திருவள்ளுவருக்கு காவி உடையணிவித்து சமூக ஊடகங்களில் பாஜகவினர் பரப்பினர். இது கண்டனத்தை கிளப்பிய நிலையில், ‘திருவள்ளுவர் நாத்திகரா?’ என்கிற சர்ச்சை கிளம்பியது. பாஜகவின் எச். ராஜா, நாராயணன் போன்றோர் அவரை ஆத்திகர் எனக் கொண்டாடிய நிலையில், தமிழக அமைச்சர் மஃபா பாண்டியராஜன், ‘திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பேயில்லை என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். பாஜகவின் சில காலம் இருந்த பாண்டியராஜன், அதிமுகவில் பாஜகவின் பி டீமாக செயல்படுவதாக விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். … Continue reading திருவள்ளுவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை: ‘ஆய்வாளர்’ மாஃபா பாண்டியராஜன்
குறிச்சொல்: நாராயணன்
ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெறியாளர் கார்த்திகேயனை பாஜகவினர் சமூக ஊடகங்களில் மிரட்டி வருவது கண்டிக்கத்தக்கது என ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “’மாதவிடாய் காலத்தில் பெண் தெய்வங்கள் கோயிலை விட்டு வெளியேறிவிடுகின்றனவா?’ – என பொருள்படும் கவிதையை நிகழ்ச்சி ஒன்றில் மேற்கோள் காட்டியதற்காக, புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகேயன், பா.ஜ.க., இந்து முன்னணி மதவாத கும்பலால் மிக வெளிப்படையாக மிரட்டப்பட்டு வருகிறார். கார்த்திகேயன் சொன்ன வார்த்தைகளில் எவ்வித தவறும் இல்லை … Continue reading ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்
தலித் என்பதால் மட்டுமே பாஜகவின் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க வேண்டுமா ? #ஜனாதிபதிதேர்தல்…
"மநுஸ்மிருதியில் சதுர் வர்ணம் இருக்கிறது. சதுர்வர்ண அமைப்பு முறை மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மாபெரும் ஊறு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் அனைத்து வகையான இழிவான பணிகளைத்தான் செய்ய வேண்டும் என்று மநுஸ்மிருதி கூறுகிறது. அவர்களுக்கு ஏன் கல்வி அளிக்கப்பட வேண்டும்? பார்ப்பனர்கள்தான் கல்வி கற்க வேண்டும். சத்ரியன் ஆயுதங்களை எடுக்க வேண்டும். வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். ஆனால், சூத்திரர்கள் தொண்டூழியம் செய்ய வேண்டும்” – பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர். மநுஸ்மிருதியில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதைத்தான் பாரதீய … Continue reading தலித் என்பதால் மட்டுமே பாஜகவின் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க வேண்டுமா ? #ஜனாதிபதிதேர்தல்…