கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள்

ஏர் மகாராசன் மதுரை என்னும் சொல் கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்களைப் புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறும், மொழி உயிர்ப்பும் இன்னும் வலுவுடன் திகழும் தொல் நிலமாய் மதுரை மண் பரந்து கிடக்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் புதிய வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. அவ்வகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கீழடி எனும் சிற்றூரில் நடைபெற்று … Continue reading கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள்

குக்கூ காட்டு பள்ளி: நுகர்வின் விடுதலைக்கான ஓர் நிலம்!

தமிழ்ச் செல்வன் ஜவ்வாது மலையின் அடிவாரத்தில் ஒரு காட்டின் சூழலையும், ஒரு கிராமத்தின் தன்மையையும் தன்னகத்தே கொண்ட ஒரு சமவெளி நிலத்தில் அமைந்துள்ளது குக்கூ காட்டு பள்ளி. இயற்கை வாழ்வியலுடன் கூடிய ஒரு குழந்தையின் சுதந்திரத்திற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியில் குக்கூ அமைப்பை சேர்ந்த அன்பர்கள் இந்த பள்ளியை உருவாக்கி வருகின்றனர். நிறைய அன்புள்ளம் கொண்ட தன்னார்வலர்களின் முயற்சியினால் பள்ளிக்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் TWA (The weekend Agriculturist) குழுவில் … Continue reading குக்கூ காட்டு பள்ளி: நுகர்வின் விடுதலைக்கான ஓர் நிலம்!