“ரெண்டு நாள்தானே.. அவர்கள் பட்டினி கிடந்து விட்டுப் போகட்டுமே.. !”

நந்தன் ஸ்ரீதரன் நிறைய நண்பர்கள் மோடியின் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். மத்திய கிழக்கிலிருந்து போன் செய்த நெருங்கிய நண்பன் ஒருவன் கூட இதை வரவேற்பதாக போனில் சொன்னான். நல்ல வேளை போன் லைன் கட்டாகிவிட்டது.. மோடியின் இந்த முடிவின் மூலம் கறுப்புப் பணம் எல்லாம் வெளிவந்து விடும் என்று நம்பும் அப்பாவி நண்பர்களை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படியாக நம்பும் நண்பர்களில் மெத்தப் படித்த அறிவுஜீவி நண்பர்களும் இருப்பது மிக மிக ஆச்சரியமாக இருக்கிறது.. வரி … Continue reading “ரெண்டு நாள்தானே.. அவர்கள் பட்டினி கிடந்து விட்டுப் போகட்டுமே.. !”

நல்லெண்ணையில் மரபு பணு மாற்று பருத்திக் கொட்டை எண்ணைய் கலப்பு: பிரபல கம்பெனிகளின் ஏமாற்று!

நந்தன் ஸ்ரீதரன் உண்மையில் இதைப் பற்றி களத்தில் இறங்கிப் போராடும் நண்பர்கள் விரிவாக எழுதினால்தான் சரியாக இருக்கும். ஆனாலும் நான் புரிந்து கொண்டதன்படி என்னால் இயன்றதை எழுதுகிறேன்.. இதயம் உட்பட பல நல்லெண்ணை கம்பெனிகள் தங்களது நல்லெண்ணை அற்புதமான இயற்கையான நல்லெண்ணை என்று விளம்பரப்படுத்தி வருகின்றன. நானே கூட ரிஃபைன்டு ஆயில்களின் பிடியிலிருந்து வெளி வருவதற்காக எங்க வீட்டில் ஒரு வருடம் வெறும் இதயம் நல்லெண்ணையிலேயே சமைக்கச் சொல்லி இருந்தேன்.. பின்னர் இயற்கை வேளாண்மைப் பொருட்களின் பக்கம் … Continue reading நல்லெண்ணையில் மரபு பணு மாற்று பருத்திக் கொட்டை எண்ணைய் கலப்பு: பிரபல கம்பெனிகளின் ஏமாற்று!

புத்தகங்கள் என்ன செய்யும்?: எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன்

நந்தன் ஸ்ரீதரன் ஒரு மனிதனுக்கு இந்த புத்தகங்கள் என்ன செய்யும்.. ஆஃப்டர் ஆல் வெறும் காகிதங்களால் ஆன பக்கங்களில் காரீய எழுத்துகள் என்னதான் செய்து விட முடியும் என்பது நிறைய பேர் மனதில் உள்ள கேள்வி.. புத்தகங்கள் என் வாழ்வின் ஒரு பகுதியை ஆற்றுப் படுத்தியுள்ளன. புத்தகங்கள் எனக்கு எப்போதோ ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளன.. ரொம்ப தனியான பையனாக வளர்ந்தேன். மனதில் நினைப்பதை வெளியில் சொன்னால் எப்போது அடி விழும் என்று தெரியாது. அதனாலேயே நினைப்பவற்றை மூடி … Continue reading புத்தகங்கள் என்ன செய்யும்?: எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன்

வால்மீகி ராமாயண கதை தெரியும்; கம்பராமாயண கதை தெரியும்; இது விஜய்டிவியின் சீதையின் ராமாயணம் ’கதை’!

நந்தன் ஸ்ரீதரன் இந்துத்துவவாதிகளின் ஊதுகுழலாக சேனல்கள் செயல்படுவது ஒன்றும் புதிதல்ல.. அதற்காக இப்படியா பொய்யையும் புரட்டையும் அள்ளி விடுவார்கள்..? மற்ற சேனல்களில் வரும் மகாபாரதத்தைவிட விஜய் டிவியின் மகாபாரதம்தான் பெரிய கவனத்தைப் பெற்றது. அதே போல இப்போது சீதையின் ராமன் என்று ஒரு புராண புருடாவை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. அதனால் நமக்கென்ன..? இருக்கிறது.. இதில் ஒரு காட்சியில் அஸ்வமேதயாகத்தின் முடிவு வருகிறது. யாகத்தின் முடிவில் அந்த குதிரையை பலியிட்டு வேள்வித் தீயில் இடுவது என்பது பலப்பல நூற்றாண்டுகளாக … Continue reading வால்மீகி ராமாயண கதை தெரியும்; கம்பராமாயண கதை தெரியும்; இது விஜய்டிவியின் சீதையின் ராமாயணம் ’கதை’!

#காதல்மாதம்: எங்கே போனது காதல்?

நந்தன் ஸ்ரீதரன் இது ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது.. அப்போது நடிகர் விஜய் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் பாஸ்கர் காலனியில் அந்த குளம் உள்ள பார்க் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.. ஆனால் அந்த ஏரியாவே தண்மையாக இருக்கும்.. தூங்கு மூஞ்சி மரங்களின் நிழலும், டிராபிக் குறைவான சாலைகளுமாக அந்த ஏரியா ஏகாந்தத்துக்குப் பக்கத்தில் இருக்கும் - சென்னையின் நொடிக்கு நான்கைந்து வாகனங்கள் கடக்கும் தெருக்களின் இடையில் நிமிடத்துக்கு பத்து அல்லது பதினைந்து வாகனங்கள் போகும் தெருக்கள் எல்லாம் ஏகாந்தத்தின் அருகில் … Continue reading #காதல்மாதம்: எங்கே போனது காதல்?

’குடி கல்வி’ ஏன் தேவை?: அனுபவத்தினூடாக நந்தன் ஸ்ரீதரன் எழுதுகிறார்!

நந்தன் ஸ்ரீதரன்  சின்ன வயதில் குடி மற்றும் குடிப்பவர்கள் மீது பெரும் ஆசூயை இருந்தது. சமூகம் ஏற்படுத்தி வைத்திருந்த உணர்வு அது.. நாங்கள் பார்த்த படங்களில் கூட ஒரு நாளும் எம்ஜியார் குடிக்க மாட்டார். சாராயத்தை பூஜாடியில் ஊற்றி விட்டு குடித்த மாதிரி நடிப்பார்.. ஆனால் நம்பியார் குடிப்பார். குடித்துவிட்டு பல பெண்களை கெடுப்பார். வாசிப்பு முழுமை பெற்ற பின்னாட்களில்தான் எனது மயக்கங்கள் தீர்ந்தன.. வாசிப்பிலும் அவ்வையும் அதியனும் கள் உண்டுவிட்டு நிகழ்த்திய டிஸ்கஷன்களை வாசிக்கிறபோது அட … Continue reading ’குடி கல்வி’ ஏன் தேவை?: அனுபவத்தினூடாக நந்தன் ஸ்ரீதரன் எழுதுகிறார்!