“இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்!”: யெச்சூரி

ஏழை மக்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகள் இல்லாவிட்டால் என்ன; கேக் சாப்பிடுங்களேன் என்று பிரெஞ்சு புரட்சி காலகட்டத்தில் அந்நாட்டின் மகாராணி கூறியதை போல, இப்போது கையில் ரூபாய் நோட்டு இல்லாவிட்டால் என்ன, பிளாஸ்டிக் ரூபாய் வரப் போகிறது, அதைப் பயன்படுத்துங்கள் என்று இந்திய ஏழைகளை ஏளனம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என நாடாளுமன்றத்தில் கடுமையாக சாடினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் … Continue reading “இவர்கள் சொல்வது ஜெய்ஹிந்த் அல்ல; ஜியோஹிந்த்!”: யெச்சூரி

“ஒரு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரை அறையமுடியுமா?”: ஜெ. மீது சசிகலா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

“ஒரு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரை அறையமுடியுமா?” என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடாமல், அதிமுக எம்பி சசிகலா புஷ்பா நா தழுதழுக்க குற்றம்சாட்டினார். சனிக்கிழமையன்று டெல்லி விமானநிலையத்தில் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கு திமுக எம்பி திருச்சி சிவாவுக்கு கைகலப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு குறித்து விமர்சனம் செய்ததால் திருச்சி சிவாவை கன்னத்தில் நான்கு அறைவிட்டதாக சசிகலா ஊடகங்களில் தெரிவித்தார். நான்கு அறையல்ல, ஒரு அறைதான் விட்டார் என திருச்சி சிவா … Continue reading “ஒரு கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினரை அறையமுடியுமா?”: ஜெ. மீது சசிகலா நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு

பார்லிமென்ட்க்கு ஹார்லி டேவிட்சன் பைக் ; மகளிர் தினத்தில் அதிரடித்த பெண் எம்.பி !!!

பீகார் மாநிலம் சுபால் மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஞ்ஜீத் ராஜன் . 42 வயதான ரஞ்சித் 'ஹார்லி-டேவிட்சன்' நிறுவனத்தின் பைக்கில் பாராளுமன்றம் வந்து இறங்கி, அனைவரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கினார். https://www.youtube.com/watch?v=FOBESM5gk6w பொதுவாக மக்களவைக்கு காரில் வரும் எம்.பிக்கள் தங்களது வாகனத்தைக்கூட பார்க்கிங்கில் நிறுத்த மாட்டார்கள்.அப்படியிருக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரஞ்ஜீத் ரஞ்சன் இன்று தனது ஹார்லி டேவிட்சன் பைக்கை அவராகவே ஓட்டி வந்து பார்க்கிங் செய்து அனைவரையும் அதிர வைத்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் … Continue reading பார்லிமென்ட்க்கு ஹார்லி டேவிட்சன் பைக் ; மகளிர் தினத்தில் அதிரடித்த பெண் எம்.பி !!!

“இயற்கை உபாதை” என்று கூறுவது தவறா?: ஆபாச தாக்குதல் புகாரை கையிலெடுத்த ஸ்மிருதி இரானி !!!

ஜே.என்.யூ விவகாரம் குறித்து லோக்சபாவில்   ஆவேசமாக பேசி, பத்திரிக்கைகளில், இணையங்களில் பாராட்டு பெற்ற ஸ்மிருதி இரானி, ராஜ்யசபாவில்  அந்தளவு ஆவேசத்தை காண்பிக்க முடியாமல் நேற்று (25.02.16)அவஸ்தைக்கு ஆளாகினர். இரானியின் குற்றச்சாட்டுக்களுக்கு, உடனுக்குடன் கம்யூனிஸ்ட்,  காங்கிரஸ்  உறுப்பினர்கள்  பதில் அளித்ததால், அமைச்சர் தடுமாறினார். அத்துடன் மட்டுமல்லாமல், அவையில் நாகரீகங்கள் தெரியாமல், அநாகரீகமாக இரானி நடந்துகொல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில், "மகிசாசுரனை ஆதரித்து" ஜேஎன்யூ மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து லோக்சபாவில்  கூறிய அதே புகார்களை ராஜ்யசபாவில் முன் வைக்க  … Continue reading “இயற்கை உபாதை” என்று கூறுவது தவறா?: ஆபாச தாக்குதல் புகாரை கையிலெடுத்த ஸ்மிருதி இரானி !!!

நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

ஜே.என்.யூ மாணவர்கள் தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய, ஹார்வார்டில் பாடங்கள் எடுத்தவரும், முப்பது வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்தவருமான , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சுகதோ போசின் உரை, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. டிவிட்டரில் #praisesugato என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்துள்ளது.  அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் கீழே. *30 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவன் என்கிற முறையில்,  மாண்புமிகு சக உறுப்பினர்கள், என்னுடைய உரையை … Continue reading நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!

“ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி வருகிறது. புதன்கிழமை ரோஹித் வெமுலாவின் தற்கொலையை ஒட்டி நாடாளுமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கும் கடுமையான வாக்குவாதம் எழுந்தது. மாயாவதி பேசும்போது, “தலித் மாணவர் ஒருவர் பல்கலை தற்கொலை செய்து கொள்வது இது முதல்முறை அல்ல; குறிப்பாக அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுக்கும் ரோஹித் வெமூலா போன்ற மாணவர்களை ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள் விரும்புவதில்லை. அவர்களை அழிக்க நினைக்கின்றன. தலித் மாணவர்கள் தொடர்ந்து … Continue reading “ஆண்டி நேஷனல்”: ஸ்மிருதி இரானியின் நாடாளுமன்ற பேச்சை பகடி செய்யும் தி டெலிகிராப்!