கோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது!

காந்தி படுகொலை வழக்கு விசாரணையின்போது, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே கொடுத்த வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது இந்து மகா சபை.

நாதுராம் கோட்சே-வின் மரண நாளை வலதுசாரி அமைப்பான இந்து மகா சபை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடியது. காந்தி படுகொலை குற்றவாளியான கோட்சே, அம்பாலா சிறையில் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார்.

இந்து மகா சபையை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கோட்சே மற்றும் காந்தி படுகொலையில் மற்றொரு குற்றவாளியான நாராயண் ஆப்தே ஆகியோரின் படங்களுக்கு ஆரத்தி எடுத்து வணங்கினர்.

இந்து மகாசபையின் தேசிய துணை தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சொல்வதுபோல, ‘இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்ட இவர்களின் பங்களிப்பு மறக்கடிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

“நாங்கள் ஒரு கோரிக்கை மனுவை மத்திய பிரதேச முதலமைச்சர், மாவட்ட நிர்வாகத்துக்கு அளித்திருக்கிறோம். கோட்சே-வின் வாக்குமூலத்தை பள்ளிப்பாடத்தில் சேர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை” என்றார் பரத்வாஜ்.

காந்தி படுகொலையில் தொடர்புடையோர் நீதிமன்ற கூண்டிலில்

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் கோட்சேவின் வாக்குமூலத்தை வெளியிடவில்லை எனவும் குறைபட்டுக்கொண்டார் அவர்.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்த, 2017 நவம்பர் 15ல் கோட்சேவின் கழுத்தளவு சிலையை தனது அலுவலகத்தில் நிருவியது இந்து மகாசபை. நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்தநிலையில், மாவட்ட நிர்வாகம் அதை நீக்கியது.

“மாவட்ட நிர்வாகம் எடுத்துச் சென்ற கழுத்தளவு சிலையை திரும்பத் தர ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என்கிறார் பரத்வாஜ்.

வெள்ளிக்கிழமை நடந்த இந்தக் கொண்டாட்டங்களுக்கு ம.பி. காங்கிரஸ் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

“இந்த நிகழ்ச்சி வன்முறையைக் கொண்டாடியுள்ளது. இது கண்டனத்துக்குரியது. இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே” என காங்கிரஸ் ஊடக பிரிவைச் சேர்ந்த பூபேந்திர குப்தா கண்டித்துள்ளார்.

நன்றி: அவுட்லுக் இந்தியா.

காந்தி ஜெயந்தி நாளில் நாதுராம் கோட்சே சிலை திறந்த இந்து மகா சபை

இந்தியா முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடிக்கொண்டிருக்க, அகில பாரத இந்துமகா சபை, காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

காந்தி ஜெயந்தியை, எதிர்ப்பு தினமாக அனுசரித்தது இந்து மகா சபை.  மேலும் இந்த தினத்தில் நாதுராம் கோட்சேயின் சிலையை தனது அலுவலகத்தில் திறந்து வைத்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கோட்சேயின் சிலை வைக்க முயற்சியெடுத்து, எதிர்ப்பின் காரணமாக கைவிட்டது இந்து மகா சபை.

“கோட்சே சிலையைத் திறக்க முயற்சித்தபோது அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று தடைபட்டது. இந்த முறை எதிர்ப்புகளை மீறி நாங்கள் சிலையை திறந்துவிட்டோம். இந்த நாளைவிட கோட்சே சிலை திறக்க சிறப்பான நாள் கிடைக்காது. எங்களைப் பின்பற்றி இந்தியர்கள் காந்தியை பின்பற்றுவதை விடுத்து கோட்சேவை துதிக்கத் தொடங்க வேண்டும்” என்கிறார் இந்து மகா சபையின் தேசிய துணை தலைவர் பண்டிட் அசோக் சர்மா.

மேலும் அவர், “காந்தி வழியை இந்த நாட்களில் பின்பற்ற முடியுமா? இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருக்கிறதே அதுதான் இதற்கான பதிலாக இருக்கும். நாம் எல்லோரும் கோட்சேயின் கோட்பாடுகளைப் பின்பற்றி, காந்தியைத் துதிக்கிறோம். காந்தியை பின்பற்றியிருந்தால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தேவைப்பட்டிருக்காது” என்கிறார்.

பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிதிஷ்குமாருக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து

 பீகாரின் முதலமைச்சராக பதவி ஏற்ற நிதிஷ்குமார் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  எம். எச். ஜவாஹிருல்லா  வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில்,
“பீகாரில் மதவெறியைத் தூண்டி சமூக நீதியை அழிக்க முயன்றவர்களுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைத்து வெற்றிப்பெற்று வெள்ளிக்கிழமை மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் உங்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் தலைமையிலான மாபெரும் கூட்டணி பெற்ற வெற்றி இந்தியாவின் சகிப்புத்தன்மையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தியாவின் பன்முகத்தன்மை என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று இந்த வெற்றி உணர்த்துகின்றது. இந்தியாவின் மதசார்பின்மைக்கு கிடைத்த வெற்றியின் காரணமாக பிளவு சக்திகள் துவண்டு போயுள்ளனர். காந்தி, நேரு, அபுல்கலாம் ஆசாத், ராம்மனோகர் லோகியா மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணன் போன்றவர்களின் லட்சியமே இந்தியாவை வழிநடத்தும்.
ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா
ஷியாமா பிரசாத் முகர்ஜி, கோல்வால்கர், சவார்க்கர்,  நாதுராம் கோட்சே போன்றவர்கள் இந்தியாவின் வழிகாட்டிகளாக என்றைக்கும் அங்கீகரிக்கப் படமாட்டார்கள் என்பதையும் இந்த வெற்றி உணர்த்துகின்றது. இந்தியாவின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பை கிண்டல் செய்தவர்கள் இப்போது நேருவின் செல்வாக்கை உணர்ந்து இருப்பார்கள். வளர்ச்சி என்கின்ற பெயரில் வன்மத்தை கட்டவிழ்த்து விட்ட கூட்டத்தின் கூடாரத்தை இந்த வெற்றி காலி செய்துவிட்டது. இந்தியர்களின் தனி மனித உரிமையை இந்த வெற்றி உறுதிப் படுத்தியுள்ளது. இந்தியர்களின் உணவு உரிமை, பேச்சுரிமை  மற்றும் கருத்து உரிமை உங்கள் கூட்டணி பெற்ற வெற்றி மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது.
வரலாறு போற்றும் இந்த வெற்றியை சாத்தியமாக்கி இன்று மீண்டும் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்கும் உங்களை மீண்டும் மனமார வாழ்த்துகிறேன். உங்கள் ஆட்சியின் கீழ் தொடர்ந்து பீகாரில் சமூக நல்லிணக்கமும், சமூக நீதியும் தழைத்தோங்கவும் வளர்ச்சியின் பாதையில் தொடர்ந்து பீகார் முன்னேறவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.