சோஃபியா எனும் வனயட்சி!

ஒருவன் உன்னை எதிர்த்தால் அவன் மீது தேசத்துரோகி என முத்திரை குத்து, முடித்தால் தீவிரவாதி என நிரூபி, இறுதியில் வாயில் சுடு என்பது தான் ஃபாசிஸம்.

தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு

உயர்நீதிமன்ற உத்தரவை காலில் மிதித்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டப் போலீசு போராட்டக்காரர்களை  சித்திரவதை செய்வதாக மக்கள் அதிகாரம் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்... “கடந்த மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ர வழக்கறிஞருமான தங்கபாண்டியன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார்.சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் … Continue reading தூத்துக்குடியில் தொடரும் போலீசின் சித்திரவதை: மக்கள் அதிகாரம் குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்து மக்கள் அதிகாரம் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை பணி நீக்கம் செய்யப்படட்டு செல்லத்துரை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கிற்காக மக்கள் உரிமை பாதுகாப்பு … Continue reading ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் நள்ளிரவில் கைது

போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

தூத்துக்குடி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என ஒரு பெரிய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு காவல் துறை இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது, கேவலமாக ஏசுவது போன்ற செயல்கள் செய்தும் வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும் ஏற்கனவே கைதானவர்கள் மீது இருபது வழக்குகள்வரை பதிவு செய்யப்பட்டு, கடந்த இருதினங்களில் மேலும் 25 வழக்குகள் அவர்கள் மீதே போடப்பட்டுள்ளன. சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுள்ளதின் நோக்கம் கடுமையான அச்சத்தை போராடுபவர்கள் … Continue reading போராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!

தூத்துக்குடியில் ஸ்டெட்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனது ஊர் ஆரியப்பட்டி. இந்த கிராமத்திற்கு அருகே உள்ள முண்டுவேலன்பட்டியில் தோழர் கோட்டை என்பவர் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தற்போது பள்ளியில் படித்திக் கொண்டிருக்கும் அவரது 15 வயது மகனை கைது செய்து உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் … Continue reading தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது!