திசை திருப்புகிறதா தமிழக சட்டம்?: திருமாவளவன்

சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன்பு தமிழக அரசு அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறவில்லையா அல்லது அவர் தமிழக அரசைத் தவறாக வழிநடத்துகிறாரா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் ‘'2017ம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவ அறிவியல் இளநிலை மற்றும் பல் மருத்துவ இளநிலை படிப்புகள் சேர்க்கைக்கான சட்டம்' என்ற பெயரில் புதிய சட்டத்துக்கான மசோதாவை தாக்கல் செய்திருக்கிறது. … Continue reading திசை திருப்புகிறதா தமிழக சட்டம்?: திருமாவளவன்

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு: திருமாவளவன்

தமிழகத்தில் அதிமுக அரசில் குழப்பத்தை ஏற்படுத்தவும், தமிழக அரசை நிலைகுலையச் செய்யவும் நரேந்திர மோடி அரசு முயற்சித்து வருகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வர் உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையானது தமிழக மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் முழுமையாக நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அப்பல்லோ மருத்துவமனைக்கு முதலில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்தோம். … Continue reading தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு: திருமாவளவன்

அப்பலோ சென்றது ஏன்? திருமாவளவன் விளக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியது: "மாண்புமிகு முதல்வர்அவர்கள் நலமுடன் இருக்கிறார், விரைவில் குணமடைந்து ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார்" என்று அதிமுகவின் மூத்த தலைவர்களை நான் சந்தித்த போது கூறினார்கள். மருத்துவமனையில் எந்த கெடுபிடியும் இல்லை. இரண்டாவது தளம் முதல்வர் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிற தளமாகும். அங்கேயும் பொதுமக்கள் இயல்பாகவே நடமாடுகிறார்கள். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமான முதல்வர் … Continue reading அப்பலோ சென்றது ஏன்? திருமாவளவன் விளக்கம்

கிருபா முனுசாமி கருப்பாக இருப்பதும் தலித்தாக இருப்பதுதான் பிரச்சினையா?

சூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் குறித்து தனது கருத்தொன்றை இட்டிருந்தார் வழக்கறிஞர் கிருபா முனுசாமி. அதை ஆதரித்தும் எதிர்த்தும் மாற்றுக் கருத்துகள் முன் வந்தன. சிலர் மாற்றுக்கருத்து என்ற பெயரில் மீகவும் கீழ்த்தரமான, நிறவெறி, ஆணாதிக்க தொனியில் கிருபாவை கடுமையாக எழுதினர். முகநூல் நிர்வாகத்திடம் புகார் அனுப்பிய பிறகு அவை நீக்கப்பட்ட இந்நிலை, வெளிநாட்டில் வசிக்கும் ஆர். தியாகு என்பவர், கீழ்த்தரமான பதிவொன்றை இட்டிருக்கிறார். போகிற போக்கில் திமுக தலைவர் கருணாநிதி, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரையும் … Continue reading கிருபா முனுசாமி கருப்பாக இருப்பதும் தலித்தாக இருப்பதுதான் பிரச்சினையா?

ஸ்வாதி கொலை வழக்கு குறித்த திருமாவளவனின் நேர்காணலை முன்வைத்து: அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் ஜூலை- 9 The Hindu நாளிதழில் வெளிவந்துள்ள வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் அவர்களது நேர்காணல் (Not playing caste card in Swathi murder case : Thirumavalavan) மிக மிக முக்கியமான ஒன்று. நேர்காணலைச் செய்துள்ள ஸ்ருதி சாகர் யமுனனும் பாராட்டுக்குரியவர். பா.ஜ.க வழக்குரைஞர் ஒருவர் இடையில் புகுந்து ராம்குமார் “சார்பாக” ஜாமீன் மனு தாக்கல் செய்து, பின் வழக்கிலிருந்து விலகி, ராம்குமார் இந்தக் கொலைக்குக் காரணம் இல்லை, வேறு யாரோ … Continue reading ஸ்வாதி கொலை வழக்கு குறித்த திருமாவளவனின் நேர்காணலை முன்வைத்து: அ. மார்க்ஸ்

“மாமா வளவா” : தியானம் செய்த திருமாவளவன் குறித்து பாஜக தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவியின் நாகரிக பதிவு

பாஜக தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் ரமாவின் அரசியல் நாகரிகம் தாழ்ந்த தரத்தில் இருக்கிறது. உதாரணமாக நீச்சல் உடையில் இருக்கும் ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு அதை சோனியா காந்தி என சொல்லி இவரெல்லாம் எப்படி ஒரு கட்சியின் தலைவரானார் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார். சமீபத்திய பதிவில் “மாமா வளவா” என்று விளித்து தொல் திருமாவளவன், நோன்பிருப்பது குறித்து அவதூறான பதிவொன்றை எழுதியிருக்கிறார்.. Rama R மாமா வளவா, யாரை ஏமாற்ற இந்த நாடகம்... தொழுகையின் … Continue reading “மாமா வளவா” : தியானம் செய்த திருமாவளவன் குறித்து பாஜக தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவியின் நாகரிக பதிவு

#கபாலிபாடல்: பா. ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புதிய பொருள் சொல்லும் முகநூல் சாதியவாதிகள்

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. படத்தின் பாடல் ஒன்றில் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்ற வரி வருகிறது. இந்த வரிகளுக்காக பா. ரஞ்சித்தை அவருடைய சாதி சார்ந்து இழிபடுத்தி வருகின்றனர் முகநூல் சாதியவாதிகள் சிலர். ஒருவர் ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது விளக்கம் சொல்ல; இன்னொருவர் திருமவளவன், கபாலிக்கு வசனம் எழுதியதாக பகடி செய்கிறார்.   “நீங்க நண்டு வறுக்கிறவங்க” என ஏளனத்துடன் மீம்ஸ் போடுகிறார் இன்னொருவர்.

மாற்றத்திற்கான மையப்புள்ளி திருமாவளவன்..!

மு.ரா. பேரறிவாளன் மக்கள் நலக்கூட்டணி என்ற மாற்று முயற்சி படுதோல்வி அடைந்ததாக ஊடகங்களால், இணையதள அறிவாளிகளால் எடுத்துரைக்கப்படும் மூடத்தனமான பரப்புரைகளுக்கு பின்னால், மக்கள் நலக்கூட்டணி ஏற்படுத்தி பெரிய அதிர்வு வெகு சாமர்த்தியமாக மறைக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். மக்கள் நலக்கூட்டணி உதயமானது முதலே நிலவிய தி.மு.க தரப்பு பதட்டங்களும், அ.தி.மு.க தரப்பின் அமைதியும் சமூக வளைதளத்தை உபயோகிக்கும் சாமானியருக்கும் தெரிந்திருக்கும். நாம் முன்பே குறிப்பிட்டதை போல எந்த காரணத்தாலும் அ.தி.மு.க தொண்டர்கள் வாக்கை மாற்ற மாட்டார்கள் என்ற … Continue reading மாற்றத்திற்கான மையப்புள்ளி திருமாவளவன்..!

அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்

தேர்தல் முடிவுகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கதில் எழுதியுள்ள கட்டுரை: ஜெயலலிதா அரசு மேல் மக்களுக்கு மிகக்கடுமையான வெறுப்பும் அவநம்பிக்கையும் இருக்கிறது. செயல்படாத அரசு, ஊழல் அரசு என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள் அதற்கு மாற்றாக திமுக அன்றி வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் நினைக்கிறார்கள். ஆனால் கணிசமானவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. குறிப்பாகப் பெண்கள் திமுகவுக்குப் போடுவதைவிட மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கவே விரும்புகிறார்கள் அதற்கு முதற் காரணம் ஜெயலலிதாவின் அரசின் செயல்பாடுகள் எப்படி … Continue reading அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்

“அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல்முறையாகக் கலந்துகொண்டார். நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ஊடகங்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியிருக்கிறார்.  நேர்கண்டவர் செந்தில். ஏன் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற கேள்விக்கு, “ஜெயலலிதாவை பார்க்க வந்து மாண்டுபோனவர்கள் பற்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பாமல் திருமாவளவன் தூங்கியதை திரும்ப திரும்ப காட்டினீர்கள். இதெல்லாம் எங்கள் அணியை சிதைக்கும் முயற்சிதான்” … Continue reading “அதிமுக பிரச்சாரத்தில் இறந்தவர்கள் பற்றி பேசாமல், நான் கண்ணயர்ந்ததை திரும்ப திரும்ப காட்டீனீர்களே ஏன்?” நியூஸ் 7க்கு திருமா கேள்வி

நோட்டாவால் வாய்ப்பிழந்த 15 திமுக வேட்பாளர்கள்!

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நோட்டா வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறது. இதில் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவனைத் தவிர, மற்ற அனைவரும் திமுக வேட்பாளர். இந்தத் தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றுள்ளது. (தகவல்: Su Po Agathiyalingam) ஆவடி தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 4994. இந்தத் தொகுதியில் 1395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் திமுக வேட்பாளர். பர்கூர் தொகுதியில் நோட்டாவுக்கு 1382 வாக்குகள். … Continue reading நோட்டாவால் வாய்ப்பிழந்த 15 திமுக வேட்பாளர்கள்!

வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!

அன்பு செல்வம் தலைவர் திருமா அவர்களுக்கு பாராட்டுக்கள்! தலைவர் வெற்றியடைந்திருந்தால் அதீத மகிழ்ச்சியே. ஆனாலும் தன‌க்கான தனித்தன்மையோடு வெற்றிக்கு மிக அருகில் இணையாகத் தான் இருக்கிறார் (48450 / 48363). கிட்டத்தட்ட அனைத்து ம.ந. கூட்டணித் தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு, கிடைத்த சொற்ப நேரத்தில் தனது தொகுதி மக்களிடமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, சொந்த சமூகத்தைச் சார்ந்தவரையே எதிர்கொண்டு களத்தில் நிற்க வேண்டியிருக்கிறதே அது மிகவும் துயரமானது. எனினும் அதையும் கடந்து அவர் பெற்ற வாக்குகள் இத்தனையென்றால் … Continue reading வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!

திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்

காட்டுமன்னார்கோயிலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். MURUGUMARAN.N All India Anna Dravida Munnetra Kazhagam 48450 THIRUMAAVALAVAN.THOL Viduthalai Chiruthaigal Katchi 48363 MANIRATHINEM. DR .K.I Indian National Congress 37346 SOZHAN.ANBU Pattali Makkal Katchi 25890 ANBALAGAN.K Independent 1360 JAYASRI.E Naam Tamilar Katchi 1055 SARAVANAN.S.P Bharatiya Janata Party 822 KALAIVANAN.S Bahujan Samaj Party … Continue reading திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்

“தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்

ஜெயமோகன் சமீபத்தில்  தமிழக அரசியல் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் [ஆனால் தமிழகச் சாதியமனம் அவரை பொதுத்தலைவராக எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்றும்]. எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட கட்டுரை அது. மலையாளத்தில் திருமாவளவன் பரவலாக அறியப்படாதவர் என்பதனாலும், நான் கடுமையான விமர்சகன் என அறியப்பட்டவன் என்பதனாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தரமுடியுமா என பல ஊடகங்கள் கோரியிருக்கின்றன. ஒரு … Continue reading “தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்

சொந்த ஊரில் தாயுடன் சென்று வாக்களித்த திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தன்னுடைய சொந்த ஊரான அங்கானூரில் தன் தாய் தொல். பெரியம்மாவுடன் சென்று வாக்களித்தார். இந்தத் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடுகிறார் ஆளூர் ஷானவாஸ். Joshua Isaac Azad Annan Thol. Thirumavalavan casted his vote along with his mother Thol. Periyamma in his native Anganur village. Our party deputy general secretary Aloor Shanavas is contesting from this constituency.

மக்கள் நலக்கூட்டணிக்கே என் ஓட்டு!

இளமதி சாய்ராம் “பணத்தை எப்படி கொண்டு போய் சேர்க்குறதுன்னு தெரியல... ஒரே கெடுபிடியா இருக்கு... வண்டிக்கு பெட்ரோல் போடுறதுக்காவது காசு கொடுங்கப்பா, எப்படி பிரச்சாரம் பண்றது..” இவ்விரண்டு, வெவ்வேறு முனைகளின் குரலாகத்தான் இந்த தேர்தலை பார்க்கத் தோன்றுகிறது. இலவச அறிக்கைகள், கருத்துக்கணிப்புகளை பார்த்து குழம்பித்தவிக்கும் மக்களின் சித்திரமே கண்முன் ஓடுகிறது. இந்த கட்சிதான் ஜெயிக்கும்னு தீர்மானமாக சொல்லமுடியால் இருப்பது இத்தேர்தலின் சுவாரசியம் என்றால், அதிமுக, திமுக போன்ற இரண்டு பெரிய கட்சிகளின் அதிகாரத்தை ஆட்டம் காணவைத்த மக்கள் நல … Continue reading மக்கள் நலக்கூட்டணிக்கே என் ஓட்டு!

காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் மீது தாக்குதல் முயற்சி!

திருமாவளவன் மீது நடந்த தாக்குதல் முயற்சியை வன்மையாக கண்டிப்பதாக மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி -தமாகா அணியின் காட்டுமன்னார்கோயில் தொகுதி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில், திருமாவளவன் அவர்கள் சாவடிக்குப்பத்தில் பிரச்சாரம் செய்யச் சென்றபோது, வழியில் டிராக்டரை நிறுத்தி அவர் சென்ற … Continue reading காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் மீது தாக்குதல் முயற்சி!

“திருமாவளவன் தமிழ்நாட்டுக்கு தலைமை ஏற்கும் காலம் வந்தால் மக்களுக்கு நல்லது” நடிகர் சத்யராஜ்

“திருமாவளவன் தமிழ்நாட்டுக்கு தலைமை ஏற்கும் காலம் வந்தால் மக்களுக்கு நல்லது” என நடிகர் சத்யராஜ் பேசியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலைப்பட்டறை வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில், “அம்பேத்கர் வழியைப் பின்பற்றும் திருமாவளவன் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக் கூடியவர்” என புகழாரம் சூட்டியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=s13fa3VuQpc

ஓட்டு கேட்ட திருமாவளவனுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த ‘அன்பு தங்கை’!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வானமாதேவியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மாணவி தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலை கழற்றி திருமாவளவனுக்கு பரிசளித்தார். இதுகுறித்து தன்னுடைய முகநூலில் பதிவு செய்திருக்கும் திருமாவளவன், “நேற்று வானமாதேவியில் தேர்தல் பரப்புரையின் போது நந்தினி என்கிற மாணவி தனது கழுத்திலிருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை கழற்றி அன்பளிப்பாக கொடுத்தார்.... "என் கழுத்திலிருந்த செயின் இனி எங்க அண்ணனிடம் இருக்கும்"" என சொல்லி எனக்கு அணிவித்தார். அது … Continue reading ஓட்டு கேட்ட திருமாவளவனுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த ‘அன்பு தங்கை’!

சாலை விபத்தால் தவித்த பாமக நிர்வாகி குடும்பத்துக்கு உதவிய திருமாவளவன்!

25.4 2016 சிதம்பரதில் இருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் வழியில் திருநாரையூர் என்னும் இடத்தில் சாலை விபத்தில் அடிபட்டு கணவன் மனைவி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அரைமணி நேரமாக யாரும் உதவிக்கு வராமல் மயங்கி கிடந்த அவர்களை மீட்டு தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் வாகனத்தில் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அரசியல் களத்தில் சாதி அரசியலுக்காக விசிக எதிர்க்கும் பாமகவின் நிர்வாகி அவர் என்று பின்னர் தெரியவந்துள்ளது. தகவல்: அகரன்

காட்டுமன்னார் கோயிலில் திருமாவளவன்; ஆர்.கே.நகரில் வசந்தி தேவி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பில் விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார் கோயிலில் போட்டியிடுவதாகவும் ஆர். கே. நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்கர்!

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் காலின்ஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப்பற்றி பிஎச்டி பட்டத்துக்காக ஆய்வு செய்துவருவதாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ரவிக்குமார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் காலின்ஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப்பற்றி பிஎச்டி பட்டத்துக்காக ஆய்வு செய்துவருகிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது என்னுடனேயே தங்கியிருந்து திருவள்ளூர் தொகுதியில் கள ஆய்வை மேற்கொண்டார். அவரது தெளிவான தமிழ்ப் பேச்சால் தொகுதி முழுதும் பிரபலமாகிவிட்டார். வாக்குப் பதிவு முடிந்து அமெரிக்கா திரும்பியபோது அவருக்கு எங்கள் சின்னத்தை நினைவுபடுத்தும்விதமாக … Continue reading விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து ஆய்வு செய்யும் அமெரிக்கர்!

”வைகோ துணை முதல்வர்; திருமாவளவன் கல்வி அமைச்சர்; இடதுசாரிகளுக்கு உள்ளாட்சி, நிதித்துறை அமைச்சகம்”

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராவார். வைகோ துணை முதல்வராகவும் திருமாவளவன் கல்வி அமைச்சராகவும் பதவி ஏற்பார்கள். இடதுசாரிகளுக்கு உள்ளாட்சித் துறையும் நிதித்துறையும் ஒதுக்கப்படும் என தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

டிவி சேனல் தொடங்குகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி: பெயர் வெளிச்சம் டிவி!

விடுதலை சிறுத்தைகள் கட்சி, வெளிச்சம் டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சானல் ஒன்றைத் தொடங்குகிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ். அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் வெளிச்சம் டிவி செயல்பட ஆரம்பிக்கும் என அந்தச் செய்தி சொல்கிறது. “ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை ஒலிப்பதாக இந்தச் சேனல் இருக்கும். ஊடகங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் மற்றவர்களுக்கு இணையாக ஒலிப்பதில்லை. செய்திகள், நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இதே தான்” என்றூ விடுதலை சிறுத்தைகள் … Continue reading டிவி சேனல் தொடங்குகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி: பெயர் வெளிச்சம் டிவி!

சட்டப் பேரவைத் தேர்தல் 2016: ஆம் ஒரு தலித் தலைவர் ராஜதந்திரி ஆனார்!

“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்கிற இந்தக் கோரிக்கை குறிப்பிட்ட சிலருக்குப் பதவி வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படுவதல்ல. மாறாக, விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவேயாகும். குறிப்பாக, தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மக்கள் அதிகார வலிமை பெற வேண்டும் என்னும் நோக்கத்தின் அடிப்படையில்தான் கூட்டணி ஆட்சி முறையை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம். அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால் அது எதேச் சதிகாரமாக எளிய மக்களின் … Continue reading சட்டப் பேரவைத் தேர்தல் 2016: ஆம் ஒரு தலித் தலைவர் ராஜதந்திரி ஆனார்!

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

இது மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி!

புதுச்சேரி-கடலூர் சாலையில் சிங்காரவேலர் சிலை அருகே மக்கள் நலக்கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆர்.ராஜாங்கம், தேவ.பொழிலன், அ.சந்திரசேகரன், லெனின் முன்னிலை வகித்தனர். மக்கள் நலக்கூட்டணி இணையதளத்தை மதிமுக பொதுச் செயலர் வைகோ துவக்கி வைத்தார். கூட்டணி இலச்சினை (லோகோ) து.ராஜா எம்.பி. வெளியிட்டார். குறைந்தபட்ச செயல்திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட முத்தரசன், ராமகிருஷ்ணன். கே.நாராயணா பெற்றுக் கொண்டனர். முன்னதாக … Continue reading இது மக்கள் நலக் கூட்டணி செல்ஃபி!

தலித் முதல்வர்: சிலர் வேண்டுமென்றே கூட்டணியில் குழப்பம் உண்டாக்க முயல்கின்றனர்: திருமாவளவன் விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் ‘தலித் முதல்வர்’ என்ற விவாதம் குறித்து விளக்க அளித்திருக்கிறார். “மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, 'முதல்வர் வேட்பாளர்' குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளோம். கூட்டணியின் 'குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை' முன்வைத்து மக்களைச் சந்திப்பது என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இந்நிலையில், "தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?" … Continue reading தலித் முதல்வர்: சிலர் வேண்டுமென்றே கூட்டணியில் குழப்பம் உண்டாக்க முயல்கின்றனர்: திருமாவளவன் விளக்கம்

மதுரை மாநாட்டில் அப்படி என்னதான் பேசிவிட்டார் திருமாவளவன் ?: திமுகவினரை ஆத்திரமூட்டிய பேச்சின் கட்டுரை வடிவம்!

மக்கள் நல கூட்டணியின் மதுரை மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதுதான் தற்போது இணைய உலகின் பரபரப பேச்சாக இருக்கிறது. திருமாவளவனின் பேச்சிற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு சில திமுகவினர் திருமாவளவனை தனிப்பட்ட  முறையில் தாக்கி வருவது படிப்பவர்களிடயே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னதான் திருமாவளவன் பேசி விட்டார் என்பவர்களுக்காக, அந்த பேச்சின் கட்டுரை வடிவம். Subramanian Ravikumar மக்கள் நலக் கூட்டணியை யாரும் உடைக்க முடியாது. வரும் சட்டமன்றத் … Continue reading மதுரை மாநாட்டில் அப்படி என்னதான் பேசிவிட்டார் திருமாவளவன் ?: திமுகவினரை ஆத்திரமூட்டிய பேச்சின் கட்டுரை வடிவம்!

மதுரை மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திருமா என்னதான் பேசினார்?

மதுரையை அடுத்த ஒத்தக்கடையில், மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் … Continue reading மதுரை மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திருமா என்னதான் பேசினார்?

மக்கள் நலக் கூட்டணி, அதிமுகவின் பி’ டீம்! திமுகவின் விமர்சனத்துக்கு வைகோ என்ன சொல்கிறார்?

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுகவின் பொதுச்செயலாளருமான வைகோ, தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் அ. குமரேசனுக்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி... மக்கள் நலக் கூட்டணி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதை திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்தக் கூட்டணி அதிமுக-வின் ‘பி’ டீம் என்று கூட சொல்கிறார்கள். திமுக-வுக்கு இவ்வளவு ஆத்திரம் வரக் காரணம் என்ன? அதிமுக-வை வீழ்த்துவதுதான் நோக்கம் என்றால் திமுக பக்கம்தான் வரவேண்டும் என்கிறார்களே?அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற கோபம் தங்களுக்கு ஆதாயமாக மாறும் … Continue reading மக்கள் நலக் கூட்டணி, அதிமுகவின் பி’ டீம்! திமுகவின் விமர்சனத்துக்கு வைகோ என்ன சொல்கிறார்?

சாதி கொடுமைக்கு ஆளான நூறு வயது முதியவர் இவர்: யாரென்று தெரிகிறதா ?

கடந்த மூன்றாம் தேதி காலமான மயிலாடுதுறை அருகேயுள்ள “திருநாள் கொண்டச்சேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 100 வயது முதியவர் செல்லமுத்து. இவரது சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது இவருடைய குடும்பத்தினரின் கோரிக்கை. வழக்கமாக தலித்துகள் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை மழையால் உருக்குலைந்து போனதை அடுத்து இந்தக் கோரிக்கையை வைத்தார். கோரிக்கை என்பதைவிட உரிமையைக் கோரினார்கள். நீதிமன்றத்துக்குப் போய் தங்கள் உரிமையைப் பெற்றார்கள். பொது பாதைக்கான நான்கு நாட்கள் போராட்டத்திற்கு பின், உயர்நீதிமன்ற … Continue reading சாதி கொடுமைக்கு ஆளான நூறு வயது முதியவர் இவர்: யாரென்று தெரிகிறதா ?

ஜாதி வெறியைத் தூண்டுகிறாரா திருமாவளவன்? காலச்சுவடு கண்ணன் vs யாழன் ஆதி

சமீபத்தில் திருமாவளவனின் வீடியோ பேச்சு குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம்  முகநூலில் (டிசம்பர் 26) ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருமாவளவனின் பேச்சு சாதியத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.  மேலும் அந்தப் பதிவில், “திருமாவளவனின் இந்த உரை உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. வசவு என்று கருதப்படும் சொற்களை அவர் பயன்படுத்துவதோ ஒடுக்கும் சாதிகளை சீண்டுவதோ என் அதிர்ச்சிக்கு காரணம் அல்ல. இவ்வுரையின் வழி பெண்கள் பற்றிய அவர் மன எண்ணங்கள் பல வெளியே சிந்தி விட்டன. கலப்புத் திருமணம் … Continue reading ஜாதி வெறியைத் தூண்டுகிறாரா திருமாவளவன்? காலச்சுவடு கண்ணன் vs யாழன் ஆதி

“மனிதநேயம் என்பது ஒருவழிப்பாதை அல்ல” ஆளூர் ஷா நவாஸ்

 ஆளூர் ஷா நவாஸ் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மோகன் சித்ரா தம்பதியர், தமது குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்தார்களல்லவா! அந்த யூனுஸும் நானும் இன்று திருவொற்றியூரிலுள்ள ஆரோக்கிய தாஸ் வீட்டுக்கு சென்றோம். யார் அந்த ஆரோக்கியதாஸ்? திமுகவின் நகரத் துணைச் செயலாளர். இருமுறை கவுன்சிலராக இருந்தவர். மக்கள் சேவகர். விஷ பூச்சி கடித்து பலியான இம்ரானின் அண்டை வீட்டுக்காரர். இம்ரானை மருத்துவமனையில் சேர்த்தது முதல் இம்ரான் மரணத்தை வெகுமக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தது வரை அனைத்தையும் உடனிருந்து செய்தவர். … Continue reading “மனிதநேயம் என்பது ஒருவழிப்பாதை அல்ல” ஆளூர் ஷா நவாஸ்