ராமர் செருப்படி விவகாரம்: கிறிஸ்துதாஸ் காந்தியின் வீட்டு முகவரியை வெளியிட்ட தினமலர்!

சமீபத்தில் தந்தி டிவி பிரதமர் நரேந்திர மோடியின் “ஜெய் ஸ்ரீராம் முழக்கம்” குறித்து விவாதம் ஒன்றை நடத்தியது. இதில் முன்னாள் ஐஏஎஸ் கிறிஸ்துதாஸ் காந்தி, மத சுதந்திரம் உள்ள நாட்டில் நாத்திகர்களுக்கு ராமரை செருப்பால் அடிக்கும் உரிமையும் உண்டு எனப் பேசினார். இது இந்துத்துவ அமைப்புகளால் கண்டனத்துக்கு உள்ளானது. பகுத்தறிவாளர்கள் பலர் கிறிஸ்துதாஸ் காந்திக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தன்னுடைய பேச்சுக்கு விளக்கம் அளித்து, யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக பொதுமன்னிப்பு கேட்பதாகவும் கிறிஸ்துதாஸ் காந்தி தெரிவித்திருந்தார். … Continue reading ராமர் செருப்படி விவகாரம்: கிறிஸ்துதாஸ் காந்தியின் வீட்டு முகவரியை வெளியிட்ட தினமலர்!

ஸ்வாதி மாற்று மதத்தவரை காதலித்தாரா? பிரபல நாளேட்டில் செய்தி

நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட ஸ்வாதி மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதலித்ததாக கூறப்படுவதாகவும் மத மாற்றம் தொடர்பான பிரச்சினையில் இருவரும் பிரிந்ததாகவும் தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த இளைஞருக்கும் தெரியாமல் இந்த படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தினமலர் செய்தி சொல்கிறது. மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் விசாரித்ததில் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்று தெரிவித்துள்ளனர்.  காதலித்தார்கள் என்கிற தகவலை வைத்தே சில இந்துத்துவ சிந்தனையுள்ள பிரபலங்களும் சமூக ஊடகங்களில் இயங்குவோரும் அவதூறு தகவல்களைப் பரப்பியதாகக் … Continue reading ஸ்வாதி மாற்று மதத்தவரை காதலித்தாரா? பிரபல நாளேட்டில் செய்தி

உடுமலைப் பேட்டை எந்த தொகுதி என்றுகூட தெரியாமல் கருத்துகணிப்பா?

நடைபெறவிருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கருத்து கணிப்பை வெளியிட்டு வருகிறது தினமலர் நாளிதழ். இதில் முன்னுக்குப் பின் புறம்பான தகவல்கள் இடம் பெறுவதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் எழுதி வருகிறார்கள். செவ்வாய்கிழமை வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில்  திமுகதான் அதிக வாக்குகள் பெறும் ஆனால் திமுக வேட்பாளர் வெற்றி பெறமாட்டார் என்று எழுதப்பட்டிருந்தது. https://twitter.com/podhigaichelvan/status/727368475514167296 அதுபோல, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப் பேட்டை தொகுதியை கோவை மாவட்டத்தில் உள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. … Continue reading உடுமலைப் பேட்டை எந்த தொகுதி என்றுகூட தெரியாமல் கருத்துகணிப்பா?

“கடைசி மூச்சுள்ளவரை நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருப்பேன்”: தினமலர் செய்திக்கு தா.பா. பதில்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியன் அதிமுகவில் இணையவிருப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. இதை மறுத்து சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் . “அ.தி.மு.க.வில் நான் இணைய போவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு விடுதலை பெற்ற பின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்த வேளையில், எங்கள் ஊரில் நானும் மாணவர்கள், இளைஞர்கள் என மொத்தம் 8 பேர் கட்சிக்கு ஆதரவாக சுவரில் எழுதி, துண்டுப் பிரசுரம் தயாரித்தோம். … Continue reading “கடைசி மூச்சுள்ளவரை நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருப்பேன்”: தினமலர் செய்திக்கு தா.பா. பதில்

திமுகவில் இணைவதாக செய்தி:தினமலர் பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்தார் மதிமுக முன்னாள் எம்.பி!

மதிமுக முன்னாள் எம்பியும் மதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான கணேச மூர்த்தி, திமுகவில் இணைய உள்ளதாக செய்தி வெளியிட்டதற்காக தினமலர் நாளிதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தினமலர் தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிடுவதாக  தெரிவித்த கணேசமூர்த்தி இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்.

திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி வாய்ப்பு அமைந்து வருகிறது: கருணாநிதி அறிக்கை

“உடன்பிறப்பே உன்னால் முடியாதது உலகினில் ஏதும் உண்டோ?’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:   தமிழ்நாடு பதினைந்தாவது சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் 22 அன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜனநாயக மரபுகளையொட்டி, கழகத்தின் சார்பில் விருப்ப மனு அளித்த அனைவருடனும் “நேர்காணல்” நிறைவுற்று, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்தாலோசனை செய்து, அவர்களுடைய கருத்துக்களைப் பெற்று, பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் வழங்கிய அறிவுரை, … Continue reading திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி வாய்ப்பு அமைந்து வருகிறது: கருணாநிதி அறிக்கை

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!

சாதி வன்மத்தைத் தூண்ட தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான தினமலரில் "அவசரம் வேண்டாம் பெண்களே!" என்ற தலைப்பில் " விசித்திர சித்தன், சமூக ஆர்வலர்" என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை இது. எழுதியவர் உண்மையிலே சமூகத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தால் உண்மையான பெயரைப் போட்டு எழுதியிருக்க வேண்டும். விசித்திர சித்தன் என்ற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதுவது இப்படி விசித்திரமானதாகத்தான் இருக்கும். எத்தனை வன்மம். வெகுஜென நாளிதழ் என்ற போர்வையில் சாதிய வன்மத்தை, வர்ணாசிரமத்தை நிலைநிறுத்த … Continue reading ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!

#என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா:பத்திரிக்கைகளை நிறைத்த திமுக விளம்பரம்…

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த 7 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான நேர்காணல் நேற்று முதல், அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய காலை பத்திரிக்கைகள் அனைத்திலும் முதல் பக்கத்தில், திமுக  முழு பக்க விளம்பரம் அளித்துள்ளது. ஒரு நிமிடம் நின்று கவனிக்காமல் செல்ல முடியாத அளவிற்கு  பார்ப்பவர்களை, ஈர்க்கும் வகையில் அந்த விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அதில் "5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்துருப்பீங்க பேனர்ல பாத்துருப்பீங்க டிவில பாத்துருப்பீங்க ...நேர்ல ? … Continue reading #என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா:பத்திரிக்கைகளை நிறைத்த திமுக விளம்பரம்…

தினமலரின் கங்காரு கோர்ட் வழங்கிய தீர்ப்பில் கன்னய்யா குமார், ‘தேசத் துரோகி’ என்பது நிரூபிக்கப்பட்டது!

தினமலரின் ‘அரசியல்’ எப்போதோ வெளிப்பட்டதுதான். ஆனால், கன்னய்யா குமார் நீதிமன்ற வளாகத்துக்குள் தாக்கப்பட்டதற்கு நாடே கொந்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில், “அடி, உதை; தேசத்துரோகி மாணவரை கவனித்தனர், டெல்லி வக்கீல்கள்” என்று வன்மத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர்(திருச்சி பதிப்பு). இதை சமூக ஊடகங்களில் கவனப்படுத்தியிருக்கிறார் பொருளாதார அரசியல் விமர்சகர் நரேன் ராஜகோபாலன். தன்னுடைய முகநூலில் அவர் தன்னுடைய கருத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார். “பத்திரிக்கை தர்மமென்பது 'கங்காரு கோர்ட்' நடத்தி, தாங்களே ‘தேசத் துரோகி’ பட்டம் சுமத்துவது. வாங்கிய கூலிக்கு வஞ்சகம் செய்யாமல் வேலைப் … Continue reading தினமலரின் கங்காரு கோர்ட் வழங்கிய தீர்ப்பில் கன்னய்யா குமார், ‘தேசத் துரோகி’ என்பது நிரூபிக்கப்பட்டது!

“திமுகவுக்கு தினமலர் தீவிர ஆதரவாமே? திமுக திருந்திவிட்டதா அல்லது தினமலர் கெட்டு விட்டதா?”

“தேர்தலுக்குப் பிறகு பாமக இருக்காது” என திமுக துணை பொதுச் செயலாளர் சொன்ன கருத்து தினமலர் நாளிதழ் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துகொண்ட அவர், தினமலர் நாளிதழை கடுமையாக பகடி செய்துள்ளார். https://twitter.com/drramadoss/status/697308690525736960 https://twitter.com/drramadoss/status/697308597936521216 https://twitter.com/drramadoss/status/697308300249968640 https://twitter.com/drramadoss/status/697308024860377088  

ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலர் பாணி அறிவுஜீவித்தனம்: இது சமஸின் ஷிர்க்!

வில்லவன் இராமதாஸ்  தமிழ் இந்து கட்டுரையில் த.ந.த.ஜவின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை விமர்சனம் செய்து சமஸ் எழுதியிருக்கிறார். அது விமர்சிக்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனை பல இசுலாமியர்களே விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சமஸ் வார்த்தைகளில் ஒரு நுட்பமான அரை இந்துத்துவ பிரச்சாரம் இருக்கிறது. இந்த வாஹாபியிச குழுக்கள் அதிகாரம் பெற்றால் அவர்கள் கோயில்களையும் இடிப்பார்களா எனும் கேள்வி முற்றிலும் விஷமத்தனமானது. மேலும் இவர்களை லாவகமாக இந்துத்துவ தீவிரவாதிகளோடு இணைவைக்கிறார் சமஸ். இந்துத்துவ கும்பல் வெளிப்படையாக இசுலாமியர்களையும், … Continue reading ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலர் பாணி அறிவுஜீவித்தனம்: இது சமஸின் ஷிர்க்!

இறந்தவர்களின் சாதியைக் கண்டுபிடிப்பது எப்படி? ஊடகங்கள் கற்றுத்தரும் உத்தி!

சுரேந்தர் புதிதாக ஒரு நோய் பரவிக் கொண்டிருக்கிறது. எந்த பிரச்சினை என்றாலும் , பாதிக்கப்பட்டவர் - பாதிப்பு ஏற்படுத்தியவர்களின் சாதிச் சான்றிதழ்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. அவர் தலித்தா தலித் அல்லாதவரா என்கிற கேள்வி பிரதானப்படுத்தப் படுகிறது. ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்கிறார். அவர் ஒரு தலித் இயக்கத்தில் தீவிரமாக களமாடி இருக்கிறார். அவரது போராட்டங்களுக்கு மற்றொரு இந்து மாணவர் அமைப்பு மூலமாக எதிர்ப்பு கிளம்புகிறது. கல்லூரி நிர்வாகம் , காவல் நிலையம் அளவிலேயே முடித்து வைத்திருக்கக்கூடிய இந்த … Continue reading இறந்தவர்களின் சாதியைக் கண்டுபிடிப்பது எப்படி? ஊடகங்கள் கற்றுத்தரும் உத்தி!

அதிமுக அரசின் ஊழல்களா? அதிமுக அரசுக்கு எதிரான ஊழல்களா? ஊழல் செய்திகளை எழுதுவது எப்படி?

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக அரசின் ஊழல் பட்டியலை புத்தகமாக வியாழக்கிழமை வெளியிட்டார். இந்தச் செய்தியை தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட விதம் விமர்சனத்துக்குரியதாக இருக்கிறது. அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் என தினமலரும் புதிய தலைமுறையும் சொல்கின்றன. அப்படியென்றால் அதிமுக அரசுக்கு எதிராக ஊழல் செய்தது யார்? இந்த ஊடகங்கள்தான் விளக்க வேண்டும்! தினமலர் செய்தி: அதிமுக ஊழல் பட்டியல்: இளங்கோவன் வெளியீடு சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக அரசுக்கு … Continue reading அதிமுக அரசின் ஊழல்களா? அதிமுக அரசுக்கு எதிரான ஊழல்களா? ஊழல் செய்திகளை எழுதுவது எப்படி?

விற்பனையில் நம்பர் 1 நாளிதழ்: தினத்தந்தியுடன் போட்டி போடும் தி இந்து!

இந்தியாவில் வெளியாகும் பத்திரிகைகள் குறித்து மத்திய அமைச்சகம்  அறிக்கை (2014-15) வெளியிட்டிருக்கிறது. அதில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள் எத்தனை பிரதிகள் விற்பனையாகின்றன என்கிற தகவலின் அடிப்படையில் தினத்தந்தி முதலிடம் பிடித்திருக்கிறது. தினத்தந்தியின் சென்னை பதிப்பு முதலிடத்தில் இருக்கிறது. 4,98,091 பிரதிகள் தினந்தோறும் விற்பனையாகின்றன. அடுத்த இடத்தில் தி இந்து (ஆங்கிலம்)  சென்னை பதிப்பு உள்ளது. நாள்தோறும் தி இந்து (ஆ) 3,59,498 பிரதிகள் விற்பனையாகின்றன. மூன்றாம் இடத்தில் 2,69,884 பிரதிகள் விற்பனையுடன் தினகரன் சென்னை பதிப்பு உள்ளது. தினமலர் நாளிதழின் மதுரை  பதிப்பில் … Continue reading விற்பனையில் நம்பர் 1 நாளிதழ்: தினத்தந்தியுடன் போட்டி போடும் தி இந்து!