“காலா…எங்களுக்கு அது கலகக்குரல்!”

ரஞ்சித் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. அவர்மீது விமர்சனங்கள் செய்வது எந்த தவறும் இல்லை. ஆனால் அவரது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதும், உள்நோக்கம் கற்பிப்பதும், ஏதோ தலித் அரசியலை பேசி காசாக்க வந்தவர் என்னும் ரீதியில் உதாசீனப்படுத்துவதும் சில்லறைத்தனம் அன்றி வேறொன்றும் இல்லை.

சந்தையூர் தீண்டாமைச் சுவர்: சந்தைக்கு வந்திருக்கும் தலித் “அரசியல்” சிக்கல்கள்!

அருந்ததியர்கள் சந்திக்கிற சிக்கல்களிலேயே முக்கியமான ஒன்றாக நான் கருத்துவது, அருந்ததியர்களுக்கும் மற்ற தலித் ஜாதியினருக்கும் இடையே இருக்கும் சிக்கல்களை பேசினாலே, தலித் ஒற்றுமை சீர்குலைவதாக அச்சுறுத்தப்படுவதுதான். அதன் காரணமாகவே, சந்தையூர் சிக்கல்குறித்து வெகுசன ஊடகங்களில் எந்த விவாதங்களும் நிகழவில்லை.

அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களை குறிக்க ‘பறையர்’ என்ற சொல்தான் பயன்படுத்த வேண்டுமா?: ஓர் விவாதம்

‘பறையர்’ என்ற சொல் விவாதமாகியுள்ளது. விலக்கப்பட்டவர்களை, அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களைக் குறிக்க ‘பறையர்’ என்ற சொல்லை பயன்படுத்தலாமா என்பதே விவாதத்தின் சாரம். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் முகநூல் பதிவை ஒட்டி இந்த விவாதம் நிகழ்கிறது. கீழே இதன் தொகுப்பு... Aadhavan Dheetchanya அங்கீகாரம்... தீட்டு... பறையர்... 2013 நவம்பர் 'தோர்ச்ச' மாத இதழில் வெளி்யான மலையாள எழுத்தாளர் தோமஸ் ஜோசப்புடைய நேர்காணலின் தமிழாக்கம் நியூ செஞ்சுரியின் 'உங்கள் நூலகம்' ஜூலை 2016 இதழில் வெளியாகியுள்ளது. கலை இலக்கியம் தொடர்பான … Continue reading அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களை குறிக்க ‘பறையர்’ என்ற சொல்தான் பயன்படுத்த வேண்டுமா?: ஓர் விவாதம்