மதுரையில் சாக்கடை அடைப்பை நீக்கும்போது விஷவாயு தாக்கி தொழிலாளி மரணம்

மதுரையில் சாக்கடை அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சோலைநாதன் என்ற தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி இதுகுறித்து தெரிவித்துள்ள தகவல்: “விஷவாயு தாக்கி உயிரிழந்த ஆறு தொழிலாளிகளின் கொலைகளை மைய்யப்படுத்தி தொடங்கப்பட்ட எங்கள் ஆவணப்படம், இன்று விஷவாயு தாக்கி உயிரிழந்த மதுரை சோலைநாதன் கொலையோடு சேர்த்து ஏழு மாதத்தில் 20 கொலைகளாக,தொடர்கிறது உங்கள் ஒவ்வொருவரின் கொடூர மௌனத்தால்... இதுபோல் இன்னும் எத்தனை பேரை மலக்குழிக்குள் தள்ளி சாகடிக்க...”. முகப்புப்படம்: முத்துச்செல்வம்

விலாசினியையும் கிருபாவையும் ஒரே தட்டில் வைப்பதா?: ஓர் எதிர்வினை

பதிப்பாளர் விலாசினி மீதான எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் பதிவுக்கும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி மீதான முகநூல் பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் திவ்ய பாரதி இந்தப் பதிவை எழுதியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் Karthikeyan N. அவருடைய பதிவு கீழே: விலாசினியையும், கிருபா முனுசாமியையும் ஒரே தட்டில் வைத்து பேசும் இந்த போராளி பெண்களை பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இங்கு எந்த காலத்திலும், சமூக வெளியில், பொது சமூகத்தில் விலாசினியும், கிருபாவும் "பெண்" என்ற பொதுப்படையான பார்வையில் பார்க்கப்பட போவதே … Continue reading விலாசினியையும் கிருபாவையும் ஒரே தட்டில் வைப்பதா?: ஓர் எதிர்வினை

முதுகுளத்தூரில் தொடரும் சாதி வன்மம்!

திவ்ய பாரதி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதுகுளத்தூர் அருகே உள்ள கடலாடி என்கிற ஊரில் ஊராட்சி மன்ற பொது கழிப்பறை செப்டிக் டேங்கை சுத்தம் செய்கையில் பாலமுருகன் என்கிற தொழிலாளி விசவாயு தாக்கி உயிரிழந்தார். அது குறித்து கடலாடி காவல் நிலையம் உரிய பிரிவுகளின் கீழ் FIR பதியவில்லை . இது தொடர்பாக இறந்து போனவரின் மனைவியுடன் கடந்த இரண்டு நாட்களாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், sp அலுவலகம், முதுகுளத்தூர் dsp அலுவலகம் என்று … Continue reading முதுகுளத்தூரில் தொடரும் சாதி வன்மம்!