சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!

சந்திரமோகன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால், இந்திரா காந்தி தேசிய திறந்த பல்கலைக்கழத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேற்று கலந்துகொண்டு பேசினார். அப்போது, புகழ்பெற்ற ஐஐடி மற்றும் என்ஐடி IIT & NIT கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவரிடம் ஒரு முக்கிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதில், "1) சம்ஸ்கிருதம் விஞ்ஞான அறிவியல் மொழி எனவும், 2) கணினியில் உபயோகப்படுத்த சிறந்த மொழி எனவும் நிரூபிக்க ஆராய்ச்சி மேற்கொள்ளவும், 3) எதிர்காலத்தில் … Continue reading சம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு!

அம்பேத்கரும்,மார்க்ஸும், தமிழக மேதாவி கம்யூனிஸ்டுகளின் கையில் கிடைத்த பூமாலையும்

அம்பேத்கரியமும் மார்க்சியமும் இந்திய சூழலில் தராசின் எதிர் முனைகள் அல்ல மாறாக சமத்துவம் என்னும் தேரின் இருபெரும் சக்கரங்கள். ஒன்று இன்னொன்றை புறம்தள்ளுவது என்பது அந்த தேரை சாய்த்து விடும்.

“திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?”

சீனி. விடுதலை அரசு தி இந்து நாளிதழில் வெளிவந்த ”அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்” என்ற சமஸ் அவர்களின் கட்டுரை தானும் குழம்பி படிப்பவரையும் குழப்பும் குழப்பத்தின் உச்சம். முதலில் இந்த கட்டுரை யாரை நோக்கி கேள்விகளை முன் வைக்கிறது? திராவிடர் இயக்கங்களையா? திராவிடக் கட்சிகளையா? தேர்தல் அரசியலுக்கு செல்லாமல் சமூகப் புரட்சியை இலக்காக கொண்டு செயல் படுபவை திராவிடர் இயக்கங்கள். தேர்தல் அரசியலில் ஒட்டுக்காக சில சமரசங்களை செய்து கொண்டு, மத்திய … Continue reading “திராவிடர் இயக்கம் இனப்பாகுபாடு இயக்கம்! இது எந்த ஊர் நியாயம் சமஸ்?”