நெல்லைஅருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : டிரைவர் தூங்கியதால் 11 பேர் பலி

வேளாங்கண்ணியிலிருந்து திருவனந்தபுரம் சென்ற தனியார் பஸ், திருநெல்வேலி அருகே பனக்குடியை அடுத்து பிலாக்கொட்டைப்பாறையில் சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்ததில் 11 பேர் பலியாயினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவ்விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.   டிரைவர் துாங்கியதே விபத்துக்கான காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.