தேர்தலை ஏன் ரத்துசெய்ய வேண்டும்: பா.ம.க.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், திமுகவும் வாக்காளர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு பணம் வழங்கியிருப்பதால் அந்த தொகுதிகளுக்கு நாளை நடைபெறவிருக்கும் தேர்தலை ரத்துசெய்யவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம்ஜைதியிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் நேரில் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை 10.40 மணிக்கு தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல்ஆணைய அலுவலகத்தில் நஜீம்ஜைதியை அன்புமணி சந்தித்துப் பேசினார். அப்போது கோரிக்கை மனுவை வழங்கினார். அன்புமணி அளித்த மனுவின் நகலை சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைத் … Continue reading தேர்தலை ஏன் ரத்துசெய்ய வேண்டும்: பா.ம.க.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஆணையம் எப்படி நியாயமாக நடத்தும்?

“தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல்களும், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலும் அடுத்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தேர்தலை நடத்தி  அரசியலமைப்பு சட்டக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆணையத்தின் நோக்கம் சரியானது தான் என்ற போதிலும், இம்முறையாவது தேர்தல் நியாயமாக நடக்குமா? ” என்று வினா எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த மே மாதம் … Continue reading தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஆணையம் எப்படி நியாயமாக நடத்தும்?

“தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி

பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதாக ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாஜக, பாமக தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது திமுகவுக்கு எதிரான சதி என்றும் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் தானே போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்தார். முன்னதாக தேர்தல் முடிவுகள் குறித்து … Continue reading “தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி

“தர்ம யுத்தம் தொடரும்”!

"தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் எது நடக்கக் கூடாது என நல்லவர்கள் நினைத்தார்களோ, துரதிருஷ்டவசமாக அது தான் நடந்திருக்கிறது. தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான பாமகவின் தர்ம யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்த தேர்தலில் பா.ம.கவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள … Continue reading “தர்ம யுத்தம் தொடரும்”!

தேர்தல் ஆணையம் நேர்மையின் சின்னம்

கதிர்வேல் ராஜேஷ் லக்கானி செயல்பாட்டை விமர்சனம் செய்பவர்களை பார்த்தால் அனுதாபம் உண்டாகிறது. முதலமைச்சரை கலந்து ஆலோசித்துதான் தேர்தல் ஆணையம் லக்கானியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமித்தது. அதனால் மட்டும் அவர் நல்லவரல்ல என்று ஆகிவிடாது. முந்தைய தலைமை தேர்தல் அதிகாரியும் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர்தான். சந்தீப் சக்சேனா. அவர்தான் ஸ்ரீரங்கம் இடை தேர்தலையும் ஆர். கே. நகர் இடை தேர்தலையும் நடத்தினார். அதற்கு ஜெயலலிதா பரிசளிக்க விரும்பினார். பிரதமர் மோடியும் ஏற்றுக் கொண்டார் என்றெல்லாம் … Continue reading தேர்தல் ஆணையம் நேர்மையின் சின்னம்

யார் இந்த ‘ஆம்புலன்ஸ்’ அன்புநாதன்!

தேர்தலில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, கரூர் பைனான்சியர் வீட்டில் பதுக்கிய, 250 கோடி ரூபாய் பணத்தை, தேர்தல் கமிஷன் புகாரில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தேர்தல் கமிஷன் உத்தரவில், சனிக்கிழமை ஒரே நாளில், 45 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. கரூரில், அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன் என்பவர் வீட்டில், நேற்று முன்தினம், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.'இந்தச் சோதனையில், 10.30 லட்சம் ரூபாய் ரொக்கம்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்; … Continue reading யார் இந்த ‘ஆம்புலன்ஸ்’ அன்புநாதன்!

ஆரத்தி தட்டில் பணம் வைத்த முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் மீது வழக்கு!

பழைய வண்ணாரபேட்டை, கஞ்சிராயன் தெருவில், கடந்த 9ஆம் தேதி வாக்குசேகரித்த சென்னை ராயபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், ஆரத்தி எடுத்த பெண்களின் தட்டில் பணம் வைத்தார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஹரிநாத் என்பவர் அளித்த புகாரின் பேரில், தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார், ஜெயக்குமார் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயக்குமார் சபாநாயகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தேர்தல் ஆணைய வாட்ஸ்அப் குரூப்பில் சாதி

ஸ்ரீதர் கண்ணன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் ஆணையத்தால் ஒரு வாட்ஸப் குழுமம் செயல்படுகிறது. அதில் திரு. கார்த்திமோகன் என்ற கிராம நிர்வாக அலுவலர் சமூக அமைதியைக் குலைத்து சாதீய பகைமையைத் தூண்டும் வண்ணமும் செயல்படுகிறார். அவர் தனது அலுவல்ரீதியான WhatsApp குழுக்களின் மூலம் 9677455954 என்ற எண்ணின் மூலம் சாதீய அடிப்படைவாதக் கருத்துக்களை பரப்பி வருகிறார். தேர்தல் ஆணையம் மூலம் செயல்படும் இக்குழுவில் இது போன்ற கருத்துக்களை எப்படி அக்குழுமம் அனுமதிக்கிறது. இப்படி … Continue reading தேர்தல் ஆணைய வாட்ஸ்அப் குரூப்பில் சாதி

ஊழல் மின்சாரம் ஆவணப்படம் ரத்து: விகடன்.காம் கட்டுரை காரணமா?

தமிழ் நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பு ‘ஊழல் மின்சாரம்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்து, அதை சனிக்கிழமை வெளியிடுவதாக இருந்தது. இதுகுறித்து அதிரப்போகும் ரூ.60 ஆயிரம் கோடி ஊழல்- அம்பலப்படுத்தும் ஆவணப்படம் என்ற தலைப்பில் விகடன் டாட் காமில் இதுகுறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.  மே 17 இயக்கத்தைச் சேர்ந்த  திருமுருகன் காந்தி தன்னுடைய  முகநூலில் கீழ்கண்ட கருத்தை எழுதியிருந்தார்... ‘விகடனுக்கு ஒரு வேண்டுகோள். ’ஊழல் மின்சாரம்’ எனும் ஆவணப்படத்தினைப் பற்றிய செய்தியை விகடன் வெளியிட்டிருக்கிறது. இந்த ஆவணப்படம் அதிமுகவிற்கு மட்டும் … Continue reading ஊழல் மின்சாரம் ஆவணப்படம் ரத்து: விகடன்.காம் கட்டுரை காரணமா?

மே 16ஆம் தேதி தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன!

தமிழகம், கேரளா, கர்நாடகா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில அரசுகளின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த 5  மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை வெள்ளிக்கிழமை பிற்பகல் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் சைதி டெல்லியில் அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இந்த நிமிடத்திலிருந்து , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன என்பதை குறிப்பிட்டு சொன்னார் நஜீம் சைதி. அசாம்: 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும். ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல்; … Continue reading மே 16ஆம் தேதி தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன!

வாக்குச் சாவடியில் எத்தனை பேர் க்யூவில் இருக்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்!

வாக்காளர்கள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடியில் கூட்டம் எவ்வளவு உள்ளது? வரிசையில் எத்தனை பேர் உள்ளனர்? என்பதை தெரிந்து கொள்வதற்காக, வாக்காளர்கள் தங்கள் செல்போனில் ‘கியூ’ என்று டைப் செய்து, சற்று இடைவெளி விட்டு தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, ‘1950’ என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், தங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் எத்தனை பேர் இருக்கிறார்கள், எப்போது வந்தால் சீக்கிரமாக வாக்களித்துவிட்டு செல்ல முடியும் என்ற தகவலை பெற … Continue reading வாக்குச் சாவடியில் எத்தனை பேர் க்யூவில் இருக்கிறார்கள் என்பதை வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்!