செந்தில்பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு

பணப்பட்டுவாடா அதிகளவில் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி சட்டப் பேரவைத் தேர்தலை அரவக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் தள்ளிவைத்தது தேர்தல் ஆணையம். தேர்தல் 23-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால், வரும் 21-ம் தேதி வரை பிரசாரம் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் வி. செந்தில் பாலாஜி பள்ளப்பட்டி பகுதியில் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். செந்தில் பாலாஜியின் பணிமனை அலுவலகத்தில் மர்ம நபர்கள் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். … Continue reading செந்தில்பாலாஜி அலுவலகத்தில் குண்டுவீச்சு

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்படி செய்யப்படுகின்றன?

தளவாய் சுந்தரம் எனக்குத் தெரிந்து நேற்று மாலையில் இருந்து எட்டு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. எட்டும் தமிழகத்துக்கு வெளியேயுள்ள ஊடகங்கள் செய்தவை. எப்படி இந்த சர்வேகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த விபரங்கள் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் எதுவும் சொன்னதாகவும் தெரியவில்லை. பொதுவாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்றால், சில இடங்களில் வாக்குச்சாவடிக்கு வெளியே நின்று, வாக்களித்து வருபவர்களிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, அதன்படி கணிக்கப்படுகிறது என்பதுதான் என் புரிதல். உங்களுக்கும் அப்படித்தான் … Continue reading தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்படி செய்யப்படுகின்றன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு: தமிழகத்துக்கு முரண்பட்ட கணிப்புகள்

சட்டப் பேரவை தேர்தல்  முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ளன. அதில் சில... டைம்ஸ் நவ் சி வோட்டர் அதிமுக: 139 திமுக:78 மற்றவர்கள்: 17 இந்தியா டுடே-ஆக்ஸிஸ் அதிமுக - 89 -101 திமுக 120- 140 மற்றவர்கள் 4- 8 நியூஸ் நேஷன் அதிமுக- 97 திமுக  - 116 மற்றவர்கள் - 21 தந்தி டிவி கருத்துகணிப்பு அதிமுக: 102 திமுக: 59 பாமக: 01 இழுபறி: 52

பாலக்கோட்டில் 78%; பென்னாகரத்தில் 79% வாக்குப்பதிவு; 3 மணி வரையான நிலவரம்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக 3 மணி வரையான நிலவரப்படி  பென்னாகரத்தில் 79 சதவீதமும் பாலக்கோட்டில் 78 சதவீதமும் தர்மபுரியில் 72 சதவீதமும் பாப்பிரெட்டிபட்டியில் 72 சதவீதமும் அரூரில் 72 சதவீதமும் பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்ட தொகுதிகள்  இவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

தேவையான இடங்களைப் பெறும் என்றார் கருணாநிதி; 234 தொகுதிகளில் வெற்றி பெறும் என்கிறார் ஸ்டாலின்!

காலை 7.15 மணிக்குள் திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரத்தில் உள்ள வாக்குச்சாடிவயில் வாக்குப்பதிவு செய்தார். வாக்களித்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி, தேர்தலில் திமுக ஆட்சியமைக்க தேவையான இடங்களைப் பெறும் என்றார். சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் வாக்களித்த திமுக பொருளாளர் மு. க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசியபோது, “திமுக 234 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்றார்.

பூத் சிலிப் இ‌ல்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி?

பூத் சிலிப் கிடைக்காதவர்கள், பதினோரு வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் எனப்படும் கடவுச் சீட்டு ஓட்டுநர் உரிமம் பான் கார்டு என்கிற நிரந்தர கணக்கு எண் அட்டை மத்திய மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவன‌ங்கள் வழங்கிய பணி அடையாள அட்டை வங்கிகள், தபா‌ல் நிலையங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு பு‌த்தகங்கள் தேசிய மக்‌கள் தொகை பதிவேட்டின் கீழ் தலைமைப் பதிவாளர் வழங்கிய ஸ்மார்ட் கார்டு மகாத்மா … Continue reading பூத் சிலிப் இ‌ல்லாதவர்கள் வாக்களிப்பது எப்படி?

வாக்குப் பதிவு தொடங்கியது; தஞ்சாவூரிலும் தேர்தல் ஒத்திவைப்பு

சட்டப் பேரவைத் தேர்தல் 2016க்கான வாக்குப் பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவில் மக்கள் கலந்துகொண்டனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில், அதிகளவு பணப்பட்டுவாடா, பணம் பறிமுதல் என எழுந்த புகாரைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கான தேர்தல் இம்மாதம் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகிற 23-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், வருகிற 25-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவு பணம் … Continue reading வாக்குப் பதிவு தொடங்கியது; தஞ்சாவூரிலும் தேர்தல் ஒத்திவைப்பு

நிதி நெருக்கடியையும் மீறி துணிவுடன் களம் காணும் சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள்

நிதி நெருக்கடியையும் வலுவான எதிராளிகளையும் பொருட்படுத்தாமல், சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள், சேலம் மாவட்டத்தின் வீரபாண்டி மற்றும் எடப்பாடி தொகுதிகளில் துணிவோடு களம் காண்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் P. தங்கவேல், எடப்பாடி தொகுதியில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகத் துறையின் அமைச்சர் ‘எடப்பாடி’ பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் A. மோகன், திமுகவின் முன்னாள் அமைச்சர் ‘வீரபாண்டி’ S. ஆறுமுகம் அவர்களின் மகன் ‘வீரபாண்டி’ … Continue reading நிதி நெருக்கடியையும் மீறி துணிவுடன் களம் காணும் சிபிஐ, சிபிஐ (எம்) வேட்பாளர்கள்

“இதுதான் ஊடக அறமா?”:ஆனந்தவிகடனுக்கு ஒரு வாசகரின் கடிதம்!

ஜெ. சுப்ரமணியன் ஆனந்த விகடனுக்கு வணக்கம் ஆனந்தவிகடனின் பலவருட வாசகன் என்ற உரிமையிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதழியல் கற்றுத்தரும் ஆசிரியன் என்ற பொறுப்பிலும் இந்த பதிவை இடுகிறேன். கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டில் நடந்த 2ஜி ஊழல் குறித்த தொடர்ச்சியாக எழுதி தமிழ் வாசகர்களுக்கு உண்மைகளை கொண்டு சேர்த்ததில் விகடனுக்கு பெரிய பங்குண்டு. அது மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் (மதுரையில் கொஞ்சம் அதிகம்) தி.மு.க.வினர் நடத்திய அராஜகங்களை வெட்ட வெளிச்சமாக்கியது விகடன். அதேபோல கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த … Continue reading “இதுதான் ஊடக அறமா?”:ஆனந்தவிகடனுக்கு ஒரு வாசகரின் கடிதம்!

வீடியோ: வட்டாட்சியர் தலையில் பணத்தை கொட்டிய‌ வேட்பாளர் கே. பாலு மீது வழக்கு!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் பா.ம.க சார்பில் களம் காணும் பாலு, வாக்காளர்களுக்கு அதிமுகவும், திமுகவும் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்திருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் 20-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தேர்தல் அலுவலரை சந்தித்த பாலு, பணியில் இருந்த வட்டாட்சியர் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கையில் வைத்திருந்த பணத்தை அவர் தலையில் கொட்டியும், முகத்திற்கு எதிரே எரிந்தும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அந்தப் பணம், அதிமுக, திமுக சார்பில் … Continue reading வீடியோ: வட்டாட்சியர் தலையில் பணத்தை கொட்டிய‌ வேட்பாளர் கே. பாலு மீது வழக்கு!

தமிழகம் முழுவதும் அதிமுக, திமுகவினரிடமிருந்து பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணம் பறிமுதல்!

ஈரோடு கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பாலசுப்பிரமணியம் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் ரொக்கத்துக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் வீட்டில் பிடிபட்ட தொகை குறித்‌‌த உண்மையான தகவல்களை மறைப்பதாகப் புகார் தெரிவித்து அதிகாரிகள் சென்ற காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து காவல் துறையினர் பொதுமக்களை … Continue reading தமிழகம் முழுவதும் அதிமுக, திமுகவினரிடமிருந்து பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணம் பறிமுதல்!

#அரவக்குறிச்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மக்கள் கருத்து

ஞாநி சங்கரன் அரவக் குறிச்சியில் மாட்டிக் கொண்டார்கள். 234 தொகுதிகளிலும் அதையேதான் செய்துகொண்டிருக்கிறார்கள் அதிமுகவும் திமுகவும். இந்த இரு கட்சிகளையும் ஒட்டுமொத்தமாக டிஸ்க்வாலிஃபை செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிடவேண்டும். தேர்தலை தள்ளி வைப்பது போதாது. குற்ற வேட்பாளரை கட்சியை ரத்து செய்யவேண்டும். பிரதாபன் ஜெயராமன் தமிழ் 'தி இந்துவில்" முதல்பக்கம் முழுமையும் திமுக விளம்பரம். இரண்டாவது பக்கம் முழுவதும் பாமக விளம்பரம் வந்துள்ளது. ஆனால், அரவக்குறிச்சி தேர்தல் ஒத்திவைப்பு சம்பந்தமாக ஒரு பெட்டி செய்தி கூட இல்லை. … Continue reading #அரவக்குறிச்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மக்கள் கருத்து

வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

வாசுதேவநல்லூர் பாமக வேட்பாளர் காசிபாண்டியன் திமுகவில் இணைந்தார். திமுக தலைமைக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் திமுகவில் இணைந்தார் காசிபாண்டியன். கோபி, நாங்குநேரி பாமக வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம்? முடிவெடுக்க உதவும் 7 வழிகள்!

அ. குமரேசன் இன்று ஓய்வு நாள். ஞாயிற்றுக் கிழமை என்பதால் மட்டுமல்ல, வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள், பிரச்சாரங்கள் ஓய்ந்ததன் மறுநாள் என்பதாலும். ஓய்ந்துகிடப்பதற்கான நாளல்ல, ஓய்வாகச் சிந்தித்து, பழைய நிலைமைகளையும் புதிய வளர்ச்சிப்போக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்து சரியான முடிவுக்கு வர வேண்டிய நாள். அந்தச் சிந்தனையில் அடிப்படையாக இவற்றை மனதில் கொள்வது நலம்: 1) கருத்துக் கணிப்புகளைக் கண்டுகொள்ளாதீர்கள். சில ஊடகங்கள் போலப் பணம் பெற்றுக்கொண்டு செய்யப்பட்டதானாலும் சரி, சில ஆய்வாளர்களைப் போலத் தானாக முன்வந்து … Continue reading எந்தக் கட்சிக்கு வாக்களிக்கலாம்? முடிவெடுக்க உதவும் 7 வழிகள்!

ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தை முடித்த நல்லகண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தன்னுடைய பிரச்சாரத்தை ஸ்ரீபெரும்புதூரில் முடித்தார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மா. வீரக்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் அவர். மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர் மா. வீரக்குமார் வாக்களர்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். திருப்பெரும்புதூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு வணக்கம். என் பெயர் மா.வீரக்குமார். நான் வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் வேட்பாளராக நமது திருப்பெரும்புதூர் தொகுதியில் … Continue reading ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தை முடித்த நல்லகண்ணு

“அரவக்குறிச்சிக்கான எனது போராட்டம் இவ்வளவு மோசமாக முடியும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை” : ஜோதிமணி

“அரவக்குறிச்சிக்கான எனது போராட்டம் இவ்வளவு மோசமாக முடியும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை” என தெரிவித்துள்ளார் காங்கிரஸைச் சேர்ந்த ஜோதிமணி. அரவக்குறிச்சியில் போட்டியிட விரும்பிய ஜோதிமணிக்கு தன் கூட்டணியில் இருந்த திமுகவுக்கு இந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்தது காங்கிரஸ். திமுக வேட்பாளர் பழனிச்சாமியும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியும் இந்தத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியாத பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகக் கூறி அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை 23ந் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் ஜோதிமணி தன்னுடைய முகநூல் … Continue reading “அரவக்குறிச்சிக்கான எனது போராட்டம் இவ்வளவு மோசமாக முடியும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை” : ஜோதிமணி

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக, அதிமுக பணப்பட்டுவாடா: தேர்தல் தள்ளிவைப்பு

அரவக்குறிச்சி தொகுதியில் பணமும், பரிசுப்பொருட்களும் வினியோகிக்கப்படுவதாக தேர்தல் கமிஷனுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. கடந்த மாதம் 22–ந்தேதி அன்புநாதன் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 200 வேட்டி, சேலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில ஆவணங்கள், ரூபாய் நோட்டுகளை எண்ணும் மெஷின்கள், பதிவு செய்யப்படாத ஆம்புலன்சுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அந்த தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியின் வீடு, கரூர் மற்றும் சென்னையில் … Continue reading அரவக்குறிச்சி தொகுதியில் திமுக, அதிமுக பணப்பட்டுவாடா: தேர்தல் தள்ளிவைப்பு

தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள்: திமுக, அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள் அறிவித்திருப்பது குறித்து விளக்கம் அளிக்க திமுக, அதிமுக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தக் கட்சிகள் அறிவித்துள்ள இலவச திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி  பெறப்படும் என விளக்கம் தர வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இந்த விளக்கத்தை நாளை மாலை 5 மணிக்குள் தர வேண்டும் என இரண்டு கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் குழப்பமா?

யாருக்கு வாக்களிப்பது? குழுப்பத்தை தீர்க்குமா? இந்த படம்...  

சர்வாதிகார ஆட்சியா? மன்னராட்சியா?

விஜய் பாஸ்கர் இந்திய ஜனநாயகம் பற்றி கொஞ்சம் யோசித்தால் கூட நம்பிக்கையின்மையும் விரக்தியும் வந்து மன உளைச்சல் வந்துவிடுவதால் அது பற்றி பொதுவாக இந்தியர்கள் நினைப்பதில்லை என்று நினைக்கிறேன். அப்படி யோசிக்க விரும்பாத இந்தியன்களில் நானும் ஒருவன். 2006 இல் இருந்து 2011 வரை திமுகவினரின் குடும்ப அராஜகம் கண்டு மனம் நொந்த முறையில்தான் 2011 யில் அதிமுகவுக்கு ஒட்டுப் போட்டான் தமிழன். அதிலும் திருமங்கலம் தேர்தலில் திமுக செய்த அட்டகாசம், தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் மூன்று … Continue reading சர்வாதிகார ஆட்சியா? மன்னராட்சியா?

“சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை விரட்டுவோம்”: இரா. முத்தரசன் வேண்டுகோள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மறுநாள் (16.05.2016) நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுகிறோம். இதன் மூலம் 15வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் தருணத்தில் எந்த வகைப்பட்ட கொள்கை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் எந்த கொள்கை வழிப்பட்டு அரசை வழி நடத்தினார்கள்? மக்களின் நலன் … Continue reading “சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை விரட்டுவோம்”: இரா. முத்தரசன் வேண்டுகோள்

“பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்

Kumaresan Asak விஜயகாந்தை விமரிசிக்கிறவர்கள் அவருக்குக் கோர்வையாகப் பேசத்தெரியாது என்று சொல்கிறார்கள். பேசத்தெரியாத ஒருவர் இப்போது பேசியிருக்கிற பேச்சு குண்டு போட்டது போன்ற விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும், வாக்குச் சாவடியிலேயே மற்ற கட்சிகளின் முகவர்களுக்குப் பணம் கொடுப்பதும், அணி சேர்வதற்காகத் தலைமைக்கே பணம் கொடுப்பதும் இப்படிப்பட்ட பெரிய கட்சிகளைப் பொறுத்தவரையில் புதிய விசயம் அல்ல. அந்தக் கட்சிகள் பண பேரம் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்வாரா நண்பர்? தேமுதிகவை இழுக்க கோடிக்கணக்கில் பணம் தர … Continue reading “பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்

மக்கள் நலக்கூட்டணி பிற கட்சி/கூட்டணிகளில் இருந்து எப்படி மாறுபடுகிறது?

மக்கள் நலக்கூட்டணியோடு விஜய்காந்த், வாசன் உள்ளிட்டவர்களும் இணைக்கப்பட்டதற்கு பிறகு சில விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி மாற்றுக் கூட்டணி என்று சொல்லிவிட்டு தேர்தல் ஓட்டுக்கான கூட்டணியாக மாற்றப்பட்டுவிட்டதே உங்கள் மாற்றுக்கொள்கை இதுதானா என்பதுதான் பலரது விமர்சனங்களுக்கான மையப்புள்ளி. இதனை நாம் நேரடியான அர்த்தத்தில் எடுக்க முடியாது என்பது என் வாதம். எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் பின்னோக்கி பத்து மாத காலத்திற்கு இழுத்து சென்று அங்கிருந்து வாதம் தொடங்குவதுதான் சரியாக இருக்கும். 2015 ஜுலையில் மக்கள் நலக்கூட்டியக்கம் தொடங்கப்பட்டு … Continue reading மக்கள் நலக்கூட்டணி பிற கட்சி/கூட்டணிகளில் இருந்து எப்படி மாறுபடுகிறது?

பகுத்தறிவு இல்லாத கருத்துக் கணிப்புகள்!

எஸ். கண்ணன் மக்களின் மன நிலையைஅறிவது தான் நோக்கம் என்றால், எத்தனை கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டாலும் முடிவுகள் ஒரே மாதிரியாகத்தானே பிரதிபலிக்க முடியும். தேர்தல் முடிவதற்குள் எப்படியும் இன்னும் இரண்டு அல்லது மூன்று கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படலாம். தேர்தல் வந்தால் மைக்செட் வைப்பது, நோட்டீஸ், போஸ்டர் மற்றும் தலைவர்கள் பிரச்சாரம் என்ற வரிசையில் இப்போது கருத்துக் கணிப்புகள் எடுப்பது என்பது கடமைக்கு செய்யும் ஒரு வேலையாக மாறிவிட்டது.முதலாளிகளுக்குச் சாதகமான இந்த நவீன பொருளாதார சூழலில் மக்கள் … Continue reading பகுத்தறிவு இல்லாத கருத்துக் கணிப்புகள்!

ஓட்டுக்கு பணம் வாங்கிய 250 பேருக்கு தேர்தல் ஆணையம் சம்மன்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருமங்கலத்தில் வாக்களிக்க பணம் பெற்றதாக 250 பேருக்கு தேர்தல் ஆணையம் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. பணம் கொடுத்தவர்கள் கைதானபோது கொடுத்த தகவலின் பேரில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வாணியம்பாடி அதிமுக வேட்பாளர் வீட்டில் சோஃபா அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 14 லட்சம் பறிமுதல்!

வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்று அதிமுக வேட்பாளர் நிலோபர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் சோஃபாவின் அடியில் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 8,000 ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தப் பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வாணியம்பாடி தொகுதியில் திமுக கூட்டணியில் முஸ்லீக் வேட்பாளர் செய்யது பாரூக் போட்டியிடுகிறார். மக்கள் நலக் கூட்டணியின் … Continue reading வாணியம்பாடி அதிமுக வேட்பாளர் வீட்டில் சோஃபா அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 14 லட்சம் பறிமுதல்!

மக்கள் நலக் கூட்டணி ஏன் ஆட்சி அமைக்க வேண்டும்? ஓர் எளிய மனிதனின் பார்வையில்…

Ganesan Anbu  தமிழக அரசியலில் பல ஆண்டுகளாகவே மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த “ மாற்றம் ” எனும் முழக்கம் இந்தச் சட்டமன்ற தேர்தலில் சாத்தியமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணியே அம்மாற்றத்திற்கான ஒரே அணியாகவும் தோன்றுகிறது. கேப்டன் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராகவும், வைகோவை அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டுள்ள தேமுதிக + தமாகா + மக்கள் நலக் கூட்டணி அடங்கிய அணியை தமிழக மக்கள் ஒவ்வொருவரும் ஆதரிக்க வேண்டிய காரணங்களாக இவற்றைக் கருதுகிறேன்.. 1. ஒற்றுமையும் புரிந்துணர்வும் : … Continue reading மக்கள் நலக் கூட்டணி ஏன் ஆட்சி அமைக்க வேண்டும்? ஓர் எளிய மனிதனின் பார்வையில்…

டெட்டாலும் சாதிவாரி கணக்கெடுப்பின் அரசியலும்

Anbu Selvam இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாடு பல துறைகளில் முன்னேறியுள்ளது என்பதாகவும், சமூக - அரசியல் முற்போக்குச் சிந்தனையில் அது முன்னோடியாகத் திகழ்வதாகவும் இது வரையிலும் கூறிவருகிற கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், முற்போக்காளர்கள், சமூகச்செயல்பாட்டாளர்கள் போன்றோருக்கு இந்த தேர்தல் வேறொரு புதிய உண்மையை வெளிக்காண்பித்துள்ளது. அதாவது கொள்கை கோட்பாடுகளைச் சொல்லி வாக்கு சேகரித்த அரசியல் மனநிலையில் இருந்து விடுபட்டு, மிக வெளிப்படையாக சாதியைச் சொல்லி வாக்கு திரட்டும் யுக்தியை இடைநிலைச் சாதிகளைக் கொண்ட கட்சிகள் கையிலெடுத்துள்ளன. … Continue reading டெட்டாலும் சாதிவாரி கணக்கெடுப்பின் அரசியலும்

வேட்பாளர் அறிமுகம்: ’அரசியல் அதிகாரமே தீர்வு’ செய்யூர் தொகுதி எழில் கரோலின்

செய்யூரின் பிரபலம் எழில் கரோலின். வழக்கறிஞர், சமூக சேவகர் என்பதையும் சேர்ந்து பிரபலத்துக்கு மேலும் ஒரு காரணம் இருக்கிறது, அது முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் என்பது. “என் அப்பா அரசியல் பிரபலம் என்பது மட்டுமல்ல, சமூகத்தின் மேல் உள்ள அக்கறையும் ஒரு காரணம். இந்த சமூகம் சாதி கட்டமை உடைக்க வேண்டும், சாதியில்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதில் இருந்தே எனக்குள் இருந்தது. கல்லூரி நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் … Continue reading வேட்பாளர் அறிமுகம்: ’அரசியல் அதிகாரமே தீர்வு’ செய்யூர் தொகுதி எழில் கரோலின்

தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது?

“தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கலாச்சாரம் மற்றும் திராவிட அரசியல் பற்றி பேசுகிற அரசியல் கட்சிகளே இருந்திருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால், கடந்த 50 ஆண்டுகளில் ஈ.வே.ரா. பெரியார் முன்வைத்த ஒட்டுமொத்த சமூக சீர்திருத்த பிரச்சனையை இக்கட்சிகள் ஆழக் குழி தோண்டி புதைத்துவிட்டன” என தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத். தமிழக வாக்காளர்களிடன் வீடியோ மூலம் பேசியுள்ள அவர், http://www.youtube.com/watch?v=fMFg-FcLp2k “சமூக சீர்திருத்தம் இங்கு செயல்படுத்தப்படவில்லை என்பதுடன் மட்டுமின்றி, அதற்குப் … Continue reading தமிழகத்தில் சமூக நீதி எங்கே இருக்கிறது?

திருவாரூர் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் பெயர் போட்ட 500 மாதிரி வாக்குப் பதிவு எந்திரங்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 500 மாதிரி வாக்குப் பதிவு எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. பூண்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஓமலூரில் இருந்த வந்த லாரியில் மாதிரி  திருவாரூர் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் பெயரும் அதிமுக இரட்டை இலை சின்னமும் பதிக்கப்பட்டுள்ளது. டெமோ காட்ட எடுத்துச் செல்லப்பட்டது என தஞ்சாவூர் ஆட்சியர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார். இந்த மாதிரி இயந்திரங்கள் கார்டு போர்டில் செய்யப்பட்டவை என தமிழக தேர்தல் ஆணையர் லக்கானி விளக்க அளித்துள்ளார். வாக்காளர் … Continue reading திருவாரூர் அதிமுக வேட்பாளர் பன்னீர் செல்வம் பெயர் போட்ட 500 மாதிரி வாக்குப் பதிவு எந்திரங்கள் பறிமுதல்

ஒருமுறை நடந்தால் விபத்து; தொடர்ந்து நடந்தால் அது படுகொலை!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட புளியங்குடியை சேர்ந்த ராஜாமணி(70) என்பவர், வீடு திரும்பும்போது, மயங்கி விழுந்து மரணமடைந்தார்.  Ramalingam Kathiresan இவரைத் "தாய்" என்பது தாய்மார்களை அவமதிப்பது ஜெ கூட்டத்திற்குப் போய் மாண்டு போனவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்திருக்கிறது. ஒரு முறை நடந்தால்தான் விபத்து. தொடர்ந்து நடந்தால் அவை படுகொலைகள் -அலட்சியத்தால் நடக்கும் கொடூரங்கள். "பிள்ளைக ளுக்கு என்ன தேவை என்று ஒரு … Continue reading ஒருமுறை நடந்தால் விபத்து; தொடர்ந்து நடந்தால் அது படுகொலை!

“நாடார் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” சாதி பத்திரிகை மகாஜனம் கேட்கிறது!

நாடார் சாதி பத்திரிகையான மகாஜனம் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நாடார் சாதியைச் சேர்ந்த பல கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் படத்தை முகப்பில் போட்டு, அவர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டிருக்கிறது. இது சமூக ஊடகங்களில் சாதியை முன்னிறுத்தி வாக்கு கேட்பது தேர்தல் விதிமீறல் ஆகாதா  என விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Thanthugi Blogspot மஹாஜடங்களால் மஹாஜடங்களுக்காக மஹாஜடங்களையே தேர்ந்தெடுக்க வேணுமாம். அதாவது மஹாஜடங்களின் ஓட்டு மற்ற ஜடங்களுக்கு கிடையாதாம். Muthazhagan Ma ஒரே சட்டமன்ற தொகுதியிலருந்து எப்படி சுப. உதயகுமாரனையும் … Continue reading “நாடார் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” சாதி பத்திரிகை மகாஜனம் கேட்கிறது!

“விரல்ல மை வைச்சிக்கிற உரிமை மட்டும்தான் எங்களுக்கு”: நத்தம் மேடு தலித்துகளின் ஓட்டுரிமையை பறிக்கும் சாதி!

தருமபுரி மாவட்டம் நத்தம் மேடு கிராமத்தில் 421 தலித் வாக்காளர்கள் வசிக்கிறார்கள். ஊரே தேர்தல் திருவிழாவில் இணைந்திருக்கிற, இந்த மக்களுக்கு இந்த முறையும் தங்களால் வாக்களிக்க முடியுமா? என்கிற கேள்விதான் முன்னால் நிற்கிறது. தருமபுரியிலிருந்து 35 கிமீ தூரத்தில் இருக்கும் நத்தம் மேடு கிராமத்தில் தலித்துகளுடன் ‘சாதிக்காரர்’கள் பெரும்பான்மையினராக வசிக்கிறார்கள். பண பலம், ஆள் பலம் காரணமாக இவர்களின் அடிப்படை உரிமையான ஓட்டளிக்கு உரிமை ஒவ்வொரு முறையும் பறிக்கப்படுகிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “தேர்தல் … Continue reading “விரல்ல மை வைச்சிக்கிற உரிமை மட்டும்தான் எங்களுக்கு”: நத்தம் மேடு தலித்துகளின் ஓட்டுரிமையை பறிக்கும் சாதி!

துணைவேந்தர் பதவிக்கு ரூ. 10 கோடி, ப்யூன் வேலைக்கு ரூ. 8 லட்சம் லஞ்சம்: கழகங்களால் கறைபடிந்த பல்கலைக்கழகங்கள்!

முனைவர் கலைவாணன் தமிழகத்தில் மார்ச் 1967ல் இருந்து கழகங்களின் ஆட்சிக்காலம் துவங்கியது. தமிழக முதல்வராக அண்ணா குறுகியகாலமே இருந்து 1969ல் மறைந்த நிலையில் நெடுஞ் செழியன் ஒருவாரம் தற்காலிக முதல்வ ராக இருந்தது போக, 10 பிப்ரவரி 1969ல் மு.கருணாநிதி திமுகவின் சார்பில் முதல்வரானார். 30 ஜூன் 1977 ல் எம்.ஜி. ராமச்சந்திரன் முதல்வரானார். அவர் இறந்த பின் ஜானகி ராமச்சந்திரன் 24 நாள் முதல்வ ராக இருந்தார். பின் 1989ல் கருணாநிதிமுதல்வரானார். 24 ஜுன் 1991ல் … Continue reading துணைவேந்தர் பதவிக்கு ரூ. 10 கோடி, ப்யூன் வேலைக்கு ரூ. 8 லட்சம் லஞ்சம்: கழகங்களால் கறைபடிந்த பல்கலைக்கழகங்கள்!

எளியவர்களுக்கு வாய்ப்புத் தாருங்கள்: என். சங்கரய்யா

ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அதிமுக, திமுக இரு கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும். 6 கட்சிகளின் தலைமையிலான எளிய மக்களின் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு வாய்ப்பளியுங்கள் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- தமாகா அணி சார்பில் மதுரவாயல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக க.பீம்ராவ் போட்டியிடுகிறார். https://youtu.be/GSNy6IQAUCg அவருக்கு வாக்கு கேட்டு செவ்வாயன்று (மே 10) ராமாவரத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் என்.சங்கரய்யா பேசியது வருமாறு: … Continue reading எளியவர்களுக்கு வாய்ப்புத் தாருங்கள்: என். சங்கரய்யா

நாயூடு கு.பிச்சாண்டி, கே. என். நேரு ரெட்டி, கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ரெட்டி…திமுகவின் ’சாதி அரசியல்’ ஆதாரங்கள்!

Subramanian Ravikumar நம் நாயூடு கு.பிச்சாண்டியாம்... திமுக தலைவர்கள் சாதிகளைப் பதவியூட்டி வளர்க்கிற லட்சணம் இதுதான்.... அந்தா 50 ஆண்டுகளில் பக்கத்துல பெரியார் அடிபட்டு விழுந்து கிடக்கிற காட்சி தெரிகிறது... ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற அண்ணாவின் கரகரத்த குரல் காற்றில் சிக்கிச் சின்னாபின்னமாகிறது... பிரதாபன் ஜெயராமன் சாதிப்பெயரை ஒழித்த சரித்திரஆட்சியில் சாதனை பாரீர்... Jeyachandra Hashmi சமத்துவம்டா... சமூக நீதிடா... திமுக டா !!!

யாருக்கு வாக்களிக்கலாம்?

ஷாஜஹான் பாமக அல்லது நாம் தமிழர் கட்சிகளுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள். இவை வீழ்த்தப்பட வேண்டிய சாதியவாத, இனவாத சக்திகள். பாஜக பற்றி எழுதவே தேவையில்லை. தமிழ்நாட்டில் அதற்கு என்றுமே இடம் கிடையாது. இந்தமுறை அதிமுக ஆட்சியில் ஊழல் அதிகம் இல்லை என்கிறார்கள் சிலர். இதை ஏற்கமுடியாது. இலவச பேன், கிரைண்டர் எவையும் தயாரிப்பாளர்களிடம் வாங்கப்படவில்லை என்பது ஓர் உதாரணம். டெண்டர் கிடையாது, யாரிடம் வாங்கினார்கள், தயாரிப்பாளர்கள் பெயர் என்ன என எந்த விவரமும் இல்லை. மின்சார … Continue reading யாருக்கு வாக்களிக்கலாம்?

“அந்த இடத்தை டெட்டால் ஊத்தி கழுவி விடுங்க” புதிய தமிழகம் கட்சிக்காரர்களுக்கு நெல்லை திமுக வேட்பாளர் வீட்டில் கிடைத்த ‘சமூக நீதி’!

“அந்த இடத்தை டெட்டால் ஊத்தி கழுவி விடுங்க” என நெல்லை திமுக வேட்பாளர் A.L.S.லெட்சுமணனுக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற புதிய தமிழக கட்சிக்காரர்களை அவருடைய வீட்டினர் சாதியத்துடன் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தீண்டாமை குறித்து பரப்புரை செய்து வரும் சமூக ஆர்வலர், Murugan Kanna தன்னுடைய முகநூல் பதிவில் திமுகவின் நெல்லை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் A.L.S.லெட்சுமணனை அவருடைய இல்லத்துக்கு சென்று கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் (மேட்டுக்குப்பகுறிச்சி)சந்தித்து தேர்தல் பரப்புரை சம்பந்தமாக பேசிவிட்டு வேட்பாளரின் விட்டை விட்டு … Continue reading “அந்த இடத்தை டெட்டால் ஊத்தி கழுவி விடுங்க” புதிய தமிழகம் கட்சிக்காரர்களுக்கு நெல்லை திமுக வேட்பாளர் வீட்டில் கிடைத்த ‘சமூக நீதி’!

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி மகன் வீட்டில் ரூ. 1.50 கோடி பறிமுதல்!

 சென்னையில் கே.சி.பழனிச்சாமி மகன் சிவராமன் வீட்டில் இருந்து ரூபாய் 1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரவக்குறிச்சி தற்போதைய எம் எல் ஏவாக இருக்கும் கே.சி. பழனிச்சாமிக்கு மக்கள் எதிர்ப்பு வலுத்து வரும்நிலையில், பணப்பட்டுவாடா மூலம் அதை சரிக்கட்ட முயல்வதாக சொல்லப்படுகிறது. மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதிமுகவின் கோ. கலையரசன் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.