இந்துத்துவத்தை வளர்க்கும் வித்யாலயா, விகாஸ், விஹார் பள்ளிகள்:இடது, முற்போக்கு, பகுத்தறிவு பெற்றோருக்கு இது தெரியுமா?

இனியன் 90களின் காலகட்டத்தில் தமிழகத்தில் துவங்கிய பிள்ளையார் சதுர்த்தி தினக் கொண்ட்டாட்டங்களும் அதனைத் தொடர்ந்த ஊர்வலங்களும். அவற்றினால் ஆங்காங்கே ஏற்பட்ட சிறுசிறு மற்றும் பெருங்கலவரங்களும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியவையல்ல. தற்காலங்களில் அத்தகைய கலவரங்கள் நடைபெறுவது கிடையாது என்றாலும் ஒருவிதப் பதட்டமான சூழல்களுடனே ஒவ்வொரு வருடமும் சிலைகரைப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன. இளைஞர்களைக் குறிவைத்து இந்த ஊர்வல நிகழ்வினை மதம் சார்ந்த கட்டாயச் சடங்காக மாற்றியமைத்ததில் இந்துவா அமைப்புகள் குறிப்பிடத்தக்க வெற்றியடந்திருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது ஒவ்வொரு வருடமும் பெருகிவருகிற … Continue reading இந்துத்துவத்தை வளர்க்கும் வித்யாலயா, விகாஸ், விஹார் பள்ளிகள்:இடது, முற்போக்கு, பகுத்தறிவு பெற்றோருக்கு இது தெரியுமா?

பகுத்தறிவு பாசறை வரை செல்லும் ஊடக லாபி; பாண்டேவுக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞர் தி.க.விலிருந்து நீக்கம்

கடந்த வருடம் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை நேர்காணல் செய்தார் தந்தி டிவியின் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே. அப்போது தந்தை பெரியார், பாம்பையும் பார்ப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்றார்  என சொல்லி ஒரு கேள்வியை முன்வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்தும் இதுபோன்று பெரியார் கூறவேயில்லை என்றும் இதற்கான ஆதாரம் இருந்தால் பாண்டேவிடம் இருந்தால் தரவேண்டும்; அப்படியில்லை என்றால் இப்படியான மேற்கோளை ஊடகத்தில் சொன்னதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று திருப்பூர் செஷன்ஸ் … Continue reading பகுத்தறிவு பாசறை வரை செல்லும் ஊடக லாபி; பாண்டேவுக்கு எதிராக வழக்காடிய வழக்கறிஞர் தி.க.விலிருந்து நீக்கம்

சுயமரியாதையை கற்றுத் தர வேண்டிய பள்ளிகளில் ஆசிரியரின் கால்களைக் கழுவச் சொல்வதா?

ஆர். எஸ். எஸ். அமைப்பின் முக்கியஸ்தரான எஸ்.குருமூர்த்தி, பாஜவைச் சேர்ந்த ஆர்.ராஜலட்சுமி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள இந்து ஆன்மீக கண்காட்சி சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் நடைபெற்றுவருகிறது. இதில் வியாழக்கிழமை 'மாத்ரு - பித்ரு வந்தனம் - ஆச்சார்ய வந்தனம்' என்று தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள 6 நற்பண்புகளில் ஒன்றான ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களை வணங்குதல் என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர். அமிர்தா, பத்மா சேஷாத்ரி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் … Continue reading சுயமரியாதையை கற்றுத் தர வேண்டிய பள்ளிகளில் ஆசிரியரின் கால்களைக் கழுவச் சொல்வதா?

தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

செவ்வாய்கிழமை தந்தி டிவியில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியில் சீமானின் பேச்சுக்கு சிலர் தமிழ் தேசியம் முலாம் பூசுகின்றனர். அவர்கள் பேராசிரியர் அருணனை தெலுங்கர் என்ற முகமூடி அணிவிக்கின்றனர். தெலுங்கரானபேரா. அருணன்  எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ... தமிழரின் தத்துவ மரபு (2 பாகங்கள்) காலந்தோறும் பிராமணியம் (8 பாகங்கள்) தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! கடவுளின் கதை (5 பாகங்கள்) யுகங்களின் தத்துவம் பேராசிரியர் அருணன் ஐந்து தொகுதிகளாக பகுத்து … Continue reading தெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ…

” உமர் நாத்திகவாதி என்பது குடும்பத்திற்கு இன்னும் வலிமையூட்டக்கூடியது”: தீவிரவாத ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் மாணவர் உமர் காலித்தின் சகோதரி

அப்சல் குரு தொடர்பாக நிகழ்ச்சி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டு பேரில் கன்னய்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற ஐவர் தலைமறைவாக உள்ளனர். அதில் உமர் காலித், அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார். காரணம் அவர் இஸ்லாமியர் என்பதுதான். அவரை தீவிரவாத ஆதரவாளர் என்ற பொய்ப் பிரச்சாரம் ஒரு சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்டது. அவர் பகுத்தறிவு பேசும் இடதுசாரி என்று தெரியவந்த பிறகு சற்றே பிரச்சாரங்கள் ஓய்ந்தன. … Continue reading ” உமர் நாத்திகவாதி என்பது குடும்பத்திற்கு இன்னும் வலிமையூட்டக்கூடியது”: தீவிரவாத ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் மாணவர் உமர் காலித்தின் சகோதரி

அம்மா கதையும் அப்பா கதையும் வதைபடும் மக்கள் கதையும்!

மதுரை சொக்கன் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட 14 பேரின் இல்லத் திருமணங்களை சென்னையில் நடத்தி வைத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசும் போது,‘தந்தை -மகன்’ கதை ஒன்றை கூறியுள்ளார். இதற்கு முன்பு அதிமுக சார்பில் நடத்தி வைக்கப்பட்ட இலவச திருமணங்களின் போது மணமக்கள் அனைவரது நெற்றியிலும் அம்மா படம் பதித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இந்தத் திருமணத்தில் அப்படி இல்லை. இலவசமாக எது கொடுத்தாலும், அது வெள்ள நிவாரணப் பொருட்களாக இருந்தாலும், விலையில்லா ஆடு, மாடாக இருந்தாலும், இலவச … Continue reading அம்மா கதையும் அப்பா கதையும் வதைபடும் மக்கள் கதையும்!

இந்திய அரசியலின் இந்துத்துவ மயமாக்கம் : இடைநிலைச்சாதிகள் பிராமணிய மையத்தன்மை

பிரேம்  பிராமணியம் என்ற சமூக அரசியல் மரபு இந்தியாவில் உருவாகி, வளர்ந்து, ஆதிக்கம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே பிராமணிய எதிர்ப்பு, பிராமணிய வெறுப்பு என்னும் சமூக உளவியலும் தொடங்கி விட்டது எனலாம். பிராமணியத்தின் விரிவான வரலாற்றை ஒரு வகையில் பிராமணிய எதிர்ப்பு இலக்கியங்கள் மற்றும் இயக்கங்களின் வழியாக நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. வேதங்கள், உபநிஷத்துகள், சுருதிகள், சாஸ்திரங்கள், புராண-இதிகாசத் தொகுப்புகள் அனைத்திலும் தன்னை மேல் நிலையில் நிறுத்திக்கொள்ளும் பிராமணிய-பார்ப்பனிய மரபின் மொத்த இருப்பையும் இயக்கத்தையும் புரிந்து … Continue reading இந்திய அரசியலின் இந்துத்துவ மயமாக்கம் : இடைநிலைச்சாதிகள் பிராமணிய மையத்தன்மை

தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!

Thamizh Thamizh ஜல்லிக்கட்டு பற்றி பெரியார் திடலில் பேசிய எனது உரையின் விரிவான சுருக்கம்! அரங்கத்தில் திரண்டிருக்கும் அனைவருக்கும் வணக்கம். வேலை விசயமாக சென்னை பணி மாற்றல் ஆனாலும் அதில் இன்னொரு தனிப்பட்ட விருப்பமும் இருந்தது. அது தந்தை பெரியாரின் திடலுக்கு அடிக்கடி செல்லலாம், கருத்துக்களை கேட்கலாம்...அய்யா வாழ்ந்த இடத்தை அவ்வப்போது பார்க்கலாம் என்பதுதான். அப்படிப்பட்ட பெரியார் திடலில் எனக்கு மேடை அமைத்து கொடுத்ததில் மிகப்பெரிய மகிழ்ச்சி. தோழர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள். முதலில் இந்த அரங்கத்தில் பேசுவது … Continue reading தமிழர் பண்பாடு என்கிற பெயரில் காலூன்றப் பார்க்கும் பாஜக!