அப்போது ஆமைக்கறி; இப்போது மான்கறி | யுத்த காலத்தில் சீமான் கறி விருந்து உண்டாரா?

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற சமயத்தில் ஆமைக்கறி சாப்பிட்டதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் சொன்னது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் காட்டு மானை சுட்டு தனக்கு தலைவர் பிரபாகரன் விருந்து வைத்ததாக சீமான் கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோவில், “மானை சுடக்கூடாதுன்னு தடை பண்ணிட்டாரு. ஆனா, என் தம்பி வந்திருக்கான் மானை சுடுங்கன்னு சொல்றாரு. உடனே, துப்பாக்கி எடுத்துக்கிட்டு ஒருத்தர், என்ன… அண்ணன் … Continue reading அப்போது ஆமைக்கறி; இப்போது மான்கறி | யுத்த காலத்தில் சீமான் கறி விருந்து உண்டாரா?

“காவிரி நீர் வந்துகொண்டிருக்கும்போது ஓர் இளைஞர் தீக்குளிக்கிறார்; சீமானிடமிருந்து தமிழக இளைஞர்களைக் காப்பாற்றுங்கள்”

வி. சபேசன் நாம் தமிழர் கட்சி இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விக்னேஸ் என்ற இளைஞர் தீக்குளித்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். விக்னேஸ் தீக்குளித்த செய்தி வந்த பொழுது, நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஊர்வலத்தில் தனக்குத்தானே தீமூட்ட முயற்சித்திருப்பான், உடனடியாகவே அவனை பக்கத்தில் நின்ற தொண்டர்கள் காப்பாற்றியிருப்பார்கள், சிறிய தீக்காயம்தான் ஏற்பட்டிருக்கும், இன்றைக்கே வீடு வந்து விடுவான்' இப்படி எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். ஆனால் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சிலர் விக்னேஸ் பற்றி … Continue reading “காவிரி நீர் வந்துகொண்டிருக்கும்போது ஓர் இளைஞர் தீக்குளிக்கிறார்; சீமானிடமிருந்து தமிழக இளைஞர்களைக் காப்பாற்றுங்கள்”

“எங்கள் மூதாதை மாயோன்”: நாம் தமிழர் கட்சியின் தமிழர் பட்டியலில் சேரும் கிருஷ்ணன்!

பழம் தமிழ் இலக்கியங்களில் சுட்டப்படும் மாயோன் தெய்வம் தான், தற்போதைய கிருஷ்ணனாகக் கொண்டாடப்படுகிறார் என சொல்கிறார் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ண ஜெயந்தி சுவரொட்டிகள். தமிழனின் முப்பாட்டன் முருகன்(குறிஞ்சி நிலத் தலைவன்) என சொன்னவர்கள், “எங்கள் மூதாதை மாயோன்” என இந்து மதக் கடவுளான கிருஷ்ணனை தமிழர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. ஐந்திணை நிலங்களில் மாயோன் முல்லை நிலத் தலைவன். இம்மக்கள் மேய்ச்சலில் ஈடுபடுவதால், இந்து புராணங்களில் மாடு மேய்க்கும் கடவுளாக குறிப்பிடப்படும் கண்ணனை, மாயோன் என … Continue reading “எங்கள் மூதாதை மாயோன்”: நாம் தமிழர் கட்சியின் தமிழர் பட்டியலில் சேரும் கிருஷ்ணன்!

பேரா. அருணனுக்கு விட்ட சவால் என்ன ஆனது? சீமானின் பதில்!

கடந்த சில மாதங்களுக்கு முன் தந்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், “மக்கள் நலக் கூட்டணியை விட அதிக வாக்குகளை நாங்கள் பெறுவோம். குறைவாகப் பெற்றால் நாம் தமிழர் கட்சியைக் கலைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிடுகிறேன்” என்று பேசினார். இதைப் படியுங்கள்: #வீடியோ: “ஏய், சும்மா லூசு மாதிரி பேசுக்கிட்டு இருக்காதய்யா” தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் அருணனை ஏசிய சீமான்; சிரித்து ரசித்த பாண்டே! தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. நாம் … Continue reading பேரா. அருணனுக்கு விட்ட சவால் என்ன ஆனது? சீமானின் பதில்!

தன்னை பரதேசி என்று பேசிய இளங்கோவனுக்கு லெனினின் வரிகளை மேற்கோள் காட்டி பதில் சொன்ன சீமான்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி இலங்கை போரின் போது தமிழர்களுக்கு துரோக இழைததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரக்கூட்டங்களில் தொடர்ந்து பேசிவருகிறார். இது பற்றி மதுரை விமான நிலையத்துக்கு வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, “சீமான் என்கிற யாரோ ஒரு பரதேசிக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என கூறினார் இளங்கோவன். இளங்கோவனின் பேச்சுக்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஆத்துமேடு பகுதியில் … Continue reading தன்னை பரதேசி என்று பேசிய இளங்கோவனுக்கு லெனினின் வரிகளை மேற்கோள் காட்டி பதில் சொன்ன சீமான்!

’பணம் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் வசூல் வேட்டை செய்கிறாரா?

’பணம் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் வசூல் வேட்டை செய்வதாக இலங்கையைச் சேர்ந்த களப்பணியாளர் அருணா சுதர்சன் தெரிவித்துள்ளார். தனது முகநூலில் அருணா சுதர்சன் , “இரண்டு நாட்களுக்கு முன்பு பாரிசில் இருந்து என் தோழியின் சகோதரர் பேசினார். சீமானுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருக்கிறதாமே.... ஆட்சியைப் பிடித்து விடுவாரா? என்று கேட்டார். அவர் பேசி முடித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரு தொகுதியில் கூட சீமானால் வெற்றி பெற முடியாது … Continue reading ’பணம் இருந்தால் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிடலாம்’ என்று கூறி புலம்பெயர் தமிழர்களிடம் சீமான் வசூல் வேட்டை செய்கிறாரா?

‘இழிசாதி தலித்’ என பேசிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய புகார்

‘இழிசாதி தலித்’ என பின்னூட்டம் இட்ட நாம் தமிழர் கட்சியின் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் தமிழ்மணி மீது நெல்லை மாநகர ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் முருகன் இந்தப் புகாரை அளித்திருக்கிறார். Murugan Kanna சாதிய வக்கிர சிந்தனையோடு செயல்படும் நாம் தமிழர் கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது இழிசாதி தலித்து என்று தீட்டியதற்காக நெல்லை மாநகர ஆணையாளரிடம் கொடுக்கப்பட்ட புகார்.

ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும்: சீமான்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் மக்களுக்கு உதவும் வகையில் மகளீர் சுய உதவிக்கடன்களையும் விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யமாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையையும்,கடலூர் மாவட்டத்தையும் அழித்துக் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிற பெரும் மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து இன்னமும் மக்கள் மீண்டு வர இயலாத் துயரில் ஆழ்ந்திருக்கிறார்கள். உறைவிடம், உடை, பொருட்கள், ஆவணங்கள் என அனைத்து அடையாளங்களை இழந்து மக்கள் நிர்கதியாய் … Continue reading ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிவாரணம் வழங்க வேண்டும்: சீமான்