நியூஸ் 7 நெறியாளர்கள் நெல்சன் சேவியர், செந்தில் தொலைபேசி எண்களை சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பும் ட்ரோல்கள்!

ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் சந்தேக மரணமடைந்தார். இதுகுறித்து விவாத நிகழ்ச்சியை  நடத்தியது நியூஸ் 7 தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியில் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ், மனித உரிமை செயற்பாட்டாளர் அ. மார்கஸ், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சித்தண்ணன், ராம்குமார் வழக்கு தொடர்பாக தனிப்பட்ட முறையில் தகவல்களை திரட்டிக் கொண்டிருந்த திலீபன் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஊடகவியலாளர் நெல்சன் சேவியர் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திலீபன் மகேந்திரன், அவதூறாகப் பேசியதாகக் கூறி இந்துத்துவ அமைப்புகள் கடும் … Continue reading நியூஸ் 7 நெறியாளர்கள் நெல்சன் சேவியர், செந்தில் தொலைபேசி எண்களை சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பும் ட்ரோல்கள்!

கரு. பழனியப்பன் சாதி பற்றி பேசுவதை ஏன் தவிர்த்தார்? நியூஸ் 7 தொகுப்பாளர் கேள்வி!

நியூஸ் 7 தொலைக்காட்சியில் வெளியான ‘செய்திக்கு அப்பால்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன், அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிருனாள் சரணை மூக்குடைத்து விட்டதாகக் கூறி, அந்த வீடியோவைப் பகிர்ந்து வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சமூக ஊடக மக்கள். உண்மையில் என்ன நடந்தது என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளரே எழுதியிருக்கிறார் படியுங்கள்! Mrinal Saran செய்திக்கு அப்பால் நிகழ்ச்சியில் நான் கபாலி படம் பற்றி திரு கரு.பழனியப்பன் அவர்களுடன் உரையாடும் வீடியோ நேற்றில் இருந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது. கரு.பழனியப்பனைப் … Continue reading கரு. பழனியப்பன் சாதி பற்றி பேசுவதை ஏன் தவிர்த்தார்? நியூஸ் 7 தொகுப்பாளர் கேள்வி!

பகுத்தறிவு இல்லாத கருத்துக் கணிப்புகள்!

எஸ். கண்ணன் மக்களின் மன நிலையைஅறிவது தான் நோக்கம் என்றால், எத்தனை கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டாலும் முடிவுகள் ஒரே மாதிரியாகத்தானே பிரதிபலிக்க முடியும். தேர்தல் முடிவதற்குள் எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படலாம். தேர்தல் வந்தால் மைக்செட் வைப்பது, நோட்டீஸ், போஸ்டர் மற்றும் தலைவர்கள் பிரச்சாரம் என்ற வரிசையில் இப்போது கருத்துக் கணிப்புகள் எடுப்பது என்பது கடமைக்கு செய்யும் ஒரு வேலையாக மாறிவிட்டது.முதலாளிகளுக்குச் சாதகமான இந்த நவீன பொருளாதார சூழலில் மக்கள் … Continue reading பகுத்தறிவு இல்லாத கருத்துக் கணிப்புகள்!

“இது மாதிரியெல்லாம் போட்டீங்கன்னா ஆஃபிஸை கொளுத்திடுவோம்…உண்மையை எழுதுங்கடா” அதிமுக தலைமை அலுவலகத்தில் நியூஸ் 7 பத்திரிகையாளரை மிரட்டிய தொண்டர்கள்

திமுகவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பை வெளியிடுவதாகக் கூறி “இது மாதிரியெல்லாம் போட்டீங்கன்னா ஆஃபிஸை கொளுத்திடுவோம்...உண்மையை எழுதுங்கடா” அதிமுக தலைமை அலுவலகத்தில்  சஞ்சீவி என்ற நியூஸ் 7 செய்தியாளரை அதிமுக தொண்டர்கள் மிரட்டியுள்ளனர். அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரை கும்பலாக அதிமுக தொண்டர்கள் சூழ்ந்துகொண்டு மிரட்டினர். “துட்டு வாங்கிட்டு எழுதறீங்க, அதிமுக தொண்டர்கள் பொறுமையா இருக்கோம். இதுவே திமுகவுக்கான என்ன பண்ணியிருப்பாங்க தெரியுமா?” என்று கூட்டத்தில் ஒருவர் கூறினார். நியூஸ் 7 இந்த … Continue reading “இது மாதிரியெல்லாம் போட்டீங்கன்னா ஆஃபிஸை கொளுத்திடுவோம்…உண்மையை எழுதுங்கடா” அதிமுக தலைமை அலுவலகத்தில் நியூஸ் 7 பத்திரிகையாளரை மிரட்டிய தொண்டர்கள்