தலித் ஆசிரியரின் சாதியை எழுதி ‘படம்’ வரைந்த எட்டாம் வகுப்பு மாணவனின் சாதி வெறி

விஜய் பாஸ்கர்விஜய் பனுவலில் வ. கீதா தலைமையில் நடந்த சமூகநீதி பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில் கேட்டதில் இருந்து. பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு இளம் ஆசிரியர் அவர் சந்தித்த ஜாதிக் கொடுமையை பகிர்ந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அவர். அவர் பள்ளியின் சுவரில் ஒரு மாணவன் தாழ்த்தப்பட்ட ஜாதியை எழுதி அதன் பக்கத்தில் பெண்ணுறுப்பு படத்தையும் வரைந்து விடுவானாம். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை எச்சரித்தும் அவன் அதை செய்திருக்கிறான். எவ்வளவுதான் பொறுக்க முடியும் என்று இதை ஆசிரியர் தலைமையாசிரியரிடம் எடுத்துச் சென்றிருக்கிறார். … Continue reading தலித் ஆசிரியரின் சாதியை எழுதி ‘படம்’ வரைந்த எட்டாம் வகுப்பு மாணவனின் சாதி வெறி

சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’

சரவணன் சந்திரன் கடந்த அக்டோபர் மாதம் விடுமுறைக்காக தென்மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது, நீண்ட வருடங்கள் கழித்து பள்ளியில் உடன் படித்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். நண்பனுக்கு வலதுகையில் முழங்கைக்கு கீழே துண்டிக்கப் பட்டிருக்கும். உள்ளூர் தீப்பெட்டி அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியனாகப் பணிபுரியும் அவனை வறுமை வாட்டியெடுப்பதை அவனது தோற்றத்தைப் பார்த்த எல்லோரும் சொல்லி விடுவார்கள். அப்போது சாரை சாரையாக பல வாகனங்கள் நாங்கள் பேசிக் கொண்டிருந்த பகுதியைக் கடந்தன. அந்த வாகனத்தில் குறிப்பிட்ட … Continue reading சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’