விமான நிலைய உருவாக்கத்திற்காக தங்கள் நிலங்களை இழந்த அம்மக்கள் தற்போது விமான நிலைய விரிவாக்கத்திற்காக எஞ்சியுள்ள நிலங்களையும் இழந்து முற்றிலுமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
குறிச்சொல்: பத்தி
ஒளிரும் விழிகளில் அந்த மான், விநாயகம் அண்ணனின் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது!
முத்து ராசா பழங்கால கற்சிலையிலோ இல்லை ஈக்கிகள் மழுங்கிய பனைமரக் கட்டையிலோ தொடர்ந்து வெளக்கெண்ணெய் தேய்க்கையில் ஒரு கறுப்பு நிறம் மின்னும் பாருங்கள் அந்த நிறத்தில்தான் விநாயகம் அண்ணன் இருப்பார். குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் முறுக்கேறிய வழுக்குமரம் போலிருக்கும் கறுத்த மேனியில் தோள்பட்டை வரை தலையின் கோரை முடிகள் தொங்கும். என்ன குளிர் அடித்தாலும் சரி மழை அடித்தாலும் சரி தினமும் காலை ஐந்து மணிக்கே எழுந்து பச்சைத் தண்ணீரில் தலைக்கு குளித்து, தான் வளர்த்தச் செடியிலேயே … Continue reading ஒளிரும் விழிகளில் அந்த மான், விநாயகம் அண்ணனின் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது!
எளிதாக தொழில் தொடங்குகிற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்: மோடி அரசின் விளம்பர பித்தலாட்டம்
அருண் நெடுஞ்செழியன் எளிதாக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் 100 வது இடத்திற்கு முன்னேரியுள்ளதை மிகப் பெரும்சாதனையாக பாஜக அமைச்சர்கள் விளம்பரப் படுத்தி வருகிறார்கள். பத்திரிக்கைகளில் முழுப்பக்க விளம்பரங்கள்,நிதி அமைச்சரின் விளம்பரங்கள் என மிகவும் ஆடம்பரமான வகையில் ,போலியான கருத்துரவக்காத்தை மேற்கொள்ள மோடி அரசு முயற்சித்து வருகிறது. உலக வங்கி வெளியிட்டு வருகிற இந்த பட்டியலில்.சென்ற ஆண்டில் 130 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ஒரே ஆண்டில் (2016- ஜூன் முதலாக 2017 -ஜூன் )வரையிலான … Continue reading எளிதாக தொழில் தொடங்குகிற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்: மோடி அரசின் விளம்பர பித்தலாட்டம்
நியோலிபரலிச சித்தாந்தமும் மனநலமும்: மனநல மருத்துவர் சிவபாலன்
நாம் இன்னமும் மனம் என்பதை ஒரு விசித்திர பிம்பமாகவும்; மன நோய்கள் என்பவை யாருக்கோ வரக்கூடிய மிக அரிதான நோய்களாகவும்; மன ஆரோக்கியம் பற்றி பேசுபவர்களை கேலியாகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!
எதற்காக சாரணர் இயக்கத்தில் பதவி வேண்டிக் கிடக்கிறது? அடிப்படையில் இருந்து எல்லாவற்றையும் புகட்டினால்தான் அடியாழத்தில் அது பதியும். இது எல்லோருக்கும் பொருந்திப் போவதுதான்.
அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா ராஜினாமா: ஜாக்டோ ஜியோ இப்போதாவது விழித்துக் கொள்ளுமா?
ஜேக்டோ ஜியோ போன்றே போக்குவரத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் தொழில் சங்கங்கங்களின் பிற்போக்குத் தலைமையால், வர்க்க உணர்வு ஊக்கம் பெறாமல், அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக சடங்கு போராட்டம் நடத்துபவர்களாக மாற்றப்பட்டுள்னர்.
நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!
வில்லவன் இராமதாஸ் நீட் மற்றும் அனிதா தற்கொலை குறித்தான பெரும்பான்மை உரையாடல்கள் சில கேள்விகளை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது (சாதாரண மக்களிடையே). சமூக ஊடக விவாதங்கள் அதை நன்கறிந்தவர்கள் இடையே மட்டும் நடக்கிறது. அதனை மற்றவர்களுடனான ஒரு விவாதமாக மாற்ற வேண்டிய தேவை இப்போது கணிசமாக இருக்கிறது. இந்த பதிவு அதற்கான முயற்சியில் ஒரு சிறிய பாகம் மட்டுமே. எங்கள் உறவுக்கார மாணவர்கள் இருவர் எழுப்பிய சந்தேகங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. தகுதித் தேர்வு இல்லாவிட்டால் தகுதியான மருத்துவர்களை … Continue reading நீட்டை மவுனமாக ஏற்றுக்கொள்வது அரசுக்கு நாமே முன்வந்து நம்மை அழிக்க கொடுக்கும் லைசென்ஸ்!
“அந்தக் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன”: முன்னாள் எம்எல்ஏ எஸ். எஸ். சிவசங்கர்
எஸ். எஸ். சிவசங்கர் பெருந்துயரத்திற்கு பின்னான அமைதியில் இருக்கிறோம். அனிதாவின் இழப்பை அவ்வளவு எளிதாக யாரும் கடந்து விட முடியாது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும் இழப்பின் வலியோடு தவிக்கிறார்கள். கனவுடனான கண்கள். மழலை மாறாத முகம். எண்ணி பேசும் சொற்கள். தலைமுறை வறுமையை பறை சாற்றும் உடல். இதை எல்லாம் தாண்டி அறிவு முத்திரை பதித்து தனி அடையாளம் கண்டாள். குழுமூர் கிராமத்திற்கு மருத்துவ சேவையாற்றும் தேவதையாக விரும்பினாள் அவள். சிறு வயதில் அன்னை ஆனந்தியை நோய்க்கு … Continue reading “அந்தக் கண்கள் இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கின்றன”: முன்னாள் எம்எல்ஏ எஸ். எஸ். சிவசங்கர்
கதிராமங்கலம் இருக்கையில் பல்கேரியாவில் பல்டி அடிப்பது ஏன்? அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் ?…
இந்த விவேகம் திரைப்படம் தொடர்பான செய்திகளையும் விவாதங்களையும் சமூக ஊடகங்களில் கவனிக்கையில் ஒன்று மட்டும் தெரிகிறது. நமக்கு சினிமா என்பது மதம். நடிகர்கள் கடவுள்கள். நமக்குப் பிடித்த கதை நாயகர்களை யாராவது விமர்சித்துவிட்டால் நாம் மிக ஆழமாகக் காயமடைகிறோம். அவ்வாறு விமர்சிப்பவர்களை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ காயப்படுத்த விரும்புகிறோம். குறைந்த பட்சம் நாம் இயங்கும் சைபர் வெளியிலாவது ரத்தம் தெறிக்கவைத்தால்தான் நமக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அளவில் குறைந்தது என்றாலும் ஒருவித “தணிக்கை மனநிலையை” நோக்கி … Continue reading கதிராமங்கலம் இருக்கையில் பல்கேரியாவில் பல்டி அடிப்பது ஏன்? அத்தனை பயந்தவர்களா தமிழ் சினிமா ஹீரோக்கள் ?…
திராவிட அரசியலை அழிப்பதா? வாக்கு அரசியலா?: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….
கருணாநிதியை ஊழல்வாதி என்று நிறுவியதில் வலது சாரி அமைப்பினர் அடைந்த வெற்றி கருணாநிதியை மட்டும் பாதிக்கவில்லை. திராவிட இயக்கங்களின் மீதான பொது விமர்சனமாக மாறவும் வழி வகுத்துவிட்டது.
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, அடிமை அணில்களின் முதுகில் மோடி வருடிய கோடுகள்!
நாடாளுமன்ற சனநாயக வானில் இப்போது ’துரோகி’ என்ற ஒலம் கேட்டப்படி இருக்கிறது. சசிகலாவை துரோகி என்கிறார் ஓ.பி.எஸ். ஒ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஸையும் துரோகி என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். நிதிஷை துரோகி என்கிறார்கள் லாலுவும் சரத் யாதவும். மோடியையும் அமித் ஷாவையும் துரோகி என்கின்றனர் அவரால் பதவி விலக்கம் செய்யப்பட்ட பா.ச.க. மூத்த தலைவர்கள்.
மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு
ஆறுக்கும் மக்களுக்குமான உறவை, அணைகளை மேலாண்மை செய்கிற அதிகாரி வர்க்கத்தின் ஒற்றை தீர்மானங்கள் கிழித்துப் போட்டது! தற்போது நீதிமன்றங்கள் அதை செய்து வருகிறது.
வெக்கமற்ற அரசியல் ஆட்டம்!
பெங்களூரு சிறை தொட்டு திருவண்ணாமலை மூக்குப்போடு சித்தர் வரையிலும் கட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை கட்டுப்படுத்தவும் ஆசி அருள் கோரி அலைகிறார் டி டி வி.
எங்கிருந்து தொடங்குகிறது உறவுமீறும் ஆண்-பெண் மீதான வன்முறை?…
எப்போதுமே சர்வாதிகாரிகள் ஒழுக்கவாதிகளாக தம்மை முன்னிறுத்துவதில் கவனம் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு மோடி.
சிலிண்டர் மானியம் ரத்து ஏன்?
சில ஆண்டுகளுக்கு முன்பாக கிரீசில், ஸ்பெயினில் இதுதான் நடந்தது. ஒரு கட்டத்தில் வங்கியில் பணம் எடுக்கக்கூட இயலாமல் மக்கள் ரோட்டிற்கு வந்தனர். இந்தியா இந்நிலையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. அதன் ஒரு அறிகுறிதான் சமூக நலத்திட்டங்கங்களுக்கு வழங்கப்படுகிற மானியத்தை வெட்டுகிற நடவடிக்கையாகும்.
“பன்றி” யார் ?
சாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும் இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும் ஆகிறான். இப்படிபட்ட சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.
நிழலழகி 12: உங்களால் ‘குமாரி’க்களைக் காதலிக்க முடியுமா?
நாயகியின் அறிமுக காட்சியே தன்னை பாலியல் தொழிலாளி என நினைத்து பேரம் பேசியவனை விரட்டித் துறத்துவதுதான்.
தோழர்கள் செந்தில் ,பரிமளா கைதும் போலி முற்போக்காளர்களின் சதிகளும்: அருண் நெடுஞ்செழியன்
நியூஸ் 18 இல் வேலை செய்கிற நாசர், வசுமதி, பட்டுராசன், இளையராஜா, அப்துல் ஆகியோர் உள்ளே நுழைந்து தோழர்களை தரக்குறைவாக பேசியும் தாக்கவும் முயன்றுள்ளனர்.
”பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா”: அமர்த்தியா சென்னின் இந்த வார்த்தைகளுக்காக தடை!
“கருத்துச் சுதந்திரம் முடக்கப்படுவது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். முதல்முறையாக நானே அதை நேரடியாக அனுபவிக்கிறேன்,”
பார்ப்பன பெண்களுக்கு ஓர் நினைவூட்டல்: கிருபா முனுசாமி
நான் சிறுபிள்ளையாக இருந்த போது கூட 'மொட்டை பாப்பாத்தி' என்ற சொல்லாடலைக் கேட்டிருக்கிறேன். ஆனால், இந்த சொல்லாடல் இன்று வழக்கொழிந்து போயிருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் திராவிடம்.
எண்ணெய் எரிவாயு எடுப்பிற்கு எதிரான ஒகோனியர்கள் போராட்டமும் கென் சரோவிவாவின் தியாகமும்
நைஜர் ஆற்றுப்படுகையில் ஒகோனியர்களை வேட்டையடியாடுவதை போல தற்போது காவிரிப்படுகையில் எண்ணெய் எடுப்பிற்காக தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்!
ஆளுநரின் தலையீடு; கேள்வியாகும் மாநில சுயாட்சி!
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் வருகிற சில நாட்களில் ஆளுனர் கிரண் பேடியின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி, ஆளுநர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்குவங்கத்தில் மத்திய ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா?
பெண்கள் தங்கள் முகத்தை முக்காடிட்டு மூடிக்கொள்கிற பெருமை ஹரியானாவின் அடையாளம்.” -இது அங்கே யாரோ ஒரு மடாதிபதியின் உபதேசமோ பேட்டியோ அல்ல. மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிற ‘ஹரியானா சம்வாத்’ என்ற பத்திரிகையில் வந்துள்ள படக்குறிப்பு.
பிகினி உடையின் கவர்ச்சிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரமுகம்!
1946 ம் ஆண்டு, உலகின் முதலாவது நைட்ரஜன் குண்டு பிகினித் தீவின் அருகில் தான் பரிசோதிக்கப் பட்டது. அணு குண்டை விட சக்தி வாய்ந்த நைட்ரஜன் குண்டு பரிசோதிப்பதற்கு முன்னர், பிகினித் தீவில் இருந்த மக்கள் வெளியேற்றப் பட்டனர். அமெரிக்க இராணுவம் அவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்கி இன்னொரு தீவில் தங்க வைத்தது.
சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்!
கே. ஏ. பத்மஜா கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பெருநகரங்கள் எல்லாம் உலக நாடுகளின் கல்வி முறையை இறக்குமதி செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. சிறு, குறு நகரங்களோ பெருநகரங்களைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டிருப்பதுதான் இன்றைய கல்விச் சந்தையின் நிலை. இந்தக் கல்வி வியாபாரத்தில் அதிக விலை கொடுத்து தங்கள் பிள்ளைகளை தாங்களே விற்கும் அவல நிலையை கெளரவம் என நினைக்கிறார்கள் பெற்றோர்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை கல்விக் கூடங்கள் கிடையாது. அங்கு புத்தகக் கல்வியுடன், … Continue reading சிறு – குறுநகரங்களில் இளிக்கும் பள்ளிகள்!
கருணாநிதி வைரவிழாவில் திமுக செய்திருக்கும் பிரகடனம்!
நாடு முழுக்க ஒரு வலது சாரி அச்சம் படர்ந்துகொண்டிருக்கும் வேலையில் அவர் பெயரால் நிகழும் இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு நகர்வு.
மாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும்: தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி
மாட்டுக்கறி உணவுப் பழக்கமும் பழந்தமிழரின் உணவுப் பழக்கங்களுள் ஒன்று என்பதற்குச் சங்க காலப் பாடல் ஒன்று
‘லென்ஸ்’ பேசும் பிரச்சினை வெறும் பாசாங்கு மட்டுமே!
நீலப்படம், பெண்ணுக்கு அவமானம் என்றெல்லாம் பேசும் படத்தை எடுக்கும் இயக்குநர், படத்திலேயே அதைத்தான் செய்திருக்கிறார்.
பத்ம வியூகத்தில் பிரம்மாஸ்திரம்!
ஒரு ஆயா ட்ரான்ஸ்பரைக்கூட அப்ரூவல் இல்லாமல், பண்ண முடியாது என்கிற போது தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்துவதெல்லாம் பெரிய விஷயமா என்ன?
நீதிபதிகள் செய்யும் கட்டப் பஞ்சாயத்து: அ.சவுந்தரராசன்
இப்போது தீர்ப்பு கொடுத்த நீதிபதிகள் அவர்களின் ஓய்வுக் காலப் பலன்களை 5 வருடத்திற்குப் பிறகு 12 தவணைகளில் பெற்றுக் கொள்வார்களா? தொழிலாளியை இவ்வளவு இளக்காரமாக நீதிமன்றம் பார்ப்பதை ஏற்க முடியுமா?
இப்போது பரிணாமம் நிகழவில்லையா?
இப்போது ஏன் புழு வகைகளிலிருந்து மீன்கள் தோன்றவில்லை? இப்போது ஏன் மீன்களிலிருந்து ஊர்வன வகைகள் பரிணமிக்கவில்லை? இப்போதும் அது நடந்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா?
கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்: பாதுகாப்பு வழிமுறைகள்!
சந்திரமோகன் உங்களுக்கு ரான்சம்வேர் பற்றித் தெரியாதென்றால் இதை முழுவதுமாகப் படித்து முடிக்கும்வரை, உங்களுக்கு வரும் இ-மெயில் எதையும் திறந்து படிக்க வேண்டாம். சமீபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கணினிகள் 'வான்னா க்ரை' (Wanna Cry) என்ற ரான்சம்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இணையம் மூலமாக இது தொடர்ந்து பரவி வருவதால், எந்த நிமிடமும் உங்கள் கணினியையும் தாக்கும் அபாயம் இருக்கிறது. சமீபத்திய நிலவரப்படி, நூறு நாடுகளுக்கும் மேற்பட்ட சுமார் ஒரு லட்சம் கணினிகளில் இந்த 'வான்னா க்ரை' … Continue reading கணினியைத் தாக்கி பணம் பறிக்கும் ரான்சம்வேர்: பாதுகாப்பு வழிமுறைகள்!
குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!
கே. ஏ. பத்மஜா குட்டிப் பிள்ளைகள் டாம் அண்ட் ஜெர்ரி, டோரா, சோட்டா பீம் என 24 மணி நேரமும் கார்ட்டூன் சேனல்கள் முன்பு தவம் இருக்கும் கொடுமை ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தமிழ் காமெடி சேனல், காமெடி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சி என மறுபுறம் புகழ் போதையில் பெற்றோரே வலுக்கட்டாயமாக பிள்ளைகளை பாடுபடுத்துகின்றனர். காமெடி சேனல் என்பது இன்று பல குடும்பங்களில் சர்வ சாதாரணமாய் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இந்த காமெடி சேனலை … Continue reading குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!
நீட் தேர்வு: சட்டையைக் கிழிப்பது மட்டுமல்ல பிரச்னை!
ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு பிரச்சினையை சரியான விதத்தில் அணுக முடியாவிட்டாலும் தவறான விதத்தில் அணுகாமல் அமைதியாக இருந்தாலே பாதி தீர்வு கிடைத்துவிடும். நீட் விவகாரம் இதற்கு சரியான உதாரணம். அச்சு, காட்சி ஊடகங்களும் மற்றும் இணையமும் தேர்வு மையங்களில் சட்டையை வெட்டியதையும், தோடு வளையலைக் கழட்டியதையுமே தலையாய பிரச்சினையாக உணர்ச்சிப்பெருக்கோடு எழுதி உண்மையான ஆபத்து எதுவென்பதை வழக்கம்போல இருட்டடிப்பு செய்துவிட்டன. மீதி இருப்பவர்களும் நீட் தேர்வை ஏழை, கிராம, அரசு பள்ளி மாணவர்களுக்கான பாதிப்பாக குறிப்பிடுகின்றனர். … Continue reading நீட் தேர்வு: சட்டையைக் கிழிப்பது மட்டுமல்ல பிரச்னை!
தமிழகத்திற்குத் தேவை உடனடித் தேர்தல்!
சரவணன் சந்திரன் இந்தச் சூழலில், வேறு யார் முதல்வரானாலும் சரி தமிழகத்தைக் கட்டிக் கொண்டு அழ முடியாது என்றுதான் தோன்றுகிறது. நாக்கு வெளியே தள்ளி விடும். தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர் ஆகியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகமுமே நம்பிக்கையின்மையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய குடை மர்மம் போலத் தமிழகத்தை மூடியிருக்கிறது. இந்த மக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் பிள்ளை குட்டிகளுடன் அத்துவானக் காட்டில் ஊற்றுகளில் நள்ளிரவில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு ஊற்றாவது தோண்டித் தாருங்கள் அல்லது, பாம்புக் கடியால் … Continue reading தமிழகத்திற்குத் தேவை உடனடித் தேர்தல்!
நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா?
சந்திரமோகன் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதிசெய்துள்ளது. தலைநகர் தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்காக டெல்லியில் பல நாட்கள் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் போராடினார்கள். நிர்பயாவுக்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதனால், பெண்களுக்கு … Continue reading நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா?
அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!
சரவணன் சந்திரன் குரங்குகளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கதை சொல்வார்கள். இது உண்மையா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. காட்டுயிர் சார்ந்தவர்கள் சொன்னால் திருத்திக் கொள்கிறேன். அதே சமயம் இந்த உதாரணம் மிகச் சிறந்ததும்கூட. கூண்டிற்குள் மாம்பழமோ ஏதோ ஒரு பழமோ வைத்து குரங்குகளுக்குப் பொறி வைப்பார்கள். அந்தக் குரங்கு கூண்டின் கம்பி இடைவெளிக்குள் கையை நுழைத்து பழத்தை பற்றி விடும். ஆனால் வெளியே எடுக்க முடியாது. பழத்தைத் தூர எறிந்து விட்டு மீண்டும் கையை … Continue reading அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!
இன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…
அருண் நெடுஞ்செழியன் துருக்கியில் ஜனாதிபதி பதவிக்கு மிக அதிகமான அதிகாரம் வழங்குகிற சட்டத் திருத்தம் மீதான ஓட்டெடுப்புக்கு சாதகமாக 51% விழுக்காட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர். இன்னும் சில தினங்களில் எர்டோகன் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்வார்.அடுத்து பத்தாண்டுகளுக்கு இவர் துருக்கியின் அரசியல் பொருளாதாரத்தை ஏகபோகமாக தீர்மானித்திட,சர்வாதிகார ஆட்சி நடத்திட சட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.துருக்கியின் நீதிபதிகள், ராணுவம்,அரசியல் தேசிய சபை என அனைத்தும் எர்டோகன் ஒருவரால் கட்டுப்படுத்தப்படும். எர்டோகனின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த லட்சக்கணக்கானோர் சிறையில் உள்ளனர். மதமும் … Continue reading இன்று துருக்கி நாளை இந்தியா; முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் இருந்து சர்வாதிகாரத்திற்கு…
போராடும் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
அருண் நெடுஞ்செழியன் ஜல்லிக்கட்டு போராட்டம் அதன் தொடர்ச்சியாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம்,விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என மாணவர், இளைஞர்கள் பல்வேறு வகைகளில் தங்களது சமூக அக்கரைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். முகநூல், வாட்சப் போன்ற நவீன ஊடக தொடர்பு சாதனங்களால் விரைவாக பகிரப்படுகிற கருத்துகள்,அரசியல் உணர்வுகளின் இணைப்பு சாதனமாக வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. அரசியல் உணர்வுகள் தீவிரம் பெறுகிறது. இந்த சூழலில் நமது சமகால பிரச்சனைகளை எவ்வாறு புரிந்து கொள்வது?இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது … Continue reading போராடும் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தில் தன்னெழுச்சிப் போராட்டமும் மாற்று அரசியலுக்கான முன் முயற்சியும்
அருண் நெடுஞ்செழியன் காலனியாதிக்கத்திற்கு எதிராக தேசிய அளவில் எழுச்சிபெற்ற வெகுமக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, சரியான முழக்கத்தை முன்வைத்து கைப்பற்றியது. வெள்ளையனே வெளியேறு,உப்புச் சந்தியாகிரகம்,அந்நியத் துணிகளை புறக்கணிப்போம் போன்ற அறைகூவல்கள் வெகுமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிற வடிவங்களாக அமைந்தது. வெகுமக்களின் பங்கேற்புகளுக்கு இடமளிக்கிற ஜனநாயகப் போரட்டமாக வளர்ச்சிப் பெற்றது. இப்போராட்டத்தின் வெற்றியானது, இங்கிலாந்து ஆட்சியாளார்களிடம் பேரம் பேசுவதற்கும் அரசியல் விடுதலை பெறுவதற்கும் காங்கிரசிற்கு துணை நின்றது. வெகுமக்களின் தன்னெழுச்சி போராட்டத்தைக் கைப்பற்றி, பின்னர் சரியான முழக்கத்தை … Continue reading தமிழகத்தில் தன்னெழுச்சிப் போராட்டமும் மாற்று அரசியலுக்கான முன் முயற்சியும்