வலதுசாரிகளும் பெரு முதலாளிகளும் கை கோர்த்து செயல்படுகின்றனர்: ஆனந்த் பட்வர்தன்

மேக்ஸ் முல்லர் பவனில் , சென்னை ஏழாவது ஆவணப்பட குறும்பட விழா (7th Chennai International Documentary and Short Films Festival 2019) 10.2.2019 வரை நடைபெறுகிறது. காய்தே நிறுவனமும், மறுபக்கம் அமைப்பும் இணைந்து நடத்தும் இந்த ஐந்து நாள் விழாவை புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்தன் தொடங்கி வைத்து பேசினார். “மேல்தட்டு மக்களைப்பொறுத்த வரையில் இந்த அமைப்பு (system) ஒழுங்காக உள்ளது. வலதுசாரிகளும், பெரு முதலாளிகளும் ( Crony Capitalism) கை கோர்த்து … Continue reading வலதுசாரிகளும் பெரு முதலாளிகளும் கை கோர்த்து செயல்படுகின்றனர்: ஆனந்த் பட்வர்தன்

#நிகழ்வுகள்: க்ருப்ஸ்கயாவின் ’உழைக்கும் மகளிர் நூல்’ வெளியீட்டு விழா

விடிவெள்ளி வாசகர் வட்டம் நடத்தும் தோழர் க்ருப்ஸ்கயா-வின் உழைக்கும் மகளிர் நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. வரவேற்புரை: தோழர் சபரிதா தலைமை : தோழர் சங்கீதா நூல் வெளியீடு : தோழர் லட்சுமி - ஆட்டோ ஓட்டுனர் பெற்றுக்கொள்பவர் : தோழர் மகிழ்நன்.பா.ம, திரைத்துறை கருத்துரை தோழர் கீதா ராமகிருஷ்னன், அமைப்புச் சாரா தொழிலாளர் கூட்டமைப்பு தோழர் மதன் அறிவழகன் தோழர் ஈஸ்வரி, திரைப்படத் துறை தோழர் பா.ஜீவசுந்தரி, எழுத்தாளர் தோழர் ஜி.மஞ்சுளா, … Continue reading #நிகழ்வுகள்: க்ருப்ஸ்கயாவின் ’உழைக்கும் மகளிர் நூல்’ வெளியீட்டு விழா

#நிகழ்வுகள்: அம்ஷன்குமாரின் ‘மனுசங்கடா’ படம் சிறப்பு திரையிடல்

உலகத் திரைப்பட விழாவில் விருதுகள் பெற்ற #மனுசங்கடா தமிழ் திரைப்படம் திரையிடல் மற்றும் இயக்குனர் #அம்ஷன்குமார் மற்றும் குழுவினருடன் உரையாடல். நன்கொடை: ரூபாய் 100/ நுழைவுச்சீட்டு கிடைக்குமிடங்கள்: பரிசல் புத்தக நிலையம் - திருவல்லிக்கேணி 044-48579646, பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை 044-24332924, நியூ புக்லேண்ட் - தி .நகர் 044-28158171, டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர் 9566236967, கூகை திரைப்பட இயக்கம் - வளசரவாக்கம் 9710505502, பனுவல் புக் ஸ்டோர் - திருவான்மியூர் 044-43100442. தொடர்புக்கு :9382853646,9445124576,7338823667,8939114423

கச்சநத்தம் சாதிவெறி படுகொலையை கண்டித்து கண்டனக் கூட்டம்

கச்சநத்தம் சாதிவெறி படுகொலையை கண்டித்து கண்டனக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

#நிகழ்வுகள்: நிழல் -பதியம் நடத்தும் 51-வது குறும்பட பயிற்சிப் பட்டறை

நிழல் - பதியம் அமைப்புகள் இணைந்து குறும்பட பயிற்சி பட்டறையை  வரும் மே மாதம் 7 முதல் 12 வரை ஆறுநாட்கள் நடத்த உள்ளன. இடம் : மதுரை,திருப்பரங்குன்றம், சூட்டுக்கோல் ராமலிங்கவிலாசம். இதில் நடிப்பு , கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு கற்றுக்கொடுக்கப்பட்டு, இறுதியில் ஒரு குறும்படத்தையும் எடுக்க வைக்கப்படுவார்கள். குறும்படம், ஆவணப்படம், உலகப்படங்களும் காட்டப்பட்டு திறனாய்வுக்கலையும் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு சலுகைக்கட்டணமும் தரப்படுகிறது. தொடர்புக்கு :9444 484868

’எஸ். துர்கா’ படம் திரையிடும் அரங்குக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் இயக்கிய ‘எஸ். துர்கா’ படத்தை சென்னையில் திரையிடுகிறது தமிழ் ஸ்டுடியோ.  ‘செக்ஸி துர்கா’ என பெயரிடப்பட்டு சர்ச்சை காரணமாக ‘எஸ். துர்கா’ என பெயர் மாற்றப்பட்டு வெளியான இந்தப் படம் திரையிடப்படும் திரையரங்கை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் திரை செயல்பாட்டாளருமான மோ.அருண். இதுகுறித்து தனது முகநூலில் எழுதியுள்ள அவர், “வெடிகுண்டு மிரட்டல். தமிழ்நாட்டு ஊடக நண்பர்கள் இப்போதாவது, இதையாவது எழுதி காவிகளின் … Continue reading ’எஸ். துர்கா’ படம் திரையிடும் அரங்குக்கு வெடிகுண்டு மிரட்டல்!

#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்

எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல் என்ற நிகழ்வை இன்று மாலை ஒருங்கிணைத்திருக்கிறது பிரக்ஞை பதிப்பகம். சென்னை டிஸ்கவர் புக் பேலஸில் நிகழும் இந்நிகழ்வுக்கு எழுத்தாளர் பிரபஞ்சன் தலைமை ஏற்று நடத்துகிறார். நிகழ்வில் எழுத்தாளர் தமயந்தியின் ‘இந்த நதி நனைவதற்கல்ல’ (பிரக்ஞை வெளியீடு) கட்டுரை நூல், ’ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும்’(கருப்பு பிரதிகள் வெளியீடு) சிறுகதை தொகுப்பு, ’அதனினும் சிறப்பான உயிர்தெழுதல்’(பனிக்குடம்/ஆகுதி வெளியீடு) சில்வியா ப்ளாத்தின் கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல் குறித்து எழுத்தாளர்கள் பேச விருக்கிறார்கள்.

#நிகழ்வுகள்: 6வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2018

மறுபக்கம் அமைப்பு மற்றும் மார்க் முல்லர் பவன் இணைந்து நடத்தும் 6வது பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2018 சென்னையில் நாளை தொடங்குகிறது. ஏப்ரல் 15 முதல் 19 வரை நடக்கவிருக்கும் விழாவில் 50 படங்கள் திரையிடப்பட உள்ளன. சிறப்புரை, கலந்துரையாடலும் நிகழவிருக்கிறது. கீழ்க்கண்ட பிரிவுகளில் படங்கள் திரையிடப்படவுள்ளன: 1) ரெட்ரோ (திரும்பிப்பார்த்தல்) : மூத்த இயக்குநர் சஞ்சய் மகரிஷி (புது தில்லி) இயக்கிய படங்கள்; அவருடன் கலந்துரையாடல் 2) மூத்த திரைப்பட விமர்சகர் அம்ரித் காங்கர் … Continue reading #நிகழ்வுகள்: 6வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2018

#நிகழ்வுகள்: எழுத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் மதவாதம்: ஓர் உரையாடல்

எழுத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் மதவாதம்' என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்வொன்றை ஒருங்கிணைக்கிறது ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு. இன்று நடைபெறும் உரையாடல் குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் கட்டுரைக்காக தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு நேரில் சென்று மன்னிப்புக் கேட்டிருப்பதை அறிவீர்கள். ஒரு பத்திரிகை ஆசிரியர், தான் வெளியிட்ட கட்டுரை ஒன்றுக்காக கேட்டிருக்கும் இந்த மன்னிப்பு பத்திரிகை சுதந்திரம், எழுத்து சுதந்திரம், மதச்சார்பின்மை, ஜனநாயகச் செயல்பாடு முதலானவற்றை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. … Continue reading #நிகழ்வுகள்: எழுத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் மதவாதம்: ஓர் உரையாடல்

#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா

எழுத்தாளர் தமிழ்மகனின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்மகனின் வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்(நாவல்), தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்(நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதை), சங்கர் முதல் ஷங்கர் வரை, காதல் தேனீ(குறுநாவல்கள்), தமிழ்மகன் சிறுகதைகள் ஆகிய ஐந்து நூல்கள் வெளியிடப்படுகின்றன.

#நிகழ்வுகள்: கோத்தகிரியில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம்!

இனியன் சமீபகாலமாகப் பல உரையாடல்களில் நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். சராசரியாக குழந்தைகளுக்கு கிடைக்கப்பெறும் அடிப்படை உரிமைகளில் இருந்து அதிகளவு புறக்கணிக்கப்படும் குழந்தைகள் யார்? நூற்றுக்கு 95% சதவிகித நபர்கள் உடனடியாக கிராமத்து குழந்தைகள் எனப் பதில் சொல்கின்றனர். அப்பதிலைச் சொல்லும் அவர்களிடம் இவ்வாறு கூறி வருகிறேன். "உங்கள் பதில் மிகவும் தவறு. பன்முகத்தன்மைக் கொண்ட நமது நிலவமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளில் அதிகளவு அடிப்படை உரிமைகளுக்காக புறக்கணிக்கப்படுவதில் முதலில் இருப்பவர்கள் அனைத்து தரப்பான மாற்றுத்திறன் குழந்தைகள். இரண்டாவதாக … Continue reading #நிகழ்வுகள்: கோத்தகிரியில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம்!

நிகழ்வுகள்: 10-வது ஆண்டில் தமிழ் ஸ்டுடியோ; இயக்குநர்களுடம் கலந்துரையாடல்

தமிழ் ஸ்டுடியோ நவம்பர் 23 வியாழன் அன்று பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் ராம், இயக்குனர் ஸ்ரீகணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில்  தமிழ் ஸ்டுடியோ கடந்து வந்த பாதை, அதன் நிறை குறைகள் பற்றி விவாதிக்க இருப்பதாக தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் மோ. அருண் தெரிவித்துள்ளார். 23-11-2017, வியாழன், மாலை 7 மணி. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு … Continue reading நிகழ்வுகள்: 10-வது ஆண்டில் தமிழ் ஸ்டுடியோ; இயக்குநர்களுடம் கலந்துரையாடல்

#நிகழ்வுகள்: விழித்திரு திறனாய்வு கூட்டம்

விழித்திரு திரைப்படத்தை முன்வைத்துத் திறனாய்வு மற்றும் இன்றையத் தமிழ்ச் சினிமா சூழல் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை 11.11.17 மாலை 5 மணிக்கு, மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடக்கிறது. சாரு நிவேதிதா, ஷாஜி, அ.குமரேசன், தீபா லட்சுமி ஜெயகாந்தன், கார்ட்டூனிஸ்ட் பாலா, சவிதா முனுசாமி, அஜயன்பாலா, கேபிள் சங்கர், வ.கௌதமன், வசந்தபாலன், லஷ்மி ராமகிருஷ்ணன், தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி மற்றும் விழித்திரு படகுழு சார்பாக இயக்குநர் மீரா கதிரவன், நடிகர்கள் தன்ஷிகா, ராகுல் பாஸ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் … Continue reading #நிகழ்வுகள்: விழித்திரு திறனாய்வு கூட்டம்

#நிகழ்வுகள்: அந்திமழையின் 5 நூல்கள் வெளியீட்டு விழா!

அந்திமழையின் 5 நூல்கள் வெளியீட்டு விழா தலைமை: மாலன் முன்னிலை: அந்திமழை இளங்கோவன் சிறப்பு விருந்தினர்கள்: வசந்த் சாய், இயக்குநர் ரமேஷ் விநாயகம். இசையமைப்பாளர் தேன்மொழி தாஸ், கவிஞர் ரவிகுமார், இயக்குநர் தென்றல் சிவகுமார் ஆத்மார்த்தியின் புலன்மயக்கம் - 1 புலன்மயக்கம் -2 அந்திமழை தொகுப்புகள்: 1) நீ பாதி நான் பாதி – மகிழ்ச்சியான மணவாழ்வின் ரகசியங்கள் 2) கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை – திரைக்கலைஞர்கள் @ அந்திமழை 3) மனசுக்கு நெருக்கமான 40 … Continue reading #நிகழ்வுகள்: அந்திமழையின் 5 நூல்கள் வெளியீட்டு விழா!

#நிகழ்வுகள்: மதுரையில் “பண்பாட்டு அரசியலும் மக்கள் விடுதலையும்” கலை நிகழ்வு மற்றும் கருத்தரங்கு

சூல் வாசிப்புத் தளமும் தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகமும் இணைந்து மதுரையில் இன்று(28.10.2017) மாலை 5 மணிக்கு “பண்பாட்டு அரசியலும் மக்கள் விடுதலையும்” என்ற பெயரில் கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்வை நடத்துகின்றன. இந்நிகழ்வில் நீட் தேர்வுக்காக தன் உயிரை ஈந்த அனிதா, அடிப்படைவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படங்கள் திறந்துவைக்கப்பட இருக்கின்றன. இடம்: ராமசுப்பு அரங்கம் , மாட்டுத்தாவணி, மதுரை.  

#நிகழ்வு: அமெரிக்கா அம்பேத்கர் கிங் ஸ்டடி சர்க்கில் கருத்தரங்கில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் கலந்துரையாடல்

அமெரிக்காவில் Ambedkar king study circle சார்பில் செப்டம்பர்  30-ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில்  ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான்,  கான்பிரஸ் கால் மூலம் பேசினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஆதித்தமிழர்களின் வரலாறு புத்தகங்கள், ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடுகள் குறித்து கேட்டனர். செவ்வியை இந்த இணைப்பில் பார்க்கலாம் - https://drive.google.com/file/d/0B-Dkvyw7NXuYX2VFaU9SVGRvMWc/view?usp=drivesdk அதன் பின், "இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடிவரும் ஆதித்தமிழர் பேரவை கடந்து வந்த பாதைகள் " என்ற தலைப்பில் அதியமான் உரையாற்றினார்.

மாநிலங்களின் உரிமைக் குரல் : பிற மாநிலங்களில் நடப்பதென்ன?

மாநிலங்களின் உரிமைக் குரல் : பிற மாநிலங்களில் நடப்பதென்ன? - கருத்தரங்கம். இன்று (16.09.2017 சனிக்கிழமை) மாலை 5 மணி. ஆஷா நிவாஸ் சமூக சேவா மையம், 9 ரூத் லேண்ட் கேட், 5ஆவது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006. (அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை - உத்தமர் காந்தி சாலையிலுள்ள தாஜ் கோரமண்டல் விடுதிக்கு எதிப்புறச் சாலையில் சென்றால் இடத்தை அடையலாம்) தொடர்புக்கு - +919487485266. அனைவரும் … Continue reading மாநிலங்களின் உரிமைக் குரல் : பிற மாநிலங்களில் நடப்பதென்ன?

சென்னையில் சமூக நீதி திரைப்பட விழா: 15 படங்கள் திரையிடல்

சென்னை சமூக நீதி திரைப்பட விழாவை முன்னெடுக்கிறார் சமூக செயல்பாட்டாளரும் ஆவணப்பட இயக்குநருமான ஆர். பி. அமுதன். மாக்ஸ் முல்லர் பவன் மற்றும் மறுப்பக்கம் அமைப்பு இணைந்து நடத்தும் இந்தத் திரைப்பட விழாவில்  15 படங்கள் திரையிடப்படுகின்றன. நாளை தொடங்கி மூன்று நாட்கள் விழா நடக்கவிருக்கிறது. திரையிடலுடன் இசை, நடனம், கவிதை வாசிப்பு, ஒளிப்பட கண்காட்சி, விவாதம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற இருக்கின்றன என்கிறார் ஆர்.பி. அமுதன். “என்னுடைய செயல்பாட்டுக்கு ஆவணப்படங்களை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துகிறேன். சமூக … Continue reading சென்னையில் சமூக நீதி திரைப்பட விழா: 15 படங்கள் திரையிடல்

கண்டனக் கூட்டமும் கவிதை வாசிப்பும்

அனிதாவின் மரணத்திற்கும் நீட்டை எதிர்த்தும் கண்டனக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. நாள்: 02.09.2017 சனிக்கிழமை, மாலை 4.30 மணி. இடம்: அம்பேத்கர் திடல், அசோக் நகர், சென்னை. ஒருங்கிணைப்பு: சுகிர்தராணி, நாச்சியாள் சுகந்தி. படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் அனைவரும் வருக. இது நம்ம கடமை ...வந்திடுங்க.

#நிகழ்வுகள்: தமிழ் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் வாசகசாலை இணைந்து "தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்" வாராந்திர தொடர் நிகழ்வை நடத்தி வருகிறது. இன்று திருநங்கைகளை மைய கதாபாத்திரமாக கொண்டு எழுதப்பட்ட மூன்று சிறுகதைகள் குறித்த உரையாடல் நிகழ்வு அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறுகிறது. அபிமானியின் 'வானத்தை நேசிக்கும் நட்சத்திரங்கள்' குறித்து தாமோதிரன், கி.ராஜநாராயணனின் 'கோமதி' குறித்து சதாத், ப.மதியழகனின் 'அரவான்' ஆர். ஸ்ரீனிவாஸ் பேசுகின்றனர். ஞாயிறு மேடையில் செயல்பாட்டாளர் த.ஜீவலட்சுமி பேசுகிறார்.

#நிகழ்வுகள்: தரமணி திரைப்படம் குறித்த கலந்துரையாடல்

வாசகசாலை ஒருங்கிணைக்கும் தரமணி திரைப்படம் குறித்த கலந்துரையாடல் சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகின்றனர் திரைப்பட இயக்குநர் வடிவேல் மற்றும் ஊடகவியலாளர் விஜி பழனிசாமி. ரசிக பார்வையில் கருத்துகளை பகிர்கிறார்கள் குழலி மற்றும் சஜித். அதன் பிறகு கலந்துரையாடலும் நிகழவிருக்கிறது.

#நிகழ்வுகள்: யாவரும் பதிப்பகம் ஒருங்கிணைக்கும் மூன்று நாவல்கள் அறிமுகக் கூட்டம்

யாவரும் பதிப்பகம் ஒருங்கிணைக்கும் மூன்று நாவல்கள் அறிமுகக் கூட்டம் சென்னை இக்சா மையத்தில் நடைபெறுகிறது. தலைமை : கே.என்.சிவராமன் வாழ்த்துரை : சீராளன் ஜெயந்தன் பாக்கியம் சங்கர் கணபதி சுப்ரமணியன் நூல் குறித்துப் பேசுபவர்கள் கனவு ராட்டினம் குறித்து – கிருஷ்ணமூர்த்தி அற்றைத் திங்கள் குறித்து – நாச்சியாள் சுகந்தி வெட்டாட்டம் குறித்து கவிதைக்காரன் இளங்கோ ஏற்புரை: ஷான், மாதவன் & கலைச்செல்வி தொகுப்பு : வேல்கண்ணன் ஒருங்கிணைப்பு : யாவரும்.காம் நாள் 19/08/2017 ; நேரம் … Continue reading #நிகழ்வுகள்: யாவரும் பதிப்பகம் ஒருங்கிணைக்கும் மூன்று நாவல்கள் அறிமுகக் கூட்டம்

#நிகழ்வுகள்: மக்களை பிளவுபடுத்து சாதிய, மதவாத ‘சமூக உருவாக்க’ அரசியல் கருத்தரங்கம்

மோடியின் பாஜக அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிரானது. இதுவரை கண்டிராத கொடுங்கோல் அரசு இது. எவரையும் விட்டுவைக்காத, யாரையும் வாழவிடாத அரசு இது. மாநில அரசுகளை ஒடுக்கி, மாநில உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்லாது, மக்களை, சாதி, மத, இன அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. சாமானிய மக்களின் அடிமடியில் கைவைக்கிறது இந்த அரசு. பாஜகவின் இந்த அரசியலை விரிவாகப் பேசுவோம். வாருங்கள். தலைமை : தோழர் ரபீக் ராஜா இளந்தமிழகம் வரவேற்புரை : தோழர் வினோத் குமார் இளந்தமிழகம் … Continue reading #நிகழ்வுகள்: மக்களை பிளவுபடுத்து சாதிய, மதவாத ‘சமூக உருவாக்க’ அரசியல் கருத்தரங்கம்

#நிகழ்வுகள்: அக்டோபர் புரட்சியின்  தாக்கங்களும் விளைவுகளும்: சோவியத் நூற்றாண்டு கருத்தரங்கு

‘உலக வரலாற்றில் மாபெரும் அக்டோபர் புரட்சியின்  தாக்கங்களும் விளைவுகளும்’ என்ற தலைப்பில் சோவியத் நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் இன்று நடைபெறுகிறது. விடிவெள்ளி வாசகர் வட்டம் நடத்தும் இந்நிகழ்வில் அ.பா. ராமச்சந்திரன், வே. மீனாட்சி சுந்தரம், பிரின்ஸ் கஜேந்திர பாபு, அ.கா.ஈஸ்வரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இடம்: நவபாரத் பள்ளி, கோடம்பாக்கம். தொடர்புக்கு: 99412 46679.

#நிகழ்வுகள்: லெனின் விருது பெறும் பேரா.ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் படங்கள் திரையிடல்

தமிழ் ஸ்டுடியோ வழங்கும் 2017ஆம் ஆண்டிற்கான லெனின் விருது பெறும் பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் படங்கள் திரையிடல் சென்னையில் நடைபெறுகிறது. திரையிடப்படும் படங்கள்... Companion to an untold story - 00:04:55 Unfinished Journey - 00:26:01 கருகத் திருவுளமோ - 00:29:07 வில்லு- 00:55:47 தங்கம் - 00:56:26 INA - 01:02:09 Migration of Islam - 00:55:51 இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, … Continue reading #நிகழ்வுகள்: லெனின் விருது பெறும் பேரா.ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் படங்கள் திரையிடல்

#நிகழ்வுகள்: சுமதி பலராம் இயக்கிய ‘நியோகா’ திரையிடல்

நிழல் பதியம் பிலிம் அக்காடமி நடத்தும் 'நியோகா' திரைப்படத்தின் திரையிடல் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. திரையிடலுக்குப் பின் திரைப்படத்தின் இயக்குநர் சுமதி பாலராமுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அனுமதி இலவசம். இத்திரைப்படம் யாழ்ப்பாணம், நோர்வே, லாஸ் ஏஞ்ஜல்ஸ் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு, விருது பெற்றுள்ளது. இடம் : பிரசாத் ப்ரிவியூ தியேட்டர் 58, அருணாசலம் சாலை, சாலிகிராமம் சென்னை-93. நேரம் : மாலை 6 மணிக்கு   தொடர்புக்கு : 9710696939- 9710116179 நியோகா படம் குறித்த விமர்சன … Continue reading #நிகழ்வுகள்: சுமதி பலராம் இயக்கிய ‘நியோகா’ திரையிடல்

#நிகழ்வுகள்: தமிழ் இணைய கல்விக்கழகம் வழங்கும் ‘தமிழகத்தில் அசீவகம்’ சொற்பொழிவு

தமிழ் இணைய கல்விக்கழகம் வழங்கும் ‘தமிழகத்தில் அசீவகம்' சொற்பொழிவு இன்று மாலை 4.30 மணிக்கு நிகழவிருக்கிறது. ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளர் சித்ரா பாலசுப்ரமணியன் இந்நிகழ்வில் சொற்பொழிவு ஆற்றுகிறார். சென்னை கோட்டூர், காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ் இணைய கல்விக்கழக கலையரங்களில் நிகழ்வு நடைபெறுகிறது.

#நிகழ்வுகள்: கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் அஞ்சலி கூட்டம்; நூல் வெளியீடு!

கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது பாரதி புத்தகாலயம். இந்நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு சென்னை, பாரதி புத்தகாலயத்தில் நடைபெறுகிறது. நிகழ்வுக்கு தலைமை ஏற்கிறார் மயிலை பாலு. இரா. தெ. முத்து, கோம்பை அன்வர், அப்பணசாமி, தக்கலை ஹலிமா, ச. விஜயலட்சுமி, தி. பரமேசுவரி, ஷபி, நா.வே. அருள், பாலைவன லாந்தர் ஆகியோர் அஞ்சலி உரையாற்றுகிறார்கள். இந்நிகழ்வில் ஹெச். ஜி. ரசூல் எழுதிய ‘வகாபிசம்-எதிர் உரையாடல்’ என்ற புதிய நூல் வெளியிடப்படுகிறது.

#நிகழ்வுகள்: ஹிரோசிமா நினைவுகள்

ஹிரோசிமா... ஏகாதிபத்திய போர் வெறியாட்டத்தின் அழிக்க இயலா வடு. உலகை மறு பங்கீடு செய்துகொள்வதற்கான ஏகாதிபத்திய நாடுகளின் போர்கள் கோடிக்கணக்கான அப்பாவி மக்களை கொல்கிறது... பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு ஆயுதமற்ற மக்களை கொல்கிறது... ஏகாதிபத்திய நாடுகள் நீடிக்கிற வரையில், அது பரப்புகிற போர் வெறிக் கூச்சல் ஓய்கிற வரையில் போரின் அவலத்தை, அணு ஆயுதங்களின் கோர விளைவுகளை, தலைமுறை தலைமுறையாக சுமந்து நிற்கிற ஹிரோஷமா நாகசாகி நினைவுகளை நமது தலைமுறைக்கு கடத்துவோம். போரற்ற உலகை படைக்க போராடுவோம் ! ஹிரோசிமா நினைவுகள் ஆகஸ்டு … Continue reading #நிகழ்வுகள்: ஹிரோசிமா நினைவுகள்

#நிகழ்வுகள்: பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

சாக்ரடீஸ் பெரியார் நினைவு விருது விழா, இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட அறிக்கை: சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட பெரியார் சாக்ரடீஸ் கடந்த 2015-ஆம் ஆண்டு மே-12 ம் நாள் சாலை விபத்தின் காரணமாக 44 ம் வயதில் உயிர் நீத்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் பெரியார் சாக்ரடீஸ் நினைவு … Continue reading #நிகழ்வுகள்: பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது

கவிஞர் மதிவண்ணன், கவிஞர் பாரதிபுத்திரனின் கவிதை நூல்கள் குறித்த உரையாடல்!

கவிஞர் மதிவண்ணனின் ‘ஏதிலையைத் தொடர்ந்து வரும் நிலா’ மற்றும் கவிஞர் பாரதிபுத்திரனின் ‘மாரிக்கால இரவுகள்’ ஆகிய இரண்டு கவிதை நூல்கள் குறித்த உரையாடல் வாசகசாலையின் 28-வது நிகழ்வாக நடக்கவிருக்கிறது. சென்னை வடபழனியில் உள்ள ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் இந்நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

#நிகழ்வுகள்: கவிஞர் தேவேந்திர பூபதி படைப்புலகம் குறித்த உரையாடல்

கவிஞர் தேவேந்திர பூபதியின் ஆறு நூல்கள் குறித்த உரையாடல் நிகழ்வை ஆகுதி பதிப்பகமும் மோக்லி பதிப்பகமும் இணைந்து நடத்துகின்றன. சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் இந்நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

#நிகழ்வு:நூலகம் தொடக்க விழா; பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனுடன் கலந்துரையாடல்!

பள்ளிகளில் நூலகம் அமைப்பது என்பது ஒரு கனவுத் திட்டம். அமைப்பதோடு நில்லாமல் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்வதும் அவசியமாக இருக்கிறது.

#நிகழ்வுகள்: காகிதம் உருவாக்கும் பயிற்சி முகாம்

ஒரு பொருளின் சுழற்சிப்பாதையை தெரிந்துகொண்டால், துவக்கம் முதல் கைக்குக் கிடைக்கும் நிலை வரையிலான அதன் யாத்திரையை கண்டுணர முடிந்தால், தர்சார் உற்பத்தியின் பின்னாலிருக்கும் பிணைப்புகளை நேரனுபம் அடைந்தால் அப்பொருளைக் கையாளுதலில் ஒரு பொறுப்புணர்வும் பக்குவமும் அதன் உள்ளார்ந்த ஜீவனோடு தன்னை ஒன்றிணைத்துக்கொள்ளும் மனோநிலையும் தானாக வந்துவிடும்.

#நிகழ்வுகள்: மறைக்கப்படும் இன்னொரு சிந்து சமவெளி நாகரீகம்-கீழடி; கருத்தரங்கம்

மறைக்கப்படும் இன்னொரு சிந்து சமவெளி நாகரீகம் - கீழடி என்ற பெயரில் கீழடி அகழாய்வுகள் குறித்து கருத்தரங்கம் ஒன்றை நடத்துகிறது திராவிடர் இயக்க தமிழர் பேரவை. இந்நிகழ்வு நாளை (ஜூன் 22) சென்னையில் நடக்கிறது.  தலைமை: சுப. வீரபாண்டியன் (பொதுச் செயலாளர் தி.இ.த.பே.) சிறப்புரை: சு. வெங்கடேசன் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) சொ. சாந்தலிங்கம் (தொல்லியல் ஆய்வாளர்) நேரம்: மாலை 6 மணி இடம்: கவிக்கோ அரங்கம், 6-சிஐடி காலனி இரண்டாவது மையச் … Continue reading #நிகழ்வுகள்: மறைக்கப்படும் இன்னொரு சிந்து சமவெளி நாகரீகம்-கீழடி; கருத்தரங்கம்

ஜோ டி குரூஸீன் ‘வேர் பிடித்த விளை நிலங்கள்’ நூல் வெளியீட்டு விழா!

எழுத்தாளர் ஜோ டி குரூஸின் சுயசரிதையான 'வேர் பிடித்த விளை நிலங்கள்' நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெறுகிறது. ஜீவா படைப்பகம் வெளியீடும் இந்நூல் வெளியீட்டில் க.வை. பழனிச்சாமி, ஆறுமுகத் தமிழன், ஆடம் தாசன், ரோகினி, பாக்கியம் சங்கர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். ஜோ டி குரூஸ் ஏற்புரை ஆற்றுகிறார். நேரம்: 5:00 மணிக்கு.. இடம் : வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயம் வளாகம், வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 17. தொடர்புக்கு: +91 9003984963

உங்கள் வாசிப்பின் ஆரம்பப்புள்ளி எது? புதிதாக வாசிப்பவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம் என்ன?

விஜி பழனிச்சாமி ஆழ்வார்ப்பேட்டை வட்டார நூலகத்தில் ஞாயிறன்று வாசகர் வட்டம் சார்பில் 'வாசிப்பும் நானும்' நிகழ்வு நடைபெற்றது. வாசகர் வட்டத்தின் சார்பில் அமுதன் ஒருங்கிணைத்து ஆரம்பித்து வைத்தார். பரிசல் புத்தக நிலையம் செந்தில்நாதன் தலைமை ஏற்று ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தியதோடு, ஒவ்வொருவர் பேசி முடித்ததும் அதையொட்டி தனது கருத்தையும் பகிர்ந்துகொண்டார். பரிசல் செந்தில்நாதன் ஒரு தேர்ந்த பாடகர் என்பதும் அவர் பாடிய 'வானத்தின் மீது மயிலாடக்கண்டேன்' பாடல் மூலம் நேற்று தெரிந்தது! முதலில் பேசிய கிருபா முனுசாமி தனது சமீபத்திய … Continue reading உங்கள் வாசிப்பின் ஆரம்பப்புள்ளி எது? புதிதாக வாசிப்பவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம் என்ன?

#நிகழ்வுகள்: அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடல்

தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு ரெட்ரோஸ்பெக்டிவ் நிகழ்வில் ஒரு இயக்குனரின் படங்களில் முக்கியமானவற்றை திரையிட்டு விவாதித்து வருகிறது. இந்த வாரம் இயக்குனர் அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடலும் விவாதமும் நடைபெற உள்ளது. தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்... “கமர்ஷியல் சினிமா வட்டத்திலிருந்துதான் ஒருவர் படம் எடுக்க முடியும் என்ற சூழலில், அதற்குள் சிக்கிவிடாமல் அவர் எடுத்த ஒவ்வொரு படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை. தணிக்கையில் அவரது சில படங்கள் சிக்கிக்கொண்டபோது, அப்படங்களை பொதுவெளியில் குறுந்தகடுகளாக … Continue reading #நிகழ்வுகள்: அனுராக் காஷ்யப் படங்கள் திரையிடல்

#நிகழ்வுகள்: குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது விழா!

மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக குமரகுருபரன் -விஷ்ணுபுரம் கவிதை விருது  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விருதை பெறுகிறார் கவிஞர் சபரிநாதன். விருது விழா இன்று (ஜூன் 10) நிகழ்கிறது. இடம்: பீமாஸ் ஓட்டல் அரங்கம், நூறடி சாலை , வடபழனி (மெட்ரோ ரயில்நிலையம் கீழே, SRM மருத்துவமனை எதிரே) நாள்: 10 ஜூன் 2017 நேரம்: மாலை ஆறுமணி வரவேற்புரை: கவிதா ரவீந்திரன் தலைமையுரை: கவிஞர் தேவதேவன் சிறப்புரை: கவிஞர் மனுஷ்யபுத்திரன், அந்திமழை அசோகன், எழுத்தாளர் ஜெயமோகன் … Continue reading #நிகழ்வுகள்: குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது விழா!

நிகழ்வுகள்: குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படம் திரையிடல்

சலாம் பொன்னுராக்கர் நினைவு கூறும் வகையில், அவர் இயக்கிய 'குட்டி ஜப்பானின் குழந்தைகள்' என்ற ஆவணப்பட திரையிடல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடக்கிறது. திரையிடலுக்குப் பிறகு எழுத்தாளர் தமயந்தி, ஆவணப்பட இயக்குநர் பூவிழி ஆகியோர் பங்கேற்கும் கலந்துரையாடலும் நிகழவிருக்கிறது. சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த படம், 'குட்டி ஜப்பானின் குழந்தைகள்'. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது இந்தப் படம். இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த ஆவணப்பட இயக்குநராக அறியப்படும் கர்நாடகத்தைச் சேர்ந்த … Continue reading நிகழ்வுகள்: குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படம் திரையிடல்