.சி.கவின் பொதுச் செயலாளராக உள்ள இரவிக்குமாருக்கு பதவி என்பது மட்டுமே குறிக்கோள். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் திமுகவின் பிரதிநிதியாகச் செயல்படுபவர். அதனால்தான் அவரே விரும்பி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திருமாவளவன் போலத் தனிச் சின்னத்தில் நிற்பேன் என்று ஏன் அவர் வலியுறுத்தவில்லை என நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்..

கேள்வி : எல்.கே.அத்வானிக்கு இப்போது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லையே ?

பதில் : தன்னளவில் புகழ் பெற்றவராக யாரும் வளர்வதை ஆர்.எஸ்.எஸ் அனுமதிக்காது. பாபர் மசூதியை இடித்த மாவீரர் என்ற பெயருடன் அவர் வளர்வதை அது விரும்பாததால்தான் சென்ற தேர்தலிலேயே அவர் ஓரங்கட்டப்பட்டு நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். 2014 ல் மோடியைப் பிரதமராக்க RSS முடிவு செய்தபோதே அத்வானி அதை எதிர்த்தார். அதனால் பிரதமர் யார் என்கிற அறிவிப்பைச் செய்யாமல் 2012 முதல் அவர்கள் மோடியைத் தேர்தல் பொறுப்பாளராக முன்னிறுத்தி இயங்கினர். அதே நேரத்தில் வெளியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு வெறித்தனமாக வேலை செய்யும் உயர்வருண ஆதரவாளர்கள் அத்வானியைப் படு கேவலமாக அவதூறு செய்தும், மோடியை ஊதிப் பெருக்கிக் காட்டியும் பெரிய அளவில் வேலை செய்தனர்.

SWARAJ MAG போன்ற அவர்களின் இதழ்களில் என்னென்ன தலைப்புகளில் என்னென்ன மாதிரியெல்லாம் அத்வானி மீது அவதூறுகள் பரப்பப் பட்டன என்பதை நான் மிக விரிவாக என் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். கடைசியாக அத்வானி பிரதமர் பதவி ஆசையைக் கைவிட வேண்டியதாயிற்று. இப்போது அவர் நாடாளுமன்றப் பதவியிலிருந்தும் ஓரங்கட்டப் பட்டு விட்டார். இப்போது RSS தலைவர் மோகன் பகவத்துக்கும் மோடிக்கும் ஒத்துவரவில்லை எனவும் மோடியின் ரஃபேல் முதலான ஊழல்கள் பணமதிப்பீட்டு நீக்கம் முதலான மக்களைப் பாதித்த நடவடிக்கைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி அவரையும் நீக்கிவிடத் திட்டமிட்டுள்ளனர் எனச் சில ஊடகங்கள் எழுதுகின்றன. ஒரு வேளை மறுபடியும் அவர்கள் ஆட்சி அமைக்க நேர்ந்தால் பிரதமர் நாற்காலியில் நிதின் கட்காரி அல்லது வேறு யாரையாவது உட்கார வைக்கலாம் என்கிற பேச்சும் அடிபடுகிறது.

கேள்வி : வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : தேர்தல் நேரத்தில் யாரும் யாரையும் எதிர்த்துப் போட்டியிடலாம் என்பதெல்லாம் உண்மைதான். இருந்தபோதிலும் தென் இந்தியாவில் ராகுல் காந்தி நிற்பது என முடிவு செய்தால் கர்நாடகாவில் நிற்கலாமே? வயநாட்டில் போட்டியிடுவதை ராகுல் காந்தி தவிர்த்து இருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். எனினும் மார்க்சிஸ்ட் கட்சியும் இன்றைய சூழலில் இத்தனை மூர்க்கமாகக் காங்கிரசை எதிர்க்க வேண்டியதில்லை. ராகுல்காந்தியை பிரதமராக ஏற்பதே சரியானது என தா.பாண்டியன் போன்ற மூத்த தலைவர்கள் சொல்லியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

கேள்வி : ஏழுதமிழர் விடுதலைக்கு காட்டி வரும் ஆதரவை, இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கு அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் காட்டாதது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

பதில் : மரண தண்டனை என்பதே கூடாது என்பதும் ஆயுள் தண்டனை என்றால் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும்தான் என் கருத்து. ‘மரணதண்டனை மட்டுமல்ல, தண்டனையே கூடாது’ என்பார் காந்தி. நம்ப முடியாத வரலாற்றுப் பெருமை ஒன்று நமக்கு உண்டு. அசோகர் காலத்தில் மரண தண்டனை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு அக்கால வழக்கம்போல உடன் அதை நிறைவேற்றாமல் மூன்று நாட்கள் அவர்களுக்குக் கால அவகாசம் தரப்பட்டது. .அதற்கிடையில் அரசனிடம் கருணைமனு அளித்து அவர்கள் மன்னிப்புக் கோரலாம் என்கிற நிலையை மாமன்னர் அசோகர் அறிவித்து அதைக் கல்வெட்டிலும் பொறித்தார். மரண தண்டனை அல்லாது பிற தண்டனைகள் கொடுக்கப்பட்டவர்களையும் ‘தர்ம மகா மாத்திரர்கள்’ என்கிற அரசு அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து அவர்கள் திருந்திவிட்டார்களா என்று பார்த்து, அப்படியென்றால் அவர்களை விடுதலை செய்யலாம் என அரசனுக்குப் பரிந்துரை செய்வார்கள். அதை ஒட்டி அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.

அவரது அசோகச் சின்னத்தை அடையாளமாகக் கொண்ட இந்தியாவில்தான் இன்று முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி இஸ்லாமியச் சிறைவாசிகள், வீரப்பன் வழக்கில் சிறைப்பட்டோர் எனச் சிறைகளில் யார் இருந்தாலும் பத்து ஆண்டுகள் முடிந்தவுடன் விடுதலை செய்யப்பட வேண்டும். சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை திரும்ப பெறுவது பற்றி இப்போது பேசுகிற காங்கிரஸ் கட்சி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை( UAPA) திரும்பப் பெறுவது பற்றிப் பேசவில்லை. ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிற எல்லோரும் கூட அதே அழுத்தத்தை முஸ்லிம் கைதிகள் விடுதலைக்குக் கொடுப்பதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை மாநில அரசு ஆளுநர் ஒப்புதலுடன் ராஜீவ் கொலையில் கைது செய்யப் பட்டவர்களை விடுதலை செய்யலாம் என இன்று உச்சநீதிமன்றம் சொல்லியும், தமிழகச் சட்டமன்றம் ஒட்டு மொத்தமாக அவர்களின் விடுதலைக்குத் தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காததுதான் இதன் காரணம். ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவை எடுக்காவிட்டால் அரசு அவர்களை விடுதலை செய்யலாம் என்பது போலச் சட்டம் திருத்தப்பட வேண்டும். என்ன மாதிரியான குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டாலும் அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அந்த மாநிலத்திற்கு இருக்க வேண்டும். இதற்குத் தடையாக உள்ள குற்றவியல் சட்டத்தின் 435 ம் பிரிவு நீக்கப்பட வேண்டும்.

கேள்வி: இஸ்லாமியர்கள் தங்களுக்கு என தனியான அமைப்புகளில் இயங்கி வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

பதில்: அதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியா பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு. பலமாதிரியான பிரச்சினைகள் உள்ள நாடு. எனவே பல்வேறு கட்சிகளும் இங்கே முளைப்பது இயற்கை. அதை நாம் ஏற்க வேண்டும். 1905 தொடங்கி இந்திய சுதந்திரப் போராட்டம் அரவிந்தர், திலகர் போன்ற உயர்சாதி இந்துக்களால் வழி நடத்தப்பட்ட கட்சியாகத்தான் இருந்தது. காந்தி அரசியலுக்கு வந்த பின்புதான் கிலாபத் இயக்கம் மூலம் இந்து முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி விடுதலைப் போராட்டத்தில் பெரும் மக்கள் திரளை ஈடுபடுத்தினார். சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எனத் தனியான இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பிலும், சட்ட அவைகளிலும் இருந்தது. இப்போது அவை இல்லை. அவர்களது நியாயத்தை வேறு யார் பேசுவார்கள்.

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் கூட இன்று இந்து கோவில் ஒன்றில் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டி உள்ளது. இந்நிலையில் முஸ்லிம்கள் அவர்களுக்கான கட்சியை உருவாக்கிக் கொள்ளாமல் என்ன செய்ய இயலும்? இந்தியா விடுதலை அடைந்த போது ஜின்னா இந்திய முஸ்லிம்களை நோக்கி, “முஸ்லிம் லீகை எக்காரணம் கொண்டும் கலைத்து விடாதீர்கள்” என்று கூறிச் சென்றது ஆழ்ந்த பொருளுடைய அறிவுரை.

கேள்வி; இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

பதில்: வழக்கம்போல எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் பாதிக்கப்படும் மக்களோடு நின்று கொண்டும் உள்ளேன். தொடர்ந்து எழுதி வருகிறேன். இயங்கி வருகிறேன். இதழ்களிலும் இணையங்களிலும் வெளிவந்த பல கட்டுரைகள் தொகுக்கப்படாமல் கிடக்கின்றன. பௌத்த காப்பியமான மணிமேகலை, கார்ல்மார்க்சின் இருநூறாம் ஆண்டில் தொடராக எழுதிய மார்க்ஸ் மற்றும் மார்க்சீயம் பற்றிய தொடர் ஆகியன விரைவில் நூல்களாக வெளிவர உள்ளன. ஏற்கனவே வெளிவந்த நூல்கள் பலவும் இப்போது மறு வெளியீடு காண்கின்றன. அவ்வாறு சென்ற ஆண்டில் பத்து நூல்கள் வெளி வந்துள்ளன. வேறென்ன.

பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்

குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு.  ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் போது ராமர் சிலை கட்டுமானம் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

என்.டி.டீ.விக்கு உ.பி. துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா இதுகுறித்து உறுதிபடுத்தாவிட்டாலும், ‘அயோத்தியில் மிகப்பெரிய சிலையை அமைப்பதை யார் தடுத்து விடுவார்கள்?’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘பாபரின் பெயரால் இனி யவரும் அயோத்தியில் எதுவும் செய்துவிட முடியாது என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்’ என கூறினார்.

பாஜக அரசின் ராமர் சிலை அறிவிப்பு குறித்து காங்கிரசைச் சேர்ந்த சசி தரூர் விமர்சித்துள்ளார். ‘ஒற்றுமைக்கான சிலை, ராமர் கோயில், அயோத்தியில் ராமர் சிலை போன்ற விவகாரங்கள் திசை திருப்பும் வகையில் உருவாக்கப்படுபவை. மக்கள் இந்த திசை திருப்பலில் விழுந்துவிடாமல் தங்களுடைய அன்றாட வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

சோஃபியா எனும் வனயட்சி!

சி. சரவணகார்த்திகேயன்

A voice so thrilling ne’er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.

– William Wordsworth (The Solitary Reaper)

இவ்விஷயத்தில் எதிரணி பாஜக என்பதை நீக்கி விட்டு, நிதானமாக யோசித்தாலுமே கூட சோஃபியா செய்தது தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் அது கொண்டாடப்பட வேண்டியது.

எனக்குத் தெரிந்து சோஃபியா என்ற இளம் பெண் விமானத்திலும், விமான நிலையத்திலும் “ஃபாசிஸ பாஜக – ஆர்எஸ்எஸ் அரசு ஒழிக” என்று தமிழிசையைப் பார்த்துக் கோஷம் போட்டிருக்கிறார். மற்றபடி, அவர் மீது உடல்ரீதியான தாக்குதல் ஏதும் தொடுக்கவில்லை. அதற்கான முஸ்தீபுகளிலும் இறங்கவில்லை. அவரை மிரட்டவில்லை. கண்ணியமற்ற சொற்கள் ஏதும் பிரயோகிக்கவில்லை. தான் நம்பும் ஒரு கருத்தை – அதாவது இந்தியாவின் ஃபாசிஸ ஆட்சி நடக்கிறது என்பதை – அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரைப் பார்க்கும் போது பொதுவெளியில் பகிர்கிறார். அரசியல் சாசனச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் படி இதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு (“All citizens shall have the right to freedom of speech and expression”).

ஏன் அப்படி கோஷம் போட்டுச் சொல்ல வேண்டும், காதில் ரகசியமாய்ச் சொல்லி இருக்கலாமே என்று நீங்கள் கேட்பீர்கள் என்றால், அப்படி சொல்லி இருந்தால் “மூடிட்டு போடி” என்று தான் அப்பெண்ணிற்குப் பதில் சொல்லி இருப்பார் தமிழிசை (எந்த அரசியல்வாதியாக இருந்தாலுமே அதைத் தான் செய்வார்). அதனால் யதார்த்தச் சாத்தியக்கூறாய் தன் எல்லைக்குள் நின்று தன்னால் சாத்தியமான எதிர்ப்பை அந்தப் பெண் செய்திருக்கிறார். இது ஒரு போராட்ட முறை. இது பொதுமக்களுக்கு இடையூறு என ஒருவர் சொன்னால், ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் தலைவர்கள் வரும் போது வாழ்க கோஷம் போடுவதும் அதில் தானே வரும்? அதை ஏன் நாம் கண்டிப்பதில்லை?

இன்னொரு கேள்வி கேட்கிறார்கள். இதுவே ஜெயலலிதா என்றால் இப்படிச் சொல்லும் தைரியம் வந்திருக்குமா? தமிழிசை என்பதாலும் பாஜக என்பதாலும் தானே இந்த இளக்காரம் என்று கேட்கிறார்கள். ஆம், உண்மை தான். ஆனால் இதைச் சொல்ல ஜெயலலிதா தரப்பினர் வெட்கப்பட வேண்டும். எதிர்த்துப் பேசினால் கைது என்பது மட்டும் ஃபாசிஸம் அல்ல‌; எதிர்த்துப் பேசவே பயப்படுமளவு வைத்திருப்பதும் ஃபாசிஸம் தான். இங்கே எதிராளி யார் என்பதெல்லாம் விஷயமே இல்லை. அந்தக் கோஷமிட அவருக்கு உரிமை இருக்கிறதா என்பது தான் விஷயம்.

சோஃபியா கிறிஸ்தவர் என்ற கோணத்தைச் சிலர் முன்வைக்கிறார்கள். நான் அதனால் தான் அவர் கோஷமிட்டார் என நினைக்கவில்லை. ஒரு பேச்சுக்கு அப்படி விரும்புப‌வர் வழியிலேயே சென்று அந்த அடிப்படையில், அவர்களின் பிரதிநிதியாகத் தான் கோஷமிட்டார் என வைத்துக் கொள்வோம். அதிலும் ஒரு செய்தி இருக்கிறது. இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் நிம்மதியாக இல்லை என்று சொல்கிறார். அதுவும் பொருட்படுத்தத் தகுந்த எதிர்ப்பு தானே? அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தானே? அவர்களுக்கும் எல்லாம் உரிமைகளும் உண்டு தானே? தவிர, இப்படிச் சொல்பவர்களின் பிரச்சனை அவர் கோஷமிட்டதா அல்லது அவர் எந்தத் தரப்பைச் சார்ந்தவர் என்பதா?

இன்னும் சிலர் அவர் இரு பிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்தினார் என்கிறார்கள். வழக்கும் அப்படித்தான் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எப்படி? அவர் தன் தரப்புக்கு ஆள் திரட்டினாரா? அவர்களையும் கோஷமிடத் தூண்டினாரா? இந்தக் குற்றச்சாட்டில் அந்த “இரண்டு பிரிவுகள்” என்பது யார்? இந்துக்கள், கிறிஸ்தவர்களா? அவர் ஒரு கட்சியை அல்லது ஆட்சியை எதிர்த்தாரா அல்லது குறிப்பிட்ட மதத்தையா? ஜோடனை என்றாலும் தர்க்கம் வேண்டாமா?

எழுதப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் காட்டி இச்செயல் குற்றம் என நிரூபிக்க முடியலாம். ஆனால் அறம் என்று ஒன்று இருக்கிறது. எவருக்கும் எதிர்மறைப் பாதிப்பற்ற ஓர் எதிர்ப்புக்கு அவர் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குமளவு அடிப்பது அயோக்கியத்தனம் தான். தமிழிசையின் இடத்தில் மு.க. ஸ்டாலின் இருந்தாலும் இதையே தான் சொல்வேன்.

தமிழிசை என்ற தனி மனுஷிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு என்ன பதில் எனக் கேட்கிறார்கள். தமிழிசை தனி மனுஷி அல்ல; ஒரு கட்சியின் தலைவி. பொது வாழ்க்கையில் இருப்பவர். அப்படி இருப்போருக்கு இம்மாதிரி எதிர்ப்புகள் சகஜம். இதற்குத் தயங்குவோர் பொது வாழ்க்கைக்கே வரக்கூடாது. பெரியாரைப் படித்திருந்தால் இந்த அறிவெல்லாம் இருந்திருக்கும். நோகாமல் நுங்கு தின்ன முடியாது. தவிர, பாஜக மாதிரி ஒரு கட்சியில் இருக்கும் போது இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். பாஜக ஆட்சியில் இல்லாத போது ஏதாவது இப்படி நடந்திருக்கிறதா? இல்லை. எனில் மக்களுக்கு அந்த ஆட்சியின் மீதான அதிருப்தி இருப்பதைத் தானே இச்சம்பவங்கள் காட்டுகின்றன? மற்றபடி சோஃபியாவுக்கும் தமிழிசைக்கும் தனிப்பட்ட முறையில் வாய்க்கால் தகராறா என்ன! இம்மாதிரி சம்பவங்களிலிருந்து ஓர் அசலான அரசியல்வாதி கற்றுக்கொள்ளத்தான் பார்ப்பான். தாம் தூம் என்று குதித்து சேம்சைட் கோல் போடுவது போல் உளறிக் கொண்டிருக்க மாட்டான். பூனை கண்கள் மூடிக் கொண்டால் பூமி இருண்டிடாது. அப்பெண்ணின் வாயை மூடி விட்டால் கள நிலவரமே மாறி விடுமா? நான் தமிழிசையின் இடத்தில் இருந்தால் சோஃபியா மீதான வழக்கை வாபஸ் வாங்கி விட்டு, பாஜக எம்மாதிரியான ஒரு கோமாளித்தன நிலையில் தமிழகத்தில் இருக்கிறது என டெல்லி மேலிடத்துக்கு விரிவாய் அறிக்கை அனுப்பித் தெரியப்படுத்துவேன். அது காது கொடுக்கப்படவில்லை எனில் கட்சியை விலகுவேன்.

கைதுசெய்யப்பட்ட மாணவி சோஃபியா

“அந்தப் பெண்ணின் பின்புலம் மீது சந்தேகம் வருகிறது, அவர் என் உயிருக்கு ஆபத்து உண்டாக்க முயன்றார்” என்று சொல்வது எல்லாம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பாணி. ஒருவன் உன்னை எதிர்த்தால் அவன் மீது தேசத்துரோகி என முத்திரை குத்து, முடித்தால் தீவிரவாதி என நிரூபி, இறுதியில் வாயில் சுடு என்பது தான் ஃபாசிஸம். இன்றைய பாஜக அரசு அதைத் தான் செய்து வருகிறது. மிகத் துல்லியமாக அதைத் தான் எதிர்த்துக் குரல் கொடுத்தார் சோஃபியா. அவரது மீதே ஃபாசிஸத்தை ஏவி அதை நிரூபிக்கிறார்கள். Ghoul சீரிஸில் சொல்வது போல் எதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்களோ அதையே அதற்குப் பதிலாகச் சொல்லி அந்த எதிர்ப்பு சரி தான் என அவர்களே ஒப்புக் கொள்ளும் முட்டாள்தனம்.

மறுபடி அழுத்துகிறேன். தமிழிசை மீது அந்தப் பெண் காட்டிய எதிர்ப்பு என்பது எல்லைக்குள் நிற்பதால் மட்டுமே இதை ஆதரிக்கிறேன். அவர் தமிழிசை மீது தாக்குதல் நடத்தி இருந்தாலோ, ஆபாச மொழிகள் பேசி இருந்தாலோ, செருப்பை எறிந்திருந்தாலோ, மை பூசியிருந்தாலோ நிச்சயம் அதை ஆதரிக்க மாட்டேன். ப.சிதம்பரம் மீது, அரவிந்த் கேஜ்ரிவால் மீது செருப்பு வீசியதை நான் ஆதரிக்கவில்லை. அதெல்லாம் எல்லை மீறல். ஆனால் இது குரல்வளையை நெரிக்கும் வேலை. இன்று காந்தி இருந்து இந்த ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தால் கூட கைது செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

கைதை ஏன் எதிர்க்க‌ வேண்டும்? இது கருத்துரிமையைக் கொலை செய்யும் வேலை. பாஜகவை எதிர்ப்போரை நோக்கி பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் செயல். நான் பேசிக் கொண்டிருப்பது இந்துத்துவா ஆட்களுக்கும் சேர்த்துத் தான். நாளை இடதுசாரிகளை, காங்கிரஸை, இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்க்க உங்களுக்கும் குரல் இல்லாமல் செய்வார்கள். அதற்கு இந்த நிகழ்வு உதாரணமாகக் காட்டப்படும். அந்தச் சுரணை கூட இல்லாமல் கைதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்.

சோஃபியாவை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அவரது துணிச்சல் முக்கியமானது. சோஃபியா இளங்கன்று என்பதால் பயமறியாமல் செய்திருக்கலாம் தான். ஆனால் இன்று எத்தனை இளங்கன்றுகள் பயமின்றி இருக்கின்றன? தினமும் கழுநீரும், வைக்கோலும் கிடைத்தால் போதும் என்றே பெரும்பாலான இந்திய இளங்கன்றுகள் இருக்கின்றன. நான் அவ்விடத்தில் இருந்திருந்தாலும் இங்கிதம் அல்லது விளைவுகள் கருதி வாயை மூடிக் கொண்டு தான் இருந்திருப்பேன். ஆனால் சோஃபியா எந்த அச்சமுமின்றி தைரியமாய்த் தான் நம்பும் ஒரு கருத்தைப் பொதுவெளியில் வைத்திருக்கிறார். அவர் பெண் என்பதும், சிறுவயது என்பதும் இச்செயலுக்கான மரியாதையைக் கூட்டுகிறது. கனடாவில் உயர்கல்வி பயின்று வருபவர் என்ற பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போது இந்த அக்கப்போர்களில் எல்லாம் இறங்காமல் பணத்தால் அலங்கரித்த சொகுசு வாழ்க்கை ஒன்றை மட்டும் அவர் கவனித்திருக்கலாம். ஆனால் அவர் அதை மீறி தன் நாட்டைப் பற்றிக் கவலை கொண்டிருக்கிறார். அவர் இன்றைய தலைமுறைக்கு ஓர் உதாரண ஆளுமை. Youth Icon!

இந்திய அரசியல் சாசனம் சொல்லும் கருத்துரிமை என்பது ஏட்டுச்சுரைக்காய் அல்ல; ஒவ்வொரு குடிமகனின் யதார்த்த உரிமை என்று உண்மையிலேயே நம்பிக்கை கொண்டிருக்குமானால் நீதிமன்றம் அவரை விடுவிக்க வேண்டும்.

சி. சரவணகார்த்திகேயன்,  எழுத்தாளர்;  ‘ஆப்பிளுக்கு முன்’ சமீபத்தில் வெளியான இவருடைய நாவல்.

ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் கார்த்திகேயனை பாஜகவினர் சமூக ஊடகங்களில் மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது என ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“’மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா?’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை எனினும், அவர் அதற்காக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், ‘அவரை பணி நீக்கம் செய்யும் வரையிலும் விடப்போவதில்லை’ என்று மிரட்டுகிறது இந்த காவிக் கும்பல்.

வளர்த்துவிட்ட நச்சுப்பாம்பு தன்னையே கொத்த வருகிறது என்பதை இப்போதேனும் தமிழ் ஊடகங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அமைப்பு பலமோ,மக்கள் செல்வாக்கோ துளியும் இல்லாத, வெறும் வாய்ச்சவடால் கும்பலான பாரதிய ஜனதா கட்சியை, எப்போதும் பரபரப்பு செய்தியில் இடம்பெறும் வகையில் பராமரித்தவர்கள் இந்த 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகள்தான். தலைப்புக்கு தொடர்பு இருந்தாலும், இல்லை என்றாலும் பா.ஜ.க. சார்பாக ஒருவரை அழைத்துவந்து விவாத நிகழ்ச்சிகளில் கத்தவிடும் கலாசாரத்தை வளர்த்து எடுத்தவர்கள் இவர்கள்.

தெரிந்தே பொய் சொல்வது, பொய் அம்பலப்படும்போது கூச்சமே இல்லாமல் கூச்சலிடுவது, சரக்கே இல்லாமல் சர்வரோக நிவாரணியாக அனைத்துப் பிரச்னைகளிலும் அடித்துவிடுவது, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘நீ மட்டும் யோக்கியமா?’ என திசைதிருப்பல் கேள்விகளில் தந்திரமாக ஒளிந்துகொள்வது… – இவைதான் பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்களின் தகுதிகள். இருந்தும் இவர்களை விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பாரதிய ஜனதா கட்சி என்ற செத்துப்போன பாம்புக்கு உயிர்த்தண்ணீர் ஊற்றும் வேலையை செய்து வந்தன ஊடகங்கள். இப்போது அந்த பாம்புகள் கொத்த தொடங்கியிருக்கின்றன.

இது கார்த்திகேயன் விவகாரத்தில் தொடங்கவில்லை. ஏற்கெனவே இதே புதிய தலைமுறையில் தீபாவளி தொடர்பான ஒரு விவாதத்திலும் வேண்டும் என்றே சர்ச்சை கிளப்பினார்கள். தாலி தொடர்பான ஒரு விவாதத்தில் புதிய தலைமுறை மீது டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீசினார்கள். நியூஸ் 7 விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பா.ஜ.க-வை சேர்ந்த எஸ்.வி.சேகர், ’நியூஸ் 7 விவாதங்களுக்கு வே.மதிமாறனை அழைக்கக்கூடாது’ என நியூஸ் 7 உரிமையாளர் வைகுண்டராஜனுக்கே போன் போட்டு பேசினார். அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்.

தினமணியில் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்கு, தமிழக பார்ப்பன கும்பல் தங்கள் இயல்புக்கு பொருந்தாத வகையில் பல போராட்டங்களை நடத்தியது. தமிழ் இதழியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில், வைரமுத்து எழுதிய கட்டுரையை வெளியிட்டதற்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் திருவில்லிபுத்தூருக்கே நேரில் சென்று மன்னிப்புக் கேட்டார். திருப்பதி நாராயணன் போன்ற பா.ஜ.க. ஊடகப் பேச்சாளர்கள் ஸ்டுடியோவில் அமர்ந்துகொண்டு சக பங்கேற்பாளர்களையும், நெறியாளரையும் நேரடியாக மிரட்டுவதையும் பார்க்கிறோம். இது ஒரு லைவ் நிகழ்ச்சி; மக்கள் பார்க்கிறார்கள் என்ற அச்சமோ, பதற்றமோ இல்லாமல் இவர்கள் துணிந்து பொய் சொல்கிறார்கள்.

கர்நாடகாவில் கவுரி லங்கேஷையும், எம்.எம்.கல்புர்கியையும், மஹாராஷ்டிராவில் நரேந்திர தபோல்கரையும், கோவிந்த் பன்சாரேவையும் கொலை செய்த மரபு கொண்டவர்கள் இவர்கள். ஊடகங்களில் பா.ஜ.க.வை விமர்சித்தும், அந்தக் கட்சியின் பொய்களை அம்பலப்படுத்தியும், இந்த ஆட்சியின் அவலங்களை தோலுரித்தும் எழுதி வரும்; இயங்கி வரும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். வட இந்தியாவில் நிகழ்ந்துவரும் இந்த கருத்துலக அடாவடியின் மற்றுமொரு வடிவம்தான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் வழிபடுவது தொடர்பான விவாதத்தில்தான் கார்த்திகேயன் அந்த கவிதையை மேற்கோள் காட்டினார். மாதவிடாய் நாட்கள் காரணமாகத்தான் பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை என்றால், பெண் தெய்வங்களை என்ன செய்வீர்கள் என்ற அந்த கேள்வி மிக இயல்பானது; நியாயமானது. இதை பாரதிய ஜனதாவினர் எதிர்க்கும்போது, நியாயமாக, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுத்து வைத்திருக்கும் இந்து மதத்தின் அடிப்படை விவாதப் பொருளாக மாறியிருக்க வேண்டும். கோயிலின் கருவறைக்குள் சூத்திரர்கள் செல்லக்கூடாது; கோயில் வளாகத்துக்குள் தலித்துகள் செல்லக்கூடாது; கோயில் இருக்கும் பக்கமே பெண்கள் செல்லக்கூடாது என்ற இந்து மதத்தின் இழிவான படிநிலை அமைப்பு பேசப்பட்டிருக்க வேண்டும். மாறாக காவிக்கும்பலின் மிரட்டலுக்கு பதில் சொல்வதாக மற்றவர்களின் பணி சுருங்கிவிட்டது.

இந்த ’தடுப்பாட்ட’ எல்லைக்குள் நம்மை நிறுத்தி வைத்து காவிக்கும்பல் தாக்குதல் ஆட்டத்தை ஆடி வருகிறது. நாம் மீண்டும், மீண்டும் இவர்களுக்கு விளக்கம் சொல்வோராகவும், இவர்களின் பொய்களை அம்பலப்படுத்துவோராகவும் இருந்து வருகிறோம். அவர்கள் நம்மை மூச்சிரைக்க ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு அடுத்த வதந்தியை ஆற, அமர தயார் செய்கிறார்கள்.

‘கார்த்திகேயனை பணி நீக்கம் செய்ய வேண்டும்’ என்ற இந்த பச்சையான மிரட்டலை புதிய தலைமுறை நிர்வாகம் நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். முன் எப்போதும் அப்படி நடைபெறாததைப்போலவே இப்போதும் நடைபெறவில்லை. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்கள் நிர்வாகங்களால் கைவிடப்படும் தமிழ் இதழியலின் மரபு இப்போதும் தொடர்கிறது. இதன்மூலம், இனிமேல் ’அடக்கி வாசிக்கும்படி’ பத்திரிகையாளர்கள் நேரடியாகவும்; மறைமுகமாகவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்த அவலமான சூழலில் நிறுவனம் என்ற குடையின் கீழ் அல்ல… பத்திரிகையாளர்கள் என்ற பணியின் பொருட்டு நாம் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த எதிர்ப்பு காவிக் கும்பலின் அடாவடிக்காக அல்ல… பத்திரிகையாளர் என்ற வேலையை மனசாட்சியுடன் செய்வதற்கே அவசியமானது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மட்டும்தான் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறதா?

பிரபாகரன் அழகர்சாமி

இந்தியா மீது நமக்கு இருக்கும் கோபம் நியாயமானதுதான். ஆனால் காவிரி பிரச்சனையில், மோடி தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு மட்டும்தான் நம்மை ஏமாற்றியதா? பாஜக அரசை மட்டுமே எதிரியாக சித்தரிப்பது பிரச்சனையை திசைத்திருப்புவதற்குதான் பயன்படும். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு சொல்லிக்கொள்ளும்படியான எந்த செல்வாக்கும் கிடையாது.

நீட் விவகாரத்திலும் சரி, காவிரி பிரச்சனையிலும் சரி, தமிழகம் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டிருப்பதற்கு, தமிழர்களின் பிரதிநிதிகளாக நாம் டில்லிக்கு அனுப்பியிருக்கும் , அதிமுகவை சேர்ந்த, 50 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமிழகத்தில் ஆட்சி செய்கிற அதிமுக அரசையும்தான் முதலில் குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டும்.

நாடாளுமன்ற மக்களவையில், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தும், தமிழர்களின் உரிமைகளை காவுகொடுத்துக்கொண்டிருக்கும் அதிமுகதான் முதல் குற்றவாளி. அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துணிச்சலில்தான் பாஜகவால் இப்படி செயல்பட முடிகிறது. அதிமுகவை ஒழிக்காமல் தமிழர்களுக்கு விடிவில்லை. தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் தமிழர்களை காட்டிக்கொடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும்போது, இந்தியா துரோகம் செய்துவிட்டது என்று புழம்புவது பெரிதாக எந்த பொருளுமற்றது.

இப்போது நம்முடைய முதன்மையான கோரிக்கை முழக்கமெல்லாம், தமிழக உரிமைகளை பாதுகாக்க முடியாத அதிமுக அரசே பதவிவிலகு என்பதாகதான் இருக்கவேண்டும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் அரசையும் மக்கள் பிரதிநிதிகளையும் கேள்விகேட்காமல் வேறு யாரையோ கேள்விக்கேட்டுக்கொண்டிருப்பது மடமையிலும் மடமை!

தமிழர்களுக்கு துரோகம் செய்யும் மோடியின் தலைமையிலான இந்திய அரசை நம்ப்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து காப்பாற்றிய அதிமுகதான் தமிழர்களின் முதல் துரோகி.

#ADMKBetraysTamilnadu

#IndiaBetraysTamilnadu

பிரபாகரன் அழகர்சாமி, சமூக-அரசியல் விமர்சகர்.

“சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இருப்பது கடினம்”: பாஜக மாநில மகளிரணி செயலாளர்

தமிழக பாஜகவின் மகளிரணி செயலாளராக இருந்தவர் ஜெமீலா. பாஜகவிலிருந்து விலகுவதாக முகநூலில் எழுதியிருக்கும் இவர், ‘பாஜகவில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பயணிப்பது கடினம்’ என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

நான் கடந்த 2 வருடங்களாக பாரதிய  ஜனதா கட்சியில் இணைந்து, மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளர் என்ற பொறுப்புகளுடன் உண்மையான தொண்டராக கட்சிப் பணி செய்து வந்தேன் .

பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

இருப்பினும், எனக்கு கடந்த சில மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழக பாஜகவின் கொள்கைகள் எழுத்தளவிலும், செயல்களில் மாறுபட்ட நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் உள்ளது. என்னைப்போன்ற கிறிஸ்துவ சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு பயணிப்பது கடினம் என்பதை உணர்கிறேன்.

எனவே இன்று முதல் எனது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுகிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என ஜெமீலா தன்னுடைய பதிவில் தெரிவித்திருக்கிறார்.

தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்

வெளிப்படையாகவே உடைத்துப் பேசலாம். பா.ஜ.க என்ன செய்ய நினைக்கிறது இங்கே? முகநூல் வழியாக ஒரு தேர்தல் வைத்தால் இதில் எந்தக் கட்சிகளெல்லாம் பெரும்பான்மை பலம் கொண்டு வெற்றி பெறும் என்று யோசித்தால், வேடிக்கையாக இருக்கிறது. ஜெ.தீபாவின் கணவர் மாதவன் மிகப் பெரும்பாலான முகநூல் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்து விடுவார். ஆனால் கள யதார்த்தம் முற்றிலும் வேறாக இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை பா.ஜ.கவை எப்படி மதிப்பிட்டார்கள் இங்கே? தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் மேடையில் ஒரு திண்டொன்றில் ஏறி நின்று உரையாற்றுவதைக் கிண்டலடித்து நிறையப் பதிவுகளைப் பார்த்தேன்.

கேலியும் கிண்டலுமாய் நிறைய புகைப்படங்களைப் பார்த்தேன். அவர் குமரி ஆனந்தனின் பெண் என்ற ஒரு காரணத்திற்காகவே அந்தப் புகைப்படக் கிண்டல்களைப் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து என இந்தயிடத்தில் சொல்லுவதற்கு உண்மையிலேயே அச்சமாகத்தான் இருக்கிறது. துப்பாக்கிக் குண்டுகளுக்கு இன்னும் உடல் பழக விரும்பவில்லை.

அது ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில் பா.ஜ.க சில முன்னெடுப்புகளைத் துணிந்து இங்கே மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது என்பதுதான் நிதர்சனம். வளரவே முடியாது என்று கணித்த அவர்கள்தான் நித்தமும் தொலைக்காட்சி விவாதங்களை அலங்கரிக்கிறார்கள்.

போன வருடம் வரை இப்படி யாரையாவது அழைத்து மாலை மரியாதை செய்திருக்கிறார்களா என்பதை யோசித்துப் பாருங்கள். தப்போ சரியோ இவர்கள் அந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்று கருதிய அவர்கள்தான் விவாதத்தின் முனைக்கு இப்போது வந்திருக்கிறார்கள். மத்தியில் அருதிப் பெரும்பான்மையுடன் கிடைத்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டு சில விஷயங்களை தமிழ்நாட்டில் நிகழ்த்திப் பார்க்க தயாராகி விட்டனர். அதைத் தவறென்று தெளிவான அரசியல் புரிதல் கொண்டவர்கள் சொல்ல மாட்டார்கள். எல்லோருக்குமே அரசியல் செய்ய வாய்ப்பிருக்கிறது இங்கே. இதுவரை கட்டியாண்டவர்கள் மத்தியில் கட்டியாள நினைக்கிறவர்கள் முன்னகர்ந்து செல்வதை தவறென்று சொல்லவே முடியாது இல்லையா?

தமிழகம் அரசியல் ரீதியில் மிகச் சிறந்த வேட்டைக்களம் இப்போது. இரண்டு பெரிய திராவிடக் கட்சித் தலைமைகள் இங்கே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக கலைஞரின் உயிர்வாழ்வு சம்பந்தமான விஷயத்தை இத்தோடு போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அமங்கலமாக எதையும் சொல்லவில்லை. பருப்பு உளது எனச் சொல்லும் தமிழ் வாழ்க்கை சார்ந்த ஆள்தான் நானும்.

பா.ஜ.க தெளிவாக திராவிடக் கட்சிகள் என்று சொல்லப்பட்ட ஒரு தரப்பை போட்டுச் சாய்த்து விட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அது அதிமுகவை கபளீகரமும் செய்து விட்டது. இனி அதிமுக என்று பேசுவதே வீண்வேலை என்பதுதான் உண்மை.

நேரடியாக பா.ஜ.க அரசு என்று சொல்லி விட்டுப் போகலாம். தினகரன் என்கிற போராளி என்று யாராவது சொல்லி என்னிடம் வந்தால் அவர்களுக்கு அன்பாய் குல்பி ஐஸ் வாங்கித் தருவேன். ஏனெனில் இதே பா.ஜ.க அவருக்கு ஆதரவாய் ஒரு சமிக்ஞை கொடுத்தால்கூட போதும் நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்து விடுவார். எல்லா பேட்டிகளிலுமே அவர் சமத்காரமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு, “நம் வீட்டு ஆட்கள் சரியில்லையென்றால் மற்றவர்களை குறை சொல்ல முடியுமா” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் அவருக்கும் அந்தக் குதிரையில் ஏறிப் பயணம் செய்யத்தான் ஆசை. சின்னம்மாவே வெளியே வந்தால்கூட சித்தப்பாவை மருத்துவமனையில் பார்க்கப் போவதற்கு முன்பு சித்து விளையாட்டு ஆடுபவர்களைத்தான் முதலில் போய்ச் சந்திப்பார். அது அவர்களுக்கு விதிக்கப்பட்டது. ஆக அந்தப் பக்கம் முடிந்தது கதை. நீதிமன்றங்களும் இந்த கதையில் பாத்திரங்கள் ஆன அம்சத்தைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். ஒரு தரப்பை முற்றிலும் ஒழித்தாகி விட்டது. இன்னும் இருப்பது இன்னொரு தரப்பு.

செப்டம்பர் இருபதாம் தேதிக்குப் பிறகு திகார் முன்னேற்றக் கழகம் என அழைக்கப்படும் என தமிழிசை முன்னோட்டம் கொடுக்கிறார். இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில் இதுமாதிரி அவர் சொன்னதெல்லாம் நடந்திருக்கிறது. நீதிமன்றம் படத்தைத் தன்கையில் வைத்துக் கொண்டு ட்ரெய்லர் விடும் அதிகாரத்தை ஒரு தரப்பின் கையில் கொடுத்திருக்கிறதோ என்கிற ஆழமான சந்தேகம் எனக்கு இருக்கிறது. திமுக சார்பில் சம்பந்தப்பட்ட மேக்ஸிம் வழக்கில் கைது செய்யப்படாமல் இருந்த வரலாற்றையும் கொஞ்சம் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பாருங்கள் என்று இலவச டிப்ஸாகவே சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொரு வழக்கில் இருக்கவே இருக்கிறது அபராதம்.

கொஞ்சம் இரண்டு பக்கமும் இறங்கி அடிக்கிற உத்திக்கு பா.ஜ.க தயாராகி விட்டதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? கள விவகாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், மெல்ல அவர்கள் கிராமங்கள் தோறும் வலுவாகவே இறங்கிக் கொண்டிருப்பதாகவே படுகிறது. கடந்த மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை கிராமங்கள் தோறும் முன்னெடுப்பதைப் பார்த்தேன். விரைவில் அம்மன் கோவில் கூழ் ஊற்றும் விழாக்கள்கூட, ’ஸ்பான்சர்ட் பை’ என்று வந்தால்கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை.

சிறு கடவுளர்களை ஒன்றிணைத்து பெரிய கடவுளர்களோடு ஒன்றிணைக்கும் வேலைகள் அடிக்கட்டுமானத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. அதைத் தெரியாமல் இது பெரியார் மண் என்று சொல்லி எதிர்க்க வேண்டியவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மொத்தமும் மண்ணாய் போன வரலாற்றை எதிர்காலத்தில் படிக்கத்தான் போகிறோம்.

அரசியல் ரீதியிலாகவும் அடிக்கட்டுமான ரீதியிலாகவும் சில முன்னெடுப்புகள் இந்த ஆட்சியின் ஆசிகள் வழியாக நடந்து கொண்டிருக்கின்றன. கொடுப்பதற்கு எத்தனையோ பதவிகள் இருக்கின்றன இந்த பரந்த தமிழ்நாட்டு அரசாங்கத்தில். எதற்காக சாரணர் இயக்கத்தில் பதவி வேண்டிக் கிடக்கிறது? அடிப்படையில் இருந்து எல்லாவற்றையும் புகட்டினால்தான் அடியாழத்தில் அது பதியும். இது எல்லோருக்கும் பொருந்திப் போவதுதான்.

உண்மையில் நீங்கள் கிண்டலாக அவர்களைப் போட்டுச் சாய்த்து விட்டதாக நம்பிக் குதூகலிக்கலாம். ஆனால் ஆழமாக அவர்கள் வேர்விட ஆரம்பித்து விட்டார்கள். “நான் தூங்கும் போது என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்கள் என்று சொல்கிற பெண்ணையோ தேசத்தையோ யாரும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார் கார்ல் மார்க்ஸ். இதைச் சொன்னால் கம்யூனிஸ்ட் என்பார்கள். ஆனால் இதைவிட சொல்வதற்கு என்னிடம் உதாரணங்கள் எதுவும் இல்லை.

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்,  ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர்.  சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

திருச்சி பாஜக பொதுக்கூட்டத்திற்கு 93 தொண்டர்கள்தான் வந்தார்களா?: வீடியோவைப் பாருங்கள்…

திமுகவுக்கு பதிலடி தரும்வகையில் பாஜக  திருச்சியில் பொதுக்கூட்டத்தை நடத்தியது. அந்தக்கூட்டத்துக்கு ஆட்களே வரவில்லை என சமூக ஊடகங்களில் படங்கள் போட்டு பலர் எழுதினர். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், கூட்டம் தொடங்கும் முன் போடப்பட்டிருந்த காலியான நாற்காலிகளை படம் பிடித்து சமூக ஊடகங்களில் சிலர் எழுதிவருவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் ஆதரத்துடன் பலர் திருச்சி பொதுக்கூட்டம் பற்றிய வீடியோக்களையும் படங்களையும் பகிர்ந்துவருகின்றனர். அதில் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பேசும்போது எடுத்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

Krishna Kpm Krishnamoorthy 
இந்த பக்த்ஸ்லாம் செம்ம டுபாகூர்ன்னு அறிஞ்சி தான்டா, ஃபோட்டா ஷாப்ல ஆட்சி நடத்துறவங்க ன்றத உணர்ந்து தான்டா 😂😂😂நேத்து பத்துக்கும் மேற்பட்ட பேஜ் அட்மின்ஸ் திருச்சி பாஜக பொதுக்கூட்டத்துக்கே நேர்ல போய் லைவ் போட்டாங்க 😜😜

எங்க தரப்புல இருந்து மூனு பேர் கொண்ட குழுவை அனுப்பி மேன்யுலா எத்தன பேர் வந்திருந்தாங்கன்னு எண்ணினோம்.

மொத்த ஆட்களின் எண்ணிக்கை 312
அதுல செக்யூரிட்டி 24 பேர்,
எல்ஈடி டெக்னீஸியன்ஸ் 6 பேர்
மைக் செட் காரர்கள் 4 பேர்
லைட்டிங் ஆட்கள் 6 பேர்
க்ரேன் கேமரா ஆப்ரேட்டர்ஸ் டீம் 4 பேர்
சேர் கான்ட்ராக்டர்ஸ் 6 பேர்

லாஜிஸ்டிக்ஸ் ஆட்கள் 20 பேர்
மீம் கிரியேட்டர்ஸ் 32 பேர்
திருச்சி லயன்ஸ் க்ளப் வாக்கர்ஸ் க்ளப் பிரதிநிதிகள் 82 பேர் ( தனியா பேட்ஜ் அணிந்திருந்தனர்)

மீதி இருந்தவங்க 146 பேர்
அதுல டீ பிஸ்கட் விற்க வந்தவங்க மூனு பேர்
ஒரு மசாலா பொரி விக்கிறவர்,
பாஜக நிர்வாகிகள் மேடையில 23 பேர்,
மேடைக்கு கீழே கேமரா மேன் 4 பேர்,
பிராமணர் சங்க நிர்வாகிகள் 7 பேர்,
நம்மாட்களையும் கழிச்சிட்டா மீதம் இருந்தது 93 தொண்டர்கள் 😂😂😂😂

இவனுங்க ஃபோட்டோவுல ஈஸியா கூதல் பண்ணிடுவாங்க ன்னு தெரிஞ்சி தான் நேர்ல போய் லைவ் போட்டதே 😜😜😜பொன்னார் உக்கிரமா பேசிட்டு இருந்தப்போ லயன்ஸ் க்ளப் உறுப்பினர்கள் அடித்த கமென்ட்கள் லாம் உலக தரம் வாய்ந்த செம்ம மீம் களுக்கு நிகரானதாம் 😝😝😝

மொத்தத்துல பாஜக வால தமிழ்நாட்டுல பொதுக்கூட்டத்துக்கு உண்டான மரியாதையே போச்சி 😝😝😝😝

P S யாருமே இல்லாத டீக்கடைல யாருக்குடா டீ ஆத்துறீங்க ன்றதே நேற்றைய திருச்சி மக்களின் மைன்ட் வாய்ஸ் எனலாம்!!

‘தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கும் கர்நாடகா’: சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரை

தனது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ், தீவிர இந்துத்துவ எதிப்பாளராக இயங்கி வந்த பத்திரிகையாளர். கௌரி லங்கேஷ், 2008-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே:

சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்

சமீபத்தில் ஹூப்ளி, ஹொன்னள்ளி ஆகிய இடங்களில் வாகன திருட்டி ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் இஸ்லாமியர்களாக இருந்ததால், அடுத்த நாளே, காவல்துறை வட்டாரங்கள் அவர்களை பற்றிய செய்தியை கசியவிட்டது. அதாவது அவர்கள் மூவரும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறை சந்தேகிப்பதாக அந்த செய்தி சொன்னது.

இந்த ஒரு துணுக்கு போதுமானதாக இருந்தது, ஊடகங்கள் தங்களுடைய சந்தேக கதைகளை புனைய. அனைத்து அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் விதிவிலக்கு இல்லாமல் தாங்கள்தான் முதல்முதலாக இந்த அதிர்ச்சிக்குரிய செய்தியை வெளியிடுவதாக பறைசாற்றிக்கொண்டன.

அனைத்து செய்தியாளர்களும் தங்களுடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, பெயர் சொல்ல விரும்பாத நபர் சொன்னதாகவோ, காவல்துறையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்னதாகவோ, காவல்துறையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் சொன்னதாகவோ, கர்நாடகத்தின் அரசு செயலகம் அமைந்திருக்கும் விதான் சவுதா, இன்போஸிஸ் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களை அவர்கள் தகர்க்க திட்டமிட்டமிட்டதாகவும் மேலும் பொதுஇடங்களிலும் இந்து கோயில்களிலும் குண்டு வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் செய்தி புனைந்தார்கள்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அத்தனை செய்திகளும் இந்த மூன்று மனிதர்களும் ஒசாமா பின்லேடனின் உள்ளூர் ஸ்லீப்பர் செல்களாக இருந்தார்கள் என்றும் லஷ்கர் இ தொய்பா, தடை செய்யப்பட்ட சிமி போன்ற அமைப்புகளில் தொடர்புடையவர்கள் என்றும் சொன்னதுதான். மேலும் இந்த மூவரும் அருகாமையில் உள்ள வனங்களில் ஆயுத பயிற்சியை வழங்கியதாகவும் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகவும் ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருப்பதோடு, மாநிலத்தில் உள்ள வெவ்வேறு ஸ்லீப்பர் செல்களுக்கு ஆயுதங்களை விநியோகித்திருப்பதாகவும் எழுதினார்கள். நூற்றுக்கணக்கான இளைஞர்களை தீவிரவாத குழுக்களில் சேர்த்து விட்டிருப்பதாகவும் இஸ்ரேலில் தயாரான ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாகவும்கூட அந்த செய்திகள் கூறின.

ஆனால் இந்த செய்திகள் அனைத்தும் எந்த அடிப்படையில் எழுதப்பட்டவை. ‘சொல்லப்படுகின்றன’; ‘சந்தேகிக்கப்படுகிறது’ என எத்தனை முறை இந்த செய்திகளில் மாறி மாறி வருகின்றன.

இந்த செய்திகளின் உண்மைத்தன்மையை குடிமக்களாகவும் நுட்பமான வாசகராகவும் எப்படி நம்புவது?

புனையப்பட்ட இந்த செய்திகளில் எவ்வளவு கசியப்பட்ட தகவல் இருந்தது? திறனற்ற நம் காவல்துறை எவ்வளவு திணித்தது? டி ஆர் பி ரேட்டிங்கை ஏற்றவும் பத்திரிகை விற்பனையைக் கூட்டவும் மூத்த பத்திரிகையாளர்களால் எவ்வளவு ‘காரம்’ தூவப்பட்டு செய்திகள் தயாராயின?

ஒரு கல்வி முறையான மாண்டிசோரிக்கும் க்யூபாவின் குந்தனோ விரிகுடாவில் அமெரிக்கா அமைத்துள்ள சிறைச்சாலைக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை.

உதாரணத்துக்கு ஒரு செய்தியை பார்ப்போமா…

கன்னட நாளிதழான உதயவாகினி, மங்களூரு பதிப்பு, தன்னுடைய இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டுக்காக அறியப்பட்டது.  அந்நாளிதழில் முதல் பக்க செய்தி:

“டிசம்பர் இறுதியில் ரியாஸ்தின் கவுஸ், முகமது ஆசிஃப், முகமது அபுபக்கர் மற்றும் ஹபீஸ் ஆகியோர் ஓர் ரகசிய கூட்டத்தை கூட்டினர். அதில் க்யூபாவின் மாண்டிசோரி சிறையில் மக்களை அடைத்து வைத்து அமெரிக்க செய்யும் சித்ரவதைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட கண்டன தீர்மானத்தை ஒரு காவல் அதிகாரி கைப்பற்றியுள்ளார்”.

உதயவாகினி கன்னடத்தில் வெளியாகும் முன்னணி நாளிதழ், பல மூத்த பத்திரிகையாளர்கள் அதில் பணியாற்றுகிறார்கள். ஆனால் பாருங்கள்..ஒரு கல்வி முறையான மாண்டிசோரிக்கும் க்யூபாவின் குந்தனோ விரிகுடாவில் அமெரிக்கா அமைத்துள்ள சிறைச்சாலைக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்டை யார் முந்தித்தருவது என்பதில் இந்த உண்மைத்தன்மையைக்கூட அவர்கள் சரிபார்க்கவில்லை.

அது இருக்கட்டும், குந்தனோ சிறைச்சாலையில் அமெரிக்காவில் அத்துமீறல்களை கண்டிப்பது ஒரு குற்றமா? குந்தனமோ சிறைச்சாலையில் கடைபிடிக்கப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டுபவர் தீவிரவாதியாக சந்தேகிக்கப்படுவாரா?

இதுபோன்ற கேள்விகள் உள்ளூர் ஊடகங்களுக்கு பொருட்டாகவே இல்லையா? இல்லவே இல்லை. இதுபோன்ற அடிப்படையான விஷயங்களை எழுப்புவதைவிட, காவல்துறை தரும் துணுக்குகளையே அவர்கள் எக்ஸ்க்ளூசிவ் ஆக தந்தனர்.

எழுத்தாளர் யூ. ஆர். அனந்த மூர்த்தி

ஊடகங்களின் இத்தகைய ‘தீவிரவாத’ மேனியாவுக்குப் பின்னால், காவி படை இருக்கிறதா? இந்த முறை இவர்களின் இலக்குகள்… பிரபல இலக்கியவாதி யூ. ஆர். அனந்தமூர்த்தியும் கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் சி. எஸ். துவாரகநாத்தும்தான்.

40 வருடங்களுக்கு முன், அனந்த மூர்த்தி தன்னுடைய ‘சம்ஸ்காரா’ நாவலை எழுதியபோது, சிலர் அதை பார்ப்பனர்களுக்கு எதிரானது என்று சொல்லி தடை விதிக்க முயன்றார்கள். ஆனால் பெரும்பாலான அறிவுஜீவிகள் அந்தக் கருத்தை மறுத்தபோது, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்நாவல் படமாக்கப்பட்டதோடு, தேசிய விருது பெற்ற முதல் கன்னட படம் என்ற பெருமையையும் பெற்றது, உலகம் முழுக்க பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.

சம்ஸ்காரா, பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது. மங்களூரு பல்கலையிலும்கூட  நாவலின் இந்தி மொழியாக்கம், இரண்டாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.

இங்கே ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சங்பரிவாரங்கள் கடந்த ஆண்டு, கன்னட நாவலாசிரியர் எஸ். எல். பைரப்பா எழுதிய ஆவர்ணா என்ற நாவலை மிகத் தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருந்தார்கள். நாவலின் 20 ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாக சொல்லப்பட்டது, கன்னடத்தில் வெளியான புனைவுகளிலேயே அதிக பிரதிகள் விற்பனையானதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறின.

சங்பரிவாரங்களின் இந்துத்துவா அஜெண்டாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் பைரப்பா, ஆவர்ணா நாவலில் அரை உண்மையை முழுப் பொய்யுடன் சேர்த்து புனைந்திருந்தார். வரலாற்று ஆய்வாளர்களின் ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியதாகவும் சொல்லிக்கொண்டார். இவர் சொன்ன வரலாற்று ஆய்வாளர்கள் பரிவாரங்களை சேர்ந்தவர்களே.  இந்த நாவலை படிக்கும் எந்தவொரு வாசகரும் இஸ்லாமிய சமூகத்தின் மீது பக்கச்சார்பான முடிவையே கொள்வார்.

இந்த நூல், இஸ்லாமிய சமூகம், மதவெறியைத் தூண்டி இந்துக்களை வெளியேற்றியதாக சொன்னது. மேலும், தற்போது நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் கடந்த காலத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக்கள் மீதி நடத்திய கொடுமைகளே காரணம் என்றும், அந்தப் பாவங்களுக்கு இஸ்லாமிய சமூகம் பொறுப்பேற்கிறது என்றும் அந்நூல் சொன்னது.

இஸ்லாமிய மக்களை மட்டுமல்ல, இஸ்லாமிய அதிகாரிகள், எழுத்தாளர்கள், சினிமா கலைஞர்களுடன் இடதுசாரிகள், மதசார்ப்பற்றவர்கள், வரலாற்றாலர்கள்…அதவாது காவி படையோடு ஒத்துப்போகாத அனைவரையும் அந்நூல் இந்து எதிர்ப்பாளர்கள் என சொன்னது. இந்நூல் வெளியானபோது சங்பரிவாரங்கள் போற்றினார்கள், முற்போக்கு சக்திகள், இலக்கியத்திலும் இந்துத்துவ சக்திகள் ஊடுருவி வருவதற்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

இந்த விவாதம் எழுந்தபோது, அனந்த மூர்த்தி, பைரப்பாவை வெளிப்படையாக ‘கல்லூரி அளவிலான விவாதக்காரர்’ என அழைத்தார். இது வலதுசாரி சக்திகளை கோபமுறச்செய்தது. முன்னணி கன்னட நாளிதழான விஜய கர்நாடகா, அனந்தமூர்த்திக்கு எதிராக குறுச்செய்தி பிரச்சாரத்தை தொடங்கியது. டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த விஜய கர்நாடகா, மற்றுமொரு சங்பரிவாரங்களின் பிரச்சார பத்திரிகை. அதனால் பெரிய வியப்பேதுமில்லை, அந்நாளிதழ் இரண்டு பக்கங்களில் காவிப்படை வாசகர்களால் எழுதப்பட்ட அனந்தமூர்த்திக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டது.

இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்கொள்ள, நாங்கள் சிலர் இணைந்து, ஆவர்னா நாவலை விமர்சித்து எழுதி அதை நூலாக வெளியிட்டோம், அது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதிகரித்துவரும் இந்துத்துவ கருத்தாக்க சூழலில் ஆவர்னா குறித்து விவரமாக பேசக் காரணம்…சமூகத்தை சீர்குலைக்கும் கருத்துகள் மேலும் மேலும் சேதத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான். மற்ற மொழிகளில் ஆவர்னாவை மொழிபெயர்க்கிறவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்துத்துவ அஜெண்டாவுக்கு எதிராகவும், பரிவாரங்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளர் பைரப்பாவை விமர்சித்த காரணத்தாலும் அனந்த மூர்த்தியை பரிவாரங்கள் எதிலாவது சிக்க வைக்க நினைத்தனர். அவர்களுக்குக் கிடைத்தது, சம்ஸ்காராவின் சில பகுதிகள் ‘ஆபாசமாக’ இருக்கிறதென்ற குற்றச்சாட்டு. பார்ப்பனர்களுக்கு எதிரான என்ற முத்திரை பலிக்காதபட்சத்தில், ஆபாச பகுதியை குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் எப்படி போதிப்பார்கள் என்கிற குற்றச்சாட்டை சுமத்தினார்கள்.

சங்பரிவாரங்களின் அஜெண்டாக்களுடன் ஒத்துப்போகும் சில விரிவுரையாளர்களிடம் கையெழுத்து வாங்கி, பல்கலை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

மாநிலத்தின் அறிவுஜீவிகளாலும் முற்போக்குசக்திகளாலும் காவிப்படையின் இத்தகைய செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உள்ளாயின. இந்த கணம், அனந்த மூர்த்தியின் நாவலை பாடத்திட்டதிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சங்பரிவாரங்கள் சக்கரத்தை காலில் கட்டிவிட்டார்கள். வரப்போகும் ஆண்டுகளில் பல்கலைக்கழகங்கள் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளை பாடமாக வைக்கும் முடிவில் வேறுபடுவார்கள். சங்பரிவாரங்களை எதிர்க்கும் எந்த எழுத்தாளரின் படைப்பையும் விலக்கிவைக்க, அவர்கள் எண்ணரீதியாக தயாராகிவிடுவார்கள்.


கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சி. எஸ். துவாரகநாத்

அனந்த மூர்த்தியின் பிம்பத்தை சிதைக்கும் பணியில் ஒரு பிரிவு சங்பரிவாரங்கள் ஈடுபட்டிருக்கும் அதேநேரத்தில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரான சி.எஸ். துவாரகநாத் மீது தாக்குதல் நடத்துவது அவசியம் என இன்னொரு பிரிவு கவனமாக உள்ளது.

இந்த மாதத்தின் முற்பகுதியில் துவாரகநாத்தும் ஆணையத்தின் சில உறுப்பினர்களும் இணைந்து  பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ள வசதிகளை ஆய்வதற்காக கூர்க் சென்றுள்ளனர். அப்போது சில உறுப்பினர்கள், தலைக்காவேரி (காவிரி உற்பத்தியாகும் இடம்) என்னும் ஆன்மிக தலத்துக்கு சென்றுள்ளனர்.  அப்போது தலைக்காவேரியின் தலைமை பூசாரி, துவாரகநாத்தையும் அழைத்துவாருங்கள், அவருக்கும் புனித நீரை தருகிறோம் என்றுள்ளனர்.

அதற்கு, உறுப்பினர்கள், ‘அவர் ஒரு நாத்திகர், அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. காவிரி ஆறையே அவர் புனிதமாகத்தான் நினைக்கிறார்’ என்றிருக்கிறார்கள்.

துவாரகநாத்துக்கு இந்த சம்பவம் குறித்து எதுவும் அறியாத நிலையில், இந்த விஷயம் உள்ளூர் சங்பரிவாரங்களுக்கு எட்டியுள்ளது. அடுத்த நாள், தனது இரண்டு காவலர்களுடன் இருந்த துவாரகநாத்தை நூற்றுக்கும் மேற்பட்ட காவிகள் சூழ்ந்துகொண்டனர். முன்னாள் பாஜக எம்.எல்.ஏ தலைமையில் மது அருந்தியிருந்த கும்பல், துவாரகநாத்தை சூழ்ந்து, ‘ஏன் காவிரியை அவமதித்தீர்கள்? இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதித்துவிட்டீர்கள்… கர்நாடகத்துக்கு எதிரானவர் நீங்கள்’ என பேசியுள்ளது.

என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றிருந்த துவாரகநாத், திரும்ப திரும்ப தன்னிலை விளக்கம் அளித்தார். ஆனாலும் அந்த கும்பல் சமாதானம் அடையவில்லை. அவரை தள்ளியும் உலுக்கியும் சுற்றியும் வந்த கும்பல், அவரைக் கட்டாயப்படுத்தி, கொக்ககோலா புட்டியில் அடைக்கப்பட்ட காவிரி நீரை குடிக்க வைத்தது, கட்டாயப்படுத்தி அவருடைய நெற்றியில் திலகம் இட்டது.

சங்பரிவாரங்கள் தங்களுடன் அழைத்து வந்திருந்த உள்ளூர் பத்திரிகையாளர், உள்ளூர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆகியோர் அதை படம் பிடித்தனர். அது மாநிலம் முழுவதும் ஒளிபரப்பானது. அதுமட்டுமல்ல, அந்த கும்பல், தன்னுடைய செயல்பாட்டுக்கு துவாரகநாத் மன்னிப்பு கேட்டதாக தானாகவே ஒரு அறிக்கை ஒன்றையும் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பியது.


இந்த மூன்று சம்பவங்களும் தெளிவாக ஒன்றை சொல்கின்றன. கர்நாடகத்தில் உள்ள ஊடகங்கள் காவிமயமாகிவிட்டன என்பதையும் கர்நாடக பல்கலைக்கழகங்கள், சங்பரிவாரங்களின் காரணமற்ற கோரிக்கைகளுக்கு தலைவணங்குவதாகவும் இந்துகளை அனைவரும் ஒன்றை பின்பற்றுகிறவர்களே என்ற இந்துத்துவ படையினர், பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவரையும் இந்து நம்பிக்கைகள் என்ற பெயரில் விட்டுவைக்கப்ப்மாட்டார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றன.

பாஜக ஆட்சியில் இருந்த மாநிலத்தில் இந்த முன்னேற்றங்கள், உண்மையில் எதிர்பார்க்கப்பட்டவைதான், இயற்கையானவையாக கருத்தப்பட்டவைதான். ஆனால், ஆளுநரின் ஆட்சி இப்போது நடக்கிறது. இன்னமும் காவிப்படையின் தீவிர அஜெண்டாக்கள் அரசியல் மற்றும் பொதுத்தளத்தில் அதிக்கம் செலுத்தவில்லை. பாஜக, மதசார்பற்ற ஜனதாதள கூட்டணியின் 20 மாத ஆட்சியில் இந்த மாற்றம் நிகழத்துவங்கியது.

இந்த குறுகிய காலத்தில், அமைப்பு ரீதியிலான ஊடுருவல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று இந்து முற்போக்காளர்கள், ‘நக்ஸலைட்’ எனவும் இஸ்லாமிய முற்போக்காளர்கள் ‘இஸ்லாமிய தீவிரவாதிகள்’ எனவும் முத்திரை குத்தப்படுகிறார்கள். இவை அனைத்தும் மக்கள் நலவிரும்புகள் மீதும், மதசார்ப்பற்ற அமைப்புகள் மீதும் செலுத்தப்படுகிறது.

பீப்புள் டெமாக்ரடிக் ஃபாரம் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் நகரி பாபையா போன்ற மதசார்பற்றவர்களை மேடை பேச்சில் ‘இந்து கடவுள்களை அவமதிக்கிறார்’ என குற்றம்சாட்டவும். குதிரே முக் வனத்தில் வாழும் பழங்குடி தலைவரான கல்குலி விடல் ஹெட்கே, தலித்துகளை அவமதித்தார்; அவருடைய மனைவி விபச்சாரத்தை ஊக்குவிக்கிறார் என குற்றம்சாட்டவும் பழங்குடி உரிமைகளுக்காக பணியாற்றுகிறவர்களை நக்ஸலைட்டுகள் என குற்றச்சாட்டவும் காவிகள் முனையும்போது, அதை காவல்துறை ஊக்கப்படுத்துகிறது.

சங்பரிவார் அமைப்பினர் கொடுத்த தவறான புகாரின் பேரில் உள்ளூர் அதிகாரிகளும் காவலர்களும் உள்ளூர் இஸ்லாமியர்களை சுற்றி வளைத்ததும் சமீபத்தில்தான் நடந்தது.  அதேநேரம், கால்நடைகளை ஏற்றிச்சென்றதற்காக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது காவல்துறை கண்களை மூடிக்கொண்டது. ராமசேது பிரச்னையின்போது ஆர் எஸ் எஸ் காரர்கள் ஒரு பஸ்ஸை எரித்து, அதனால் இரண்டு பேர் மாண்டு போனபின்பும் எவ்வித விசாரணையும் இன்றி இதே காவல்துறை அவர்களை விடுவித்தது. இந்த பட்டியல் போய்க்கொண்டே இருக்கும்…

சங்பரிவாரங்களின் சட்டவிரோத, வன்முறை வெறியாட்டத்துக்கு துணை போகும் காவல்துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி. இப்போது சங்கரிபரிவாங்கள் ஆனந்தமாக ஏராளமான புகார்களை இஸ்லாமியர்கள் மீதும் முற்போக்கு இந்துக்கள் மீதும் அளிப்பார்கள்.

சமீபத்தில், ஸ்ரீராம் சேனாவின் புரமோத் முத்தாலிக் ஒன்றைச் சொன்னார், ‘நாங்கள் ஹுப்ளியில் உள்ள சந்தேகத்துக்குரிய இஸ்லாமியர்களின் பட்டியலை தந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் ஒரு ஒருவரைத்தான் கைது செய்திருக்கிறார்கள். நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள அனைவரையும் கைது செய்யவிட்டால், நாங்கள் அனைத்து இடங்களிலும் போராடுவோம்’.

தென்னகத்தின் நுழைவாயிலாக கர்நாடகத்தை சங்பரிவாரங்கள் எப்போதும் கருதுவார்கள். சென்ற முறை அதிகாரத்தில் இருந்தபோது, அவர்கள் காலூன்றும் அளவுக்கு இந்த கதவு கொஞ்சமாக திறந்தது. வெறுப்பின் விதைகளை ஊன்ற அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. அந்த விதைகள் தற்போது முளைத்துள்ளன. இதோ தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன, பாஜக அமோக விளைச்சலை அறுவடை செய்யப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

மதசார்ப்பற்ற ஜனதாதளம், பாஜகவும் அரசியல் தற்கொலையை ஒப்பந்தம் செய்தபின் காங்கிரஸ் சங்பரிவாரங்களை எதிர்கொள்ள தயங்கிக்கொண்டிருக்கிறது. கர்நாடகம், எதிர்பாராதவிதமாக,  திரும்பிவராத தன்னுடைய புதிய நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது….அது தென்னகத்தின் குஜராத் என்ற நிலை.

28 February 2008 அன்று  churumuri வெளியிடப்பட்டது.

 

மோடி அரசின் 3 ஆண்டு சாதனையை கொண்டாட பீஃப் பார்டி: பாஜக தலைவர் ஏற்பாடு

மத்தியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அரிசி பீருடன் பீஃப் பார்டி கொடுக்கப்படும் என மேகாலயா மாநிலத்தின் கரோ மாவட்ட பாஜக தலைவர் பச்சு சம்பூகோங் மராக் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதற்கு தடை கொண்டுவந்த நிலையில் மேகாலயாவின் பாஜக தலைவர் ஒருவரே மாட்டிறைச்சி விருந்துக்கு அழைப்பு விடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை மாட்டிறைச்சி தவிர்க்க முடியாத உணவு.

இந்நிலையில் மேகாலயாவின் பாஜக முக்கிய தலைவரும் பாஜகவின் செய்தி தொடர்பாளருமான நலின் கோலி, ‘மாநில அரசுகள்தான் மாடுகள் வெட்டப்படுவது குறித்து ஒழுங்கு நடவடிக்கைகளை தீர்மானிக்கும். அனைத்து மாநிலங்களும் அந்தந்த மாநிலத்தின் உணவு கலாச்சாரத்தின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும். வடகிழக்கு மாநில மக்கள் மாட்டிறைச்சியை உண்பார்கள், அதற்கேற்ற விதிமுறைகளைத்தான் அரசுகள் கொண்டுவரமுடியும்” என செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

ஆனால், பச்சுவின் அறிவிப்பு குறித்து கேட்ட போது, மாவட்ட தலைவர் நீக்கப்படுவார், அவராகவே வெளியேறவிரும்பினால்  வெளியேறலாம்” எனவும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய பச்சு, “நாங்கள் மாட்டிறைச்சி விழாவைக் கொண்டாடுவோம். ஏனெனில் மாட்டிறைச்சி எங்களுடைய பாரம்பரிய உணவு. காரோ மக்களான நாங்கள் மாட்டிறைச்சி இல்லாமல் வாழ முடியாது.

இந்த விவகாரத்தை கட்சி தீர்க்காவிட்டால் தானாகவே கட்சியை விட்டு நீங்குவேன். மாட்டிறைச்சிக்கு தடை கொண்டுவந்தால் காரோ மலையில் பாஜகவுக்கு ஆதரவு ஒருபோதும் கிடைக்காது” என தெரிவித்திருக்கிறார்.

source: the telegraph

 

 

பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!

மாதவராஜ்

மாதவராஜ்

பாரதீய ஜனதா அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு பெற்றதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள்தான் காரணம் என்னும் கருத்து இந்த நேரத்தில் முன்வைக்கப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில், ‘பாஜக, காங்கிரஸ் இரண்டையும் நிராகரிப்போம்’ என்று சி.பி.எம் எடுத்த அரசியல் நிலைபாடு விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸை ஆதரித்து பாஜகவை வீழ்த்துவதே இப்போதைய நோக்கம் என பரப்பப்படுகிறது.

சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு அடிப்படையான காரணமே காங்கிரஸ் ஆட்சியின் அட்டூழிய நடவடிக்கைகளும், அநியாயமான ஊழல் குற்றச்சாட்டுகளும்தான். மக்களின் கடும் வெறுப்பு காங்கிரஸ் அரசின் மீது ஏற்பட்டு இருந்தது. அதை எப்படி கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரித்திருக்க முடியும்?

தன் குரூர மதவாத வடிவத்தை தற்காலிகமாக மறைத்துக்கொண்டு “ஊழலை ஒழிப்போம்”, “கருப்புப் பணத்தை மீட்டு மக்களிடம் தருவோம்”, “மின்சாரம், தண்ணீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வோம்” என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி காங்கிரஸ் மீது இருந்த மக்களின் கோபத்தையெல்லாம் பாஜக தனக்கு சாதகமாக்கிக் கொண்டது என்பதே உண்மை.

ஆக, பாஜகவின் இத்தகைய அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமே காங்கிரஸ் ஆட்சி செய்த விதமும், மக்களுக்கு விரோதமாக நடவடிக்கைகளும்தான். சி.பி.எம்மின் நிலைபாட்டை எதிர்க்கிறவர்கள், காங்கிரஸின் ஆட்சிமுறை குறித்து வாயைத் திறப்பதே இல்லை.

இன்றைக்கு பாஜகவை நிமிர்ந்து நின்று எதிர்ப்பதற்கான அனைத்து தார்மீக பலத்தையும் இழந்து நிற்கிறது காங்கிரஸ் அரசு. பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினானல், “நீ மட்டுமா யோக்கியமா?’ எனத் திருப்பிக் கேட்கிறது பாஜக. பெட்ரோல் விலை உள்ளிட்ட விலைவாசி உயர்வு குறித்து பேசினால், “நீ மட்டும் யோக்கியமா?” எனத் திருப்பி காங்கிரஸின் செவிட்டிலேயே அறைகிறது பாஜக. மதவாதத்தைத் தவிர்த்து, பாஜகவின் அனைத்து செயல்களிலும் காங்கிரஸ் கையாண்ட வழியே இருக்கிறது. இந்த காங்கிரஸை எப்படி கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க முடியும்?

இந்த முதலாளித்துவ அமைப்பில், ஆட்சியதிகாரத்தில் காங்கிரஸ் இருந்தாலும், பாகஜ இருந்தாலும் சாதாரண மக்களுக்கு ஒருபோதும் நன்மைகள் விளையப் போவதில்லை. ஒன்றின் வெறுப்பை இன்னொன்று சாதகமாக்கிக்கொண்டு ஆட்சியதிகாரத்தை அவைகளே மாற்றி ,மாற்றி கைப்பற்றிக் கொள்ளும். பேய்க்கு பயந்து பிசாசுக்கும், பிசாசுக்குப் பயந்து பேய்க்கும் காலமெல்லாம் ஆதரவு தெரிவித்துக் கொண்டு இருக்க முடியாது.

காங்கிரஸை விட பாஜக பேராபத்து என்பதில் சந்தேகமில்லை. அதற்காக மத அடிப்படை வாதத்தை முறியடிக்க முதலாளித்துவ அமைப்பின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் எப்படி ஆதரிக்க முடியும்? மேலும் இன்று முதலாளித்துவ அமைப்பே மத அடிப்படை வாதத்தை முன்னெடுத்துச் செல்லும் பாசிசம் தலைதூக்கி இருக்கிறதே. ஆக, முதலாளித்துவம், மத அடிப்படைவாதம் இரண்டையும் சேர்த்து எதிர்க்காமல், தீர்வுகளைக் காண முடியாது. அதை நோக்கித்தான் சி.பி,எம் கட்சி தங்கள் அரசியலை பேசுகிறது, பிரச்சாரம் செய்கிறது, தொடர்ந்து இயங்குகிறது.

இன்று பாஜகவின் மிருக பலம் கொண்டிருப்பதற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் என்று சொல்கிறவர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்கள் பாஜகவை ஆதரிக்காமலோ, பாஜகவோ அதிகாரத்தை பகிராமல் இருந்திருக்கின்றனவா என்று முதலில் சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்.

இந்துத்துவா இந்த மண்ணில் விதையூன்றப்பட்ட காலத்திலிருந்து அதையும், அதன் ஆபத்தையும் அறிந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஆரம்பத்தில் இந்துத்துவா சக்திகள் ஊடுருவி இருந்த போது அதை அடையாளம் கண்டு எச்சரித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆட்சி காலங்களில் எடுக்கப்பட்ட இந்துத்துவா ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்து இயக்கம் நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள். மன்மோகன்சிங்கின் ஆட்சிக் காலத்தில், மக்களின் வெறுப்பை சுட்டிக்காட்டியவர்கள் கம்யூனிஸ்டுகள். என்றைக்காவது கம்யூனிஸ்டுகளின் பேச்சைக் கேட்டிருக்குமா இந்த காங்கிரஸ்?

சிறு சக்தியாய் இருந்தபோதும் இந்துத்துவாவின் வளர்ச்சிக்கு எதிராக நிமிர்ந்து, தார்மீக பலத்தோடு நிற்கும் வல்லமை கம்யூனிஸ்டுகளுக்கே இருக்கிறது. அதனால்தான் தோழர் பினாரயி விஜயன் மீது இந்துத்துவா சக்திகளுக்கு அத்தனை ஆத்திரம் வருகிறது. இன்று இந்தியாவில் வேறு எந்தத் தலைவர்களோடும் இந்துத்துவா சக்திகள் கடைவாய்ப் புன்னகையோடு கைகுலுக்க முடியும்.

அந்த தெம்பையும், நேர்மையையும், திராணியையும் கம்யூனிஸ்டுகள் தக்க வைத்து வளர்ப்பது சரியா அல்லது அதையும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து இழந்து நிற்பது சரியா?

மாதவராஜ், எழுத்தாளர்; தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி?: விசாரணை தேவை

அரசு வங்கிகளைவிட தனியார் வங்கிகளுக்கு அதிக பணம் கொடுத்தது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

“கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக ரூ.1000, ரூ.500 தாள்களை செல்லாது என அறிவித்த மத்திய அரசின் திட்டம் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக எதிர்மறை திசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை நிகழ்ந்தவற்றை வைத்துப் பார்க்கும் போது எந்த பயனும் ஏற்படாது என்றே தோன்றுகிறது.

இந்தியாவில் ரூ.8.58 லட்சம் கோடி மதிப்புள்ள 1716.50 கோடி ரூ. 500 தாள்கள், ரூ.6.86 லட்சம் கோடி மதிப்புள்ள 685.80 கோடி ரூ.1,000 தாள்கள் என மொத்தம் ரூ.15.44 லட்சம் கோடி புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இதில் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணமாக இருக்கும் என்றும், அந்தப் பணம் கடைசி வரை வங்கிகளில் வைப்பீடு செய்யப்படாமல் இருந்தால், அது அரசுக்கு சொந்தமானதாக கருதப்படும் என்பதால் அதை வைத்து பல திட்டங்களை செயல்படுத்தலாம் என மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், மத்திய அரசின் இந்நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. காரணம், வங்கிகளில் வைப்பீடு செய்யப்படும் பழைய ரூபாய் தாள்களின் மதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்வது தான். நேற்று வரை மொத்தம் ரூ.12.44 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.500, ரூ.1000 தாள்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் காந்தி அறிவித்துள்ளார். இதில் ரிசர்வ் வங்கியில் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இருப்பு வைக்கப்பட்டிருந்த ரூ.4.06 லட்சம் கோடியும் அடங்குமா? என்பது தெரியவில்லை. ஒருவேளை அதையும் சேர்த்து தான் இவ்வளவு பணம் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது என்றால் இன்னும் ரூ.3 லட்சம் கோடி மட்டும் தான் திரும்பப் பெறப்பட வேண்டியிருக்கிறது.

ஒருவேளை ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பணம் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றால், ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் விடப்பட்ட பணத்தை விட அதிக பணம் திரும்பப்பெறப்பட்டிருப்பதாக பொருள் ஆகும். இந்தக் குழப்பம் ரிசர்வ் வங்கிக்கே ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு வங்கியும் திரும்பப்பெற்ற பணத்தின் மதிப்பை மீண்டும் சரிபார்க்கும்படி ரிசர்வ் வங்கி ஆணையிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பணம் கணக்கில் சேர்க்கப்பட்டதாகவே வைத்துக் கொண்டாலும் இம்மாத இறுதிக்குள் மேலும் ரூ.2 லட்சம் கோடி திரும்பப் பெறப்பட வாய்ப்பிருப்பதாலும், மார்ச் 31ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் தாள்களை திரும்பச் செலுத்த அவகாசம் இருப்பதாலும் மத்திய அரசின் நடவடிக்கையால் பயன் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இம்மாத இறுதியில் இதை மத்திய அரசே ஒப்புக்கொள்ளக்கூடும்.

மத்திய அரசின் இந்த முயற்சி தோல்வியடைந்ததற்கு காரணம் இத்திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பெரும் பணக்காரர்களும், பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தங்களிடமிருந்த கருப்புப் பணத்தை ஆட்சியாளர்களின் உதவியுடன் புதிய பணமாக மாற்றி விட்டது தான் என்று கூறப்படுகிறது. இதுதவிர உள்ளூர் அளவில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க தனியார் வங்கிகள் பெரிதும் உதவியாக இருந்ததாகவும், அதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் உடந்தை என்றும் கூறப்படுகிறது. இதற்கு வசதியாக தனியார் வங்கிகளுக்கு புதிய ரூபாய் தாள் அதிக அளவில் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நவம்பர் 8&ஆம் தேதி முதல் திசம்பர் 7&ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.14,000 கோடி மதிப்புள்ள புதிய தாள்கள் வந்திருக்கின்றன. அவற்றில், 56% மட்டுமே பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 9000 பொதுத்துறை வங்கிக் கிளைகள் உள்ள நிலையில், அவற்றுக்கு இந்த தொகை போதுமானதல்ல. சராசரியாக பார்த்தால் ஒரு பொதுத்துறை வங்கிக்கு ரூ.86 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மொத்தம் 25 நாட்கள் வங்கிகள் பணியாற்றியுள்ளன. அப்படியானால், ஒவ்வொரு பொதுத்துறை வங்கிக் கிளையும் ஒரு நாளைக்கு ரூ.3,44,000 மட்டுமே வாடிக்கையாளருக்கு வழங்க முடியும். ஒரு நாளைக்கு 500 வாடிக்கையாளர்களுக்கு பணம் தர வேண்டுமென்றால் சராசரியாக ரூ.1000 கூட வழங்க முடியாது. தமிழகத்தில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு இதுவே காரணம்.

அதேநேரத்தில் மொத்தம் 900 கிளைகள் மட்டுமே கொண்ட தனியார் வங்கிகளுக்கு ரூ.6100 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வங்கி கிளைக்கு ரூ.6.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டதை விட 8 மடங்கு அதிகமாகும். பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால், இவ்வளவு பணத்தை கொண்டு தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக பணம் வழங்கியிருக்கலாம். ஆனால், தனியார் வங்கிகளிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு அட்டை தான் பெருமளவில் தொங்கிக் கொண்டிருந்தது. இதிலிருந்தே தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் கருப்புப் பண முதலைகளுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டிருப்பதை உணர முடியும். தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.4000 கோடி கருப்புப் பண முதலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என வங்கி அதிகாரிகளே கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்கு தனியார் வங்கிகள் துணை போனதாக கூறப்படும் நிலையில் அது குறித்தும், பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளுக்கு 8 மடங்கு அதிக பணம் வழங்கப்பட்டது குறித்து விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற வெளிநடப்பு செய்து உதவினார் ஜெயலலிதா: வெங்கய்யா நாயுடு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் பாஜக பிரமுகர்கள் பெருமளவு கலந்துகொண்‌டனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார். தமிழக முதலமைச்சரான பன்னீர்செல்வத்தை கட்டித் தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோ‌டி, எல்லா உதவிக‌ளையும் மத்திய அரசு செய்யும் எனத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஜெயலலிதாவின் உடல் அருகே நீண்ட நேரம் இருந்தார்.  அதிமுக பொதுச்செயலாளரின் இரங்கல் நிகழ்வில் பாஜக பிரமுகர் ஏன் இத்தனை நேரம் காத்திருக்கிறார் என சமூக ஊடகங்களில் இதுகுறித்து விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் இது குறித்து தி இந்து (ஆ) நாளிதழுக்கு (டிசம்பர் 8) அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தியபோது, அரசுக்கு சிறிய அளவு எதிர்ப்பு இருக்கும். அப்படியிருக்கும்பட்சத்தில் பாஜக கூட்டணி வைத்தால் சில குழுவினரின் ஓட்டுக்களை பெற முடியாமல் போய்விடும் என ஜெயலலிதா தெரிவித்தார். ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிராக இருந்தபோதிலும் நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்து சட்டம் இயற்றப்படுவதற்கு அதிமுக உதவியாக இருக்கும் என்கிற செய்தியை மோடியிடம் தெரிவிக்கும்படி ஜெயலலிதா சொன்னார்” என்று  தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்தியல் ரீதியில் அதிமுக தங்களுக்கு நெருக்கமான ஒரு கட்சி என்று தெரிவித்த வெங்கையா நாயுடு, கொள்கை சார்ந்த ஆதரவை அதிமுக தங்களுக்கு தொட‌ர்ந்து அளிக்கும் என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்..

போபால் படுகொலை மற்றொரு “குஜராத் மாதிரி” போலி மோதல் படுகொலை: அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன்

போபால் சிறையிலிருந்து தப்ப முயன்றதாக கூறி சிமி அமைப்பைச்(அவர்கள் அவ்வமைப்பினர் தானா என்பதும் உறுதி செய்யப்படவில்லை) சேர்ந்த எட்டு விசாரணைக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வானது, குஜராத் போலி மோதலைப் போல இஸ்லாம் வெறுப்பின்பாற்பட்ட பாஜக அரசின் மற்றொரு போலி மோதல் பச்சை படுகொலை நிகழ்வுதான் என்கிற ஐயம் ஒவ்வொன்றாக நிரூபணம் ஆகி வருகிறது.

இக்கொலைக்குப் பின்னாலான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசுகிற மத்தியப் பிரதேச அமைச்சர்,சிறைக்கு பத்து கிலோமீட்டர் தொலைவில் சிறைக் கைதிகளை போலீஸ் பார்த்ததாகவும் அவர்கள் கையில் ஸ்பூன் தட்டுகள் இருந்ததாகவும் வேறு வழியின்றி போலீசார் துப்பாகியால் சுட்டுக் கொன்றதாகக் கூறி போலீசின் தீரமிக்க செயலை பாராட்டுகிறார்.அமைச்சர் கூறுவது மெய்யாகவே இருக்கட்டும்.மாறாக,தட்டும் ஸ்பூனும் கொண்டு கைதிகளனைவரும் அதி பயங்கரத் தாக்குதலை நடத்திவிடக்கூடும் என்பதை விட மடைமைத்தனம் இருக்க முடியுமா?தட்டுக்கு எதிராக துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்துவதுதான் தற்காப்பா?

மேலும்,இப்போலி மோதல் தொடர்பாக அமைச்சர் தெரிவித்த கருத்தும் ஐஜி சௌத்திரி கூறிய கருத்தும் முன்னுக்குப் பின் முரணாகவே உள்ளது.அதாவது கைதிகள் அருகாமை கிராமத்தில் நுழைந்ததாகவும்,கிராம மக்கள் இவர்களை திருடர்கள் என்றெண்ணி போலீசை உஷார் படுத்தியதாகவும்,போலீசார் அங்கு வந்து கைதிகளை சரணடையக் கூறி,அதற்கு கைதிகள் மறுத்தக் காரணத்தால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாதகவும் விளக்கமளிக்கிறார்.இதில் அமைச்சர் கூறுவது உண்மையா போலீஸ் உயர் அதிகாரி கூறுவது உண்மையா?

இரண்டுமே பச்சைப்பொய்தான்.இக்கொலையானது,திட்டமிட்ட இஸ்லாம் விரோத அரசியலின் பாற்பட்ட ஆர் எஸ் எஸ் பசகவின் வகுப்புவாத அரசியல் நலனுக்கான பச்சைப் படுகொலை செயலாக பார்க்க வேண்டியுள்ளது.சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்,நாளது வரையில் குற்றவாளி என இறுதி செய்யப்படாத விசாரணைக் கைதிகளாகவே சிறையில் இருந்துள்ளனர்.அவர்கள் மீதான விசாரணை வரும்வாரத்தில் முடிவுற்று தீர்ப்பு வரவுள்ள நிலையில், சிறையை உடைத்து தப்பிக்க வேண்டிய அவசியம் ஒன்றும் அவர்களுக்கு இருக்கவில்லை என வழக்கறிஞர் கான் தெரிவிக்கிறார்.

இந்திய தேச ஐக்கிய உணர்வை,பாஜகாவின் அரசியல் பரவலுக்கான தேவையிலிருந்து பார்க்கையில் அது இந்து தேச ஐக்கியமாக கருதுகிறது. தேச விரோத,இந்திய இறையாண்மைக்கு எதிரான,பாகிஸ்தான் விரோத இஸ்லாம் விரோத கருத்துருக்கள் ஆளும்வர்க்க அரசியல் மேலாண்மைக்கான கருத்தியலாக உருவாக்கப்பட்டு இந்து தேச ஐக்கியத்திற்கான சமூக ஏற்பை பெற முயல்கிறது.

ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வால் வெகுமக்களிடத்தில் திரட்டப்பட்டிருந்த இந்திய தேசிய ஐக்கிய உணர்வு,இந்துத்துவ தேசியவாத உணர்வுநிலை மட்டத்தில் மறுவார்ப்பு செய்ய முயல்கிறது.இந்துத்துவ பாசிசத்தை எதிர்ப்பது,இந்திய தேசிய ஐக்கியத்தை எதிர்ப்பது என்பது தேச எதிர்ப்போடு இணைக்கப்படுகிறது.

80 களின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்க ஆண்டுகளிலும் இந்திய சமூகத்தின் பிற்போக்கு சக்திகளான வகுப்புவாத இந்துத்துவ சக்திகளுடன் சர்வதேச தேசிய முதலாளிகளும் அரசும் அதன் கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது.

நிலவுகிற உலகமய கட்டம் வரை இந்துத்துவ கருத்துநிலையாளர்கள் பாட்டாளி வர்க்கங்களின் அணிசேர்க்கையை வகுப்புவாத அரசியலால் தகர்த்துவருகின்றனர்.எனவே வரலாற்று ரீதியில் இந்துத்துவத்தின் இயக்கத்திற்கு முதலாளியமும் முட்டுக் கொடுத்து தீனிபோடுகிறது.

காலனியாதிக்க காலம் தொட்டு பாசக வடிவில் இந்துத்துவ சக்திகள் அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துகிற கடந்த கால் நூற்றாண்டு காலம் வரையிலும் இவ்வணியினர் ஏகாதிபத்திய நலனுக்கு அடிபொடிகளாகவும் இந்திய தேச பெருமுதலாளி வர்க்கத்தின் சேவகர்களாகவும் குட்டி முதலாளி வர்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்துகொண்டு உழைக்கும் விவசாய,தொழிலாளி வர்க்கத்தின் அணிசேர்க்கைக்கும் ஒற்றுமைக்கும் தடை சக்திகளாக இருந்துவருகின்றனர்.

நிலவுகிற இந்துத்துவ பாசிசத்தின் வளர்ச்சிப் போக்குகளுக்கு,அதன் இயங்காற்றலுக்கு இந்து மத – பார்ப்பனீய கருத்துநிலைகளும் அதனுடன் இணைக்கப்பட்ட அதிகாரமும் மட்டுமே காரணமாக இருப்பதற்கில்லை.இவை மட்டுமே இந்துத்துவத்தின் இயக்குவிசையாகவும் இருக்கவில்லை.கருத்தியல்தளத்தின் துணைக் கொண்டு மட்டும் தனது மேலாதிக்கப் பரவலை அது மேற்கொள்ளவில்லை.வரலாற்று ரீதியில்,இந்துத்துவ சக்திககளின் வளர்ச்சிக்கு முதலாளிய வர்க்கத்தின் அரவணைப்பும் ஆதரவும் உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது.

இப்பின்புலத்தில் இருந்து இஸ்லாம் விரோத இந்துத்துவம் அரசியல் மேலாதிக்கத்திற்கான அனைத்து முற்போக்கு சக்திகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பரசியல் காலத்தின் கட்டாயமாக நம்முன் எழுந்துள்ளது.இரண்டாண்டுகளுக்கு முன் ஐந்து இஸ்லாமியர்கள் மீதான போலி மோதல் படுகொலை,காஷ்மீர் படுகொலைகளை,அண்மையில் கோவையில் கலவரம்,மோடியின் தலாக் கரிசனம்,பொது சிவில் சட்டம் அமல்,ஆயிரக்கணக்கில் சிறையில் வாடுகிற இஸ்லாமிய விசாரணைக் கைதிகள் என நாம் அடுக்குக் கொண்டே போகலாம். என்ன செய்யப் போகிறோம்?

அருண் நெடுஞ்செழியன், சூழலியல் செயற்பாட்டாளர்; அணுசக்தி அரசியல் நூலின் ஆசிரியர்.

ராசாத்தி அம்மாள் சசிகலாவை சந்தித்ததன் பின்னணி; சவுக்கு சங்கர் சொல்கிறார்

சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க, திமுக தலைவர் மு. கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் சென்று வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து ‘சவுக்கு’ சங்கர் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவில் ரசாத்தி அம்மாளிடம் சசிகலா கதறி அழுததாகச் சொல்கிறார். மேலும் அந்தப் பதிவில்,

நேற்று இரவு ராசாத்தி அம்மாள் அப்போல்லோ மருத்துவமனையில் சசிகலாவை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன. அந்த சந்திப்பு நடந்தது உண்மையே. ,இரவு 9.40 மணியளவில் சசிகலாவை ராசாத்தி அம்மாள் சந்தித்துள்ளார்.

சுமார் 1.30 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்துள்ளது.  இந்த சந்திப்பின்போது, தன் மீதோ, தன் உறவினர்கள் மீதோ, எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்று சசிகலா ராசாத்தி அம்மாளிடம் கதறி அழுதுள்ளார். இருக்கும் சொத்துக்களை காப்பாற்ற உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார். தான் உள்ளிட்ட உறவினர்கள் மீது எவ்விதமான சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுள்ளார். மத்திய பிஜேபி அரசு, ஓ பன்னீர் செல்வத்தை முதன்மை அமைச்சராக நியமித்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தன் கையை விட்டு அகல்வதை நன்றாக புரிந்துள்ள சசிகலா, இறுதிக் கட்டமாக சொத்துக்களையும் உறவினர்களையும் காப்பாற்றுவதற்காக, ராசாத்தி அம்மாளிடம் தூது விட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், சசிகலா புஷ்பாவை அமைதிப்படுத்துமாறும் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார் சசிகலா.

பிஜேபி கவனமாக காய் நகர்த்தி, பின்புற வாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்ற உத்தேசித்து வரும் நிலையில், சசிகலா திமுகவுக்கு தூது விட்டுள்ளது, மிக முக்கிய அரசியல் நகர்வுகளை காட்டுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

கழன்று விழும் இந்துமதவெறியர்களின் முகமூடிகள்

சு. இரவிக்குமார்

“காவி”கள் உருவாக்கும் காவிரிச்சிக்கலின் பின்புலத்தில் இன்னுமொரு மதவெறி நிகழ்ச்சி நிரலும் உள்ளது. தற்காலத்தின் முதல்வர்களில் அவர் காங்கிரஸ் முதலமைச்சராய் இருந்த போதிலும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுப்பதோடு, மூடநம்பிக்கைகளுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் எதிராக உருப்படியான சட்டங்களையும் இயற்றியவர் சித்தராமய்யா.

அதுதான் சித்தராமய்யாவைப் பதவியிலிருந்து அகற்றிவிட்டு, அங்கே பாஜக ஆட்சியை அமைப்பதன் மூலம், இத்தகைய முற்போக்கான சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவோ அல்லது இல்லாமலே ஆக்கவோ செய்ய வேண்டும் என்பதும் பாஜகவின் உள்ளக் கிடக்கைகளில் ஒன்று.

அதற்குத் தோதாக வந்ததுதான் காவிரி தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு. அதனை வைத்து, கன்னட இனவெறியர்களை உசுப்பேத்தி விட்டதோடு, தானும் கன்னட இனவெறியர் வேடமிட்டு, தமிழர்களைத் தாக்கி, இனவெறியைத் தூண்டி, மதவெறி அரசை ஏற்படுத்தும் புதியவகை உத்தியைக் கையாள்கிறது.

அதனால்தான் குருபீட உத்தரவுப்படி பிரதமர் வாய் பொத்திக் கொள்கிறார். கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா இன வெறியை விசிறிவிடுகின்றார். வெங்கையா நாயுடு கர்நாடகத்தை ஆதரிப்பதாகச் சொல்கிறார். பொன் ராதாகிருஷ்ணனோ தமிழக பாஜக வேறு, கர்நாடக பாஜக வேறு என்கிறார். கலவரத்துக்கு இருமாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் தமிழிசை.

ஆனால் எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் சொல்வது, சித்தராமய்யாவின் அரசு பதவி விலக வேண்டும் என்பது. தமிழ் மக்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது. இனவெறியர்களின் பேரில் மறைந்திருக்கும் இந்து மதவெறியர்களின் முகமூடிகள் அப்பட்டமாகக் கழன்று விழுகின்றன.

சு. இரவிக்குமார், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்; கவிஞர்.

காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்

திருமுருகன் காந்தி

பெங்களூரில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் கோக், பெப்சி ஆலைகளுக்கு கொடுக்கப்படுகிறது. 4000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் மைசூரில் அமைக்கப்பட இருப்பதற்கு 7 டி.எம்.சி தண்ணீர் காவேரியில் இருந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. கர்நாடகம் தண்ணீரை தனியார் மயமாக்கிய முன்னணி மாநிலம்.

பெங்களூரில் தண்ணீர் தனியார் மயத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு வெகுநாட்களாகிறது, மைசூர் தனியார் தண்ணீர் திட்டம் வெகுமக்களால் எதிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டொரு வருடத்திற்கு முன் அமெரிக்க தண்ணீர் விநியோக நிறுவனங்களின் சொந்தக்காரர்கள், அதிகாரிகள் கர்நாடக முதல்வரை நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. உலக வங்கியும், ஐ.எம்.எஃபும் பின்னிருந்து இயக்குகின்றன.

6.1 கோடி கன்னட மக்களுக்கான அணை நீர் சேமிப்பின் கொள்ளளவு 704 டி,எம்.சி அதே நேரம் 7.4 கோடி தமிழகத்தின் மக்கள் தொகைக்கான அணை நீர் கொள்ளளவு 190 டி.எம்.சி…. இதில்50% காவேரியில் கிடைக்கிறது… கர்நாடகத்தில் ஏழில் ஒரு பங்கு மட்டுமே காவேரியிலிரிந்து கிடைக்கிறது…. 100 டிஎம்.சியில் 2 கோடி தமிழனுக்கான குடிநீர் , விவசாய நீர் கிடைக்கிறது. அதாவது மூன்றில் ஒரு பங்கு தமிழக மக்களுக்கு கிடைக்கிறது…

… இந்த கலவரம் கர்னாடக கார்ப்பரேட் அரசினால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது.. அரசின் ஆதரவில்லாமல் கலவரங்கள் பரவுவது சாத்தியமில்லை.

இந்த தனியார் மயத்தின் சொந்தக்காரனாக இருக்கும் பாஜக காங்கிரஸ் ஆகிய இருவரும் இந்தக் கலவரத்தின் பின்னால் இருந்து இயக்கும் சக்திகள்.

இதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகிய இந்துத்துவ கும்பல்கள் இந்த வன்முறையை குஜராத்தைப் போன்று திட்டமிட்டு தமிழர்கள் மீது நடத்துவதாக பல தோழர்கள் பெங்களூரில் இருந்து பகிர்கிறார்கள்.

இந்தக் கலவரத்தின் போது வெளியூர் சென்றிருக்கும் மோடிக்கு தெரியாமல் இந்தக் கலவரம் நடக்க வாய்ப்பில்லை. உள்துறை அமைச்சர் என்ன செய்கிறார்? ஏன் அவர் இன்னும் கர்நாடகத்திற்கு நெருக்கடி தரவில்லை?.. கர்நாடகத்தில் நடக்கும் கலவரத்தினை கண்டித்து ஏன் மத்திய அரசு அறிக்கை வெளியிடவில்லை?.. ஏன் தமிழக பார்ப்பன கும்பல்கள் அமைதி காக்கின்றன?…

தமிழர்களின் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் தமிழர்களின் உடமைகளே பெரிதும் வேட்டையாடப்படுகின்றன. அப்பாவிகள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்படுவது கர்நாடக அரசிற்கு தெரியாமல் நடக்கவில்லை.

இந்தத் தனியார்மய சந்தையில் தமிழகத்தின் பெரும் கட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்பதை எப்படி மறுத்துவிட முடியும். கடுமையான எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் எழாமல் எனவே இந்த வன்முறை தற்போது நிறுத்தப்பட சாத்தியமில்லை.

திருமுருகன் காந்தி, சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.

ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்

உலகப் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின்மீது ‘பகமையைத் தூண்டுதல், கலவரம் செய்தல், தேசத்துரோகம்’ உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது. பாதிப்புக்குள்ளான காஷ்மீர் மாநிலத்தவர் சிலரை அழைத்துவந்து தமக்கு நேர்ந்த கொடுமைகளை நேரடியாக எடுத்துரைக்கச் சொல்லியுள்ளனர். சட்டவிரோதமாக ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஷாஹாத் அஹமத் கான் என்பவரின் குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட ராணுவத்தினர் ஐந்துபேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி குறித்து முறைப்படி காவல்துறையினருக்குத் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்த சிலர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே பெங்களூரு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். இந்துத்துவ அமைப்பு ஒன்றின் நெருக்குதலுக்கு கர்னாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு பணிந்துபோவதும், தயக்கமில்லாமல் வழக்கு போடுவதும் வியப்பளிக்கின்றன. இந்த நிகழ்வில் சட்டவிரோதமான எந்தவொரு பேச்சும் இடம்பெறாத நிலையில் இப்படி வழக்குபதிவு செய்திருப்பது கருத்துரிமை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மீறுவதாக உள்ளது.

இந்தியாவெங்கும் பல்கலைக்கழக வளாகங்களை காவிமயமாக்குவதோடு கல்விச்சூழலையும் சீரழித்துவருகின்ற ஏபிவிபி அமைப்பு இப்போது மனித உரிமை அமைப்புகளைக் குறிவைக்கத் தொடங்கியிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு கிரீன்பீஸ் அமைப்புக்குக் கடுமையான நெருக்கடி தரப்பட்டது. இப்போது ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பைக் குறிவைத்துள்ளனர்.

இந்தியக் குடியரசுத் தலைவர் தனது சுதந்திரதின உரையில் ‘ சகிப்புத்தன்மையற்ற பிரிவினைவாத சக்திகள் தமது கோரமுகங்களை உயர்த்த முயற்சிக்கின்றன ‘ என எச்சரித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும்விதமாகவே ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின்மீதான தாக்குதல் நடந்துள்ளது. அந்த அமைப்பின்மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக ரத்துசெய்யவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

மாயாவதியை அவதூறாகப் பேசிய தயாசங்கர் சிங் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது

அண்மையில் குஜராத் உனா நகரில் இறந்த மாட்டின் தோலை உரித்து எடுத்துச் சென்ற நான்கு தலித் இளைஞர்களை இந்துத்துவ கும்பல் கட்டிவைத்து அடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலித்துகள் போராட்டமாக அதை முன்னெடுத்தார்கள். இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, பாஜகவை தலித் விரோத கட்சி என விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக மாயாவதியை விமர்சித்த உத்திரபிரதேச பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங், கீழ்தரமான ஒப்பிடலை செய்திருந்தார். மாயாவதி பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சிப் பதவிகளை வழங்குவதாகவும் இது பாலியல் தொழிலாளியின் செயலைப் போன்றது என பேசியிருந்தார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தயாசங்கர் சிங் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீது வன்கொடுமை சட்டம், பெண்களை கண்ணியக்குறைவாக பேசுதல், வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது.  தயாசங்கர் தலைமறைவான நிலையில் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது ஆணையைப் பிறப்பித்தது நீதிமன்றம். அகலகாபாத் நீதிமன்றத்தின் லக்னௌ கிளை தயாசங்கரின் ஜாமீன் மனுவை நீராகரித்தது.

இந்நிலையில் பாக்ஸர் அருகே பதுங்கியிருந்த தயாசங்கரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணி

மகாராஷ்டிர மாநிலத்தின் தலை நகரான மும்பையில் அமைந்துள்ள அம்பேத்கர் பவன் தாக்கப்பட்டதைக் கண்டித்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கான பிரம்மாண்டமான பேரணி மும்பையில் நடைபெற்றது.

பேரணி இறுதியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் சத்திரபதி சிவாஜி ரயில்வே நிலையத்திலிருந்து சீத்தாராம் யெச்சூரி உட்பட இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் மற்றும் தலித் அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

மகாராஷ்ட்ராவின் தலைநகர் மும்பையில் இதயப் பகுதியாக விளங்கும் மத்திய மும்பை பகுதியில் உள்ள தாதர் என்னுமிடத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பேத்கர் பவனும், பாரத் பூஷன் அச்சகமும் அமைந்துள்ளது. இவை இரண்டும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரால் 1937ல் கட்டப்பட்டவையாகும்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள உழைக்கும் மக்களுக்கான இயக்கங்களின் மையமாக இது செயல்பட்டு வந்தது. இந்த அச்சகத்தில் அம்பேத்கரால் எழுதப்பட்ட எண்ணற்ற புத்தகங்கள் மற்றும் இதழ்கள் அச்சடிக்கப்பட்டு வெளியாகியுள்ளன. இங்கே ஒரு நூலகமும் உண்டு.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இறந்த பின்பும் இந்த மையம் கடந்த பல ஆண்டுகளாக இயக்கத்தினை தொடர்ந்து மேற்கொண்டு வரு கிறது. ஒருசில மாதங்களுக்கு முன் ரோஹித் வெமுலாவின் தாயாரும் அவரது சகோதரரும் இங்கேதான் புத்த மதத்திற்கு மாறினார்கள்.

இந்நிலையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் மிகவும் கயமைத்தனமாக புல்டோசர்களை வைத்து இவை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்த வளாகத்தில் செயல்பட்டு வந்த மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் தூண்டுதலின் பேரில் இது நடை பெற்றுள்ளது.

டாக்டர் அம்பேத்கரின் வாழ்வுடனும் பணியுடனும் பின்னிப்பிணைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கட்டிடத்தை இடிக்கும் பணி பாஜக-ஆர்எஸ்எஸ் தலைமையின்கீழ் இயங்கும் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்க முடியாது. இந்த சம்பவத்தின் பின்னணியில் மாநில அரசு வில்லன் போல் இருந்திருக்கிறது என்பதில் ஐயமேதும் இல்லை.

அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதைக் கண்டித்து மாநிலம் முழுதும் எதிர்ப்பியக்கங்கள் நடைபெற்று வந்தன. இடதுசாரிக் கட்சிகளும், அம்பேத்கர் அமைப்பு களும் இணைந்து இவற்றை நடத்தின. இவ்வியக்கங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகாராஷ்ட்டிர மாநிலக்குழுவும் பங்கேற்றது.

பின்னர் மும்பையில் ஜூலை 19 அன்று மாபெரும் பேரணி – பொதுக்கூட்டம் நடத்துவது என கூட்டாக முடிவு மேற்கொள்ளப்பட்டது.

அதே சமயத்தில், மகா ராஷ்டிராவிற்கு வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஜூலை 16 அன்று இடிக்கப்பட்ட அம்பேத்கர் பவனைச் சென்று பார்த்தார். இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். 19ஆம் தேதி நடைபெறும் பேரணியில் பங்கேற்பதாக அறிவித்தார். இப்பிரச்சனையை மாநிலங்களவையில் எழுப்புவதாகவும் கூறினார். அவ்வாறு மாநிலங்களவையில் இப்பிரச்சனையை எழுப்பியபின் மீண்டும் பேரணியில் பங்கேற்பதற்காக மும்பைக்கு வந்தார். பேரணி-பொதுக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் ஆனந்தராஜ் அம்பேத்கர், ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் டாக்டர் பால்சந்திர காங்கோ, லால் நிஷான் கட்சி (லெனினிஸ்ட்) தலைவர் பீம்ராவ் பான்சோட், காங்கிரஸ் எம்எல்ஏ வர்ஷா கெய்க்வாட், சிவசேனை எம்எல்சி நீலம் கோர்கே முதலானோர் உரையாற்றினார்கள்.
சீத்தாராம் யெச்சூரி

சீத்தாராம் யெச்சூரி உரையாற்றுகையில், “மாநில அரசாங்கமும், நகராட்சியும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை மட்டும் இடிக்கவில்லை, மாறாக விடுதலை இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய, தலித் இயக்கப் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கட்டிடத்தை இடித்துள்ளனர். இது

டாக்டர் அம்பேத்கரால் தன் சொந்தப்பணத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகும். சமூகநீதிக்கான கட்டிடம் மட்டும்இ டிக்கப்படவில்லை, சமூக நீதிக்கான தொலைநோக்குப் பார்வையும் இடிக்கப்பட்டிருக்கிறது” என்று சாடினார்.

திட்டக் கமிஷன் போன்ற சமூகநீதிக்கான அனைத்து கட்டமைப்புகளும் பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. திட்டக்கமிஷன் ஒழிக்கப்பட்டதால், தலித்இ னத்தினருக்கான துணைத் திட்டங்களும் இனி கிடையாது.

இவ்வாறு பாஜகவின் தலித் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரி அமைப்புகளும், தலித் அமைப்புகளும் செங்கொடி மற்றும் நீலக்கொடிகளின் கீழ் அணி திரளவேண்டியது அவசியம்.

நன்றி: தீக்கதிர்.

எழுத்தாளர் அன்பு செல்வம் பவுத்த பூஷன் அச்சகம் அல்ல. பாரத் பூஷன் அச்சகம் தான் அம்பேத்கரால் தொடங்கப்பட்டது. பவன் தொடங்கப்பட்ட ஆண்டு 1930 அல்ல. 1937, அறக்கட்டளை தொடங்கப்பட்ட ஆண்டு 1944 என திருத்தங்களைச் சொல்லியிருக்கிறார். கட்டுரையில் வந்த பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

“எங்கே போகிறது பா.ஜ.க.? முடிவில் என்ன தான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!”

திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, பா.ஜ.க.வினர் சிலரும், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சிலரும் மற்றும் அவர்களது தொண்டரடிப்பொடி பிரசாரகர்களும், விளைவுகளைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலையின்றி, எதை நினைத்தாலும் பேசலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எல்லைக்கே சென்று செயல்பட்டு, நாட்டில் பேதத்தையும், வேறுபாட்டையும், பிளவையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாபாசாகேப் அம்பேத்கர் – கன்சிராம் வழி நின்று குரல் கொடுத்து வருபவருமான மாயாவதி அவர்களை, உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. துணைத் தலைவரான தயாசங்கர் சிங், அவரது பெண்மையைப் பற்றித் தரக்குறைவான வார்த்தைகளால் ஏசியிருக்கிறார். யாருக்கும் தலை வணங்காமல், எதற்கும் அஞ்சாமல், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்ததால் தான், பா.ஜ.க. வினர் தன்னை இழித்தும், பழித்தும் பேசுவதாக மாயாவதி அவர்களே மனம் வெதும்பிக் குறிப்பிட்டிருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாநிலங்களவையில் நேற்றையதினம், கழகக் குழுத் தலைவர் கவிஞர் கனிமொழி, “பாஜ.க. தலைவர் ஒருவர், மாயாவதியை தரக் குறைவான வார்த்தையைச் சொல்லி விமர்சித்ததற்காக, அது நாட்டிலே உள்ள ஒட்டுமொத்த மகளிர் சமுதாயத்தையே சாடியதாகக் கருதப்படும்” என்று தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துப் பேசியிருக்கிறார். பா.ஜ.க. தயாசங்கர் சிங் அவர்களின் இழிவான பேச்சுக்காக, நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்கள் வருத்தம் தெரிவித்த போதிலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரிய தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் விடுத்துள்ள கோரிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் வலியுறுத்துகிறேன். என்ன நடவடிக்கை எடுத்தாலும், நாவினால் சுட்ட வடு ஆறி விடுமா என்ன?

இதுபோலவே, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த மாநிலமான – பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகின்ற குஜராத்தில் உனா என்ற இடத்தில், செத்துப் போன பசுமாட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்த தலித் இனத்தவரை, கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கும்பல் தாக்கியது. இது தொடர்பாக அங்கே தொடர்ந்து கண்டனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்கப்பட்ட தலித்துகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை முதல்வர் ஆனந்தி பென் படேல் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். நாடாளு மன்றத்திலும் நேற்றையதினம் இந்தப் பிரச்சினை புயலைக் கிளப்பியுள்ளது. தாக்கியவர்கள் மீது உடனடியாகச் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அனைவரும் கூறுவதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இந்தியாவில் தபால் அலுவலகங்கள் அனைத்து மதத்தினரும், எல்லாப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் வந்து போகின்ற இடம். மத்திய அரசைச் சேர்ந்த அலுவலகங்கள் அவை. ஆனால் அங்கே பா.ஜ.க. அரசு புனித “கங்கை நீர்” விற்பனைக்கு அனுமதித்திருப்பதாக ஏடுகளில் வந்துள்ள செய்தி பற்றி என்னைக்கேட்ட போது, “பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால், இதே தபால் அலுவலகங்களில் திருநீறு, குங்குமம் ஆகியவையும் விற்பனைக்கு வந்து விடும். பக்தர்கள் கவலைப் படத் தேவையில்லை. “மதச் சார்பற்ற குடியரசு” என இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த அளவுக்குக் கேவலப்படுத்தப்பட்டு வருவதை, யாராலும் கற்பனை செய்தும் பார்த்திட இயலாது” என்று பதிலளித்தேன். இதற்காகத் தமிழகத்திலே உள்ள இந்து முன்னணியினர் கங்கை நீரை என் வீட்டிற்கு “பார்சல்” அனுப்புகிறார்களாம். புகைப்படமே ஏடுகளில் வந்துள்ளது. அதில் கங்கை நீரை தபால் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்ததற்காக பார்சல் அனுப்புவதாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே? நன்றாக விற்கட்டும்! நாடெங்கும் நாள்தோறும் விற்கட்டும்! தபால் அலுவலகப் பணிகளை யெல்லாம் விட்டு விட்டு விற்கட்டும்! பார்சலும் அனுப்பட்டும்! இந்துத்துவாவைப் பரப்பட்டும்! பா.ஜ.க. தலைமை இவை எல்லாவற்றுக்கும் முடிவில் என்ன தான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மகனுக்கு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த பாஜக தலைவர்

ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் தலா மராந்தியின் மகன் முன்னா மராந்தி 11 வயது சிறுமியை திருமணம் செய்திருக்கிறார். முன்னா மராந்தியின் திருமணம் கடந்த 27-ம் தேதி 11 வயது நடந்துள்ளது. திருமண வரவேற்பு ஜூன் 29-ம் தேதி நடைபெற்றுள்ளது. சிறுமியின் பள்ளி சான்றிதழ் படி அவருடைய பிறந்த தேதி ஜூலை 25, 2005. சிறுமிக்கு 11-வயதே ஆகிறது என்றும் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே உறவுக்கார சிறுமியையே முன்னா திருமணம் செய்தாக இருந்தது. ஆனால் சிறுமியின் பெற்றோர்கள் இளம் வயதில் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

இதனால் முன்னா மற்றொரு சிறுமியை திருமணம் செய்துள்ளார்.  உறவுக்கார பெண் மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார். அதில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி முன்னா என்னை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரிதிஷ் குமார் பேசுகையில், சிறுமிக்கு திருமணம் நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. தகவல் தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபார் தாசும் இந்தத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இருந்தது, கடைசியில் கைவிடப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

“மாமா வளவா” : தியானம் செய்த திருமாவளவன் குறித்து பாஜக தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவியின் நாகரிக பதிவு

பாஜக தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் ரமாவின் அரசியல் நாகரிகம் தாழ்ந்த தரத்தில் இருக்கிறது. உதாரணமாக நீச்சல் உடையில் இருக்கும் ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு அதை சோனியா காந்தி என சொல்லி இவரெல்லாம் எப்படி ஒரு கட்சியின் தலைவரானார் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

சமீபத்திய பதிவில் “மாமா வளவா” என்று விளித்து தொல் திருமாவளவன், நோன்பிருப்பது குறித்து அவதூறான பதிவொன்றை எழுதியிருக்கிறார்..

Rama R

மாமா வளவா,

யாரை ஏமாற்ற இந்த நாடகம்…

தொழுகையின் போது தலையில் குல்லா இல்லாவிட்டால் கூட கைகுட்டையை கட்டியாவது தொழுவாா்கள், இது கூட தெரியாத நீ எப்படியா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாய் ? ?

இஸ்லாமியா்களை ஏமாற்றவா ?

இல்லை, தலீத்களை ஏமாற்றவா ? ?

கட்சியின் அனுதாபிகள், பெயர் வெளிப்படுத்தாதவர்கள் இப்படியான அவதூறு பதிவுகளை எழுதுவது வழக்கம். கட்சி பொறுப்பில் இருக்கக் கூடியவர் இப்படி எழுதியிருப்பதாக பலர் சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்த்து வருகின்றனர்.

அது தொழுகை அல்ல, தியானம் செய்கிற படம்:

“தலைவர் இந்தப் படத்தில் யோகாவும் தியானமும் செய்கிறார். தொழுகை அல்ல; இரண்டு நாட்கள் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அகரன் தனது முகநூலில் பகிர்ந்த படம் அது. யோகாவைத்தான் அந்த அம்மா, தொழுகை எனச் சொல்லுகிறார்” என விசிக தரப்பில் இருந்து இந்தப் படம் குறித்து விளக்கம் தந்துள்ளனர்.

தலித் வீட்டில் உணவு: “தமிழிசையும் ஒரு காலத்தில் பட்டியல் பிரிவு இனத்தவர் என்பதை அறிவாரா?”

பா.ஜ.க. ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் சேலத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ.க.,வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நேற்று மாலை சேலம் காக்காயன் சுடுகாடு அருகே உள்ள கோர்ட் ரோடு காலனியில் உள்ள தன் கட்சிக்காரர் ஜீவானந்தம் என்ற  வீட்டில் சாப்பிட்டார்.

t3.jpg

தலித் சமூகத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று  ஜீவானந்தம்  அப்போது தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இனி நான் 365 நாட்களிலும் ஒரு வேளை சாப்பாடு தலித் வீட்டில் தான் சாப்பிட வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன் என்று கூறினார்.

தமிழிசையின் இந்த பேட்டிக்கு சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Rajarajan RJ
இப்படி தான் ஒருத்தரு திருக்குறளை பரப்புறேன் ன்னு வந்தாரு.. இப்போ திருவள்ளுவரை இந்து கடவுளா ஆக்க வேலை பாக்குறானுங்க!

இப்போ.. இந்தம்மா தலித் வீடுகளுக்கு போறேன்ன்னு கிளம்பி இருக்கு!

கண்றாவி.. இவிங்கள நினைச்சாலே அருவருப்பா இருக்கு!

நாடார்கள் கடைகளில் பொருட்களை வாங்காதே என்று முத்துராமலிங்கம் பார்ப்பனிய வெறியர்களின் தூண்டுதல்களோடு ஊளையிட்டுக் கொண்டு திரிந்த போது நாடார் கடைகளில் பொருட்களை வாங்கி நாடார்களின் வியாபாரத்தை தூக்கி நிறுத்தியவர்கள் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகங்களை சேர்ந்த மக்கள்.

நாடார்களின் கடைகள் தங்கள் பகுதிகளில் இருக்கக் கூடாது என்று அன்றைய சாதிவெறியர்கள் வன்மத்தோடு திரிந்த போது ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூக மக்கள் தங்களது நிலங்களை நாடார்களுக்கு கொடுத்து அவர்களது வியாபரத்திற்கு முதுகெலும்பாக இருந்தனர் என்பது வரலாறு.

அதற்காக ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எந்த விளம்பரமும் செய்யவில்லை.

அப்படிப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பரட்டை இப்போது தங்களுக்கு வாழ்வளித்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் சாப்பிட்டதை விளம்பரப் படுத்திக் கொண்டலைகிறது.

த்த்த்தூதூதூ

பா.ஜ.க தலைவர் திருமதி.தமிழிசை செளந்தரராஜன் “தலித்துகளோடு உணவருந்தினார்” என்று கொட்டை எழுத்தில் செய்தி வெளியிடுகின்றனர். தலித் என்ற சொல்லாடலே சட்டப்படி தவறு. அது இருக்கட்டும். ஒரு மனிதன் சக மனிதனோடு உணவருந்துவதை பத்திரிக்கையில் ஆச்சர்ய செய்தியாக வெளியிடும் அளவிற்கு அதிசயமான நிகழ்வா என்ன? அய்யா காமராஜர் மட்டும் தனது சமூகத்தை எம்.பி.சி பிரிவிற்கு மாற்றியிருக்காவிட்டால் இன்று தமிழிசை அக்காவும் பட்டியல் இனத்தவர் பிரிவில்தான் இருந்திருப்பார் என்பதை அறிவாரா?

Zig Zag Zubbu 
you have coming forward about minorities as well

ஒரு மனிதன் வீட்டில் இன்னொரு மனிதன் சாப்பிடுறதுக்கு எதுக்குடா இந்த பில்டப்பு அப்ரசண்டிகளா…இந்த பாருமா நீ பியர்ல் கிரில்ஸ் மாதிரி மனுசங்க திங்காத எதையும் தின்னேனு சொன்னா உன்னய பாராட்டலாம்….சும்மா மங்குணிங்கறத மணிக்கொருமுறை நிரூபிச்சுக்கிட்டு…

Shajakhan Shaji Yusuf

இது என்ன மனநிலை(?)

தலித் கள் மனிதர்கள் இல்லையா(?).

தலித் வீடுகளில் சாப்பிடுவதை ஏதோ ஜந்துக்களுடன் சாப்பிடுவது போல் சித்தரிக்கும் இழிவான மனநிலையை முதலில் மாற்றுங்கள்.

இது ஒன்றும் காட்டுமிராண்டிகள் வாழும் வட மாநிலங்கள் அல்ல. தமிழகம் என்பது நினைவில் இருக்கட்டும்.

Maria Pushpa Raj

அவங்க வீட்டு ஒரு

சம்பந்தம் பண்ணுங்களேன்
பாப்போம் .உங்க அக்றைய.

 

 

அசாமில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக!

அசாமில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 60 இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கிறது. வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை. 15 ஆண்டு கால ஆட்சியை இழந்திருக்கிறது காங்கிரஸ்.

மொத்த தொகுதிகள்: 126
கட்சி வென்றவை முன்னணி மொத்தம்
பாஜக 60 0 60
காங்கிரஸ் 26 0 26
All India United Democratic Front 13 0 13
அசாம் கனபரிஷத் 14 0 14
போடோலேண்ட் மக்கள் முன்னணி 12 0 12
சுயேட்சை 1 0 1
மொத்தம் 126 0 126

“பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்

Kumaresan Asak

அ. குமரேசன்
அ. குமரேசன்

விஜயகாந்தை விமரிசிக்கிறவர்கள் அவருக்குக் கோர்வையாகப் பேசத்தெரியாது என்று சொல்கிறார்கள். பேசத்தெரியாத ஒருவர் இப்போது பேசியிருக்கிற பேச்சு குண்டு போட்டது போன்ற விளைவை ஏற்படுத்தியிருக்கிறது.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும், வாக்குச் சாவடியிலேயே மற்ற கட்சிகளின் முகவர்களுக்குப் பணம் கொடுப்பதும், அணி சேர்வதற்காகத் தலைமைக்கே பணம் கொடுப்பதும் இப்படிப்பட்ட பெரிய கட்சிகளைப் பொறுத்தவரையில் புதிய விசயம் அல்ல. அந்தக் கட்சிகள் பண பேரம் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்வாரா நண்பர்?

தேமுதிகவை இழுக்க கோடிக்கணக்கில் பணம் தர இக்கட்சிகள் முன்வந்தது பற்றி, அந்தக் கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே செய்திகள் கசிந்ததுண்டு. கூட்டணி தலைவர்களும் கூட பேசியிருக்கிறார்கள். பேரம் நடக்கவில்லை என்று அப்போது பிரேமலதா உள்ளிட்ட தேமுதிக தலைவர்கள் பேசியது கூட, தங்கள் தரப்பிலிருந்து பேரம் பேசவில்லை என்ற பொருளில்தானேயன்றி, இந்தக் கட்சிகள் பணம் தர முன்வரவில்லை என்ற பொருளில் அல்ல.

யார் பணம் தருவது பற்றிப் பேசினார்கள் என்று குறிப்பாகச் சொல்ல வேண்டாமா என்று கேட்கிறார் நண்பர் சுமன். ‘ஸ்டிங் ஆபரேசன்’ என்று ஊடகங்களில் சொல்வார்களே, அது போல் ஏதாவது செய்தால்தான் அது சாத்தியம். யாராக இருந்தாலும் பண பேரம் நடத்துவதற்கு ஆதாரம் கிடைப்பது போல் பேச மாட்டார்கள் என்பதை எவரும் ஊகிக்க முடியும்.

விஜயகாந்த் இதை அப்போதே சொல்லாமல் இப்போது சொல்வது ஏன் என்றும் கேட்கிறார். அப்போதே இதை வெளிப்படுத்தியிருந்தால் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியினரின் பிரச்சாரம் மேலும் வலுப்பெற்றிருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அரசியல் நாகரிகம் கருதி கூட அப்போது அவர் தவிர்த்திருக்கலாம். இப்போது கூட அவராக இதை வெளியிடவில்லை. ஒரு ஊடகம் தனது பேட்டியில் இதைப் பற்றிய கேள்வியை எழுப்பியதால் பதிலளித்திருக்கிறார். அப்போதே ஊடகங்கள் இக்கேள்வியைக் கேட்டிருக்கலாமே?

வெளியே தெரியாமலே போவதை விட தாமதமாகவாவது உண்மை வெளிப்பட்டது நல்லதுதான். ஒரு குற்றம் நடக்கிறது என்றால், அந்தக் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நீதிமன்றத்தை நாடாமல் இருக்கலாம். பின்னர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்து வழக்குத் தொடுக்கிறபோது, ஏன் அப்போதே வழக்குப் போடவில்லை என்று நீதிமன்றம் நோண்டிக்கொண்டிருப்பதில்லை. குற்றம் நடந்தது உண்மையா இல்லையா என்று விசாரித்து, உண்மைதான் என்றால் குற்றவாளிக்கு உரிய தண்டனையை நீதிமன்றம் அளிக்கும். இந்தக் கட்சிகள் இப்படி நடந்துகொண்டது பற்றிய உண்மை இப்போதாவது வெளிப்பட்டிருக்கிறது. இதற்கான தண்டனையை மக்கள் மன்றம் அளிக்கும்.

வேறொரு செய்தியும் இன்று வந்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் நிதி நெருக்கடியோடு கடுமையான தேர்தல் நிலைமைகளை எதிர்கொண்டுள்ளன என்பதே அந்தச் செய்தி. இக்கட்சிகளின் தொண்டர்கள் தங்கள் சொந்தச் செலவில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று அந்தச் செய்தி கூறுகிறது. இது கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளர்த்திருக்கிற பண்பு.

இந்தப் பண்பு பரவலாக வேண்டும், மற்ற கட்சிகளும் பண பலத்தைப் பயன்படுத்தாமல் இப்படி மாற வேண்டும். அந்த மாற்றத்தை நோக்கிச் செல்வதற்கு இப்படிப்பட்ட பண பேரம் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். அதை இப்போது விஜயகாந்த் சரியாகவே செய்திருக்கிறார்.

-‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ (மே 14) நிகழ்ச்சியில் ‘பாஜக, அஇஅதிமுக, திமுக எனக்குப் பணம் கொடுக்க முன்வந்தன’ என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘தி நியூஸ் மினிட்’ என்ற இணைய ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி தொடர்பாக நான் கூறிய கருத்துகளின் சாரம் இது. உடன் பங்கேற்றவர்: ஊடகவியலாளர் சுமன். நெறியாளர்: ஜென்ராம்.

”வானதி எளிமையானவர் என்பதால் அவருக்காக வாக்கு கேட்கிறேன்” வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன் பிரச்சாரம்!

கோவை, சிவானந்தா காலனியில் உள்ள தனியார் அரங்கில் ‘நட்புடன் வானதி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். அப்போது அவர் (தினமணி எழுதியுள்ளபடி)

“நாடு முன்னேற்றமடைய பெண்கள் துணிவுடன் செயல்பட வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் வானதி சீனிவாசன். அவரது செயல்பாடுகள் மற்றும் அனைவரிடத்திலும் எளிமையாகப் பழகும் குணம் காரணமாக எந்தக் கட்சியிலும் சாராத நான் அவருக்கு ஆதரவாக உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளேன். மேலும், வானதி துணிச்சலாகப் போராடி இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றியுள்ளார். எனவே, பெண்களின் நலனில் அக்கறை கொண்ட வானதி சீனிவாசனை வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.

வானதியைவிட எளிமையான, மக்களின் பிரச்சினைக்காக களத்தில்  போராடும் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் லட்சுமி வாக்கு கேட்பாரா?

“வாசகர்கள் பிரமிப்பு” என்கிறது தினமலர்; “மிச்சமிருக்கிற மரியாதைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்கிறார்கள் வாசகர்கள்!

தாங்கள் நடத்தும் கருத்து கணிப்பை பிரமிப்புடன் மக்கள் பார்ப்பதாக தினமலர் முதல் பக்க செய்தி வெளியிட்டிருக்கிறது.

“தமிழக வாக்காளர்களின் மனநிலையை படம் பிடித்தும் காட்டும் விதமாக, ‘தினமலர்’ நாளிதழும், ‘நியூஸ் 7’ தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. முதல் முறையாக, மிக பிரம்மாண்ட அளவில் நடத்தப்பட்ட, இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதாக, பொது மக்களும், கட்சி சாராதோரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்”

இந்தச் செய்தி தினமலர் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதற்கு வாசகர்கள் அளித்த நிஜ ‘பிரமிப்பு’களில் சில இங்கே…

 

Premkumar – Chennai,இந்தியா
நானும் கட்சி சாராதவன் தான் என்னிடம் இந்த கருத்து கணிப்பு வரவேற்பை பெற வில்லை. உங்களது கருத்து கணிப்புகள் நம்பும் படி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அது உங்களுக்கும் நன்கு தெரியும். எது எப்படியோ நான் தினமலர் மேல் வைத்து இருந்த நன் மதிப்பு போய் விட்டது,இந்த கருத்து கணிப்பின் முடிவு தினமலர் நாளிதழின் தனி தன்மையை சீர் குழைத்து விட்டது.எப்பொழுதும் நடு நிலைக்கு பேர் போன நீங்கள் இன்று நடு நிலை தவறி இருக்குறீர்கள். சமூகப் பொறுப்புணர்வுடன் நீங்கள் செயல்படவில்லை, செயல்படத் தயாராக இல்லை. ஜனநாயகத்தின் ஐந்தாம் தூண் உங்களைப் போன்றவர்களின் செயலால் உடைந்து நொறுங்கிவிட்டது. தேர்தல் முடிவுகள் உங்கள் கருத்து கணிபுகளோடு முற்றுலும் மாறுபடும் போது நீங்கள் நிச்சயம் தவறான கணிப்புக்காக வருத்தம் தெரிவிக்க நேரிடலாம். ஒட்டு மொத்தத்தில் இந்த கருத்து கணிப்பை தினமலர் நடத்தி இருக்க தேவை இல்லை.
Ramaswamy Sundaram – Mysore,இந்தியா
அன்பரே…சம்மட்டி அடி கொடுத்து இருக்கிறீர்கள்….உண்மையான தினமலரின் வாசகன் என்ற முறையில் வெட்கத்தால் என் தலை கவிழ்கிறது….இந்த உலகில் பணம் தான் பிரதானமா? உண்மைக்கும் மனசாட்சிக்கும் மதிப்பே இல்லையா? ஐயகோ…
Sugu Maran – chennai,இந்தியா
மேற்படி கருத்து கணிப்பை கவனித்தால் ஒன்று தெரிகிறது. அது இந்துத்வா கட்சி (பி.ஜே.பி.) பா.ஜ.க. குறிப்பிட்ட சதவிகிதத்தில் வாக்கு பெற்றிருப்பதாக தெரிவிக்கிறது. தினமலரையும் இந்துத்வாவையும் பிரிக்க முடியாதுபோல .
rajasekar – abbasiya,குவைத்
என்னாது … வரவேற்ப்பா….. அவனவன் தினமலர கழிவி கழிவி ஊத்துறது தெரியலையா…?
இந்தியா பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியை தினமலர் உறுதிபடுத்தி உள்ளது. அது எவவளவு என்று சொன்னால் போதும். நேரடியாக இல்லாவிட்டாலும், டீக்ககடை பெஞ்சு, கிசுகிசு என்றாவது சொல்லிவிடுங்கள். பணம் பண்ணுவதற்கு எத்தனை எத்தனை வழிகள், அடேங்கப்பா……ரூம் போட்டு யோசித்தீர்களா…..
Santhosh Gopal – Vellore,இந்தியா
ஐயா poompattinaathan , உங்கள் கருத்தில் பல தவறுகள் உள்ளது. செங்கோட்டையன் தோற்கடிக்க முடியாதவரா என்ற எதிர் கேள்வி கேட்டுள்ளீர்கள். ஆமாம் செங்கோட்டையன் தோற்கடிக்க முடியாதவர் தான். நீங்கள் கோபி தொகுதியின் தேர்தல் வரலாற்றை இணையத்தில் பாருங்கள். அதிமுக தோற்றபோது கூட செங்கோட்டையன் வெற்றி பெற்றே வந்துள்ளார். 2006 ல் கூட செங்கோட்டையன் அமோக வெற்றி பெற்றார். 2011 ல் 40 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எதிர்ப்பு அலை பலமாக இருந்த காலத்திலேயே செங்கோட்டையன் வெற்றி பெற்று வந்துள்ளார். இது வரை கோபி தொகுதியில் 8 முறை வெற்றி பெற்று வந்துள்ளார், அமைச்சர் வேறு அவருக்கு பலம், தொகுதியில் நன்கு அறிமுகமானவர். அவர் எப்படி தோற்பார்? கோபி தொகுதி மாதிரி தான் பொள்ளாச்சி தொகுதியும். எப்படி குமரி மாவட்டம் விளவங்கோட்டில் அதிமுக வெற்றி பெறவே முடியாதோ, அதே போல கோபி, பொள்ளாச்சி மற்றும் இதர கொங்கு மண்டல தொகுதிகளில் திமுக வெற்றி பெறவே முடியாது. இப்போது அதிமுக மீது எதிர்ப்பு அலை இல்லாத தேர்தல் நடைபெறுகிறது, இப்போது எப்படி இந்த தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெரும் என்று கொஞ்சம் விளக்குங்கள்.
Kumar Saranathan Parthasarathy – Chennai,இந்தியா
உங்கள் கருத்துக் கணிப்பை பல வாசகார்கள் ஏற்கவில்லை
Cheran Perumal – Radhapuram,இந்தியா
மற்ற தமிழ் நாளேடுகள் மிரட்டலுக்கு பணிந்து விட்டன. தினமலர் மட்டும் பணியவில்லை என்று கருணா கூறியுள்ளார். அந்த மிரட்டலுக்கு பதில்தான் இந்த கணிப்பா?
ramani – chennai ,இந்தியா
இந்த முறை ஆளும்கட்சி மீது அதிருப்தி எதுவும் இல்லை. அது தவிர ஏழை எளிய மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கும் மாணவர்களுக்கும் ஏராளமான சலுகைகளும் இலவசங்களும் தரப்பட்டுள்ளன. அதிக அளவில் ஓட்டு சாவடிக்கு செல்பவர்களும் அவர்கள் தான். அப்படி இருக்கையில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க அவர்களுக்கு என்ன அவசியம் வந்தது என்பது தெரியவில்லை. கருத்து கணிப்பு முடிவுகள் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன.
suresh – abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
இது உண்மையான கருத்து கணிப்பு போல தெரியவில்லை. பல இடங்களில் dmk வெற்றி பெறும் என்ற தோற்றத்தை இது காட்டுகிறது. இந்த கருத்து கணிப்பு பொய் என்று மே 19 ல் தெரிந்து விடும்.
Tamil Selvan – Chennai,இந்தியா
சுட்ட தேர்தல் அறிக்கைக்கே இவர்கள் ஆட்சியை பிடிப்பார்கள் என்றால், ஒரு வேளை சுடாத தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருந்தால் நினைத்து பார்க்கவே முடியவில்லை. ஒரு வேளை 234 தொகுதிகளையும் அல்லவா முன்னிலை என்று வந்து இருக்கும்???…
தீப்பொறி – Bengaluru,இந்தியா
நடுநிலை ( என்றால் என்ன என்று கேட்கும் ) தவறாத தினமலரின் கருத்து திணிப்பு , மிகச் சிரிப்பாக இருக்கிறது என, பொது மக்களும், கட்சி சார்ந்தவர்களும் & சாராதவர்களும் வரவேற்றுள்ளனர்.
nallavan – chennai,இந்தியா
அது என்ன செல்லத்தக்க ஒட்டு, செல்லாத ஒட்டு, நீ என்ன election கமிஷனா ?, அ.தி.மு.க ஒட்டெல்லாம் செல்லாத ஒட்டு, தி.மு.க ஒட்டுல்லாம் செல்லத்தக்க ஒட்டு, மே19, C – voter பேர தினமலர் வாங்கபோகுது, உண்மையிலே நீ சொல்லுவது போல தி.மு.க கு அதரவு ந, எதுக்கு இவளோ எதிர்ப்பு கருத்துகளும், எதிர்ப்பு கருத்துகளுக்கு ஆதரவும் வருது, எது எப்படியோ, இப்போ இனிமே தி.மு.க வரகூடாது நு நினைக்குற எல்லாரும் ஒன்னு சேந்து அ.தி.மு.க கு ஒட்டு போடா போறான், உதவி செய்றதா நனைச்சி தி.மு.க கு அப்பு வச்சிடின்களே
anuraju – chennai,இந்தியா
so many media and organisation are taking opinion polls. But why all opinion polls or not same ? தினமலர் கரி பூசிக் கொள்ளப் போகிறது மே 19ம் தேதி.
Madhu Soodhanan – Jabalpur,இந்தியா
வாசகர்களின் பிரமிப்பை பார்த்தாலே தெரியுது உங்களுடைய கணிப்பு எவ்வளவு துல்லியம் என்பது அணைத்து வாசகர் கருத்தையும் படித்துவிட்டேன் 85% எதிர்ப்பு 15% ஆதரவு உங்கள் கணிப்பிற்கு இதுதான் உண்மையான கணிப்பு தேர்தல் முடிவும் இதுதான் இதில் கூற்று என்னவென்றால் வைகுண்டராஜன் யார் என்று சொன்னதே தினமலர் தான் இன்று அவர் நடத்தும் சானலுடன் கணிப்பு தயவு செய்து மிச்சம் இருக்கும் கணிப்பை வெளியிடவேண்டாம் உங்களின் மிச்சம் இருக்கும் மரியாதையை காப்பாற்றி கொள்ளலாம்

maran – madurai,இந்தியா

திருமங்கலம் தொகுதியில் தி மு க தோற்கும் என்றே காங்கிரசுக்கு தள்ளி விட்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் மணிமாறன் மாவட்ட செயலாளர் சொந்த தொகுதியை விட்டு நிற்கிறார். கள்ளிகுடி மற்றும் கல்லுபட்டி ஒன்றியம் முழுக்க இன்னும் எம் ஜி ஆர் இரட்டை இலை சின்னத்தை யாராலும் மாற்ற முடியவில்லை ( சேடபட்டி முத்தையா ) பிறகு எப்படி திமுக ஜெயிக்கும் மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை கிழக்கு இரண்டுமே தவறாகத்தான் உள்ளது . இந்த ஒரு முடிவே தினமலரின் தரத்தின் நடுநிலைமையை இழந்து விட்டது .நான் 30 வருடங்களாக தினமலர் படித்தும் தினமும் வாங்கியும் வருகிறேன் . இனிமேலும் வாங்கலாமா படிக்கலாமா என முடிவு செய்ய வேண்டும் போல் உள்ளது உங்களது கருத்து கணிப்பு.

அதிமுக, பாஜகவில் வாய்ப்புக் கேட்டுப் போனவர் விஜயதரணி: உருவபொம்மை எரித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

விளவங்கோடு தற்போதைய எம்.எல்.ஏ. விஜயதரணி தொகுதிக்கு வருவதில்லை. தொகுதி மக்களுக்கு வளர்ச்சி பணிகள்செய்வதில்லை. தொகுதி வர வேண்டுமானால் கட்டவுட்டுகள், போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக காங்கிரஸார் கொதித்து போயுள்ளனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தமிழக மகளிரணித் தலைவர் பொறுப்பிலிருந்து விஜயதரணி நீக்கப்பட்டார். அப்போது அதிமுகவில் சேர்வதற்கும் பாஜகவில் சேர்வதற்கும் விஜயதரணி முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக விஜயதரணி வெளிப்படையாக பேசினார்.

இந்த சூழ்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் மகிளா காங்கிரஸில் விஜயதரணிக்கு பொறுப்பு தரப்பட்டது. அடுத்து, விளவங்கோடு தொகுதியின் வேட்பாளராக மீண்டும் விஜயதரணியை கட்சி மேலிடம் அறிவித்தது. காங்கிரஸ் மேலிடத்துடன் முரண்பாடு ஏற்பட்ட நேரத்தில் கட்சிக்காரர்களுடன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்த விஜயதரணிக்கு ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு, அப்பகுதி காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் 24 ஆம் தேதிஅன்று மாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மேல்புறம் சந்திப்பில் ஒரு திருமண மண்டபத்தில் விஜயதரணியின் எதிர்ப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வழக்கறிஞர் பிரேயர் பிரின்ஸ், எட்வின் ஜோசன், ஆமோஸ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் பணிகள் செய்யாத காங்கிரஸ் கட்சியை உதறிவிட்டு அ.தி.மு.க , பி.ஜே.பி கதவுகளை தட்டி வாய்ப்பு இல்லாமல் போனதால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்து கட்சிக்கே களங்கம் விளைவித்த விஜயதரணியை புறக்கணிப்போம் என்று கூறி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மேல்புறம் சந்திப்பில் விஜயதரணியின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர்.

தீக்கதிர் செய்தி உதவியுடன்

“பிஜேபி ரெண்டு, மூணு சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கே”: சுப்ரமணியன் சுவாமி

சமீபத்திய சீ ஓட்டர் கருத்து கணிப்பில் தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெல்ல வாய்ப்பில்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில் பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி பாஜக இரண்டு அல்லது மூன்று தொகுதியில் வெல்ல வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், “வித்தியாசமான ஆதரவு இருக்கே  ஹிந்து மக்கள் ஆதரவு இருக்கு. ஆர். எஸ். எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணியோட  ஆதாரம் இருக்கே. அதன் காரணம் ரெண்டு, மூணு சீட் ஜெயிக்க வாய்ப்பிருக்கே” என்று தெரிவித்தார்.

 

ப. சிதம்பரம் தேசத் துரோகி: முத்திரை குத்தினார் தமிழிசை

நாடு முழுவதிலும் உள்ள பாஜகவினர் தங்களுடைய சித்தாந்தத்தை எதிர்க்கும் மாணவர்கள், அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் என அனைவரையும் ‘தேசத்துரோகி’ முத்திரை குத்தி வந்தனர். இந்நிலை தமிழக அரசியல் சூழலில் இல்லாமல் இருந்தது. அந்தக் குறையை தேர்தல் அரசியலுக்காக கையில் எடுத்திருக்கிறார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன்.

செவ்வாய்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,

“இஷ்ரத் ஜகான் வழக்கில் பிரமான வாக்குமூலத்தை வேண்டுமென்றே இரண்டாம் முறையாக அவர் தீவிரவாதி இல்லை என்று திருத்திய ப. சிதம்பரம் ரகசியம் அம்பலமான நிலையில் காங்கிரஸின் தேசவிரோத கூட்டணிக்கு தேச பக்தர்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது.

இஷ்ரத் ஜகான் தீவிரவாதி தான் என டேவிட் ஹேட்லியும் ஒப்புக் கொண்ட நிலையில், இவ்வழக்கின் முதல் பிரமாண வாக்குமூலத்தில் அவர் தீவிரவாதிதான் என்று கையெழுத்து இட்ட அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வேண்டுமென்றே அரசியல் லாபம் கருதி, மோடியை சம்பந்தப்படுத்த வேண்டும் என்ற அரசியல் லாபம் கருதி, இஷ்ரத் ஜகான் தீவிரவாதியல்ல என்ற திருத்தியுள்ளார்.

எனவே தேசத் துரோகம் செய்த காங்கிரசுக்கும், அதன் கூட்டணிக்கும் தமிழக வாக்காளர்கள் வாக்களிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

மேலும், இத்தகைய நடவடிக்கைகள் சரியா? என்பதை தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கருணாநிதி யோசிக்க வேண்டும். தமிழ்நாடு இவர்களிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறது” என்று கூறியுள்ளார் தமிழிசை.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இழிபடுத்தும் தமிழக பாஜக…

எல்லா இந்துக்களையும் அவரவர் உருவத்தில் வரைந்திருக்கிற இந்துக்களுக்கான கட்சி, திருமாவளவனை மட்டும் எவ்வளவு இழிவாகக் காட்டுகிறது. இத்தனைக்கும் அவர், இவர்கள் துரோகிகளாக சித்தரிக்கிற முஸ்லிமும் அல்ல .

மற்றவர்கள் அரசியல்வாதியாக மட்டும் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், திருமா தலித்தாக இருக்கிறார் என்பதற்காகதான் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறார். இது தேர்தலுக்கான விளம்பரம் மட்டுமல்ல, தலித் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் கொண்ட இந்து சமூகத்தின், 1000 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட ஜாதிவெறியின் நவீன சாட்சி.

thiruma 2

“இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் திராவிட, காங்கிரஸ், கம்யூனிச, சினிமா, சாராயம், இலவச அரசியல் கலாசாரங்கள் ஒழிக்கப்படும்”

இந்து மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டு விழா திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான நேர்காணல், வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. 567 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

முதற்கட்டமாக 127 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் சுந்தர்சுவாமி போட்டியிடுகிறார். அதிமுகவை பாஜக இப்போதுதான் விமர்சித்துப் பேசுகிறது. இது தேர்தலுக்கான விமர்சனங்கள்.

அதிமுக கூட்டணிக்கு முதல்வர் ஜெயலலிதா அழைத்தால், இந்து மக்கள் கட்சி இணைந்து போட்டியிடத் தயார். மக்கள் நலக்கூட்டணி என்பது 3-ஆவது அணி. மாற்றுமில்லை, மாற்றமும் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட இந்து அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

திமுக கொஞ்சம், கொஞ்சமாக முஸ்லிம் அமைப்பாகவே மாறிவிட்டது. தமிழகத்தில் இந்து அமைப்புகளை திமுக, அதிமுக கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை மட்டுமே குறி வைத்து திமுக, அதிமுக செயல்படுகிறது. 85 சதவீதம் வாக்கு வங்கி கொண்ட இந்து அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.

தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் திராவிட, காங்கிரஸ், கம்யூனிச, சினிமா, சாராயம், இலவச அரசியல் கலாசாரங்கள் ஒழிக்கப்படும்.

பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். கள் உணவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டு தென்னம்பால், பனம்பால் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும். 5-ஆம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும். மும்மொழி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும். நெசவாளர்கள் நலன் காக்கும் வகையில், கைத்தறி நெசவாளர்கள் அனைவரும் அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவர். பெண்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் செயல்படும் பாதுகாப்புப் படை அமைக்கப்படும். காவல் துறைக்கு சங்கம் அமைக்கப்படும். கோயில்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும். திருவண்ணாமலை நகரம் புனித நகரமாக அறிவிக்கப்படும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து மாமிசக் கடைகளும் அகற்றப்படும் என்றார்.

தினமணி செய்தி

#வீடியோ: “செங்கோட்டையில் பறந்த காவி கொடி”: தமிழிசை சவுந்தர்ராஜனின் தேசப்பற்று இதுதானா?

டெல்லி செங்கொட்டையில் இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடி பறக்கவிடப்படுவதுதான் வழக்கம். ஆனால், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செங்கோட்டையில் காவி கொடி பறந்தது போல தமிழகத்தின் ஜார்ஜ் கோட்டையிலும் காவி கொடி பறக்கும் என கட்சிக் கூட்டத்தில் பகிரங்கரமாகப் பேசியிருக்கிறார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தேசியக் கொடியை ஏற்காதவர்கள் தேசவிரோதிகள் என பாஜகவினரும் அதனுடன் தொடர்புடைய சங் பரிவாரத்தினர் கடுமையாக நடந்துகொள்கின்றனர்.  இந்நிலையில் தமிழிசை சவுந்தர்ராஜனின் பேச்சு, சங் பரிவாரத்தினரின் உண்மையான தேசியக் கொடி காவிக் கொடிதான் என்பதை உரக்கச் சொல்வதாக அமைந்துள்ளது.

வீடியோ கீழே…

கம்யூனிஸ்ட்களுக்கு முடிவு கட்டாமல் விடமாட்டேன்: ஹெச்.ராஜா சவால்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி உட்பட பல்வேறு கேள்விகளுக்கு சென்னையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலளித்தார்.
கேள்வி:– தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா காலூன்ற முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான டி.ராஜா கூறியிருக்கிறாரே?

பதில்:– “இந்தியாவில் நடந்த முதல் பொது தேர்தலின் போது 2–வது பெரிய கட்சியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி இருந்தது. இப்போது ஒரு சீட் கட்சியாக மாறிய பிறகும் கம்யூனிஸ்டு தலைவரின் செருக்கு குறையவில்லை என்பதையே காட்டுகிறது.

நாடு முழுவதும் கம்யூனிசத்தை அப்புறப்படுத்த மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். கேரளாவுக்கு நான் பொறுப்பாளர். அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு முடிவு கட்டாமல் விடமாட்டேன்.

தமிழக அரசியலில் கணுக்கால் அளவு கூட உயரம் இல்லாத போது அவர்கள் இவ்வாறு கூறுவது நகைப்புக்குரியது.” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பலாத்காரம் பண்ணுவோம்;கொலை செய்வோம்: கன்னையா செய்திகளுக்காக பர்கா தத்தை மிரட்டும் மர்ம நபர்கள்….

கடந்த 4-ந்தேதியில் இருந்து,, தனக்கு டெலிபோனில் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதாக,  பத்திரிகையாளர் பர்கா தத்  போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக, பர்கா தத், செவ்வாய்கிழமை டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார்.

 

Capture.JPG

 

அப்போது, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினை குறித்து, தான் செய்தி வெளியிட்டதால், மர்ம நபர்கள், தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு, பாலியல் பலாத்காரம்  செய்து கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

*மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு, சமூக வெளிகளில் தைரியமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்கும் பெண்களுக்கு, இது போன்ற பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகியுள்ளது என்று டிவிட்டரில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.