தலித் இளைஞர் எரித்துக் கொலை; மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை வழக்குப் பதிவு!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பெரியபாபுசமுத்திரம் காலனியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் – லட்சுமி. இவர்களின் இளைய மகன் சதீஷ் (23). இவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த புதன்கிழமையன்று சதீசை இரவு 10 மணியளவில் ரசபுத்திரப்பாளையம் ஏரிப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அடையாளம் தெரியாத 3 பேர் அடித்து மின்கம்பத்தில் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரியூர் தனியார் மருத்துவமனையில் கிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு … Continue reading தலித் இளைஞர் எரித்துக் கொலை; மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை வழக்குப் பதிவு!

மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கை; இடதுசாரிகள் அறிவிப்பு

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன்மூலம் மக்களின் வயிற்றில் அடித்த மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நவம்பர் 24 முதல் 30வரை அகில இந்திய அளவில் தீவிரமான கிளர்ச்சி இயக்கங்களை மேற்கொள்ள இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத் துள்ளன.இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்)-லிபரேசன், புரட்சி சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்.யு.சி.ஐ.(கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய் அன்று சந்தித்து, … Continue reading மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கை; இடதுசாரிகள் அறிவிப்பு

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோக் ஆலைகளுக்குத் தடை!

தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர்எடுப்பதற்கு பெப்சி மற்றும் கோக் ஆலைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு, தென்மாவட்ட மக்களையும், விவசாயிகளையும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்கிறது தீக்கதிர். வழக்கின் பின்னணி: கோக்- பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சுவதற்கு தடை விதிக்கக் கோரி, டி.ஏ. பிரபாகர் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். ‘திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும் … Continue reading தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோக் ஆலைகளுக்குத் தடை!

ஈசா மையம் ஆக்கிரமித்திருக்கும் அரசு நிலத்தை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தை ஈசா யோகாமையம் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருகிறது. சுமார் 44 ஏக்கரை இதுவரை ஈஷா யோகா மையம் ஆக்கிரத்திருக்கிறது. இந்த நிலத்தை நிலம் இல்லாத பழங்குடி மற்றும் தலித் மக்களை திரட்டி நவம்பர் முதல்வாரத்தில்  கைப்பற்றும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். ஞாயிறு அன்று முள்ளாங்காடு மற்றும் முட்டத்துவயல் ஆகிய பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் பங்கேற்ற சிறப்பு மக்கள் சந்திப்பு கூட்டம் முட்டத்துவயல் … Continue reading ஈசா மையம் ஆக்கிரமித்திருக்கும் அரசு நிலத்தை மீட்க போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

“பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்லர்”: சல்மான்கான்

பாகிஸ்தான் - இந்தியமக்களிடையே எந்த பிரச்சனையும் இல்லை; நடப்பது இருநாட்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமே என்று புகழ்பெற்ற திரைப் பட இயக்குநர் ஷியாம் பெனகல் கூறியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது தீக்கதிர். மேலும் அந்தச் செய்தியில், இந்தியா - பாகிஸ்தான் சர்வேதேச கட்டுப்பாட்டு பகுதிக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதையடுத்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே இயல்பு நிலை திரும் பும் வரை, பாகிஸ்தான் … Continue reading “பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்லர்”: சல்மான்கான்

பொது வேலைநிறுத்தம் ஏன்?: சீத்தாராம் யெச்சூரி

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடுமுழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை பொது வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தம் ஏன் என சீத்தாராம் யெச்சூரி அளித்திருக்கும் கேள்வி-பதில் அறிக்கை: ஏன் இன்றைய தினம் (செப்டம்பர் 2) அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது? 12 கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து தொழிற்சங்கங்களால் கூட்டாக வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை ஓராண்டுக்கு முன்பே அவர்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துவிட்டார்கள். இந்தக் கோரிக்கைகள் நமது நாட்டின் உழைக்கும் மக்களது உரிமைகளையும், அடிப்படை வாழ்வாதாரங்களையும் உறுதிப்படுத்துவதற்காக … Continue reading பொது வேலைநிறுத்தம் ஏன்?: சீத்தாராம் யெச்சூரி

ராம்குமார் கைது: காற்றில் விடப்பட்ட குற்றவியல் நடைமுறைகள்

ராம்குமார் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல்துறையினர், 2 நாள் சிகிச்சைக்குப் பின், திங்களன்று சென்னைக்குக் கொண்டு வந்தனர். இங்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம், எழும்பூர் 14-வது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், மருத்துவமனைக்கே வந்து, வாக்குமூலம் பெற்றுள்ளார். மேலும், ராம்குமாரை ஜூலை 18-ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகள் இதனிடையே சுவாதி படுகொலை … Continue reading ராம்குமார் கைது: காற்றில் விடப்பட்ட குற்றவியல் நடைமுறைகள்

எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தியதால் 2234 பேருக்கு எய்ட்ஸ்!

எய்ட்ஸ் நோய்க் கிருமி தொற்று இருந்த இரத்தத்தை செலுத்தியதால் 2234 பேருக்கு ஹெச்ஐவி நோய் தொற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் அசாமைச் சேர்ந்த 3 வயது குழந்தை ஒன்று தீக்காயங்களுக்காக அம்மாநிலத்தின் கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அதற்கு எச்ஐவி தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தைக்கு முன்னதாக தொற்றுள்ள இரத்தம் செலுத்தப்பட்டதன் மூலம் எச்ஐவி நோய் வந்திருப்பது பின்னர் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து … Continue reading எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தியதால் 2234 பேருக்கு எய்ட்ஸ்!

குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்

தெஹல்கா ஏட்டின் ஆசிரியராக இருந்தவர் ரானா அயூப்,“குஜராத் கோப்புகள் : மறைக்கப் பட்ட விவரங்கள்’’ என்று குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் முஸ்லிம் களுக்கு எதிராக நடைபெற்ற படுகொலைகளின்போது நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து ஒரு நூல் எழுதி இப்போது வெளியாகி இருக்கிறது. ரானா அயூப், அப்போது குஜராத் அரசாங்கத்தின் உள்துறை செயலாளராக இருந்த அசோக் நாராயணன் என்பவரைப் பேட்டி கண்டு, ரகசியமாக ஒலிப்பதிவுசெய்து அதனை இந்த நூலில் வெளியிட்டிருக்கிறார். அது தொடர்பான அம்சங்கள் வருமாறு: தி ஒயர் இணைய … Continue reading குஜராத் கோப்புகள்: மறைக்கப்பட்ட உண்மைகளை புத்தகமாக்கிய ரானா அயூப்

ஊழலில் ஊறித்திளைத்துள்ள அதிமுக – திமுக விசாரணைக்கு அஞ்சியே லோக் ஆயுக்தாவை இயற்றவில்லை: திரிபுரா முதல்வர் 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகாஅணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த இரண்டு நாட்களாக திரிபுரா முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் பிரச்சாரம் மேற்கொண்டார்.வெள்ளியன்று கந்தர்வக்கோட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னதுரையை ஆதரித்து கந்தர்வக்கோட்டையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்திலும், தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் வே.ஜீவகுமார், தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் ஜே.பி. என்ற ஜெயபிரகாஷ், பாபநாசம் தமாகா … Continue reading ஊழலில் ஊறித்திளைத்துள்ள அதிமுக – திமுக விசாரணைக்கு அஞ்சியே லோக் ஆயுக்தாவை இயற்றவில்லை: திரிபுரா முதல்வர் 

அதிமுக, பாஜகவில் வாய்ப்புக் கேட்டுப் போனவர் விஜயதரணி: உருவபொம்மை எரித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

விளவங்கோடு தற்போதைய எம்.எல்.ஏ. விஜயதரணி தொகுதிக்கு வருவதில்லை. தொகுதி மக்களுக்கு வளர்ச்சி பணிகள்செய்வதில்லை. தொகுதி வர வேண்டுமானால் கட்டவுட்டுகள், போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என்பதால் கடந்த நான்கு ஆண்டுகளாக காங்கிரஸார் கொதித்து போயுள்ளனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தமிழக மகளிரணித் தலைவர் பொறுப்பிலிருந்து விஜயதரணி நீக்கப்பட்டார். அப்போது அதிமுகவில் சேர்வதற்கும் பாஜகவில் சேர்வதற்கும் விஜயதரணி முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக விஜயதரணி வெளிப்படையாக பேசினார். இந்த சூழ்நிலையில் அகில இந்திய … Continue reading அதிமுக, பாஜகவில் வாய்ப்புக் கேட்டுப் போனவர் விஜயதரணி: உருவபொம்மை எரித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

‘கேதர்நாத்தில் 5 ஆயிரம் பேர் பலியாக தேனிலவு கொண்டாட்டமே காரணமாம்’ துவாரகை சங்கராச்சாரி

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு திடீர் என்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த 5 ஆயிரம் பேர் பலியாகினர். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இச்சம்பவம் பற்றி துவாரகை சங்கராச்சாரி ஸ்வரூபானந்த சரஸ்வதி பேட்டி அளித்துள்ளார். அதில், கேதர்நாத்திற்கு பக்திக்காக அல்லாமல், தேனிலவு கொண்டாடுவதற்கும், சுற்றுலாவுக்காகவும் செல்வதுதான் அங்கு வெள்ளம் ஏற்பட்டு, 5 ஆயிரம் பேர் பலியாக காரணம் என்று சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி தெரிவித்துள்ளார். புனித தலங்களுக்கு தேனிலவு, சுற்றுலா செல்வதை … Continue reading ‘கேதர்நாத்தில் 5 ஆயிரம் பேர் பலியாக தேனிலவு கொண்டாட்டமே காரணமாம்’ துவாரகை சங்கராச்சாரி

கட்சியின் கொள்கைக்கு எதிராகத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்துவிட்டதாக சொல்கிறார்களே, உண்மை என்ன?

திரிணாமுல் ஆட்சியைத் தூக்கி எறிந்து வங்கத்தைக் காப்பாற்றுவதே இப்போதைய மக்கள் முழக்கம் என்றும், அதை ஏற்றுக் குரல் எழுப்பும் மக்கள் அனைவரும் மம்தாவின் அரசை அதிகாரத்திலிருந்து கீழே இறக்குவதென்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா கூறுகிறார். திரிணாமுல் ஆட்சியின் வீழ்ச்சியை உறுதிசெய்கிற மக்களின் எழுச்சியைத்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒவ்வொரு நாளும் காணமுடிகிறது. மம்தாவின் ஆட்சியில் ஜனநாயகத்தின் அனைத்து மாண்புகளும் மீறப்பட்டு வன்முறையும் … Continue reading கட்சியின் கொள்கைக்கு எதிராகத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்துவிட்டதாக சொல்கிறார்களே, உண்மை என்ன?

“என்னை ஒரேயடியாக சுட்டுக் கொல்லாமல் மெதுவாகக் கொல்லப் பார்க்கிறது அரசு”:பேராசிரியர் சாய்பாபா

மத்திய ஆட்சியாளர்கள், தன்னை கொலை செய்ய முயன்றதாகவும், அதற்காக அவர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, புது விதமான சித்ரவதையை செய்ததாகவும் பேராசிரியர் சாய்பாபா கூறியுள்ளார். 1990-ம் ஆண்டுகளில் சமூகநீதி, இடஒதுக்கீடு கோரிக்கைகளுக்காக போராடியவர் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. பின்னர் காவல்துறையின் போலி என்கவுண்ட்டர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத் தார். 2000-ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகப் பணியில் சேர்ந்த சாய்பாபா, 2009-ம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ்அரசு துவங்கிய - ‘பசுமை … Continue reading “என்னை ஒரேயடியாக சுட்டுக் கொல்லாமல் மெதுவாகக் கொல்லப் பார்க்கிறது அரசு”:பேராசிரியர் சாய்பாபா

”என்கவுண்டர் செய்துவிடுவோம்” ஹைதராபாத் பல்கலை மாணவர்களை மிரட்டிய தெலுங்கானா போலீஸ்

ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் மார்ச் 22 அன்று துணை வேந்தர் அப்பாராவிற்கு எதிராகநடைபெற்ற போராட்டத்தின்போது மாணவர்களுடன் சேர்ந்து கைதான பேராசிரியர்கள் கேஒய் ரத்தினம் மற்றும் தத்தகத்தா சென்குப்தா தில்லி வந்துள்ளனர். தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்நடைபெற்று வரும் “உயர்கல்வியில் சாதி’’ என்னும் தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்பதற்காக அவர்கள் வந்துள்ளனர். ஹைதராபாத் மத்தியபல் கலைக்கழகத்தில் தாங்கள் கைது செய்யப்பட்ட விதம்தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இடைக்கால துணை வேந்தராக இருந்த, எம்.பெரியசாமி, மாணவர்கள் … Continue reading ”என்கவுண்டர் செய்துவிடுவோம்” ஹைதராபாத் பல்கலை மாணவர்களை மிரட்டிய தெலுங்கானா போலீஸ்

400 ஆண்டுகால தடையை உடைத்து சனி பகவான் கோவில் கருவறைக்குள் சென்ற பெண்கள்!

400 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தின் ஷிங்ணாபூர் சனி பகவான் கோவில் கருவறைக்குள் சென்று பெண்கள் வழிபாடு நடத்தினர். மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிபாட்டு முறையை சனிபகவான் கோயில் நிர்வாகம் மாற்றியமைத்தது. இதையடுத்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் பெண்கள் நல ஆர்வலர் திருப்தி தேசாய் தலைமையிலான குழுவினர் கோவிலின் கருவறைக்குள் சென்று வழிபட்டனர். வழிபாடு அனுமதி அளிக்கப்பட்டதை பாலின சமத்துவத்திற்கான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என பெண்கள் அமைப்புகள் வரவேற்றுள்ளன. பெண்கள் அமைப்பைச் … Continue reading 400 ஆண்டுகால தடையை உடைத்து சனி பகவான் கோவில் கருவறைக்குள் சென்ற பெண்கள்!

ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சிறப்பு நேர்காணலை வெளியிட்டுள்ளது  ‘தீக்கதிர்’(20-03-2016) நாளிதழ். அதனுடைய மறுபிரசுரம்... சந்திப்பு : மதுக்கூர் ராமலிங்கம், சி. ஸ்ரீராமுலு மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்கெனவே பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்றிருந்தன. அதற்கும், தற்போது அமைந்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்வைத்த கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்திற்கு இந்தக் கூட்டணி எந்த வகையில் ஒத்திசைவாக உள்ளது? திமுக,அதிமுக ஆகிய இரு … Continue reading ஐந்தாயிரத்துக்கெல்லாம் கொடூர கொலை செய்வது தமிழகத்தில் சாதாரணமாகிவிட்டது: தொல். திருமாவளவன் நேர்காணல்

வரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யார் இந்த பாரத மாதா?

பாரத மாதாகீ ஜே மற்றும் வந்தே மாதரம் என்பது பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலைப்போராட்டத்தில் அனைவரையும் ஒற்றுமைப்படுத்த பயன்படவில்லை; மாறாக நாட்டு மக்கள் ஒன்றுபடுவதை தடுத்து சிறுபான்மையினரை பிளவு படுத்தவே பயன்பட்டது என்று வரலாற்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் பாரத மாதாகீ ஜே என்று கோஷம் போட மறுத்த மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் மஜ்லீஸ் இ இத்தாத் முஸ்லீமான் என்ற கட்சியைச் சேர்ந்த வரிஸ் பதான் என்ற எம்எல்ஏ இடை நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாஜக … Continue reading வரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யார் இந்த பாரத மாதா?

உயர்பதவியில் இருப்போரின் பிரபுத்துவ மனப்பான்மை:நீதிபதி ஹரிபரந்தாமன்

உயர்பதவியில் இருப்பவர்கள் இன்னமும் பிரபுத்துவ மனப்பான்மையில் இருக்கிறார்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் கூறினார். நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பணி ஓய்வுபெற்றதையடுத்து, அவருக்கு பிரிவு உபசார விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமை வகித்தார். தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில், நீதிபதி டி.ஹரிபரந்தாமன் பேசியதாவது: பொதுவாக உயர் பதவியில் இருப்போர் ஒருபிரபுத்துவ மனப்பான்மையில் இருப்பது வருத்தத்துக்குரியது. சுதந்திரத்துக்கு முன்பு இந்தியா ஆங்கிலேயர்களாலும், பல … Continue reading உயர்பதவியில் இருப்போரின் பிரபுத்துவ மனப்பான்மை:நீதிபதி ஹரிபரந்தாமன்

என்ன நினைத்திருப்பாய் எங்கள் மகனே?

க. கனகராஜ்   கொலையாளிகள் உருவிய அரிவாளோடு உன்னை நெருங்கிய போது, என்ன நினைத்திருப்பாய்?தப்பித்து விடுவோம் என்றா?தான் பிறந்த சாதியின் மீது திணிக்கப்பட்ட அவமானம் தன் பிள்ளையின் மீதும் படிந்து விடக்கூடாது என்பதற்காக பட்டினிக்கிடந்து உன்னை வளர்த்த தாயையா?ஏழ்மை எப்படி வாட்டினாலும் என் மகனாவது எஞ்சினியரிங் படிக்கட்டும், வேலைக்குப் போகட்டும், கண்காணாத இடத்தில் நன்றாக வாழட்டும், நிமிர முடியாமல் அழுத்திக் கொண்டிருக்கும் பரம்பரை சுமையை அவனாது தள்ளி விட்டு நடக்கட்டும் என்று ஊண் இன்றி உறக்கம் இன்றி … Continue reading என்ன நினைத்திருப்பாய் எங்கள் மகனே?

இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பணக்காரர்கள் மீது வரியும் போடமாட்டோம், பொதுத்துறை பங்குகளையும் சகாய விலையில் அவர்களிடம் ஒப்படைப்போம் என்ற அரசின் கொள்கை பொதுத்துறையை பற்றி வைத்துள்ள அணுகுமுறை இதுதான்: ‘லாபத்தில் செயல்பட்டால் விற்று விடு, நட்டத்தில் இருந்தால் மூடி விடு’ வழக்கம் போல் மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி பிப்ரவரி இறுதி நாள் பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு ஒருமாதம் முன்னதாகவே, முதலாளித்துவ பத்திரிகைகளிலும் தொலைக் காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் இந்த பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் … Continue reading இந்தியாவில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு; என்ன காரணம்? பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதுகிறார்

பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!

மதுரை சொக்கன் சீமான் இயக்கிய `பாஞ்சாலக்குறிச்சி’ படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. முழு போதையில் வீட்டுக்கு வரும் வடிவேலு ஒரு ஓலைப் பாயை விரித்து படுத்துக் கொள்ள முயல்வார். அது எப்படி விரித்தாலும் சுருட்டிக்கொண்டே வரும். கடைசியில் பாயை விரித்து வைத்துக் கொண்டு அதில் தொபுக்கடீர் என்று விழுவார். பார்த்தால் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும். அப்படியும் விடாமல் “சின்னான்னா சும்மாவா” என்று கெத்தாக பேசுவார்.சீமானும் கிட்டத்தட்ட சின்னான் போல ஆகிவிட்டார். தமிழ்தேசியம் என்ற ஒரு … Continue reading பாட்டன்களை மாற்றிக்கொண்டிருக்கும் சீமானின் கொள்கை பற்றி ஓர் ஆய்வு!

அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

கனகராஜ் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை `அதிமுகவின் பினாமி அணி’ என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முன்பும் கூட திமுக, காங்கிரஸ்காரர்கள் மக்கள் நலக்கூட்டணியை அதிமுக வின் பி.டீம் என்று விமர்சித்துள்ளனர். கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு தார்மீக தைரியம் இல்லாதபோது அவதூறுகளைப் பொழிவதில் அதிமுக, திமுக இரண்டும் ஒரே அணிதான். இதுமட்டுமல்ல, ஊழலில் பிரித்தறிய முடியாத அளவிற்கு இரண்டும் ஒரே அணி என்பதையும் தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கி றார்கள். தமிழகத்தின் ஆறுகள் ஒட்டச் சுரண்டப்படுகின்றன. 500 … Continue reading அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி

“நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ தலித் மாணவரை அலைக்கழிக்கும் உ.பி பல்கலை; மாணவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிரதமருக்குக் கடிதம்!

ஹரிஷ் குமார் வரலாற்றுத்துறை மாணவர். இவர் 2005ஆம் ஆண்டு பல்கலைக் கழக தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்து மீரட், சௌத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். தாய் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். தந்தை ஒரு தையற்காரர். ஹரிஷ் குமார் 25க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்திருக்கிறார். ஆயினும் அவரால் தன்ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லை. இவருக்குத் தன் ஆராய்ச்சியை மேற்கொள்ள ஒரு மேற்பார்வையாளர் கிடைக்கவில்லை. இவர் சந்தித்த பேராசிரியர்கள் அனைவருமே, “நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ என்று கூறி … Continue reading “நீ எல்லாம் உயர்கல்வி படிப்பதற்கு ஏன் வந்த?’’ தலித் மாணவரை அலைக்கழிக்கும் உ.பி பல்கலை; மாணவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பிரதமருக்குக் கடிதம்!

‘வேண்டாம்ண்ணே..’: வடிவேலு முடிவு!

திமுக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் நடிகர் வடிவேலுவுக்கு மறுபக்கம் அதிமுகவினர் தூது விட்டுள்ளனர். ஆனால், ‘இனிமேல் அரசியலே வேண்டாம்’ என்ற முடிவுக்கு வடிவேலு வந்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளதாக தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் நடிகர் வடிவேலு. அவருடைய காமெடியான பிரச்சாரத்தை அனைவரும் ரசித்தனர். ஆனாலும், தேர்தலில் திமுக தோல்வியை தழுவியது.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வடிவேலு எங்கு இருக்கிறார் என்பதே … Continue reading ‘வேண்டாம்ண்ணே..’: வடிவேலு முடிவு!

திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிருடன் எரிப்பு: குழந்தைகளையும் விட்டு வைக்காத கோடூரம்!

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கீழவடகரையைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மகன் செந்தூர்பாண்டியன் (30). கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், புளியங்குடி அருகே உள்ள கீழதிருவேட்டநல்லூர் காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் முத்துராணிக்கும் (23)கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம்நடந்தது. செந்தூர்பாண்டியனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து முத்துராணியை கொடுமைப் படுத்துவாராம். ஊர்ப்பெரியவர்கள் செந்தூர்பாண்டியனை கண்டித்தும் அவர் திருந்தாததால் முத்துராணி சில நாட்களுக்கு முன் பெற்றோர் வீடான திருவேட்டநல்லூருக்கு … Continue reading திருநெல்வேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிருடன் எரிப்பு: குழந்தைகளையும் விட்டு வைக்காத கோடூரம்!

ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!

என் அன்பிலா தேசபக்தர்களே! என் இந்தியத் தாயின் வீர நெஞ்சங்களே (வீர மகன்களே என கூற இயலாது. ஏனெனில் இந்தியத் தாய்களையும் மகள்களையும் கொடுமைப்படுத்திக்கொண்டே பாரத் மாதா கி ஜே என கோஷம் போடும் உங்களை பாரத மாதா கூட மகன்களாக ஏற்க மாட்டாள்). ஜே.என்.யூ.காரனான நான் உங்கள் தேசபக்தியின் வெளிப்பாடு கண்டு திக்கு முக்காடி நிற்கிறேன். இதே தீரமிக்க பக்தியினை பதான்கோட் தாக்குதலிலும் காட்டியிருந்தால் நான் இன்னமும் மகிழ்ந்திருப்பேன். பொன்னாடை-புடவை-சூட்-மாம்பழம்-நேரில் தெரிவிக்கப்பட்ட பிறந்த நாள்வாழ்த்து- திடீர் … Continue reading ஒரு ‘தேசத்துரோகி’ யின் திறந்த மடல்!

#அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

பாஜக இந்து வாக்குவங்கியை ஒருமுகப்படுத்துவதற்காகவே, ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேசவிரோத முழக்கங்களை எழுப்பினார்கள் என்று பொய்யாக ஜோடனை செய்து நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். டெக்கான் ஹெரால்ட் நாளேட்டின் நிருபர்கள் சஞ்சய் பசக் மற்றும் நம்ராதா பிஜி அஹூஜா ஆகியோருக்கு யெச்சூரி அளித்த நேர்காணல். தீக்கதிருக்காக தமிழாக்கம் செய்தவர் ச. வீரமணி கேள்வி: ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் எழுப்பப்பட்ட தேச விரோத முழக்கங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? சீத்தாராம் யெச்சூரி: … Continue reading #அவசியம்வாசிக்க: ‘காவிக் கிண்ணத்தில் ஊழல் வழிகிறது’ சீதாராம் யெச்சூரியின் நேர்காணல்

உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!

  2007-ஆம் ஆண்டு சென்னை தி. நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை மருத்துவர் பழனி ரவிச்சந்திரன் அப்பாவிகளை ஏமாற்றி சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு பிடிபட்டார். அவுட் லுக் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் 471 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் ரூ. 100 கோடிக்கு மேல் இதன் மூலம் பணம் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பாரதிராஜா மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.  சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர். இவரது மனைவி அமுதா (35). தி.நகரில் … Continue reading உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!

தொடங்குகிறது பட்ஜெட் கூட்டுத்தொடர்: அல்வாவை கிளறி முடித்த அருண்ஜெட்லி!

செவ்வாயன்று தொடங்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் ரோஹித் வெமுலா தற்கொலை, ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்யகுமார் கைது உள்ளிட்ட பிரச்சனைகள் மற்றும் பதான்கோட் தீவிரவாதிகள் தாக்குதல் ஆகிய பிரச்சனைகள் பெரும் கொந்தளிப்பை உருவாக்கும் என சொல்கிறது தீக்கதிர் நாளிதழ்.  செவ்வாயன்று துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி மார்ச் 16 வரை நீடிக்கிறது. இரண்டாவது பகுதி ஏப்ரல் 25லிருந்து தொடங்கி மே13 வரை நடைபெறுகிறது. நடைபெறவுள்ள முதல் பட் ஜெட் கூட்டத்தொடரில் … Continue reading தொடங்குகிறது பட்ஜெட் கூட்டுத்தொடர்: அல்வாவை கிளறி முடித்த அருண்ஜெட்லி!

#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு!

க. கனகராஜ் அவர்கள் தேசபக்தி பற்றிப் பேசுகிறார்கள். மாற்றுக் கருத்து சொல்பவர்கள் எல்லாம் தேச விரோதி என்கிறார்கள். இந்திய அன்னை அடிமைத் தளையில் சிறைப்பட்டு உழன்று கொண்டிருந்த போது இவர்கள் சற்றும் மனம் கலங்காமல் கொண்டாடி திரிந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களுக்கு ஆட்சி பீடம் கிடைத்திருக்கிறது. சுதந்திரப் போர் குறித்து அதில் தங்கள் பங்கு குறித்து சொல்லிக் கொள்வதற்கு அவர்களுக்கு ஏதும் இல்லை. அதை மீறி சொல்லத் துணிந்தால் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு நிற்க வேண்டிய நிலையில் அவர்கள் … Continue reading #அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு!

யார் தேசபக்தர்கள்? இந்திய சுதந்திரத்தை காவி கொடியேற்றி கொண்டாடியவர்களா?

ஏ.பாக்கியம் தேச விரோதிகள் தங்களை தேச பக்தர்கள் என நாமகரணம் சூட்டிக் கொண்டு, தேச பக்தர்களை வேட்டையாடும் அசிங்கங்களை அரங்கேற்றுகின்றனர். மதச்சார்பற்ற சக்திகள் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள்.. ஹிட்லரை பகிரங்கமாக புகழ்ந்தவர்கள். சிறுபான்மையினரை அழிக்க ஹிட்லரின் வழிதான் இந்தியாவிற்கு பொருந்தும் என்று மார்தட்டியவர்கள்... தங்களது முக்கிய எதிரிகள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்கள் என பகிரங்கமாக அறிவித்தவர்கள்... 1947 -இந்தியா விடுதலை பெற்ற போது மூவர்ண கொடியை எதிர்த்து, அவர்களது காவிக் கொடியை … Continue reading யார் தேசபக்தர்கள்? இந்திய சுதந்திரத்தை காவி கொடியேற்றி கொண்டாடியவர்களா?

ஆண்களுக்கானதா ஆன்மீகம்?!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், ‘ஆன்மிகம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா?’ என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்வம் வாரியத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பும் 5 பெண் வழக்கறிஞர்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ், ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வருகிறது.இவ்வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலிருந்தே … Continue reading ஆண்களுக்கானதா ஆன்மீகம்?!

இஷ்ரத் ஜஹானின் பின்னணியும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிக்கமின் தந்திரமும்

மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக அமெரிக்க சிறையிலிருக்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஏ சனாப் முன்னிலையில் பெறப்படும் இந்த வாக்குமூலத்தில், வியாழனன்று பெண் பயங்கரவாதிகள் யாருக்காவது மும்பை தாக்குதலில் தொடர்பு இருக்கிறதா? என்று கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு தனக்கு தெரியாது என்று ஹெட்லி கூறியுள்ளார். ஆனால் அவரை விசாரித்த போலீசாரும் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் மூன்று பெண்களின்பெயரைக் கூறி அவர்களில் யாரையாவது சுட்டிக்காட்ட … Continue reading இஷ்ரத் ஜஹானின் பின்னணியும் பத்ம ஸ்ரீ விருது பெற்ற அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிக்கமின் தந்திரமும்

”மாணவிக்கு உதவியதற்காக என்னையும் சேர்த்து அடித்தனர்” தான்சானியா இளைஞரின் வேதனை சாட்சியம்!

பெங்களூரில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவியை வெறிக்கும்பல் ஆடைகளை களைந்து நிர்வாணப் படுத்தி தாக்கிய சம்பவம் குறித்து மற்றொரு ஆப்பிரிக்க மாண வர் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சோழதேவனஹள்ளியில் உள்ள ஆச்சார்யா கல்வி மையத்தில் இவர் பயின்றுவருகிறார். அதே கல்வி நிலையத் தில்தான் பாதிக்கப்பட்ட மாணவியும் படிக்கிறார்.அந்த மாணவர் அளித்த பேட்டி வருமாறு:“தான்சானியா மாணவி மீதான தாக்குதல் சம்பவம் குறித்ததகவல் எனக்கு கிடைக்கும்போது நான் என் உறவினர் வீட்டில் இருந்தேன். தகவலறிந்ததும் உடனே அங்கு சென்றேன். அங்கு … Continue reading ”மாணவிக்கு உதவியதற்காக என்னையும் சேர்த்து அடித்தனர்” தான்சானியா இளைஞரின் வேதனை சாட்சியம்!

ராஜ்யசபா டி.வி.யை முடக்குவது ஜனநாயக விரோதமானது: டி.கே.ரங்கராஜன்

மாநிலங்களவை நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒளிபரப்பி வரும் ராஜ்யசபா டிவியை முடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோக்சபா டி.வி.யுடன் ராஜ்யசபா டி.வி.யை இணைக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதன்மூலம் ராஜ்யசபா டி.வி.யை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடக்கிறது என தீக்கதிர் நாளிதழ் சொல்கிறது. மக்களவை சபாநாயகராக சோம்நாத் சாட்டர்ஜி இருந்தபோது, லோக்சபா மற்றும் ராஜ்யசபா தொலைக்காட்சிகள் உருவாக்கப்பட்டன. இவை இரண்டும் தனித்தனியாக இயங்கி வருகின்றன. லோக்சபா டி.வி. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசுத் துறைகள் … Continue reading ராஜ்யசபா டி.வி.யை முடக்குவது ஜனநாயக விரோதமானது: டி.கே.ரங்கராஜன்

மதுராந்தகத்தில் தலித் மக்கள் மீது தொடரும் சாதிய தாக்குதல்கள்!

மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தலித் மக்கள் மீது தொடர்ந்து நடைபெறும் சாதிய தாக்குதலைக் தடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் தலித் மக்கள் மீது சாதி ஆதிக்கசக்திகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த ஜன.18 அன்று காந்தி நகரைச் சார்ந்த … Continue reading மதுராந்தகத்தில் தலித் மக்கள் மீது தொடரும் சாதிய தாக்குதல்கள்!

“எனக்கு இந்தியா எப்போதும் உன்னதமான நாடுதான்”: அமீர்கான்

நடிகர் அமீர்கான் பாஜக அரசின் சகிப்பின்மை குறித்து கருத்து கூறியதற்காக மத்திய அரசின் சுற்றுலாத் துறை தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தீக்கதிர் வெளியிட்ட செய்தியில், “அரசின் முடிவை தான் மதிப்பதாக நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார். மும்பையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமீர்கான் கூறியதாவதுநான் எந்த வித பிரதிபலனும் பாராமல், நாட்டின் பெருமையை விளம்பரப்படுத்தும் உன்னதமான இந்தியா’ என்ற மத்திய அரசின் சுற்றுலாத் துறை விளம்பரப்படத்தில் இலவசமாக நடித்து வந்தேன். தற்போது நான் நடிக்கக்கூடாது என்று அரசு … Continue reading “எனக்கு இந்தியா எப்போதும் உன்னதமான நாடுதான்”: அமீர்கான்