துரை குணா பிணையில் விடுதலை

Sugumaran Govindarasu தமிழகக் காவல்துறை போட்ட பொய் வழக்கில் புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட துரை குணா சற்று முன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் பொ.இரத்தனம் சிறை வாயிலில் இருந்து இந்தத் தகவலைக் கூறினார். துரை குணா கத்தியால் குத்தியதாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தில் ஆஜராகி, என்னை அவர் கத்தியால் குத்தவில்லை, எனக்கு எந்தக் காயமும் இல்லை, என்னிடம் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கிப் போலீசார் புகார் எழுதிக் கொண்டனர் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து … Continue reading துரை குணா பிணையில் விடுதலை

துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல்: தர்மினி

தர்மினி 'கலகத்தை முதலில் தன் குடும்பத்திலிருந்தும் தன் உறவு முறைகளிடமிருந்தும் சொந்தச் சாதிக்குள்ளிருந்தும் தான் தொடங்கவேண்டும். எனக்கு அப்படித்தான் தொடக்கம்...’ என எழுதும் துரை. குணா நேற்று அதிகாலை காரணமெதுவும் சொல்லாமல் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நூலை வெளியிட்டதனால் தன் சொந்த ஊருக்குள்ளேயே விலக்கப்பட்டுத் துரத்தப்பட்டதை அதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் படும் துயரையும் எதிர்கொள்ளும் வழக்குகள் தடைகளைத் தொடர்ச்சியாகத் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு வருவதை காண்கிறோம்.கடந்த ஏப்ரல் 5ம் … Continue reading துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல்: தர்மினி

எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்…

Evidence Kathir   இந்த படத்தை பார்த்ததும் கண் கலங்கி நிற்கிறேன். எழுத்தாளர் துரை குணா காவல் நிலையத்தில் தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் காட்சியை பாருங்கள். பூபதி கார்த்திகேயனும் துரை குணாவும் தன்னை கத்தியால் குத்தினார்கள் என்று புகார் கொடுத்ததாக சொல்லபடுகிற சிவானந்தம், தனக்கு துரை குணா யார் என்று கூட தெரியாது. போலிஸ் வெற்று வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கி அவர்களாகவே புகார் எழுதி இருக்கின்றனர் என்கிறார். அது மட்டும் அல்ல சிவானந்தம் மீது … Continue reading எழுத்தாளர் துரை குணாவை தரையில் அமர்த்தி விசாரணை; ஒரே ஒரு புத்தகம் எழுதியதற்காக தொடர்ந்து வன்கொடுமை செய்யும் போலீசார்…

சமூக ஊடகங்களின் தாக்கம்: வீட்டுக் காவலில் இருந்து மீட்கப்பட்டார் பிரியங்கா

தலித்தை காதலித்த காரணத்தால் தன்னை ஆணவக் கொலை செய்ய தன்னுடைய அப்பா திட்டமிடுவதாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ப்ரியங்கா என்ற பெண் அனுப்பிய குறுஞ்செய்தி திங்கள் கிழமை சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பானது. ப்ரியங்கா காதலித்த வினோத் இந்த குறுஞ்செய்தியை வைத்து காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.  இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது. இந்நிலையில்  இந்த விஷயத்தை கையில் எடுத்த திவிக உள்ளிட்ட இயக்கங்களின் முயற்சியால் பிரியங்கா மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து  தமிழ் இராசேந்திரன் தனது முகநூல் பதிவில், “சகோதரி பிரியங்காவை … Continue reading சமூக ஊடகங்களின் தாக்கம்: வீட்டுக் காவலில் இருந்து மீட்கப்பட்டார் பிரியங்கா

“எங்க அப்பா என்னை கவுரவ கொலை பண்ண திட்டம் போடறாங்க; என்னைக் காப்பாத்துங்க” தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா கண்ணீர்

உடுமலைப் பேட்டை சாதி வெறித் தாக்குதல் சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, தலித்தை காதலித்தார் என்பதற்காக பிரியங்கா என்ற பெண், கடுமையாக தாக்கப்பட்டுள்ள செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா தன்னுடைய முகநூல் பதிவில் இவ்வாறு பகிர்ந்துள்ளார். ஆணவ படுகொலை செய்யப்படவிருக்கும் பெண்ணின் உயிரை காக்க உதவுங்கள் ........ புதுக்கோட்டை ஆலங்குடி பகுதி பிரியங்கா - வினோத் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வினோத் தலித் , … Continue reading “எங்க அப்பா என்னை கவுரவ கொலை பண்ண திட்டம் போடறாங்க; என்னைக் காப்பாத்துங்க” தலித் இளைஞரை காதலித்த பிரியங்கா கண்ணீர்