சீமான் இரட்டை இலைக்கு; கருணாநிதி கம்யூனிஸ்டுகளுக்கு;பொன்.ராதா திமுகவுக்கு வாக்கு கேட்டார்!

நாம் தமிழர் வேட்பாளருக்கு தருமபுரியில் வாக்கு சேகரித்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் என்பதற்கு பதிலாக இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்கள் என்றார். திமுக தலைவர் சைதாப்பேட்டையில் பிரச்சாரத்தை தொடங்கியபோது காங்கிரஸ் என்பதற்கு பதிலாக கம்யூனிஸ்டுகள் என்றார். இந்த வரிசையில் பொன்னாரும் சேர்ந்திருக்கிறார். தூத்துக்குடியில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், பாஜக என்பதற்கு பதிலாக திமுக வாக்களியுங்கள் என்றார்.