சசிகலா புஷ்பா என்னை ஒரு முறைதான் அறைந்தார்: திருச்சி சிவா

டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவுக்கும் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கு தகராறு ஏற்பட்டது. திருச்சி சிவா, தமிழக அரசு குறித்து விமர்சித்ததாகவும் அதைக் கேட்டு சும்மா இருக்க முடியாது என்பதால் நான்கு அறை விட்டதாகவும் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். ஆனால், திருச்சி சிவாவோ எதிரில் வந்த தன்னை சட்டையைப் பிடித்து ஒரே முறைதான் கன்னத்தில் அறைந்ததாகவும் பேட்டியளித்துள்ளார். https://www.facebook.com/qaneio/videos/10209933938562954/

உட்கட்சிப் பூசல்: அதிமுக அலுவலகத்தில் குண்டுகள் வீச்சு; திமுக அலுவலகம் முற்றுகை

மதுரையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதுரையில்அலுவலகத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள அவரது வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உட்கட்சிப் பூசல் காரணமாக அமைச்சர் அலுவலகத்தில், நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் அலுவலகத்தில் குண்டுவீசும் அளவுக்கு உட்கட்சி பூசல் வளர்ந்திருக்க, திமுகவின் உட்கட்சி பூசல் ஓரளவுக்கு பராவயில்லை ரகம்தான்! திமுக ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்தவர் கே.என்.நேரு. தற்போது மாநிலங்களவை திமுக எம்.பி.யாக பதவி வகித்து வருபவர் … Continue reading உட்கட்சிப் பூசல்: அதிமுக அலுவலகத்தில் குண்டுகள் வீச்சு; திமுக அலுவலகம் முற்றுகை