அதிமுகவின் வெற்றிகரமான தோல்விக்கு என்ன காரணம்? | அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் இந்த மீம்ஸ் சிரிக்க வைத்தது போல உண்மையான காரணம் குறித்தும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.. இருநூறு தொகுதிக்கு மேலே வென்று திமுக கூட்டணி கிளீன் ஸ்வீப் செய்யும் என எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையிலே சுமார் 160 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருப்பதும் சுமார் 75 தொகுதிகளில் அஇஅதிமுக முன்னிலை பெற்றுள்ளதும் எடப்பாடி ஆட்சிக்கு ஒரு வெற்றிகரமான தோல்வியாக அமைகிறது.அதிமுகவில் ஜெயலலிதா இல்லாமல், பத்தாண்டு கால ஆளும்கட்சி எதிர்ப்புணர்வை எதிர்கொண்டும், பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தும் பாஜகவை … Continue reading அதிமுகவின் வெற்றிகரமான தோல்விக்கு என்ன காரணம்? | அருண் நெடுஞ்செழியன்

இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?

எழுத்தாளர் நக்கீரன் சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு நான் அளித்த பேட்டியில், ஆட்சி அமைக்க போகும் கட்சி நிதிநிலைமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒத்துப்போகும் என்ற கருத்தை தெரிவித்திருந்தேன். இப்போது அதற்கு முன்னரே 'ஆக்சிஜன்' சிக்கலில் பெரும்பாலான கட்சிகள் உடன்பட்டுவிட்டன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிக்கல் ஆக்சிஜன் உற்பத்தியில் இல்லை, விநியோகம் மற்றும் போக்குவரத்தில்தான் உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் வேதாந்தா மட்டுமே. ஆக்சிஜனுக்கு ஒரே தீர்வு என்பது போன்ற … Continue reading இப்போது ஆக்சிஜன்… அப்புறம்?

துரைமுருகனின் ஜாதிய உணர்வு திமுகவுக்கு எதிரி!

வேந்தன். இல ஆரம்பத்திலிருந்து விசிக திமுகவின் கூட்டணியில் இணைவதை முகம் சுழித்த பார்வையோடே துரைமுருகன் அவர்கள் பார்த்து வருவது அவரது பேச்சின் வாயிலாக எளிமையாக தெரிந்து கொள்ளலாம். 'இன்னும் கூட்டணியே முடிவாகல..' 'இன்னும் தாலியே கட்டல..' போன்ற நக்கல் தொணி பேச்சுகள் எல்லாம் கடைசி நேரத்தில் கூட விசிக வை தவிர்த்துவிட முடியாதா என்ற அவரின் ஏக்கத்தை தான் வெளிப்படுத்துகின்றன. அவரது கறார் வாதப்படியே 'கூட்டணி என்பது தொகுதி உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு தான் அது கூட்டணி' … Continue reading துரைமுருகனின் ஜாதிய உணர்வு திமுகவுக்கு எதிரி!

”காவல்துறைதான் கைதிகளின் விடுதலையை தீர்மானிக்கிறது!”: அரசியல் செயல்பாட்டாளர் தியாகு நேர்காணல்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தன் வாழ்நாளில் 15 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் தியாகு. சிறைப்பட்டோரின் உரிமை, சிறைகளின் நிலைமை, அரசு எந்திரங்களின் மனோபாவம் பற்றி அரசியல் செயல்பாட்டாளர் தியாகு பேசுகிறார். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற கோரிக்கை எழுப்பப்படும் நேரத்தில் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. த டைம்ஸ் டாட் தமிழ் காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். கேள்வி: எந்த மாநிலத்தில் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் … Continue reading ”காவல்துறைதான் கைதிகளின் விடுதலையை தீர்மானிக்கிறது!”: அரசியல் செயல்பாட்டாளர் தியாகு நேர்காணல்

“நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள்”: திமுகவினருக்கு கௌசல்யா பதில்!

தன்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைவதாக  சாதி ஆவணத்தால் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவியும் செயல்பாட்டாளருமான கௌசல்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பதிவில் விரிவாக எழுதியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக சொந்தங்களுக்கு... திராவிட முன்னேற்ற கழகம் குறித்து பதிவிட்டிருந்ததற்காக சில தோழர்கள் அவரவர் கருத்துகளை பதிவிட்டிருந்தீர்கள். தி. மு.க தலைவரும், தொண்டர்களும், தோழர்களும் சமூகநீதி உணர்வு உள்ளவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை. சங்கரின் இறப்புக்கு மனம் வருந்திய திமுகவினரின் உணர்வை இன்றும் மதிக்கிறேன். தனிப்பட்ட … Continue reading “நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள்”: திமுகவினருக்கு கௌசல்யா பதில்!

இந்தியா மட்டும்தான் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறதா?

இப்போது நம்முடைய முதன்மையான கோரிக்கை முழக்கமெல்லாம், தமிழக உரிமைகளை பாதுகாக்க முடியாத அதிமுக அரசே பதவிவிலகு என்பதாகதான் இருக்கவேண்டும்.

டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?

கவிதா சொர்ணவல்லி டிடிவி ஜெயிப்பார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆர்கேநகர் நிலவரங்களை தொடந்து கவனிக்க... வேண்டாம் வேடிக்கை பார்த்திருந்தால் கூட இது தெரிந்திருக்கும். அவருக்கு அங்கு எதிரிகளே இல்லை. அதுதான் உண்மை. இந்த இடைதேர்தல் என்பது, வென்றேயாக வேண்டியது என்ற கட்டாயம் தினகரனுக்கு மட்டுமே இருந்தது.அவர் அதில் முழு முனைப்புடன் இறங்கினார். அவருக்காக, அவருடைய ஆட்கள் அங்கே உயிரைக் கொடுத்து பணியாற்றினார்கள். ஈபிஎஸ்-ஒபிஎஸ் அணி மீது மக்களுக்கிருந்த அதிருப்திகளை வாக்குகளாக்குவதில் கோட்டை விட்டது திமுக. அவ்வளவு ஏன் … Continue reading டிடிவியின் வெற்றி எதிர்பார்க்கப்பட்ட வெற்றி: ஆனால் திமுக?

தூங்கும் போது பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள்!

எதற்காக சாரணர் இயக்கத்தில் பதவி வேண்டிக் கிடக்கிறது? அடிப்படையில் இருந்து எல்லாவற்றையும் புகட்டினால்தான் அடியாழத்தில் அது பதியும். இது எல்லோருக்கும் பொருந்திப் போவதுதான்.

இந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஜி. கார்ல்மார்க்ஸ் இப்போது என்ன நடக்கிறதோ அதேதான் நடந்திருக்கும். இந்த நீட் போன்ற தரப்படுத்துதல்கள் எல்லாம் நாம் அனுமதித்திருக்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஒரு அங்கம். மன்மோகன் சிங்கைப் பற்றி நமக்குத் தெரியும். தனது எஜமானர்கள் காலால் இட்டதை தலையால் செய்யும் மாண்புடையவர் அவர். ஆனால் பிராந்தியக் கட்சிகளின் தயவுடன் ஆட்சியில் இருக்கிறபோது, இவ்வளவு மூர்க்கமாக இதை செயல்படுத்தியிருக்க முடியாது. பல மக்கள் விரோத நடவடிக்கைகள் சென்ற காங்கிரஸ் அரசால் முன்னெடுக்க முடியாமல் போனதற்கு அரசியல் ரீதியாக … Continue reading இந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

சினிமா பத்திரிகையாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதாசிரியர் என பன்முகத்துடன் எழுதி வருபவர் தமிழ்மகன். இரண்டு கவிதை நூல்கள், ஐந்து சிறுகதை தொகுதி, பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், அறிவியல் கட்டுரை தொகுப்பு, சினிமா தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் என இவருடைய எழுத்துழைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது.  இதுவரை வெளியான இவருடைய நூல்களில் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுவது திராவிட இயக்க பின்னணியில் எழுத்தப்பட்ட ‘வெட்டுப்புலி’ நாவலே! இந்த உரையாடலின் மையப்புள்ளியாக ‘வெட்டுப்புலி’ அமைந்திருக்கிறது. தொழிற்சங்க செயல்பாட்டாளர் பீட்டர் துரைராஜ், … Continue reading “திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

நான் டெல்லிக்கு ஓடியதற்கு திமுக ஆட்சிதான் காரணம்: சாருநிவேதிதா

தமிழ்நாடே வேண்டாம் என்று தில்லிக்கு ஓடி விட்டேன். அந்த வகையில் தமிழ்நாட்டை விட்டு ஓடிய பிராமணர்களைப் போல் தான் நானும்.

திமுக செயல்தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்; ஓய்வுக்கு ஓய்வு தரும் தலைவருக்கு ஓய்வு தேவையென பேச்சு!

திமுக பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், திமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். முதன் முறையாக திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் அக்கட்சியின் பொதுக்குழு நடக்கிறது. இந்த கூட்டத்தில் திமுகவின் செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் … Continue reading திமுக செயல்தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்; ஓய்வுக்கு ஓய்வு தரும் தலைவருக்கு ஓய்வு தேவையென பேச்சு!

திமுக கூட்டத்தில் பங்கேற்க முடியாது: திருமாவளவன் கடிதம்

திமுக ஒருங்கிணைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மைய அரசை வலியுறுத்தும் வகையில் இன்று தங்களின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு விடுதலைச் சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்தமைக்காக தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். … Continue reading திமுக கூட்டத்தில் பங்கேற்க முடியாது: திருமாவளவன் கடிதம்

அதிமுகவின் அரசியல் ஆதாயத்திற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது: ஸ்டாலின்

"உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, அதிமுக தொழில் நுட்பப்பிரிவுடன் இணைந்து திமுகவினரை துன்புறுத்தும் செயல்களை காவல்துறை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பியதாக இதுவரை 7 பேரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். 52-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக … Continue reading அதிமுகவின் அரசியல் ஆதாயத்திற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது: ஸ்டாலின்

யார் அண்ணா?

ஜெயநாதன் கருணாநிதி ஆண்டது இரண்டே ஆண்டு என்றாலும் அவர் உருவாக்கிய அரசியல் அமைப்பின் தாக்கம் இன்றும் தமிழகத்தின் சமூக - பொருளாதார வெளியில் காண்கிறோம் . மத்திய அரசாங்கத்தின் முதலீட்டை, காமராஜர் தான் தமிழகத்திற்கு கொண்டு வந்தார் என்று சொன்னாலும் திராவிட கட்சிகளின் தொடர் Policy Interventions யினாலும் கொள்கை முடிவுகளில் இருந்த Continuity னாலும் தான் பொருளாதாரத்தில் பின் இருந்த தமிழகம் இன்று இந்தியாவில் எத்துறையிலும் முதல் மூன்று இடத்தில இருக்கிறது (இல்லை என்று ஒற்றை … Continue reading யார் அண்ணா?

“நமக்கு நாமே என்று சொல்லிக் கொண்டு சிலர் ஊர் ஊராக அலைந்தனர்”: அதிமுக எம்எல்ஏவின் பேச்சை நீக்கக் கேட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து, அவைக் காவலர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினரை குண்டு கட்டாக வெளியேற்றினர். அதோடு, அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்ட 88 திமுக உறுப்பினர்களையும் ஒரு வாரத்துக்கு இடை நீக்கம் செய்து அவைத் தலைவர் தனபால் உத்தரவிட்டுள்ளார். திமுக உறுப்பினர்களை இடை நீக்கம் செய்ய நிதித் … Continue reading “நமக்கு நாமே என்று சொல்லிக் கொண்டு சிலர் ஊர் ஊராக அலைந்தனர்”: அதிமுக எம்எல்ஏவின் பேச்சை நீக்கக் கேட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

திமுக துணை பொதுச்செயலாளர் சற்குண பாண்டியன் மறைவு: கருணாநிதி இரங்கல்

திமுக துணைப் பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு திமுக தலைவர் மு. கருணாநிதியும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் நேரில் அஞ்சலி செலுத்தினர். மு. கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சற்குண பாண்டியனின் மறைவு துயரைத் தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறிக்கையில், “கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த திருமதி சற்குணப் பாண்டியன் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு மறைந்து விட்டார் … Continue reading திமுக துணை பொதுச்செயலாளர் சற்குண பாண்டியன் மறைவு: கருணாநிதி இரங்கல்

சசிகலா புஷ்பா என்னை ஒரு முறைதான் அறைந்தார்: திருச்சி சிவா

டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவுக்கும் அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கு தகராறு ஏற்பட்டது. திருச்சி சிவா, தமிழக அரசு குறித்து விமர்சித்ததாகவும் அதைக் கேட்டு சும்மா இருக்க முடியாது என்பதால் நான்கு அறை விட்டதாகவும் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். ஆனால், திருச்சி சிவாவோ எதிரில் வந்த தன்னை சட்டையைப் பிடித்து ஒரே முறைதான் கன்னத்தில் அறைந்ததாகவும் பேட்டியளித்துள்ளார். https://www.facebook.com/qaneio/videos/10209933938562954/

பொதுவுடமைவாதிகள் சுயநல அடிப்படையில் முடிவு எடுப்பதில்லை: திமுக தலைவருக்கு ஜி. ராமகிருஷ்ணன் பதில்

திமுக தலைவர் கருணாநிதி கம்யூனிஸ்டுகளின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவில்லை என வருத்தப்படுவதாக கேள்வி பதில் அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் பதில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.  “திமுக தலைவர் கலைஞர் அவர்கள் 27.7.2016 முரசொலி ஏட்டில் “பொதுவுடமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக தமிழக சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டு காலமாக ஒலித்து வந்த கம்யூனிசக் கொள்கைகளின் வாய் மூடப்பட்டுவிட்டதே” என்று கேள்வியெழுப்பி, அதற்கு பதிலாக, “அதைப்பற்றி நாம் கூறினால் … Continue reading பொதுவுடமைவாதிகள் சுயநல அடிப்படையில் முடிவு எடுப்பதில்லை: திமுக தலைவருக்கு ஜி. ராமகிருஷ்ணன் பதில்

தங்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது: இந்த வேட்பாளரின் அனுபவத்தை படியுங்கள்!

வெ.ஜீவக்குமார் ஐவகை நிலங்களில் தலையாய மருதமே எமது பிரதேசமாகும். ஊரின் பெயரே ஐந்து நதிகளைச் சுட்டிக்காட்டும் திருவையாறு எமது தொகுதியாகும். தன் பரிவாரங்களுடன் பட்டத்து யானையில் தினமும் பவனி வந்து பார்வை இட்டு கரிகாற் சோழன் கட்டிய கல்லணை இத்தொகுதியில்தான் உள்ளது. பொன்னியின் செல்வன் காலத்தில் வந்தியத் தேவன் ஓட்டிய குதிரையின் குளம்படி தடங்கள் ஆற்றங்கரைகளில் இப்போதும் ஒளிந்து கிடக்கலாம்.எனினும் திருவையாறு சட்டமன்ற பரப்பு காவிரிச் சமவெளி பகுதியை மட்டுமே உள்ளடக்கியது அல்ல. கட்டளை மேட்டு வாய்க்கால், … Continue reading தங்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கிறது: இந்த வேட்பாளரின் அனுபவத்தை படியுங்கள்!

“ஆடு, கசாப்புக் கடைக்காரனைத் தான் நம்புகிறது”: கருணாநிதி பிறந்த நாள் செய்தி

93வது பிறந்தநாளை கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதி, கட்சித் தொண்டர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டி, திராவிடத்தின் துயர் துடைப்போம் என அழைப்பு விடுத்துள்ளார். பிறந்த நாள் செய்தியாக, திமுக தொண்டர்களுக்கு, கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது 93வது பிறந்த நாள்! 92 வயது நிறைவடைந்து, 93வது வயதில் அடியெடுத்து வைக்கும் இனிய வேளையில், எனை ஈன்று புறந்தந்த என் அருமைத் தாய் அஞ்சுகம் அம்மாள், எனைச் சான்றோனாக்கிய அன்புத் தந்தை முத்துவேலர், கொள்கை வேல் … Continue reading “ஆடு, கசாப்புக் கடைக்காரனைத் தான் நம்புகிறது”: கருணாநிதி பிறந்த நாள் செய்தி

பினராயி விஜயனின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி

 முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றித் தமிழக அரசுடன் சுமூகமாகப் பேசித் தீர்வு காண விரும்புவதாகக் கேரள முதலமைச்சர், பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் மு. கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், “கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற பின் டெல்லிக்குச் சென்ற பினராயி விஜயனிடம், செய்தியாளர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்துக் கேட்ட போது இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் “தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட … Continue reading பினராயி விஜயனின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி

குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்

அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, இடைப்பட்ட காலத்திலும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சியில் மட்டும், அதிமுக வேட்பாளர் ரூ.59.4 கோடியும், திமுக வேட்பாளர் ரூ.39.6 … Continue reading குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக: ஜி. ராமகிருஷ்ணன்

அதிமுகவை உடைக்க முயற்சியா?: கருணாநிதியின் பேட்டி சொல்லவருவது என்ன??

திமுக தலைவர் கருணாநிதி “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி... 1. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் களத்தில் இருந்து வந்த தகவல்களும் திமுக வெற்றி பெறும் என்றே தெரிவித்தன. இருப்பினும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதற்கு காரணம் என்ன? கருணாநிதி:- தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப் பட்சமாகவே இருந்ததையும், ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதைப் போலச் செயல்பட்டதையும் தமிழகமே … Continue reading அதிமுகவை உடைக்க முயற்சியா?: கருணாநிதியின் பேட்டி சொல்லவருவது என்ன??

திமுக: நம்பகமான கூட்டாளியா?

ஸ்டாலின் ராஜாங்கம் அதிமுக பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது. திமுக வலிமையான எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது. தலித் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது இடதுசாரிகள் கூட இல்லாத சட்டசபையாகியிருக்கிறது. இது தொடர்பாக பொறுமையாக பின்னால் எழுத வேண்டும். இப்போதைக்கு சிறு கணக்கீடு மட்டும் இங்கே. இத்தேர்தலில் தலித் தலைவர்கள் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். திருமாவளவன் 87,டாக்டர் கிருஷ்ணசாமி 493,சிவகாமி 6853 ஆகிய வாக்குகள் வித்தியாசங்களிலேயே தோற்றிருக்கின்றார்கள். திருமாவளவனுக்கு காட்டுமன்னார்கோயிலும் கிருஷ்ணசாமிக்கு ஒட்டப்பிடாரமும் செல்வாக்கான தொகுதிகள். தங்களுக்கிருக்கும் ஓட்டுகளோடு மற்றொரு கட்சியின் … Continue reading திமுக: நம்பகமான கூட்டாளியா?

“93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயா ஜெயித்ததற்காக அறச்சீற்றத்தில் கொந்தளிக்கும் அதே நேரத்தில் திமுக தோற்றதற்காகவும் சிலர் வெம்பி வெடிப்பது நகைமுரண். ஜெயலலிதா எப்படி வெற்றி பெறத் தகுதி இல்லாத ஒருவரோ அதே அளவுக்கு தகுதியற்ற ஒருவர்தான் கருணாநிதியும் என்பது தான் மக்கள் சொல்லியிருக்கும் செய்தி. ஒப்பாரியையும், வசையையும், முத்திரை குத்தலையும் நிறுத்திவிட்டு கட்சி அபிமானிகளுக்கு இதில் யோசிக்க சில விஷயங்கள் உண்டு. இப்போதும் கண்முன் இருக்கும் உதாரணங்கள் நிறைய: கருணாநிதி ஒன்றும் எம்ஜியார் கிடையாது படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு. … Continue reading “93 வயதிலும் நான் தான் முதல்வர் என்பதும் தயாநிதியுடன் சேர்ந்துகொண்டு பிரசாரத்துக்குப் போவதும் நெஞ்சழுத்தம் அல்லாது வேறென்ன?”

தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க திமுக செயற்குழு கூட்டம்!

திமுக செயற்குழு கூட்டம் வரும் 24ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் குறித்தும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்தும் விவாதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களும் புதிய எம் எல் ஏக்களும் பங்கேற்க உள்ளனர்.

“வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி தொடரும்”: ஜவாஹிருல்லா

தேர்தல் முடிவுகள் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா: நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகார பலம், பண பலம், ஓரவஞ்சனையுடன் செயல்பட்ட தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தேர்தலை சந்தித்த அதிமுகவை விட 1.2 சதவீதம் வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று திமுக கூட்டணி சாதனைப் படைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி நிலைகூட இல்லாத திமுக இன்று மிகப்பெரும் எண்ணிக்கையில் எதிர்க்கட்சியாக உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை உருவாக்கிட திமுக தலைமையிலான … Continue reading “வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எமது சேவை தன்னலமின்றி தொடரும்”: ஜவாஹிருல்லா

திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

விஷ்வா விஸ்வநாத் கடந்த ரெண்டு நாளாக வைகோவை எண்ணி எண்ணி குமுறி குமுறி நிலத்தில் புரண்டு புரண்டு சின்னப்புள்ளங்க மாதிரி அழுது கதறி கதறி சிலர் எழுதிட்டு இருப்பதை பார்க்கும்போது அடிப்படையான சில கேள்விகள் எழுகின்றன. 1. வைகோ திமுகவில் பொறுப்பு வகித்து கொண்டே அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்குத்து வேலை செய்யவில்லை. அவர் தனக்கென்று ஒரு தனிக்கட்சி வைத்துள்ளார். தேர்தல் காலத்தில் ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கிறார். இதில் என்ன தவறு ? 2. அவர் … Continue reading திமுக தோல்விக்கு வைகோ காரணமா?: உடன் பிறப்புகளுக்கு 11 கேள்விகள்!

சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி. வீரலட்சுமி 14083 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளருக்கு அடுத்த படியாக வந்துள்ளார். மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வீரலட்சுமி போட்டியிட்டார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. ஆர். சரஸ்வதியின் வெற்றியை இவர் வெகுவாக பாதித்திருக்கிறார். சரஸ்வதி 90, 000 வாக்குகளும் திமுக வேட்பாளர் 1லட்சத்து 11 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார். கி.வீரலட்சுமி குறித்து … Continue reading சீமானைவிட அதிக வாக்குகள் பெற்ற கி.வீரலட்சுமி, மூன்றாவது இடத்தில்!

அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்

தேர்தல் முடிவுகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கதில் எழுதியுள்ள கட்டுரை: ஜெயலலிதா அரசு மேல் மக்களுக்கு மிகக்கடுமையான வெறுப்பும் அவநம்பிக்கையும் இருக்கிறது. செயல்படாத அரசு, ஊழல் அரசு என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள் அதற்கு மாற்றாக திமுக அன்றி வேறு எந்த கட்சியும் இல்லை என்றும் நினைக்கிறார்கள். ஆனால் கணிசமானவர்கள் திமுகவுக்கு வாக்களிக்கத் தயாராக இல்லை. குறிப்பாகப் பெண்கள் திமுகவுக்குப் போடுவதைவிட மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கவே விரும்புகிறார்கள் அதற்கு முதற் காரணம் ஜெயலலிதாவின் அரசின் செயல்பாடுகள் எப்படி … Continue reading அதிமுக ஏன் மீண்டும் வென்றது? திமுக எதனால் தோற்றது?: ஜெயமோகன்

“தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி

பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதாக ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை மீண்டும் ஒத்திவைக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பாஜக, பாமக தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது திமுகவுக்கு எதிரான சதி என்றும் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் தானே போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்தார். முன்னதாக தேர்தல் முடிவுகள் குறித்து … Continue reading “தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் நானே போராட்டத்தில் ஈடுபடுவேன்”: கருணாநிதி

நோட்டாவால் வாய்ப்பிழந்த 15 திமுக வேட்பாளர்கள்!

நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் நோட்டா வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறது. இதில் காட்டுமன்னார்கோயிலில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவனைத் தவிர, மற்ற அனைவரும் திமுக வேட்பாளர். இந்தத் தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றுள்ளது. (தகவல்: Su Po Agathiyalingam) ஆவடி தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 4994. இந்தத் தொகுதியில் 1395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார் திமுக வேட்பாளர். பர்கூர் தொகுதியில் நோட்டாவுக்கு 1382 வாக்குகள். … Continue reading நோட்டாவால் வாய்ப்பிழந்த 15 திமுக வேட்பாளர்கள்!

நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!

அ.குமரேசன் கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்தவரையில் சமத்துவ சமுதாய மாற்றமே இலக்கு. அதற்கான ஒரு பாதைதான் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல். தேர்தலே இறுதி இலக்கல்ல. அந்த ஒரு பாதை மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் பயணத்தை நிறுத்துவதற்கில்லை. இலக்கை அடைவதற்கான வீரமிகு போராட்டங்கள், இயல்பான தன்னலமில்லா தியாகங்கள், தீவிரமும் எளிமையுமான கருத்துப் பரவல் இயக்கங்கள், பாதிக்கப்படுவோருக்காகத் தன்னுணர்வான தொண்டுகள், சமரசமற்ற முற்போக்கு அடையாளங்கள், மக்களைத் திரட்டும் மாபெரும் முயற்சிகள்... ஆகிய பாதைகளை மூடுவதற்கில்லை. பதிவான வாக்குகளில் அதிமுக-வுக்கு சுமார் 41 சதவீதம் … Continue reading நேற்றைய தேதியோடு வரலாறு தேங்கிவிடவில்லை!

கருத்து திணிப்புகள் மீண்டும் பொய்த்துப்போன தேர்தல் இது!

Thiru Yo தேர்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கு நடத்தப்படுகிற கருத்துக் கணிப்புகள் எவ்வளவு போலியான கருத்துத் திணிப்புகள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. லயோலா முன்னாள் மாணவர்கள், அந்நாள் மாணவர்கள், முந்தாநாள் மாணவர்கள் துவங்கி விகடன், நக்கீரன் என இதழ்களும், தொலைக்காட்சிகளும் உற்பத்தி செய்த தேர்தலுக்கு முந்தைய, தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துத் திணிப்புகளும் அப்பட்டமாக தடைசெய்யப்பட வேண்டியவை. அவை அனைத்தும் விளம்பரங்கள் மற்றும் கட்சிகளிடமிருந்து பலனை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டவை. ஊடகங்களின் நேர்மையை இத்தேர்தல் அம்பலப்படுத்தியது. … Continue reading கருத்து திணிப்புகள் மீண்டும் பொய்த்துப்போன தேர்தல் இது!

தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!

பரமேசுவரி திருநாவுக்கரசு ஆசிரியப் பணியாகவும் தேர்தல் பணியாகவும் தொடர்ந்து கிராமங்களில் பணியாற்றுவதை சிற்சில இடர்ப்பாடுகள் கடந்து வரமாகவே நினைக்கிறேன். இந்தத் தேர்தல் முடிவு சில மாதங்களுக்கு முன்னரே உள்ளுணர்வு உணர்த்திய ஒன்று. அதிமுகவின் இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியதல்ல. சற்றே நிதானிக்க, சிந்திக்க வேண்டிய இடத்தில் மக்கள் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைச் சிந்தியாமல், செயல்படுத்தாமல் அதீத இலவசங்களுக்கே மக்கள் பெரும்பான்மை அளித்து விடுவார்களென்று நினைத்ததற்கான மரண அடியிது. சென்றமுறைபோல் அதீதப் பெரும்பான்மைஆட்சி இந்த … Continue reading தேர்தலில் கற்க நிறைய இருக்கிறது!

ஜெயலலிதாவின் வெற்றியும் மக்களின் எதிர்பார்ப்பும்!

நாச்சியாள் சுகந்தி போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா வெற்றியின் புன்னைகையோடு அமர்ந்திருக்கிறார். அதிகாரிகள் வண்ண வண்ண மலர்செண்டுகளுடன் கும்பிடு போடுகிறார்கள். அதில் ஒருசிலர் இப்போதுதான் புதிதாக குனியக் கற்றுக்கொண்டார்கள் போலும்.. அத்தனை திருத்தமாக குனியமுடியவில்லை. ஒரு ரோஸ் கலர் சேலை அணிந்த பெண்மணி பூங்கொத்தை கொடுத்து முடித்து, ஜெயலைதாவைப் பார்த்து கைகளை விரித்து ஒரு சிறு ஆட்டம் போட, ஜெயலலிதாவின் முகத்தில் அப்படியொரு சிரிப்பு. அநேகமாக அண்மைகாலத்தில் அவர் இத்தனை சந்தோஷத்துடன் சிரித்தது அப்பெண்ணால்தான். நன்றி சொல்லும்போது, … Continue reading ஜெயலலிதாவின் வெற்றியும் மக்களின் எதிர்பார்ப்பும்!

அதிமுக வெற்றி; அமைச்சர்கள் தோல்வி!

அதிமுக அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா அகியோர் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி, திமுக வேட்பாளர் செலவத்திடம் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா, திமுக வேட்பாளர் எம்.கே. மோகனிடம் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இதேபோல அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் தோல்வியுற்றனர்.

ஜெயலலிதாவின் உத்திக்கு கிடைத்த வெற்றியா?

சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. ஆரம்ப முடிவுகள் அதிமுக வெற்றி பெறும் என காட்டியிருக்கின்றன. இதுகுறித்து பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கருத்துகளின் தொகுப்பு... தளவாய் சுந்தரம் ஜெயலலிதாவின் உத்தி / தந்திரத்துக்கு (strategy) கிடைத்த வெற்றியாகவே இந்த முடிவுகளைப் பார்க்கிறேன். முதலில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று ஒரு பரிட்சார்த்த முயற்சியை செய்தார் ஜெயலலிதா. அதில் பெற்ற வெற்றியை அடுத்து மக்களவை தேர்தலில் அதனைத் தொடர்ந்தார். அதிலும் அவர் கணக்கு வெற்றிபெற்றது. அதுவே இப்போதும் … Continue reading ஜெயலலிதாவின் உத்திக்கு கிடைத்த வெற்றியா?

ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!

நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக 89 இடங்களையும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 8 இடங்களையும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் கட்சி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது அதிமுக. Status Known For 232 out of 234 Constituencies Party வெற்றி முன்னிலை மொத்தம் காங்கிரஸ் 8 0 … Continue reading ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!