ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!

திலீபன் மகேந்திரன், தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர். தேசியக் கொடியை எரித்ததற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்காத நிலையில் தமிழக காவல்துறையில் திலீபனுக்கு இன்ஸ்டண்ட் தீர்ப்பாக அவருடைய கையை உடைத்தது. மூன்று மாத சிறை வாசத்துக்குப் பின் பிணையில் வெளியே வந்தார் திலீபன். பட்டம் படித்த திலீபன், முழுவேலையாக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளிநாட்டில் தவித்த உதகை பெண் ஒருவரை மீட்டு கொண்டுவருவதற்கு அவருடைய குடும்பத்திற்கு உதவியிருக்கிறார். செல்ஃபியும் ஸ்டேடஸ் போராளியுமாக இல்லாமல் … Continue reading ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!

“லத்தியால அடிச்சி, என் கைய இரும்பு கம்பி கொண்டு உடைச்சி, மூணு விரல முறிச்சி” தேசியக் கொடியை எரித்த திலீபன் தன் அனுபவத்தைச் சொல்கிறார்!

இந்திய தேசியக் கொடியை எரித்து அதை தன்னுடைய முகநூலில் பகிர்ந்த குற்றத்துக்காக திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவரை சிறையில் வைத்து காவலர்கள் கையை உடைத்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில் ஜாமீனில் வெளியான திலீபன் மகேந்திரன் தனது சிறை அனுபவத்தை முகநூலில் பகிர்ந்திருக்கிறார். அது இங்கே... திலீபன் மகேந்திரன் அட எனக்கு எதுவும் ஆகலங்க.. இதுவரைக்கும் நா என் கைய உடைச்சிது பத்தி கவல பட்டது கெடையாது... ஏன்னா? இந்த இந்திய அரசாங்கம்/சட்டம் உழைக்கும் … Continue reading “லத்தியால அடிச்சி, என் கைய இரும்பு கம்பி கொண்டு உடைச்சி, மூணு விரல முறிச்சி” தேசியக் கொடியை எரித்த திலீபன் தன் அனுபவத்தைச் சொல்கிறார்!

சாதி பெருமிதங்களை வளர்க்கும் வெகுஜென அரசியல்!

கார்ல் மார்க்ஸ் கவுண்டர்  சாதிப்பெண் ஒருவரை, அதே சாதியைச் சேர்ந்த சிலர் அலைபேசியில் மிரட்டும் ஒலிப்பதிவைக் கேட்டேன். அந்த உரையாடலில் அவள் தன்னுடன் படிக்கும் ஒருவனைக் காதலிக்கிறார் என்பதும், அவர் சக்கிலிய சாதியைச் சேர்ந்தவர் என்பதும் அந்த செய்தி இவர்களை எட்டியிருக்கிறது என்பதும் புரிகிறது. இதில் அந்தப் பெண்ணின் சாதி என்ன என்பது அந்த உரையாடலில் இருந்து அனுமானித்தது தான். நைச்சியமாகவும், வன்மமாகவும் அந்தப் பெண்ணிடம் இந்தத் தகவல்களை அவர்கள் உறுதிசெய்து கொள்ள முயல்கிறார்கள். அவள் மிகத் … Continue reading சாதி பெருமிதங்களை வளர்க்கும் வெகுஜென அரசியல்!