பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர் சிலர் சேர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ள மனுதர்மத்தின் சில பக்கங்களை பெண்கள் தினத்தில் கொளுத்தினர். ஆண்களை மயக்கும் குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள் (அத்தியாயம் 213-2)  பெண்கள் சிறு வயதில் தந்தையின் பாதுகாப்பிலும், மணமானவுடன் கணவன் பாதுகாப்பிலும் கணவனுக்குப்பின் மகனின் பதுகாப்பிலும் இருக்க வேண்டும்.  (அத்தியாயம் 148 - 5) என்ற இரண்டு வாக்கியங்களை படித்தார் ஏபிவிபியின் முன்னாள் இணை செயலாளர் பிரதீப் … Continue reading பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

தி டெலிகிராப்: சாயாத நான்காவது தூண்! இதோ டெலிகிராப் நாளிதழின் சில முகப்பு பக்கங்கள்…

பாஜக தலைமையில் மத்தியில் அமைத்திருக்கும் ஆட்சி இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் மதச்சார்பின்னைக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதை நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி 2014-ஆம் ஆண்டு அமைந்த ஒவ்வொரு கணத்திலும் இந்தியர் உணரவே செய்கிறார்கள். ஆனால், வெகுஜென ஊடகங்கள்,  பாஜக அரசை- அவர்கள் முன்னெடுக்கும் மத அரசியலை கண்டும் காணாதது போல் செல்கின்றனர். ஆனால், இந்தியாவில் அதிக விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான தி டெலிகிராப், துணிவோடு பாஜகவின் முகத்திரையை, அவர்களுடைய பொய்களை கட்டவிழ்க்கிறது. அதற்கு உதாரணங்களாக டெலிகிராப் … Continue reading தி டெலிகிராப்: சாயாத நான்காவது தூண்! இதோ டெலிகிராப் நாளிதழின் சில முகப்பு பக்கங்கள்…