தேமுதிக கூட்டணியில் இணையுமா? திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை சொல்லும் செய்தி!

தேமுதிகவின் திருப்புமுனை மாநாடு சனிக்கிழமை நடக்க இருக்கிறது. தேமுதிகவை திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி என பல முனைகளில் கூட்டணிக்கு அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். தேமுதிகவின் கூட்டணி யாருடன் அமையப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் திமுக வேட்பாளர் நேர்காணல் குறித்த அந்த அறிக்கையில் கூட்டணி பற்றியும் பேசுகிறார்... “நமது கழகத்தோடு எந்தக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து விடக் கூடாது; ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிராகச் சுனாமியை … Continue reading தேமுதிக கூட்டணியில் இணையுமா? திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை சொல்லும் செய்தி!

’சுப்ரமணியம் சுவாமியின் சக்கர வியூகம்: திமுக வைக் காட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்வதே!’

நரேன் ராஜகோபாலன் மேலாண்மை புத்தகங்களில், கிழக்கில் முக்கியமான ஒரு புத்தகம் சுன் ட்சு(Sun Tsu) எழுதிய Art of War. சுன் ட்சு ஒரு ராணுவ ஸ்ட்ராடஜிஸ்ட், அவர் கிட்டத்திட்ட கி.முவில் எழுதிய புத்தகம் இன்றளவும் மேலாண்மை பைபிள்; குறிப்பாக எதிரிகளை வீழ்த்துகின்ற வியூகங்களையும், யுக்திகளையும் உள்ளடக்கிய மனித குல வரலாற்றின் முக்கியமான புத்தகம். அதன் ஐந்தாவது அத்தியாயம் - சக்தி (Energy). அதில் ஒரு முக்கியமான வாசகம் வரும் “The whole secret lies in … Continue reading ’சுப்ரமணியம் சுவாமியின் சக்கர வியூகம்: திமுக வைக் காட்டி அதிமுகவுடன் கூட்டணி சேர்வதே!’

’இந்துமயமாக்கப்பட்ட திமுக எனக்கு ஓகேதான்’: சுப்ரமணியம் சுவாமி

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விருப்பம் தெரிவித்து ட்விட்டியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், மு.கருணாநிதி முதல்வராவதை தவிர்ப்பார் என்றும், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவார் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், திமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://twitter.com/Swamy39/status/694491246652366850 https://twitter.com/Swamy39/status/694491123302080514 https://twitter.com/Swamy39/status/694477931037372416 இதுகுறித்து கருத்து சமூக வலைத்தளங்களில் … Continue reading ’இந்துமயமாக்கப்பட்ட திமுக எனக்கு ஓகேதான்’: சுப்ரமணியம் சுவாமி

உயிர்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி: தேமுதிக, பாமக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக டைம் ஆஃப் இந்தியா செய்தி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புத்துயிரூட்டப்பட்டிருப்பதாகவும், பா.ம.க.வுக்கு 70 இடங்களையும், தே.மு.தி.க.வுக்கு 113 இடங்களையும் ஒதுக்க பாரதிய ஜனதா முன்வந்திருப்பதாகவும், மீதமுள்ள இடங்களில் அக்கட்சி போட்டியிடவுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.   இந்தச் செய்தி குறித்து மறுப்பு வெளியிட்டுள்ளது பாமக. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதன் மூலம் பா.ம.க மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை குலைக்க முடியாது; பா.ம.க. ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முடியாது; … Continue reading உயிர்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி: தேமுதிக, பாமக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக டைம் ஆஃப் இந்தியா செய்தி!

ஜெயலலிதா போஸ்டர் கிழிப்பு: விஜயகாந்திற்கு எதிராக செருப்புடன் அதிமுகவினர் போராட்டம்

புதுச்சேரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தங்கியுள்ள ஹோட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் திங்கள்கிழமை  விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, அந்த பகுதியில் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேனர்களை  தேமுதிக தொண்டர்கள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவண்ணாமலை, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல இடங்களில் விஜயகாந்த் கொடும்பாவியை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் புதுச்சேரியில் ஹோட்டல் ஒன்றில் விஜயகாந்த் தங்கியிருப்பதை கேள்விபட்ட அதிமுகவினர்,  அங்கு குவிந்து,  … Continue reading ஜெயலலிதா போஸ்டர் கிழிப்பு: விஜயகாந்திற்கு எதிராக செருப்புடன் அதிமுகவினர் போராட்டம்

பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்பேன்: தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆவேசம்

விஜயகாந்த்தை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்பேன் என்று அக்கட்சியின்  விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தேமுதிக கூட்டத்தில் பேசிய பார்த்தசாரதி, "தன்னுடைய தலைவருக்கு  மன உளைச்சல் தரும் பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்பதில் தவறில்லை என்றும் அதற்காக தன்னை சிறையில் அடைத்தாலும் கவலைப்படபோவதில்லை என்றும் தெரிவித்தார்.   ஆட்சிக்கு வரும் போது, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக கூறிவிட்டு, அதை செயல்படுத்தாதது பற்றி ஜெயலலிதாவிடம் எந்த பத்திரிக்கையாளராவது கேள்வி எழுப்பினார்களா … Continue reading பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்பேன்: தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி ஆவேசம்

பத்திரிகைகளுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை!

தேமுதிக ஆதரவு பத்திரிகைகள் என்று எதுவும் இல்லை என்றும், கட்சி பெயரை தவறாக பயன்படுத்தும் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தலைவர் விஜயகாந்த் அவர்களின் அனுமதி பெற்றோ, தலைமை கழகத்தின் அங்கீகாரம் பெற்றோ இதுவரையிலும் எந்தவித பத்திரிக்கையும் அதாவது காலை/மாலை நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் என எதுவும் தேமுதிக சார்பில் நடத்தப்படவில்லை, அதை நடத்துவதற்கு யாருக்கும் … Continue reading பத்திரிகைகளுக்கு விஜயகாந்த் எச்சரிக்கை!

விஜயகாந்த் எங்களொடு வந்தால் மகிழ்ச்சிதான்: இப்போது இளங்கோவனும் அழைக்கிறார்

தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை நெசப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பங்கேற்று மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்த கேள்விகளுக்கு “ஒரு கட்சி, மற்ற கட்சியுடன் கூட்டணியில் இணைவது என்பது தேர்தல் நேரத்தில் நடக்கும் இயல்பான விஷயம் என்று தெரிவித்த இளங்கோவன், தேமுதிக தங்களோடு கூட்டணியில் இணைந்தால் மகிழ்ச்சி தான்” என்று பதிலளித்தார்.