சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழ. கருப்பையா, அதிமுகவில் நிலவி வரும் ‘வழிபாட்டு’ சூழல் பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பெரியார் திடலில் பேசிய பழ. கருப்பையா, “அம்மா முன்னாடி சோ. ராமாசாமி வாய் பொத்தி நிப்பாரா? தினமணி வைத்தியநாதன் கால்ல விழுவாரா? ஆனா சூத்திரன் தான் இது எல்லாத்தையும் செய்றோம்” என்று பேசியிருக்கிறார். வீடியோவில் பாருங்கள் http://www.youtube.com/watch?v=cyt7zBcYdPg
குறிச்சொல்: பழ. கருப்பையா
’காங்கிரஸுக்கு வாருங்கள்!’: பழ. கருப்பையாவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அழைப்பு!
அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பழ.கருப்பையா வீட்டில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும், பழ. கருப்பையா, காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுப்பதாக காங்கிரஸ் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை பா.ஜ. தலைமையிலான மத்திய அரசு வேண்டுமென்றே முடக்கிவருகிறது. சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் … Continue reading ’காங்கிரஸுக்கு வாருங்கள்!’: பழ. கருப்பையாவுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் அழைப்பு!
ஆட்டோவில் வந்து வீட்டின் மீது தாக்குதல்:”இதெல்லாம் என்ன ஆட்சி? என்ன நியாயம்?” பழ. கருப்பையா ஆதங்கம்!
அதிமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார் பழ.கருப்பையா. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழ.கருப்பையாவின் வீட்டின் மீது ஆட்டோவில் வந்த சிலர் வெள்ளிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். அவரது வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியெறிந்ததில் சேதம் அடைந்தன. இதுகுறித்து பேசிய பழ.கருப்பையா. “கருத்து ரீதியாக மாறுபட்டு போனால் இப்படித்தான் நடந்துகொள்வதா? இதெல்லாம் என்ன ஆட்சி? என்ன நியாயம்? வேலூரில் மிரட்டுகிறார்கள். இங்கே வந்து கல் வீசித்தாக்குகிறார்கள். ஒரேயடியாக கொலை செய்துவிட்டு போக வேண்டும். … Continue reading ஆட்டோவில் வந்து வீட்டின் மீது தாக்குதல்:”இதெல்லாம் என்ன ஆட்சி? என்ன நியாயம்?” பழ. கருப்பையா ஆதங்கம்!
#விவாதம்: பாண்டேயின் உடல்மொழியும் மற்றைய நெறியாளர்களின் காந்தி வழியும்…
வியாழக்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சி குறித்து சமூக-அரசியல் விமர்சகர் வில்லவன் இராமதாஸ் ஒரு பதிவு எழுதியிருந்தார்... “விவாதிப்பவர்கள் ஏன் பாண்டேயிடம் சமநிலை இழக்கிறார்கள்? பாண்டே எழுப்புவதைவிட சிக்கலான கேள்விகளை மற்ற தொலைக்காட்சி நெறியாளர்கள் எழுப்புகிறார்கள். பாண்டே மிகவும் பழைய மற்றும் ஒரே பொருள் கொண்ட கேள்விகளைத்தான் திரும்பத்திரும்ப எழுப்புகிறார். ஆனாலும் மற்ற நெறியாளர்களிடம் உண்டாகாத பதட்டம் மற்றும் தடுமாற்றம் பாண்டேயிடம் பேசுவோரிடம் தென்படுகிறது. காரணம் பாண்டேயின் தனிப்பட்ட (மற்றும் ஆபத்தான) உடல்மொழி. தலையை தாழ்த்தி மேல்பார்வை … Continue reading #விவாதம்: பாண்டேயின் உடல்மொழியும் மற்றைய நெறியாளர்களின் காந்தி வழியும்…
’நீங்கள் மனநோயாளி’:தந்தி டிவி விவாதத்தில் பழ.கருப்பையா நேரடி தாக்கு: பாண்டே என்ன செய்தார்?
வியாழக்கிழமை பழ. கருப்பையா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதும் அவர் தனது எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்ததும் தொலைக்காட்சி சானல்களில் விவாதமாகின. தந்தி டிவியில் நடந்த விவாதத்தில், நிகழ்ச்சி நெறியாளர் பாண்டே வைத்த கேள்விகளுக்கு சூடாகவே பதிலளித்தார் . “மார்க்ஸியம் குறித்து நேரடியாக பேசியதன் விளைவாக கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவியை பறிகொடுத்தேன். அவர்களால் பெற்ற பதவியை அடைந்த காரணத்தினால், பண்டே அவர்களுக்கு நல்லதை பாராட்டி பழக்கமில்லை. மனநோயாளியைப் போல விழுந்து பிடுங்குவதுதான் பழக்கம். … Continue reading ’நீங்கள் மனநோயாளி’:தந்தி டிவி விவாதத்தில் பழ.கருப்பையா நேரடி தாக்கு: பாண்டே என்ன செய்தார்?
அதிமுக பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அரங்கத்தை விட்டு கிளம்பிய பழ.கருப்பையா: கருப்பையாவின் ’நேர்மை’க்கு உதாரணமான ’அக்னிப்பரிட்சை’ அனுபவம்
விஜய் ஆனந்த் ' அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா நீக்கி வைக்கப்படுவதாக' பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். காரணம். ஆட்சிக்கு எதிராக கருப்பையாவின் கூர்மையான விமர்சனம். துக்ளக் விழாவில் கருப்பையா பேசிய பேச்சு, அ.தி.மு.க தலைமையை அதிர வைத்துவிட்டது என புரிந்து கொள்ளலாம். இதே கருப்பையாவோடு நான் முரண்பட்டுப் போன சம்பவம் ஒன்றும் நடந்தது. இன்று இவ்வளவு பேசும் கருப்பையா, அன்று நடந்து கொண்ட … Continue reading அதிமுக பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அரங்கத்தை விட்டு கிளம்பிய பழ.கருப்பையா: கருப்பையாவின் ’நேர்மை’க்கு உதாரணமான ’அக்னிப்பரிட்சை’ அனுபவம்
கட்சித் தலைவர்கள் மன்னர்களாக இருக்கிறார்கள் என்று விமர்சித்த பழ.கருப்பையா அதிமுகவில் இருந்து நீக்கம்!
அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா, அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். சென்னையில் துக்ளக் ஆண்டுவிழாவில் பழ. கருப்பையா, “கணவன் மனைவிக்கிடையே ஒத்துப்போகாத முடியாத காலத்தில், கட்சியின் பொதுக்குழுவில் இத்தனை பேர் எப்படி ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியும்? அதனால்தான், நாட்டில் வளர்ச்சி இல்லை. எந்தக் கருத்தும் எதிர் கருத்தால்தான் வளர்ச்சி பெறும். முதல் கருத்தும், எதிர் கருத்தும் மோதும்போது புதிய கருத்து பிறக்கும். அந்தப் புதிய கருத்துக்கும் எதிர் கருத்து உருவாகி, மீண்டும் புதிய … Continue reading கட்சித் தலைவர்கள் மன்னர்களாக இருக்கிறார்கள் என்று விமர்சித்த பழ.கருப்பையா அதிமுகவில் இருந்து நீக்கம்!