இறைச்சிக்காக மாடுகள் விற்பதைத் தடை செய்து மத்திய அரசு அண்மையில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இதற்கு தடை விதிக்குமாறு மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆஷிக் இலாகி பாபா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவில், ‘உணவைத் தெரிவு செய்வது அவரவர் தனிப்பட்ட உரிமை; அதில் தலையிட மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இந்த சட்டம் கடந்த 1960ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்பு சட்டத்துக்கு எதிராக இருக்கிறது. எனவே, இந்த புதிய … Continue reading “உணவு அடிப்படை உரிமை”: மத்திய அரசின் மாட்டிறைச்சி உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
குறிச்சொல்: நீதிமன்றம்
ஊடகச் சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?: திருமாவளவன்
நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தும், ஊடகங்கள் அவரது பேட்டிகளையோ அறிக்கைகளையோ வெளியிடக்கூடாது எனத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. நீதித்துறையின் மாண்பையும், ஜனநாயகத்தையும் காக்கும் விதமாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும்” என வலியுறுத்தியிருக்கும் … Continue reading ஊடகச் சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?: திருமாவளவன்
’3 ஆண்டுகளில் 80 % விவசாய நிலங்கள் அழிந்துபோகும்!’
தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் விவசாய நிலங்களை மனைகளாக பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி வருகின்றனர், இந்நிலை தொடர்ந் தால் அடுத்த மூன்றாண்டுகளில் 20 விழுக்காடு விவசாய நிலங்கள் மட்டுமே மீதமிருக்கும். எனவே தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் விளைநிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை … Continue reading ’3 ஆண்டுகளில் 80 % விவசாய நிலங்கள் அழிந்துபோகும்!’
ராம்குமார் தந்தை தொடர்ந்த மனு தள்ளுபடி
சுவாதி வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படும் நிலையில், அவரது பிரேதப் பரிசோதனையில் தனியார் மருத்துவர் ஒருவரை அனுமதிக்கக் கோரி ராம்குமாரின் தந்தை பரமசிவன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணை செய்ய வேண்டிய தேவையில்லை கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த 18-ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் … Continue reading ராம்குமார் தந்தை தொடர்ந்த மனு தள்ளுபடி
பேராசிரியை கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு
கோவை மாவட்டம் காரமடையில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் தர்மராஜ். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மூத்த மகள் ரம்யா கோவையை அடுத்து உள்ள கிணத்துக்கடவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி நள்ளிரவு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்த மகேஷ் … Continue reading பேராசிரியை கொலை வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு
ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் ஏ.டி.ஜி.பிக்கு நோட்டீஸ்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ராம் குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராம் குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சில நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு செவ்வாய்கிழமை பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை செய்வது வீடியோவில் படம் பிடிக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது செய்தித்தாள்களில் … Continue reading ராம்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் ஏ.டி.ஜி.பிக்கு நோட்டீஸ்
சேல் கேஸ் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது: பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்
காவிரி தீரத்தில் பாறைப்படிம எரிவாயு (சேல் கேஸ்) எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார். இன்று (19.9.2016) தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில், பாறைப் படிம எரிவாயு குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக விவசாயிகள் சார்பில் வாதாடிய வைகோ, முன்வைத்த கருத்துகள்: காவிரி தீரத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் அபாயகரமான திட்டத்தை எதிர்த்து, இதே தீர்ப்பு ஆயத்தில் நான் வாதாடினேன். காவிரி தீர மக்களும், … Continue reading சேல் கேஸ் எடுக்க தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது: பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்
அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக (அ) அவதூறு வழக்குப் போடக்கூடாது: உச்சநீதிமன்றம்
அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் யார் மீதும் தேச விரோத வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. "காமன் காஸ்' என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் முன்வைத்த வாதம்: தேச துரோகம் என்பது மிகப்பெரிய குற்றமாகும். ஆனால், தேச துரோக வழக்குகள், தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் … Continue reading அரசை விமர்சிப்பவர்கள் மீது தேச துரோக (அ) அவதூறு வழக்குப் போடக்கூடாது: உச்சநீதிமன்றம்
“குரானில் சொல்லப்பட்ட சட்ட முறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றி விவரிக்க முடியாது”: இஸ்லாமிய வாரியம்
இஸ்லாமில் மூன்று முறை, 'தலாக்' கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் தாக்கல் செய்துள்ள வழக்கில், அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, அண்மையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் மனுவில், சமூக மாற்றம் என்ற பெயரில் குரானில் சொல்லப்பட்ட சட்ட முறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றி விவரிக்க முடியாது … Continue reading “குரானில் சொல்லப்பட்ட சட்ட முறைகளை உச்ச நீதிமன்றம் மாற்றி விவரிக்க முடியாது”: இஸ்லாமிய வாரியம்
விஷவாயு தாக்கி பலியான 41 தொழிலாளர்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை: தமிழக அரசு சொல்கிறது
தீக்கதிர் விஷவாயு தாக்கி இறந்த 41 துப்புரவுத் தொழிலாளர்களின் குடும்ப ங்களைக் கண்டுபிடிக்க முடியாததால், அவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.‘தமிழகத்தில் கழிவுநீர் தொட்டி கள், குழாய்களுக்குள் இறங்கி அடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டதுப்புரவுத் தொழிலாளர்களில், சுமார்200 பேர் விஷவாயு தாக்கி பலியாகி யுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ‘மாற்றத்திற்கான இந்தியா’ என்ற … Continue reading விஷவாயு தாக்கி பலியான 41 தொழிலாளர்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியவில்லை: தமிழக அரசு சொல்கிறது
சவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை
சவுக்கு இணையதளத்தில் தன் மீது அவதூறான கட்டுரை வெளி வந்தது குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் மற்றும் வழக்கறிஞரான மகாலட்சுமி காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சில மாதங்கள் கழித்து, சவுக்கு தளத்தில் வந்த கட்டுரையை நீக்க வேண்டுமென்றால் 50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று சவுக்கு தளம் சார்பாக யாரோ ஒருவர் போனில் மிரட்டியதாக மற்றொரு புகாரை … Continue reading சவுக்கு சங்கர் மிரட்டியதாக செய்தி வாசிப்பாளர் மகாலட்சுமி கொடுத்த புகார் பொய்யானது: சிபிஐ குற்றப்பத்திரிகை
126 வழக்கறிஞர்கள் நீக்கம்; உயர்நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த வழக்கறிஞர்கள் போராட்டம்
வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடத் திரண்டதால் திங்களன்று (ஜூலை 25) சென்னை பாரிமுனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஸ்தம்பித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இரவில் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில்சில திருத்தங்களைக் கொண்டு வந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த திருத்தம் வழக்கறிஞர்களின் சுதந்திரத்தை பறிக்கும் … Continue reading 126 வழக்கறிஞர்கள் நீக்கம்; உயர்நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த வழக்கறிஞர்கள் போராட்டம்
#கருத்து: உச்ச நீதிமன்றம் பாகுபாடுகளின் ஆலயம்!
கிருபா முனுசாமி உச்ச நீதிமன்ற நீதிபதியாகக் கூட மூப்பு அடிப்படையில் கீழமை நீதிமன்றத்திலிருந்து ஒருவர் பணியுயர்வு பெற்றுவிடலாம். ஆனால், இங்கே வழக்கறிஞராக தொழில் நடத்துவது தான் கடினம். ஏனென்றால், உச்ச நீதிமன்ற விதிகளின் படி இந்நீதிமன்றம் ஆண்டுதோறும் நடத்தும் "அட்வகேட்-ஆன்-ரெக்கார்ட்" தேர்வில் தேர்ச்சியடையும் வழக்கறிஞர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுக்கவும் வாதாடவும் முடியும் என்ற நிலை இருந்தது. அட்வகேட்-ஆன்-ரெகார்ட் என்பதை தமிழில் "பதிவிலிருக்கும் வழக்கறிஞர்" என்று பொருள் கொள்ளலாம். பின்னர், 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் … Continue reading #கருத்து: உச்ச நீதிமன்றம் பாகுபாடுகளின் ஆலயம்!
ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்…
வள்ளிநாயகம் சுட்கி கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது” என்று சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞரான எனக்கு கொலை வழக்கின் விசாரணைப் போக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இக்கேள்விகள் எனது தனிப்பட்ட ஐயங்கள் மட்டும் இல்லை. பெரும்பாலான மக்கள் விளக்கம் எதிர்பார்த்து எழுப்பும் … Continue reading ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்…
மூன்றாம் பாலினத்தவருக்கான இடஒதுக்கீடு: கடந்துவந்த பாதையும் கடக்க வேண்டிய தூரமும்
கிரேஸ் பானு 2013ல் முதல் முதலாக நானும் சுவப்னாவும் திருநருக்கான கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோருக்கையை முன்வைத்து போராட்டக்களத்தில் இறங்க முடிவுசெய்தோம். அப்பொழுது இந்தக் கோரிக்கையை திருநர் சமூக மக்கள் கேலியாகவும் கிண்டலாகவும் தான் பார்த்தார்கள் "நாமலே மக்கள் தொகையில் மிக மிக குறைவு. இதுல இடஒதுக்கீடு கேட்கிறதுலாம் ஓவர் " என பேசிய அதே நாவுகள் இன்று அந்த கோரிக்கையை பேச வேண்டிய கட்டாயம் வந்தவுடன் பேச ஆரம்பித்தார்கள். நாங்கள் சோர்ந்து போகாமல் … Continue reading மூன்றாம் பாலினத்தவருக்கான இடஒதுக்கீடு: கடந்துவந்த பாதையும் கடக்க வேண்டிய தூரமும்
போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா
ஸ்வாதி படுகொலை வழக்கில் கைதான ராம்குமாரின் தந்தை பரமசிவம் ஊடகங்கள் முன்பு பேசியிருக்கிறார். ராம்குமார் கைதின் போது என்ன நடந்தது என்பது குறித்து அவர் சொன்னது: “வழக்கமா என் பையன் பின்னால இருக்க ரூம்ல படுத்துக்குவான். நான், எங்கூட்டம்மா, ரெண்டு பிள்ளைங்க முன்னாடி படுத்திருந்தோம். 11.30 மணி வாக்குல எங்க வீட்டுக்கதவை தட்டினாங்க. இது முத்துகுமார் வீடான்னு கேட்டாங்க. எம் பொண்ணு இல்ல, முத்துகுமார்னு இங்க யாரும் இல்லைன்னு பதில் கொடுத்துச்சு. அப்புறம் கரெண்ட் இல்லாததால நான் … Continue reading போலீஸ்தான் ராம்குமார் கழுத்தறுத்த நிலையில் இருந்த படத்தை எடுத்தது: ராம்குமார் அப்பா
விநோதினி வழக்கில் மரண தண்டனை அளிக்க கூடிய அளவுக்கு பெரிய குற்றம் நிகழ்ந்திருக்கிறது: நீதிமன்றம்
காதலை ஏற்க மறுத்ததால், கடந்த 2012 நவம்பர் மாதம் 14-ம் தேதி அமில வீச்சுக்கு ஆளானார் புதுச்சேரியைச் சேர்ந்த வினோதினி. மருத்துவமனையில் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அவர் மரணமடைந்தார். விநோதினி மீது அமிலம் வீசிய சுரேஷூக்கு காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சுரேஷூக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. விநோதினி வழக்கில் மரண தண்டனை அளிக்க கூடிய அளவுக்கு … Continue reading விநோதினி வழக்கில் மரண தண்டனை அளிக்க கூடிய அளவுக்கு பெரிய குற்றம் நிகழ்ந்திருக்கிறது: நீதிமன்றம்
“வழக்கறிஞர் சத்தமாக வாதிட்டார்”: தானாக முன்வந்து வழக்கு தொடுத்த மதுரை நீதிமன்றம்
வழக்கறிஞர் சத்தமாக வாதிட்டார் என்ற காரணத்தைச் சொல்லி தானாக முன்வந்து நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. மனுவில், பி. செங்குட்டரசன் என்ற வழக்கறிஞர், நீதிபதி சி. சொக்கலிங்கம் முன்பு வாதாடியபோது வழக்கத்துக்கு மாறாக சத்தமாக வாதிட்டார். நீதிபதி சொல்லியும் கேட்காமல் அவர் மீண்டும் சத்தமாகவே பேசினார். நீதிபதியின் எச்சரிக்கையை அவர் மீறியதோடு நீதிமன்றத்தை சிரமத்திற்கு உள்ளாக்கினார். எனவே நீதிமன்றத்தை அவமதித்தார் என்பதற்காக அவர் மீது தாமாக முன்வந்து இந்த நீதிமன்றம் வழக்குத் … Continue reading “வழக்கறிஞர் சத்தமாக வாதிட்டார்”: தானாக முன்வந்து வழக்கு தொடுத்த மதுரை நீதிமன்றம்
ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்
ச.பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் வழக்குரைஞர்கள் சட்டத்தில் பிறப்பித்த சட்டத்திருத்தத்தின் படி நீதிமன்றத்தில் போராட்டம் நடத்துவது, பதாகைகளை பிடிப்பது மற்றும் நீதிபதி பெயரைச்சொல்லி பணம் பெறுவது, நீதிபதிகளை ஆதாரமற்று விமர்சிப்பது மற்றும் குடி போதையில் நீதிமன்றத்திற்கு வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதியானவர் வழக்குரைஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். உடனடியாக குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நபர் வழக்குரைஞராக தொழில் செய்வதை தடுத்து உத்திரவிடலாம். இது உடனடியாக தமிழக அரசிதழில் வெளியாகி … Continue reading ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்
“துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செய்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை
இந்திய பார் கவுன்சில் கட்டத்தில் உள்ள லிஃப்டை யார் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து பார் கவுன்சில் தலைவர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில், பணியாளருக்கும் கீழே உள்ள துணை செயலாளர்கள் போன்றோர், 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்கள் லிஃப்டைப் பயன்படுத்தினால் அவர்களுடைய அந்த நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அதுபோல, துப்புரவாளர்கள், வெளி ஏஜென்ஸிகள் மூலம் பணியாற்ற வருபவர்கள் 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், … Continue reading “துப்புரவு பணியாளர்கள் லிஃப்டை பயன்படுத்தினால் சம்பள பிடித்தம் செய்யப்படும்”: இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை
மனநோயாளிகள், பொய்வழக்கு, ஸ்மார்ட் போன், கரி சோறு, கஞ்சா: திலீபன் மகேந்திரனின் புழல் சிறை அனுபவங்கள்
திலீபன் மகேந்திரன் புழல் சிறையில் இருக்கும் 1800 கைதிகளில் 900 பேர் மீது பொய் வழக்கு. இதை என்னிடம் சொன்னது புழல் உயர் காவல் அதிகாரி குமார். கை, காலை உடைத்து புழல் சிறையில் இருப்பவர்கள் 200-க்கும் மேல், இவர்கள் அனைவரும் ஏழைகள் பஞ்சத்துக்கு திருடுபவர்கள். இதுவரை ஒரு பெருமுதலாளியோ அல்லது ஊழல் செய்த தொழிலதிபரையோ போலீஸ் அதிகாரிகள் கை, காலை உடைக்க வில்லை. கேள்வி கேட்க ஆளில்லாத அப்பாவி பொது மக்கள் மீது மட்டும் வன்மத்தை … Continue reading மனநோயாளிகள், பொய்வழக்கு, ஸ்மார்ட் போன், கரி சோறு, கஞ்சா: திலீபன் மகேந்திரனின் புழல் சிறை அனுபவங்கள்
உயர்பதவியில் இருப்போரின் பிரபுத்துவ மனப்பான்மை:நீதிபதி ஹரிபரந்தாமன்
உயர்பதவியில் இருப்பவர்கள் இன்னமும் பிரபுத்துவ மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கூறினார். நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பணி ஓய்வுபெற்றதையடுத்து, அவருக்கு பிரிவு உபசார விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமை வகித்தார். தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பேசியதாவது: பொதுவாக உயர் பதவியில் இருப்போர் ஒருபிரபுத்துவ மனப்பான்மையில் இருப்பது வருத்தத்துக்குரியது. சுதந்திரத்துக்கு முன்பு இந்தியா ஆங்கிலேயர்களாலும், பல … Continue reading உயர்பதவியில் இருப்போரின் பிரபுத்துவ மனப்பான்மை:நீதிபதி ஹரிபரந்தாமன்
’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி
உடுமலைப் பேட்டையில் பொறியியல் மாணவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞருமான சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குக் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், நீதிபதிகள் நாகமுத்து, ஜெயச்சந்திரன் ஆகியோர் "பத்திரிகைகளில் வெளியான புகைபட்டத்தில் உள்ளபடி, கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆடையை வழங்காமல் போலீஸ் நிறுத்தியது ஏன்? " என்று கேள்வி எழுப்பியதுடன் … Continue reading ’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி
“நான் ஜட்டியை துவைக்கச் சொல்லவில்லை; பனியனைத்தான் துவைக்கச் சொன்னேன்” : ஒழுங்கு நடவடிக்கை ஆணை போட்ட நீதிபதி விளக்கம்
“நான் ஜட்டியை துவைக்கச் சொல்லவில்லை; பனியனைத்தான் துவைக்கச் சொன்னேன்” என சத்திய மங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி டி.செல்வம் விளக்கம் தெரிவித்திருக்கிறார். சார்பு நீதிமன்றத்தில் தனக்குக் கீழே அலுவலக உதவியாளராக பணிபுரியும் வசந்தி என்பவருக்கு, தனது உள்ளாடைகளை துவைக்கவில்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்று மெமோ அனுப்பினார். உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை?!! : பெண் உதவியாளருக்கு சார்பு நீதிபதி நோட்டீஸ்... இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி, வைரலானது. இந்நிலையில் இந்த மெமோ குறித்து எண்டீடிவி … Continue reading “நான் ஜட்டியை துவைக்கச் சொல்லவில்லை; பனியனைத்தான் துவைக்கச் சொன்னேன்” : ஒழுங்கு நடவடிக்கை ஆணை போட்ட நீதிபதி விளக்கம்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்கிறார்: தலித் நீதிபதி புகார்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மீது, சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வதாக நீதிபதி சி. எஸ். கர்ணன் குற்றம்சாட்டியிருக்கிறார். நீதிபதி சி. எஸ்.கர்ணன் அளித்த கடிதத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்ற பதிவாளர், இந்த விவாகாரத்தை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அவரச மனுவை புதன்கிழமை அளித்தது. இதன் மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. நீதிபதி கர்ணன் எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு நீதித்துறை அகாடமியின் நிர்வாகக் குழு பதவியில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டு, … Continue reading சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாதிய கண்ணோட்டத்துடன் நடந்துகொள்கிறார்: தலித் நீதிபதி புகார்
கோவையில் கைதான மாவோயிஸ்ட்களுக்கு ஜாமின்
கோவையில், கைதான மாவோயிஸ்டுகள் 5 பேரையும் நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை கருமத்தம்பட்டியில் கடந்த ஆண்டு மே 4ம் தேதி மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த ஐந்து பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான ரூபேஷ் மற்றும் அவரது மனைவி சைனா, அனூப், வீரமணி, கண்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமினில் விடுவிக்கக் கோரி, அவர்கள் தாக்கல் செய்த மனுக்களை கீழ்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்யக் … Continue reading கோவையில் கைதான மாவோயிஸ்ட்களுக்கு ஜாமின்
சல்மானுக்குக் கிடைத்த நீதி ஏன் சாய்பாபாவுக்குக் கிடைக்கவில்லை?
நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. நாக்பூர் சிறையில் குண்டா செல்லில்(தப்பிச்செல்லும் வாய்ப்புள்ள குற்றவாளிகளுக்கான சிறை) அடைக்கப்பட்ட இவர், கடுமையான உடல் நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். போலியோவால் பாதிக்கப்பட்ட ஜி. என். சாய்பாபாவால், நகரும் நாற்காலியின் உதவியால்தான் இயங்க முடியும். பலமுறை சாய்பாபாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது நீதிமன்றம். இவருடைய வழக்கறிஞர், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்தார். அதன் அடிப்படையில் … Continue reading சல்மானுக்குக் கிடைத்த நீதி ஏன் சாய்பாபாவுக்குக் கிடைக்கவில்லை?