“ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது; ஆனந்த விகடனும் தி இந்துவும்தான் உதாரணங்கள்” ராமதாஸ் கடும் தாக்கு

பாமக நிறுவனர் ராமதாஸ், சென்னை தி. நகரின் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஊடகங்கள் அனைத்தும் திமுக ஆதரவு ஊடகங்களாக மாறிவிட்டன; ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகிறது என குற்றம்சாட்டினார். அப்போது நிருபர்கள், “ஜனநாயகம் விலை போய்விட்டதாக எதை வைத்துச் சொல்கிறீர்கள்” எனக் கேட்டனர். அதற்கு, “ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது, அடிச்சி. அடிச்சி அடிச்சி சொல்றேன். ஆனந்தவிகடன் குழுமம், தி ஹிந்து அதுக்கு உதாரணங்கள்” என்றார். அதற்கு … Continue reading “ஜனநாயகத்தின் நான்காவது தூண் விலை போகுது; ஆனந்த விகடனும் தி இந்துவும்தான் உதாரணங்கள்” ராமதாஸ் கடும் தாக்கு

போராட்டங்களை கொச்சைப்படுத்துகிறதா நியூஸ் 7 தமிழ்?

போராட்டம் என்பது மக்கள் குறைகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் ஒரு வடிவம். அரசின் எல்லா அதிகாரக் கதவுகளையும் தட்டிவிட்டுத்தான் இறுதியாகப் போராட்டத்தை மக்கள் கையில் எடுக்கிறார்கள். இவ்வகையில் ஊடகங்கள் போராட்டங்களை இன்னும் விரிவாக அனைத்து தரப்பினரை(அரசு தரப்பு உள்பட)யும் சேரும் பணிகளைச் செய்பவை. செய்ய வேண்டும். அதுதான் ஜனநாயக அமைப்பை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறையாக இருக்கும். அதைவிடுத்து “தினந்தோறும் 20 போராட்டங்கள்: நிம்மதி இழந்து தவிக்கும் போலீசார்” என்று தலைப்பிட்டு செய்தி எழுதுவது போராட்டங்களை மழுங்கடித்து, போராட்டங்களை … Continue reading போராட்டங்களை கொச்சைப்படுத்துகிறதா நியூஸ் 7 தமிழ்?