#Biggboss: அண்ணாத்த பயங்கரமா ஆடுறார்… ஒத்துக்கோ ஒத்துக்கோ !!

ஒருபக்கம் கோடிக்கணக்கான மக்களோட உரையாடக்கூடிய இந்த ஷோ, இன்னொரு பக்கம் அரசியல்வாதிகளுடனான உரசல், அதபத்தி அப்பப்ப இங்க ஒன்னு ரெண்டு வார்த்தைனு ஒரு சூப்பரான பேக்கேஜ் இது.

ரியாலிட்டி ஷோவில் கமல் ஏன் ‘நடிக்கிறார்’?: கருந்தேள் ராஜேஷ்

கமல் இயல்பில் எப்படி இருப்பார்? அவரது பெர்சனாலிடி தமிழ் மக்களுக்குத் தெரியுமா? இதுவரை தெரியாது. காரணம் அவர் தன்னைக் கச்சிதமாகத் தயார் செய்துகொண்டே வெளியுலகில் எதுவாக இருந்தாலும் செய்கிறார்.

குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!

கே. ஏ. பத்மஜா குட்டிப் பிள்ளைகள் டாம் அண்ட் ஜெர்ரி, டோரா, சோட்டா பீம் என 24 மணி நேரமும் கார்ட்டூன் சேனல்கள் முன்பு தவம் இருக்கும் கொடுமை ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தமிழ் காமெடி சேனல், காமெடி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சி என மறுபுறம் புகழ் போதையில் பெற்றோரே வலுக்கட்டாயமாக பிள்ளைகளை பாடுபடுத்துகின்றனர். காமெடி சேனல் என்பது இன்று பல குடும்பங்களில் சர்வ சாதாரணமாய் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இந்த காமெடி சேனலை … Continue reading குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!

‘வெளிச்சம்’ தொலைக்காட்சி அவசியம், ஏன்?

குட்டி ரேவதி பெரும்பான்மையான ஊடகங்களின் கருத்துகளை, விவாதங்களை, நிலைப்பாடுகளைக் கவனித்தோமானால் அவை ஆதிக்கசாதிச் சிந்தனையின் பக்கம் சாய்ந்ததாகவே இருக்கும். போலீஸ் ஸ்டேஷனின் சாயலில். அழகு, கோலம், சமையல், புடவை, பெண்ணுரிமைச் சிந்தனைகள் எல்லாமே இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நிலைபெற்ற பார்ப்பனீய அடையாளங்களை இன்றும் பின்தொடர்வதே தவிர கறுப்பு, கல்வி, உழைப்பு, கூட்டுப்பொருளாதாரம், உடலரசியல், பொதுசமூகப் பணி ஆகியவற்றை அங்கீகரித்த சிந்தனை இல்லை. இந்நிலையில், தொடரும் சாதிய வன்முறைகளை ஆவணப்படுத்தவும், ஒடுக்கப்பட்டோரின் கருத்தியல் நிலைப்பாடுகளை முன்வைத்து சமூகநீதி பேசவும், … Continue reading ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி அவசியம், ஏன்?

வால்மீகி ராமாயண கதை தெரியும்; கம்பராமாயண கதை தெரியும்; இது விஜய்டிவியின் சீதையின் ராமாயணம் ’கதை’!

நந்தன் ஸ்ரீதரன் இந்துத்துவவாதிகளின் ஊதுகுழலாக சேனல்கள் செயல்படுவது ஒன்றும் புதிதல்ல.. அதற்காக இப்படியா பொய்யையும் புரட்டையும் அள்ளி விடுவார்கள்..? மற்ற சேனல்களில் வரும் மகாபாரதத்தைவிட விஜய் டிவியின் மகாபாரதம்தான் பெரிய கவனத்தைப் பெற்றது. அதே போல இப்போது சீதையின் ராமன் என்று ஒரு புராண புருடாவை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.. அதனால் நமக்கென்ன..? இருக்கிறது.. இதில் ஒரு காட்சியில் அஸ்வமேதயாகத்தின் முடிவு வருகிறது. யாகத்தின் முடிவில் அந்த குதிரையை பலியிட்டு வேள்வித் தீயில் இடுவது என்பது பலப்பல நூற்றாண்டுகளாக … Continue reading வால்மீகி ராமாயண கதை தெரியும்; கம்பராமாயண கதை தெரியும்; இது விஜய்டிவியின் சீதையின் ராமாயணம் ’கதை’!