கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் நடந்துமுடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக மாநில அமைப்பு செயலாளர் பதவியும், செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை வருமானவரித்துறை சோதனை நடந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பிலும், செய்தி தொடர்பு குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருக்கும் நத்தம் விஸ்வநாதன் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார். … Continue reading வருமான வரி சோதனை எதிரொலி; நத்தம் விஸ்வநாதன் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம்
குறிச்சொல்: நத்தம் விஸ்வநாதன்
அதிமுக வெற்றி; அமைச்சர்கள் தோல்வி!
அதிமுக அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா அகியோர் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி, திமுக வேட்பாளர் செலவத்திடம் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா, திமுக வேட்பாளர் எம்.கே. மோகனிடம் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இதேபோல அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் தோல்வியுற்றனர்.
குழந்தையைக் குளிப்பாட்டி,தண்ணீர் அடித்துக்கொடுத்து பிரசாரம்: வெள்ளத்தின்போது துரத்தி அடித்த மக்களிடம் பாசத்தை பொழியும் பா.வளர்மதி…!!!
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக பா. வளர்மதி களமிறக்கப்பட்டுள்ளார். அந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வும் வளர்மதி என்பதால், வெற்றி பெறக் கடும் பிரயத்தனப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் கு.க.செல்வமும், மக்கள் நலக்கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் ரெட்சன் அம்பிகாபதியும் களமிறங்கியுள்ளனர். தொகுதியின் மொத்தமுள்ள 12 வட்டங்களில், 107, 108, 109, 110,112 மற்றும் 113 ஆகிய வட்டங்களில் சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு பா.வளர்மதிக்கு அதிகமாக இருப்பதாக உளவுத்துறை … Continue reading குழந்தையைக் குளிப்பாட்டி,தண்ணீர் அடித்துக்கொடுத்து பிரசாரம்: வெள்ளத்தின்போது துரத்தி அடித்த மக்களிடம் பாசத்தை பொழியும் பா.வளர்மதி…!!!
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்ட கூட்டத்தில் பணப்பட்டுவாடா; கையும் களவுமாக காட்சிகள் பதிவு
பழனி தொகுதிக்கு குமாரசாமி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் , திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தவுடன் சட்டமன்றத் தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன் உள்ளிட்ட சிலர் பணப்பட்டுவாடா செய்தனர். கூட்டம் முடிந்து வெளிவரும் தொண்டர்களுக்கு பணம் தருவதையும் அதை அவர்கள் வாங்கிக் கொள்வதையும் சில ஊடகங்கள் பதிவு செய்துள்ளன. பணம் வழங்கப்படும் … Continue reading அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்ட கூட்டத்தில் பணப்பட்டுவாடா; கையும் களவுமாக காட்சிகள் பதிவு
#வீடியோ: “அம்மா முன்னாடி சோ. ராமாசாமி வாய் பொத்தி நிப்பாரா? தினமணி வைத்தியநாதன் கால்ல விழுவாரா?”: பழ. கருப்பையா
சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழ. கருப்பையா, அதிமுகவில் நிலவி வரும் ‘வழிபாட்டு’ சூழல் பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பெரியார் திடலில் பேசிய பழ. கருப்பையா, “அம்மா முன்னாடி சோ. ராமாசாமி வாய் பொத்தி நிப்பாரா? தினமணி வைத்தியநாதன் கால்ல விழுவாரா? ஆனா சூத்திரன் தான் இது எல்லாத்தையும் செய்றோம்” என்று பேசியிருக்கிறார். வீடியோவில் பாருங்கள் http://www.youtube.com/watch?v=cyt7zBcYdPg
ஊழல் மின்சாரம் ஆவணப்படம் ரத்து: விகடன்.காம் கட்டுரை காரணமா?
தமிழ் நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பு ‘ஊழல் மின்சாரம்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்து, அதை சனிக்கிழமை வெளியிடுவதாக இருந்தது. இதுகுறித்து அதிரப்போகும் ரூ.60 ஆயிரம் கோடி ஊழல்- அம்பலப்படுத்தும் ஆவணப்படம் என்ற தலைப்பில் விகடன் டாட் காமில் இதுகுறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி தன்னுடைய முகநூலில் கீழ்கண்ட கருத்தை எழுதியிருந்தார்... ‘விகடனுக்கு ஒரு வேண்டுகோள். ’ஊழல் மின்சாரம்’ எனும் ஆவணப்படத்தினைப் பற்றிய செய்தியை விகடன் வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணப்படம் அதிமுகவிற்கு மட்டும் … Continue reading ஊழல் மின்சாரம் ஆவணப்படம் ரத்து: விகடன்.காம் கட்டுரை காரணமா?