நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஹிட்லரின் கருத்துக்களை பரப்பி வருவதாகவும் ஹிட்லரின் கொள்கைகளை தமிழ் இளைஞர்களிடம் திணித்து வருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதை மெய்ப்பிக்கும் விதமாக ஹிட்லரின் சுயசரிதையை தனது காரில் சீமான் வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிகையாளர் இலியாஸ் அகமது, ‘வெறும் 1000 ரூபாய் வருமானம் ஈட்டி, தமிழ்நாட்டில் நாஸிசத்தைப் பரப்ப Isuzu காரில் வலம்வருகிறார் அண்ணன் சீமான். படத்தில் இருப்பது சீமானின் காரில் எப்போதும் இருக்கும் … Continue reading நாம் நாஜியா? சீமான் காரில் ஹிட்லரின் சுயசரிதை?
குறிச்சொல்: நாம் தமிழர்
தீக்குளித்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணம்
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் கலந்துகொண்ட அக்கட்சியின் தொண்டர் விக்னேஷ் தீக்குளித்தார். 90 சதவீத காயங்களுடன் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும் தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும் காவேரியில் தமிழர்களுக்குத் தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களைக் கண்டித்து சென்னை எழும்பூரில் நேற்று (15-09-2016) மாலை 3 மணிக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற … Continue reading தீக்குளித்த விக்னேஷ் சிகிச்சை பலனின்றி மரணம்
வந்தேறி என்று சொன்னதில்லை; பெரியாரை விமர்சித்ததில்லை: சீமான் கடிதம்….
நாம் தமிழர் கட்சி இணையதள தொடர்களுக்கு, அக்கட்சி தலைவர் சீமான் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தான் வந்தேறி என்று சொன்னதில்லை எனவும், பெரியாரை விமர்சித்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். சீமான் இணையத்தில் இயங்கும் என் ஆற்றல் மிகு தம்பிகளுக்கு... படித்து ருசித்தை பகிருங்கள்.. கண்டு ரசித்ததை எழுதுங்கள்.. அழகுக்கவிதை ஒன்றை வடியுங்கள்.. அநீதிகளுக்கு எதிராகக் கட்டுரைகளைத் தீட்டுங்கள்.. உங்கள் தனித்திறமை காட்டுங்கள். இவை ஏதும் இல்லையேல்.. தினம் ஒரு திருக்குறள் பகிருங்கள்.. தினம் ஒரு பாரதிதாசன் கவிதை … Continue reading வந்தேறி என்று சொன்னதில்லை; பெரியாரை விமர்சித்ததில்லை: சீமான் கடிதம்….
“என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்”: சீமான்
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் விஜய் சேதுபதியை சாதி, இனத்தை பரிசோதனை செய்துகொண்டிருக்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பதில் சீமான், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்துநிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்..தொடர்ந்து போராடி எழுவரை மீட்போம்.. அன்பின் நெகிழ்ச்சியோடு, சீமான்...” என … Continue reading “என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்”: சீமான்
‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்
25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை வலியுறுத்தி வரும் 11ம் தேதி வேலூரிலிருந்து சென்னை வரை வாகனப் பேரணி நடைபெற இருக்கிறது. இதை பிரபலப்படுத்தும் வகையில் நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் தன்னார்வத்துடன் சமூக வலைத்தளங்களின் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த சிலர், விஜய் சேதுபதியை நாயக்கர் சாதியைச் சேர்ந்த தெலுங்கர் என்றும் அவர் தமிழருக்காக … Continue reading ‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்
வீடியோ: “தமிழர்களை அழித்தது சிங்களர்கள் அல்ல; தெலுங்கு நாயக்கர்கள்தான்”: சீமானின் புதிய அறிவிப்பு
“தமிழர்களை அழித்தது சிங்களர்கள் அல்ல; தெலுங்கு நாயக்கர்கள்தான்” சீமானின் புதிய அறிவிப்பை வீடியோவில் பாருங்கள்... http://www.youtube.com/watch?v=0BQM9OD2b3o
ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!
திலீபன் மகேந்திரன், தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர். தேசியக் கொடியை எரித்ததற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்காத நிலையில் தமிழக காவல்துறையில் திலீபனுக்கு இன்ஸ்டண்ட் தீர்ப்பாக அவருடைய கையை உடைத்தது. மூன்று மாத சிறை வாசத்துக்குப் பின் பிணையில் வெளியே வந்தார் திலீபன். பட்டம் படித்த திலீபன், முழுவேலையாக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளிநாட்டில் தவித்த உதகை பெண் ஒருவரை மீட்டு கொண்டுவருவதற்கு அவருடைய குடும்பத்திற்கு உதவியிருக்கிறார். செல்ஃபியும் ஸ்டேடஸ் போராளியுமாக இல்லாமல் … Continue reading ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!
பெரியார், அண்ணாவுடன் மகிந்த ராஜபக்ஸவை இணைத்து நாம் தமிழர் ஆவணப்படம்!
வி. சபேசன் 'பெரியாரை கேவலமாக பேசுகிறீர்கள்' என்று அருணன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சீமானை குற்றம் சாட்டிய பொழுது, சீமானுக்கு கோபம் வந்தது. அல்லது கோபம் வந்தது போல் காட்டிக் கொண்டார். 'ஒரு வார்த்தை பெரியாரை தவறாக பேசியிருக்கிறேனா?' என்று ஆவேசமாக சீமான் திருப்பிக் கேட்டார். அருணன் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை வைத்த போது, சீமான் மேலும் ஆவேசப்பட்டு 'ஏ' என்று அதட்டி 'சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டிருக்காதையா' என்று அலறினார். இன்றைக்கு அவருடைய கட்சியை சேர்ந்த … Continue reading பெரியார், அண்ணாவுடன் மகிந்த ராஜபக்ஸவை இணைத்து நாம் தமிழர் ஆவணப்படம்!
1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா?
ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தால் வெற்றி உறுதி என்பது இத்தேர்தலில் நிரூபணமானது. இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்கு தமிழகத்தில் செயல்பட்டு வந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டு சேர்ந்து பாடுபட்டு காங்கிரஸ் அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிய தேர்தல். அதற்குப்பின் காங்கிரஸ் கடந்த 49 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்வதற்கு படாதபாடு படுகிறது. ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜ் 1963ஆம் ஆண்டில் கட்சிப்பணி முக்கியம் என்று கூறி அவரே கொண்டு … Continue reading 1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா?
நாம் தமிழர் சீமானும் ஜெர்மன் தேசியவாதி ஹிட்லரும்!
த. கலையரசன் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஹிட்லரை ஆராதிப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு தீவிர வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் வேறெப்படி சிந்திக்க முடியும்? இங்கே ஒருவர் "ஹிட்லர் ஒரு தேசியவாதி" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே? ஹிட்லரும், நாஜிக் கட்சியினரும் தீவிர ஜெர்மன் தேசியவாதிகள் தானே? நான்அடிக்கடி "நாம் நாஜித் தமிழர்" என்று குறிப்பிட்டு எழுதுவதை கண்டிக்கும் சில நண்பர்கள், அதற்கு "அறிவுபூர்வமான" விளக்கம் கொடுக்கிறார்கள். நாம் … Continue reading நாம் தமிழர் சீமானும் ஜெர்மன் தேசியவாதி ஹிட்லரும்!
தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் சீமான்!
நாம் தமிழர் கட்சியின் சார்பாக 314 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை நாம் தமிழர் ஆட்சியின் செயல்பாட்டு வரைவு என்ற தலைப்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் வெளியிடப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக அரசின் முத்திரையாக திருவள்ளுவர் படம் பொறித்த முத்திரையும், தமிழ்நாட்டு கொடியாக சேர, சோழ, பாண்டியர்களின் கொடியான மீன், புலி, வில்அம்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக தலைநகர் ஐந்தாக பிரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சென்னை, … Continue reading தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் சீமான்!
சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?
வி. சபேசன் சீமான் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய ஒரு நேர்காணல் சமூக வலைத்தளங்களில் பெருமளவு கிண்டலடிக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அதில் சீமான் தான் எப்படி ஈழத்திற்கு போனேன் என்றும், தலைவர் தனக்கு எப்படி துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி அளித்தார் என்றும் சொல்கிறார். யாரும் உயிரோடு இல்லை என்கின்ற அசட்டுத் தைரியத்தில் சீமான் சற்று அதிகமாகவே 'ரீல்' விட்டிருப்பது தற்பொழுது சமூகவலைத்தளங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. சீமானுடைய அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சில உண்மைகளை நேர்மையாக ஒத்துக் … Continue reading சீமானின் ஈழத்துப் பயணக் கதை உண்மையா?
பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!
மதுரை சொக்கன் சீமான் இயக்கிய `பாஞ்சாலக்குறிச்சி’ படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. முழு போதையில் வீட்டுக்கு வரும் வடிவேலு ஒரு ஓலைப் பாயை விரித்து படுத்துக் கொள்ள முயல்வார். அது எப்படி விரித்தாலும் சுருட்டிக்கொண்டே வரும். கடைசியில் பாயை விரித்து வைத்துக் கொண்டு அதில் தொபுக்கடீர் என்று விழுவார். பார்த்தால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும். அப்படியும் விடாமல் “சின்னான்னா சும்மாவா” என்று கெத்தாக பேசுவார்.சீமானும் கிட்டத்தட்ட சின்னான் போல ஆகிவிட்டார். தமிழ்தேசியம் என்ற ஒரு … Continue reading பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!
ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை
பாவெல் தருமபுரி "சமூகத்தில் நிலவுகின்ற பிரதான முரண்பாடுகளை சரியானநேரத்தில் சரியான சக்திகள் தீர்க்காவிட்டால் தவறான சக்திகள் தவறான விதத்தில் தீர்த்துவிடும்." - மாவோவின் புகழ் மிக்க வரிகள் இவை. உண்மையில் இன்றைய தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்துக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி மக்களின் இருதயங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. அதிமுக வாகட்டும் திமுக வாகட்டும் தத்தமது அந்திமகாலத் துடுப்புக்களை செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றன. நடிகர் விஜயகாந்த் ஒரு தலைமைக்கான … Continue reading ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை
“அட…இழிசாதி தலித் நாயே!” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை
அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடலூரில் நடந்த மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் க. தமிழ்மணி. இவர் முகநூலில் பதிவொன்றுக்கு இட்ட கருத்தில் ‘இழிசாதி தலித்தே’ என கடுமையாக பேசியிருக்கிறார். இது முகநூலில் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது. Rajesh Dee இரா. முருகப்பன் சீமானின் சாதி வெறி அடையாளம். அவரது திருமங்கலம் வேட்பாளர். நிச்சயம் இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும்..இவரது தேர்தல் விண்ணப்பம் … Continue reading “அட…இழிசாதி தலித் நாயே!” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை
ஆர்.கே.நகரில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடுகிறார் திருநங்கை தேவி!
கடலூர் மஞ்சக் குப்பத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கேரளாவின் தேவிக்குளம் தொகுதிக்கான வேட்பாளர் உள்பட 235 வேட்பாளர்களை ஒரே மேடையில் ஏற்றி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேவி என்கிற திருநங்கையை வேட்பாளராக அறிமுகப்படுத்தினார்.