“தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்

ஜெயமோகன் சமீபத்தில்  தமிழக அரசியல் சூழலைப்பற்றி மலையாளத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய தமிழக அரசியலில் முதன்மையான தலைவர் என்று தொல்.திருமாவளவன் அவர்களைக் குறிப்பிட்டிருந்தேன் [ஆனால் தமிழகச் சாதியமனம் அவரை பொதுத்தலைவராக எளிதில் ஏற்றுக்கொள்ளாது என்றும்]. எல்லா தலைவர்களைப்பற்றியும் அவதானிப்புகளும் விமர்சனங்களும் கொண்ட கட்டுரை அது. மலையாளத்தில் திருமாவளவன் பரவலாக அறியப்படாதவர் என்பதனாலும், நான் கடுமையான விமர்சகன் என அறியப்பட்டவன் என்பதனாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு கட்டுரை தரமுடியுமா என பல ஊடகங்கள் கோரியிருக்கின்றன. ஒரு … Continue reading “தலித் தலைவர் என்றல்ல, தமிழகத்தலைவராக, எதிர்காலத்திற்குரியவராக காண்கிறேன்”: திருமாவளவன் குறித்து ஜெயமோகன்

இப்போதும் திராவிட கூறுகளுடன் தான் திமுக இருக்கிறதா?

அ. குமரேசன் திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பயன்படுத்தி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளையும் ஒரே தட்டில் வைத்து விமர்சிப்பது பற்றி நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக, தமிழக வரலாற்றில் திமுக-வின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஏன் மறுக்க வேண்டும், அவற்றை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாமே என்று அந்த நண்பர்கள் முகநூலிலும் தொலைபேசியிலும் நேரிலும் என்னோடு விவாதிக்கிறார்கள். திராவிடக் கட்சிகள் என்ற பதத்தைப் பொதுவாகப் பயன்படுத்துவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. திராவிடம் என்பது விரிவான, முற்போக்கான … Continue reading இப்போதும் திராவிட கூறுகளுடன் தான் திமுக இருக்கிறதா?

”அங்கு போகாதே! அது அவர்களின் இடம்!” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு

அருணா ஸ்ரீ இது தில்லி பெண்ணைப் பற்றியோ கேரளப் பெண்ணைப் பற்றியோ அல்ல. பொதுவெளியில் களையெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சனை. அதிலும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் கவனிக்க வேண்டிய விசயம். இன்று எங்கு பார்த்தாலும் தலித் மக்களின் வாழ்வு சார்ந்த பிரச்சனைகளையும் சவால்களையும் முன்னெடுத்து வலைத்தளங்களில் வாதிடுகிறோம். உயிர்களின் மதிப்பு கூட ஜாதி அடிப்படையில் தான் மதிப்பிடப்படுகிறது. எங்கும் தலைவிரித்தாடும் இந்த பேயானது , கல்வி மையங்களிலும் ஆடும் ஆட்டம் ஆரம்பக் கட்டத்திலே தடுக்க வேண்டிய … Continue reading ”அங்கு போகாதே! அது அவர்களின் இடம்!” பாண்டிச்சேரி பல்கலையில் தலித் ஒடுக்குமுறையின் நேரடி அனுபவப் பகிர்வு

“உலகிலேயேஅதிகமாக கொடூரங்களை சந்திப்பவர்கள் இந்திய தலித்துகள் தான்”: ஆப்பிரிக்க ஆய்வாளர் ருனோகா ருஷ்டி

ஒடியன் “உலகிலேயேஅதிகமாக கொடூரங்களை சந்திப்பவர்கள் இந்திய தலித்துகள் தான்” ஆப்ரிக்க ஆய்வாளரும் எழுத்தாளரும் சலிக்காத பயணியுமான ரஷ்டி Runoko Rashidi A Dalit woman in India. The Dalits or Untouchables are the lowest of the low. They are taught they they cause pollution or contamination, at least in a ritual sense. Numerically, there are more Dalits in India than the combined … Continue reading “உலகிலேயேஅதிகமாக கொடூரங்களை சந்திப்பவர்கள் இந்திய தலித்துகள் தான்”: ஆப்பிரிக்க ஆய்வாளர் ருனோகா ருஷ்டி

‘நீ எல்லாம் என்னை கேள்வி கேட்கும் அளவுக்கு வந்திட்டியா, பறப்பயலுக்கு இவ்வளவு திமிரா?’ : தலித் ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ளது வாண்டாகோட்டை ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர்வி.சிவசாமி. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், கடந்தஇரண்டு முறை நடைபெற்ற தலைவர் தேர்தலிலும் வெற்றிபெற்று பணியாற்றி வருகிறார். வாண்டாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திருவுடையாபட்டி தெற்கு வெள்ளாற்றின் கரையில் அரசு நிலத்தில் புளியமரங்கள் உள்ளன. இம்மரத்தின் பழங்களை ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஏலம் விடுவதற்கு ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், கலங்குடி ஊராட்சியைச் சேர்ந்த சண்முகம் மகன் ரமேஷ் என்பவர் மேற்படிபுளிய … Continue reading ‘நீ எல்லாம் என்னை கேள்வி கேட்கும் அளவுக்கு வந்திட்டியா, பறப்பயலுக்கு இவ்வளவு திமிரா?’ : தலித் ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல்

பைக் திருடியதற்காக தலித் இளைஞர்களை நிர்வாணமாக்கி, அடித்து ஊர்வலம்; ராஜஸ்தானில் மனுஸ்மிருதி படி தண்டனை

இந்தியாவில் சட்டங்களின் ஆட்சி நடக்கிறதா? மனுஸ்மிருதி ஆட்சி நடக்கிறதா என்கிற குழப்பத்துக்கு இங்கே நடப்பது மனுஸ்மிருதி ஆட்சிதான் என்று நிரூபித்திருக்கிறது ராஜஸ்தானில் நடந்த இந்த சம்பவம். ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கா அருகே உள்ள லஷ்மிபுரா என்ற ஊரைச் சேர்ந்த மூன்று தலித் இளைஞர்கள், (15 வயதிலிருந்து 18 வயது வரையான) பக்கத்து ஊராரின் பைக்கை சில மாதங்களுக்கு முன் திருடியதாகவும் அதை இப்போது ஓட்டி வந்தபோது அவர்களைப் பிடித்த பைக்கின் சொந்தக் காரர்கள் அதாவது ஒடுக்கும் சாதியைச் … Continue reading பைக் திருடியதற்காக தலித் இளைஞர்களை நிர்வாணமாக்கி, அடித்து ஊர்வலம்; ராஜஸ்தானில் மனுஸ்மிருதி படி தண்டனை

”தலித்துகளை அரசியல் ஆனாதை ஆக்கணும்; சோத்துக்கு அலைய விடணும்”: செங்குட்டுவன் வாண்டையாரின் அருவருப்பூட்டும் பேச்சு

பிரேம் பிரேம் நீங்கள் சாதி பார்ப்பதில்லை ஆனால் சாதி உங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது சாதி உளவியலைத் துடைத்து அழிக்காத யாரும் மனித அறம் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள் என்பதற்கு விளக்கம் கேட்பவர்கள் அறிவிலிகள் மட்டும் இல்லை அய்யோக்கியர்களும் கூட. தீண்டாமைையை நான் கடைபிடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு தீண்டாமை அமைப்பை, அதன் உளவியலை, அதற்கான இந்திய நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடமல் இருப்பது தீண்டாமையைச் செலுத்துவதைவிட கொடிய குற்றம். நவீன மனம், நவீன அறிவு தனக்கு உள்ளதாக நம்பம் ஒவ்வொருவரும் … Continue reading ”தலித்துகளை அரசியல் ஆனாதை ஆக்கணும்; சோத்துக்கு அலைய விடணும்”: செங்குட்டுவன் வாண்டையாரின் அருவருப்பூட்டும் பேச்சு

#பாரத்மாதாகீஜெய்!: தலித் பெண்களை நிர்வாணமாக்கி தாக்கும் ‘உயர்சாதி’ பெண்கள்: சுற்றிலும் நின்று அதை மொபைலில் படம் பிடித்த ஆண்கள்

தலித்துகள் நிலையில் சுதந்திர இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம். சாதி நோய் பீடித்த இந்திய சமூகம், எத்தனை வன்மமானது, பெண்களின் ‘உயர்சாதி’ வன்மம் எத்தகைய கோரப் பற்களுடன் தலித் பெண்களை கடித்து குதறுகிறது என்பதைக் காட்டுகிறது இந்த வீடியோ. நிர்வாணமாக்கப்பட்ட இரண்டு பெண்கள், தண்ணீரில் தள்ளப்பட்டு கிடக்கிறார்கள், 3 அல்லது 4 பெண்கள் அவர்களை கடும் வன்மத்துடன் தாக்குகிறார்கள். அந்தப் பெண்கள் கதறி அழுகிறார்கள். அவர்களைச் சுற்றிலும் ஆண்கள் கூட்டம் போனில் … Continue reading #பாரத்மாதாகீஜெய்!: தலித் பெண்களை நிர்வாணமாக்கி தாக்கும் ‘உயர்சாதி’ பெண்கள்: சுற்றிலும் நின்று அதை மொபைலில் படம் பிடித்த ஆண்கள்

கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம்: வீடியோ விமர்சனம்

நந்தன் ஸ்ரீதரன் நண்பர் கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நாவல் சென்னையைப் பற்றிய நாவல்களில் மிக முக்கியமானது. எல்லா இடங்களிலும் நான் இதைப் பதிவு செய்தபடியே இருக்கிறேன்.. கறுப்பர் நகரத்தின்மீது இலக்கிய வெளிச்சம் மிக குறைவாகவே விழுந்திருப்பதாக நான் உணர்கிறேன். அந் நாவலைப் பற்றி கார்த்திக் பத்து நிமிட வீடியோவில் அருமையாக பேசி இருக்கிறார். வாசிப்பில் விருப்பம் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய நூல் விமரிசனம் இதுதான். http://www.youtube.com/watch?v=sWhQuT9ivP4 கறுப்பர் நகரம் நாவலை ஆன் லைனில் வாங்க‌

சாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்!

உடுமலைபேட்டை படுகொலை நிகழ்ந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் தேனி அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் இளைஞரின் வீட்டை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தியில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தினேஷ் என்ற கல்லூரி மாணவர் அதே பகுதியில் உள்ள வேறு சமுதாயத்தை சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெற்றோருக்கு … Continue reading சாதி துரத்துகிறது: தேனியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தலித் வீட்டை அடித்து நொறுக்கிய பெண் வீட்டார்!

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!

சாதி வன்மத்தைத் தூண்ட தமிழகத்தில் அதிகம் விற்பனையாகும் நாளிதழ்களில் ஒன்றான தினமலரில் "அவசரம் வேண்டாம் பெண்களே!" என்ற தலைப்பில் " விசித்திர சித்தன், சமூக ஆர்வலர்" என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை இது. எழுதியவர் உண்மையிலே சமூகத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தால் உண்மையான பெயரைப் போட்டு எழுதியிருக்க வேண்டும். விசித்திர சித்தன் என்ற பெயரில் ஒளிந்துகொண்டு எழுதுவது இப்படி விசித்திரமானதாகத்தான் இருக்கும். எத்தனை வன்மம். வெகுஜென நாளிதழ் என்ற போர்வையில் சாதிய வன்மத்தை, வர்ணாசிரமத்தை நிலைநிறுத்த … Continue reading ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவதூறு;ஜாதி வெறியைத் தூண்டும் தினமலர்: செங்கொடியை அவமானப்படுத்திய நாளிதழின் அடுத்த டார்கட்!!!

எல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?

உமா மகேஸ்வரன் பன்னீர்செல்வன் ஆயிரம் காரணங்கள் அடுக்கினாலும் இதுவரை ஒரு கண்டனமும் கலைஞர், ஸ்டாலின் ஆகியோர் படுகொலைக் பற்றி வாய் திறக்காதது எரிச்சலாக இருக்கிறது. இன்றும் திறக்கவில்லை எனில் திமுக இன்று வாக்கு வங்கியைக் கண்டும் அஞ்சும் கட்சி என்று தாரளமாக எண்ணிக்கொள்ளலாம். பெரியாரின் படங்கள் எல்லாம் கட்சி போஸ்டர்களில் குறுகிக் கொண்டே வந்து, இன்று காணாமலேயே போய்விட்டது ஒரு குறியீடு என்று தெரியாமல்போயிற்று . கேப்டனின் கூட்டணிக்காக, ஜாக்டோ போராட்டத்திற்காக, அமிர்தலிங்கம் மனைவிக்காக, இந்திய அணி … Continue reading எல்லாவற்றுக்கும் சுடச்சுட அறிக்கைவிடும் கலைஞரும் ஸ்டாலினும் சாதிய படுகொலை குறித்து ஏன் வாய்திறக்கவில்லை?

ஃபீலிங் ஆவ்சம், ஃபீலிங் ஹேப்பி: தலித் இளைஞரின் படுகொலைக்கு முகநூல் சாதி வெறியர்களின் ஸ்டேடஸ்

சமூக ஊடகங்களை தங்களுடைய சாதியத்தை பரப்புவதில் சாதி வெறியர்கள் தீவிரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் உடுமலைப் பேட்டையில் தேவர் சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞரை பட்டப்பகலில் வெட்டிக் கொன்ற சம்பவம். மனிதர்களை எத்தகைய கொடூர மனோபாவம் உள்ளவர்களாக சாதி வெறி மாற்றியிருக்கிறது என்பதற்கு, முகநூலில் சில சாதி வெறியர்கள் பகிர்ந்திருக்கும் பதிவுகள் உதாரணம். இளைஞனின் வெட்டுண்ட உடலைக் காட்டி எங்களுடைய பெண்களை திருமணம் செய்தால் இப்படித்தான் இனி நடக்கும் என அறைகூவல் … Continue reading ஃபீலிங் ஆவ்சம், ஃபீலிங் ஹேப்பி: தலித் இளைஞரின் படுகொலைக்கு முகநூல் சாதி வெறியர்களின் ஸ்டேடஸ்

#வீடியோ: சாதிமறுப்புத் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை: நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் மனைவியின் உறவினர்கள் வெறியாட்டம்!!!

திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் பெண்ணின் வீட்டுத்தரப்பில் கடும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அந்தப்பெண் தேவர் ஜாதி என்றும் அந்த … Continue reading #வீடியோ: சாதிமறுப்புத் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் வெட்டிக்கொலை: நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் மனைவியின் உறவினர்கள் வெறியாட்டம்!!!

தலித்துகளின் குடிசைகளுக்கு தீ வைப்பு: இரவில் தூங்கிக் கொண்டிருந்த 100 குடும்பங்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை

பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் தலித்துகள் வசித்த 100 குடும்பங்களின் குடிசைகளுக்கு செவ்வாய்கிழமை இரவு தீ வைக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்போதுதான் இந்தச் செய்தியே வெளியாகியிருக்கிறந்து. குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் நிலைமை குறித்து தெளிவான தகவல் இல்லை என்றே தேசிய அளவிலான ஊடகங்கள் சொல்கின்றன. ஊருக்குள் போதிய இடமில்லை என்பதால் அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தை தங்களுக்கு வழங்கவேண்டும் என்று தலித்துகள் கேட்டதாகவும் அதற்கு அரசு மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அரசிடன் … Continue reading தலித்துகளின் குடிசைகளுக்கு தீ வைப்பு: இரவில் தூங்கிக் கொண்டிருந்த 100 குடும்பங்களின் நிலைமை குறித்து தகவல் இல்லை

தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது?

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், தரகம்பட்டியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை விதித்து, அந்தப் பகுதியில் திமுகவைச் சேர்ந்தவர்கள் முள்வேலி அமைத்துள்ளதாக படங்களுடன் செய்தி பகிர்ந்திருக்கிறார் பூவை லெனின். அவருடைய பதிவில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தரகம்பட்டி வடக்கு தெருகாலனியில் பொது சாலையில் தலித் மக்கள் நடமாட தடை. பொதுப்பாதையில் முள்வேலி போட்டு தடுப்பு. தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் தயாளன் மற்றும் அவர் தம்பி ராகுல்காந்தி சாதி வெறியாடட்டம். தட்டி கேட்ட சகோதரர் … Continue reading தலித் ஒடுக்குமுறை: திமுகவின் சமூக நீதிப் பாதையில் ’முள்வேலி’ ஏன் வந்தது?

கல்லூரியில் சாதிய வன்மம்: செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஸ்ரீபெரும்பதூரில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு சிவில் இன் ஜினியரிங் படித்துவந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். ஆதிதிராவிடர்களுக்கான கல்வி உதவி மூலம் படித்து வந்த இவரை அருட்தந்தை அருள்ராஜ்,  சிறு தவறுகள் செய்யும்போதெல்லாம் இதைச் சுட்டிக்காட்டி, சாதிய வன்மத்துடன் நடந்துகொண்டிருக்கிறார்.  இதனால் மனமுடைந்த அஜித் குமார் செவ்வாய்கிழமை ஹாஸ்டலில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். Ramesh Periyar தோழர்களே ஜெய் பீம் போராளி ரோஹித் வெமுலாவைப்போல் ஸ்ரீபெரும்பதூரில் அமைந்துள்ள புனித வளனார் … Continue reading கல்லூரியில் சாதிய வன்மம்: செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்!

சாதிய வன்மத்துடன் எழுதிய இலங்கை தமிழருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழர் சுப்பையா ரத்தினம், ரவிக்குமாரை, ‘பற நாயே’ சாதிய வன்மத்துடன் பின்னூட்டமிட்டார். இது இந்திய-இலங்கை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களிடையே கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உடைக் கட்டுப்ப்பாடு குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு பற்றி … Continue reading சாதிய வன்மத்துடன் எழுதிய இலங்கை தமிழருக்கு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்டனம்

”பற நாயே”! ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்

அண்மையில் இலங்கை யாழ் பல்கலைக்கழகம் ஆடைக்கட்டுப்பாடு விதித்திருந்தது. இது குறித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். எழுத்தாளர் ரவிக்குமார்  தன்னுடைய முகநூலில் ‘இந்துமயமாகும் யாழ் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தார். “இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக ( University of Jaffna ) நிர்வாகம் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது. 1. மாணவர்கள் வகுப்புகளுக்கு ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது 2. வெள்ளிக்கிழமைதோறும் மாணவிகள் சேலை … Continue reading ”பற நாயே”! ஸ்விட்சர்லாந்து போனாலும் விடாத சாதித்திமிர்; எழுத்தாளர் ரவிக்குமாரை வன்மத்துடன் பேசிய இலங்கை தமிழர்

“வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

தமிழ்நாட்டில் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 5000 தலித்துகள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் மரணம் அடைவதாக தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் சமூகநீதிப் பிரிவில் பணியாற்றும் மாநில கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் ராஜேஸ்தாஸ் தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், கவலையளிப்பதாகவும் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவல்துறையின் மனித உரிமை மற்றும் … Continue reading “வயிற்றுவலி வந்தா ஒரு வருடத்துக்கு 5 ஆயிரம் தலித்துக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?”

சாதியத்தைப் புரிந்துகொள்ள 9 வழிகள்: ‘இப்பலாம் யாரு ஜாதி பாக்குறா?’ என்பவர்களுக்காக!

சமூக ஊடகங்களின் வருகைக்குப் பிறகு முதல்முறையாக ஜாதி என்பது எண்ணற்ற மக்களால் விவாதிக்கப்படும் ஒன்றாக இப்பொழுது மாறியுள்ளது. ஜாதி, ஜாதி சார்ந்த அநீதிகள், சலுகைகள் குறித்துச் சூடான விவாதங்கள் Facebook, Twitter, Quora, Reddit, Instagram என்று எங்கும் நடக்கிறது. ஜாதி பற்றிய இந்த உரையாடல் ஒரு அறிவிற் சிறந்த ரோஹித் வெமுலா எனும் இளைஞனின் மரணத்துக்குப் பிறகே நடக்கிறது என்பது இதயத்தைப் பிசைகிறது. எனினும், இந்த உரையாடல் பல காலத்துக்கு முன்னரே நடைபெற்றிருக்க வேண்டும். நீங்கள் … Continue reading சாதியத்தைப் புரிந்துகொள்ள 9 வழிகள்: ‘இப்பலாம் யாரு ஜாதி பாக்குறா?’ என்பவர்களுக்காக!

கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறையால் மரணித்தவர்களிடமிருந்து ரோஹித் வெமுலாவின் மரணம் எந்தவகையில் வேறுபாடுகிறது?

வெமுலா ரோஹித்தின் தற்கொலை தேசிய அளவில் செய்தியாகியிருக்கிறது. தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் புரையோடிப்போயிருக்கிற ஜாதியின் கோர முகம் மீண்டும் வெளித்தெரிந்திருக்கிறது. ஊடகங்கள் அந்த மாணவனை 'தலித் ஸ்காலர்' என்று அடையாளப்படுத்துகின்றன. அவன் தூக்கை நெருங்குவதற்கு முன்னால், எழுதி வைத்தக் கடிதத்தில் ''வெறுமையாக உணர்கிறேன்; அதுதான் மிகவும் கொடுமையாக இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறான். அதில் அவ்வளவு உண்மை இருக்கிறது. இந்த சமூகம் ஒரு தலித்துக்கு எப்போதும் கையளிப்பது இந்த வெறுமையைத்தான். ஆனால் இது ஏன் ஒரு ஆராய்ச்சி மாணவனை … Continue reading கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறையால் மரணித்தவர்களிடமிருந்து ரோஹித் வெமுலாவின் மரணம் எந்தவகையில் வேறுபாடுகிறது?

கல்வி உதவித்தொகை நிறுத்தம்: 60 தலித் பொறியியல் மாணவர்கள் தற்கொலை செய்யப்போவதாக அறிவிப்பு

ஒடிசாவில் கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் 60 பொறியியல் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளனர். ஒடிசாவின் புவனேஸ்வரிலுள்ள ராஜதானி பொறியியல் கல்லூரியில் படிக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தலித் மாணவர்களுக்கு அவர்களின் மாநில அரசு உதவித் தொகை வழங்கி வந்தது. பீகார் அரசு திடீரென இந்த உதவித்தொகைளை நிறுத்திவிட்டதால் ராஜதானி கல்லூரி நிர்வாகம் தலித்மாணவர்கள் 60 பேரை கல்லூரியிலிருந்து வெளியேற்றிவிட்டது. இதனால் மனமுடைந்த அந்த தலித் மாணவர்கள் 60 பேரும் தற்கொலை செய்து … Continue reading கல்வி உதவித்தொகை நிறுத்தம்: 60 தலித் பொறியியல் மாணவர்கள் தற்கொலை செய்யப்போவதாக அறிவிப்பு

மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?

அ. மார்க்ஸ் 1.ஏப்ரல் 25, 2013 அன்று மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டிற்கு அச்சசங்கத்தினர் சென்ற போது மரக்காணத்தில் நடை பெற்ற சாதிக்கலவரத்தில் கொல்லப்பட்ட பா.ம.க வைச் சேர்ந்த செல்வராஜ் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் கொலைக் குற்றத்தை உறுதி செய்து ஆறு தலித்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பா.ம.க நிறுவனர் தீர்ப்பை வரவேற்றுள்ளார். வி.சி.க தலைவர் திருமாவளவன் தீர்ப்பை ஏற்கவில்லை; தண்டிகப்பட்டவர்கள் அப்பாவிகள் எனக் கூறியுள்ளார். இது விசாரனை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு. … Continue reading மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?

கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா? பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்!

அன்புள்ள தோழர் நியாஸ் அவர்களுக்கு! தங்களின் சமீபத்திய விகடன் கட்டுரை “மக்களே... எல்.கே.ஜி., என்ஜினீயரிங் எது காஸ்ட்லி? - இதுவும் நடக்கும் தமிழகத்தில்!” படித்தேன். உண்மைகளை பேசும் ஒரு சில ஊடகவியலாளர்களில், அதுவும் குறிப்பாக கல்வி குறித்து யாரும் பேசத் தயங்கும் பகுதிகளை கூட எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் எழுதுபவர்களில், நான் பார்த்து வியந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதுவும் 2014 ஆம் ஆண்டு தர்மபுரியில் தொடர்ச்சியாக மூன்று பள்ளிக்கூட மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை எவ்வித … Continue reading கட்டணம் மட்டும்தான் கல்வி துறையில் உள்ள பிரச்சினையா? பள்ளிகள் சாதியை வளர்க்கும் கூடங்களாக மாறுவதையும் கவனத்தில் கொள்வோம்!

’பொதுத் தொகுதியில் தலித்’ சொல்லாடலும் அரசியல் தீண்டாமையும்

அறிவழகன் கைவல்யம் "அவாளை எல்லாம் ஆத்துக்குள்ள ஏன் அலவ் பண்றேள்" என்று சொல்கிற ஒரு பார்ப்பனரைக் கூட மன்னிக்கலாம், ஆனால், "பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை நிற்க வைத்திருக்கிறோம்" என்று சொல்கிற எவரையும் மன்னிக்க முடியாது, அந்தச் சொற்களின் பின்னால் ஒரு ஆழமான சாதிய வன்மமும், அரசியல் தீண்டாமையும் இருக்கிறது. பொதுத் தொகுதி ஒன்றும் தலித்துகளுக்கு நீங்கள் வழங்கும் பிச்சைப் பாத்திரம் அல்ல ஆண்டைகளே, சமூக அக்கறையும், அரசியல் அறிவும், பொது வாழ்வில் அனுபவமும் மிக்க எவரும் … Continue reading ’பொதுத் தொகுதியில் தலித்’ சொல்லாடலும் அரசியல் தீண்டாமையும்

பாரபட்சத்தினால் இழந்த நம்பிக்கை: ரோஹித் வெமுலாவிற்கு அஞ்சலி செலுத்திய கார்ல் சாகனின் மனைவி!

நட்சத்திரங்களுக்கு போக விரும்பிய காலத்தில், கார்ல் சாகனை போல ஒரு அறிவியல் எழுத்தாளராக விரும்பினேன் என்று  ரோஹித் வெமுலா எழுதிய கடிதம் யாராலும் மறந்திருக்க முடியாது.  ரோஹித்தின் இறுதியும், முதலுமான அந்த கடிதத்தை கார்ல் சாகனின் மனைவியும், கார்ல் சாகனின் எழுத்துக்களில், ஆராய்ச்சிகளில் துணை நின்றவருமான ஆன் துருயனுக்கு (Ann Druyan),  Mediaone TV-யின் ராஜீவ் ராமச்சந்திரன் அனுப்பி வைத்துருக்கிறார். அதற்கு ஆன் துருயன் அனுப்பியுள்ள பதிலை தமிழில் மொழி பெயர்த்து கீழே வழங்கி இருக்கிறோம். அன்புள்ள … Continue reading பாரபட்சத்தினால் இழந்த நம்பிக்கை: ரோஹித் வெமுலாவிற்கு அஞ்சலி செலுத்திய கார்ல் சாகனின் மனைவி!

மனித மாண்பு விலை ரூ. 700 : sc /st திருத்த சட்டம் இப்படித்தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது!

திவ்ய பாரதி மதுரையில் மணியம்மை பள்ளிக்கு அருகே காளிமுத்து என்கிற துப்புரவு தொழிலாளியை vaaccine point என்கிற மிக பெரும் மருந்து நிறுவனம் தன் கட்டிடத்தின் முன் இருந்த மலக்குழிக்குள் வேலை என்கிற பெயரில் இறக்கி வன்கொடுமையில் ஈடுபட்ட புகைபடத்தை கையறுநிலையில் நேற்று முகநூலில் பகிர்ந்து இருந்தேன். கையால் மலம் அள்ளுவதை தடை செய்து 2013 லேயே சட்டம் இயற்றப்பட்டு விட்டது. அது மட்டும் இன்றி the scheduled castes and the scheduled tribes (prevention … Continue reading மனித மாண்பு விலை ரூ. 700 : sc /st திருத்த சட்டம் இப்படித்தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது!

மதுராந்தகத்தில் தலித் மக்கள் மீது தொடரும் சாதிய தாக்குதல்கள்!

மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தலித் மக்கள் மீது தொடர்ந்து நடைபெறும் சாதிய தாக்குதலைக் தடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகர் தலித் மக்கள் மீது சாதி ஆதிக்கசக்திகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த ஜன.18 அன்று காந்தி நகரைச் சார்ந்த … Continue reading மதுராந்தகத்தில் தலித் மக்கள் மீது தொடரும் சாதிய தாக்குதல்கள்!

#உரிமைமீட்பு: தலித் முதியவரின் சடலத்தை கொண்டுசெல்ல இடையூறாக இருந்த சுவர் இடிப்பு!

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோயில் பேருந்துநிலையம் அருகே உள்ள கள்ளுக்கடை தெருவைச் சேர்ந்தவர் முருகையன் மகன் கன்னையன் (45).இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். வியாழனன்று மாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மயானத்தில் அடக்கம் செய்ய அவரது உடல்எடுத்துச் செல்லப்பட்டது. செல்லும்வழியில் கேட்டுகளுடன் அரசால் கட்டப்பட்ட சுவர் இருந்தது. இதனால் பாடையைத் தூக்கிக்கொண்டு செல்லமுடியாத நிலையில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுடன் பேசியபோது மறுத்து விட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் … Continue reading #உரிமைமீட்பு: தலித் முதியவரின் சடலத்தை கொண்டுசெல்ல இடையூறாக இருந்த சுவர் இடிப்பு!

திருத்தப்பட்ட வன்கொடுமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது; அடுத்து ஒரு மனிதனை மலக்குழிக்குள் இறக்கியாகிவிட்டது!

திவ்ய பாரதி  மதுரை நாயக்கர் புது தெருவில் சற்று நேரத்திற்கு முன்பு மலக் குழிக்குள் காளி என்கிற துப்புரவு தொழிலாளியை இறக்கி மிகக் கொடூரமான முறையில் வேலை வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். தோழர் தமிழ்தாசன் அவர்கள் இத்தகவலை நமக்கு சொன்னதும் அங்கே புகைப்பட கருவிகளோடு கிளம்பினோம். காவல் துறையையும் அணுகினோம். எந்த பயனுமில்லை. இறுதியில் எங்களால் செய்ய முடிந்தது இதையெல்லாம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நண்பரிம் சொல்லி இது குறித்து இரண்டொரு நாட்களில அவரின் பத்திரிக்கையில் கட்டுரை … Continue reading திருத்தப்பட்ட வன்கொடுமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது; அடுத்து ஒரு மனிதனை மலக்குழிக்குள் இறக்கியாகிவிட்டது!

ரோஹித் வெமுலாவிற்கு நீதி கேட்கும் உண்ணாவிரதத்தில் இணைந்தார் ராகுல் காந்தி:எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கியது ஆர்.எஸ்.எஸ் இளைஞர் அமைப்பு…

ரோஹித் வெமுலா உயிரிழந்து 12 நாட்கள் ஆன நிலையில், அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் ஐதராபாத் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி,  மாணவர்களை சந்தித்ததுடன், அவர்களின் போராட்டத்தில் இரவு முழுவதும் கலந்து கொண்டார். மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலத்திலும் ராகுல் காந்தி பங்கேற்றார். தொடர்ந்து, இன்று தொடங்கியுள்ள  உண்ணாவிரத போராட்டத்திலும் ராகுல் காந்தி  காலை முதல் கலந்து கொண்டுள்ளார். மாணவர்களின் போராட்டம் ஒருபுறம் தீவிரமடைந்து … Continue reading ரோஹித் வெமுலாவிற்கு நீதி கேட்கும் உண்ணாவிரதத்தில் இணைந்தார் ராகுல் காந்தி:எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கியது ஆர்.எஸ்.எஸ் இளைஞர் அமைப்பு…

சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல் வழக்கில் தீர்ப்பு: 2008 ஆம் ஆண்டு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்தது என்ன?

2008-ஆம் ஆண்டு பசும்பொன் தேவர் ஜெயந்தியைக் கொண்டாடிய, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த தேவர் சாதி மாணவர்கள், அதற்காக வெளியிட்ட சுவரொட்டியில் சட்டக் கல்லூரியின் பெயரில் இருந்த “அம்பேத்கர்” என்ற சொல்லைக் கவனமாகத் தவிர்த்து விட்டு வெறுமனே சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று வெளியிட்டதாகவும், இதனால் தலித் மாணவர்கள் கோபம் கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து சிறு சிறு பூசல்களாக உருவாகிப் புகைந்து கொண்டிருந்த முரண்பாடு மோதலாக வெடித்தது. ஆனால் நடைபெற்றுள்ள இந்த துயரச் சம்பவத்தை விளங்கிக் கொள்ள இப்படிப்பட்ட … Continue reading சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல் வழக்கில் தீர்ப்பு: 2008 ஆம் ஆண்டு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்தது என்ன?

தலித் பெண் பிரதிநிதியை கொடியேற்ற விடாமல் தடுத்த அதிமுக செயலாளர்!

தீக்கதிர் இந்தியா 67-ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வேளையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித்மற்றும் பெண் பிரதிநிதிகளை தேசியக் கொடியேற்ற விடாமல் தடுத்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.மேலும், மாநிலத்தை ஆளும் அதிமுகவின் ஒன்றியச் செயலாளர் ஒருவரே, தலித் மற்றும் பெண் பிரதிநிதிகளை தேசியக் கொடியை ஏற்ற விடாமல் தடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின கொடியேற்று விழாசெவ்வாயன்று நடைபெற்றது. இந்த விழாவிற்காக அதிமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் கு.கலையரசி, … Continue reading தலித் பெண் பிரதிநிதியை கொடியேற்ற விடாமல் தடுத்த அதிமுக செயலாளர்!

”ஊடகங்களின் அலட்சியமே ரோஹித் வெமுலாவைக் கொன்றது”

மு. குணசேகரன் ரோகித் வேமுலாவின் துயர மரணத்துக்கு ஊடகங்கள் பின்பற்றிய அலட்சியமான அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணம் என குற்றஞ்சாட்டுகிறார் நண்பர் டி.கார்த்திகேயன். இந்து நாளேட்டின் மதுரை பதிப்பின் செய்தியாளராகச் சில ஆண்டுகளுக்கு முன் சாதிய வன் கொடுமைகள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் பரவலான கவனத்தை ஈர்த்தவை. இப்போது எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராகப் பயல்கிறார். வேமுலாவின் மரணம், நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வெளிப்பட்ட கொந்தளிப்பு, தொடர்ந்து நிலவும் … Continue reading ”ஊடகங்களின் அலட்சியமே ரோஹித் வெமுலாவைக் கொன்றது”

ஜாதி ஆச்சாரத்தை காப்பாற்ற தனி கிணறு கட்டிய பிராமண பேராசிரியர்: இதுதான் ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய ஐதராபாத் பல்கலையின் உண்மை நிலைமை

மிச்சமாகி இருந்த வெறுமையில், ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்த ஐதராபாத் பல்கலை பற்றி நாளொரு அதிர்ச்சியும், பொழுதொரு ஆதங்கங்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில் இப்போது வெளியாகியுள்ள தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ஐதராபாத் பல்கலையில் கணக்கு பிரிவில்  பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஒரு மூத்த பிராமண பேராசிரியர், பல்கலை குடியிருப்பில் தங்கி இருந்தபோது அவருடைய வீட்டிற்கு முன்னே ஒரு தனி கிணறு வெட்டி வைத்திருந்தது தற்போது வெளி வந்துள்ளது. அவருடைய  ஆச்சார சடங்குகளை புரியும் … Continue reading ஜாதி ஆச்சாரத்தை காப்பாற்ற தனி கிணறு கட்டிய பிராமண பேராசிரியர்: இதுதான் ரோஹித் வெமுலாவை தற்கொலைக்கு தள்ளிய ஐதராபாத் பல்கலையின் உண்மை நிலைமை

நிர்பயாவின் ஜாதியை கேட்டீர்களா ? ரோஹித் வெமுலாவின் ஜாதியை கேட்பவர்களுக்கு அவருடைய தாய் சீற்றத்துடன் கேள்வி

ஆர்.எஸ்.எஸ்சின் இளைஞர் அமைப்பான ஏ.பி.வி.பீ.யின் தூண்டுதல் காரணமாக ஐதராபாத் பல்கலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாலும், மத்திய அமைச்சர்களின் நெருக்குதல் கார்ரனமாகவும் தற்கொலை செய்து கொண்ட தலித் ஆராய்ச்சி மாணவன் ரோஹித் வெமுலாவின் மரணம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களை வீதிக்கு போராட அழைத்து வந்திருக்கிறது.  அமைச்சர்கள் தத்தாத்ரேயா, ஸ்மிருதி சூபின் இரானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக லக்னோவில் பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலையில் உரைநிகழ்த்திய பிரதமர் மோடிக்கு, அங்கிருந்த ஒரு … Continue reading நிர்பயாவின் ஜாதியை கேட்டீர்களா ? ரோஹித் வெமுலாவின் ஜாதியை கேட்பவர்களுக்கு அவருடைய தாய் சீற்றத்துடன் கேள்வி

“தாங்க முடியாத வலி என்கிறீர்கள், இவ்வளவு மெதுவாகவா உணர்வீர்கள்?” மோடியின் இரங்கலை பகடி செய்யும் டெலிகிராஃப்!

இந்தியா ஓர் இளம் மகனை இழந்துவிட்டதாக, ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் தற்கொலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசினார். மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலையால் அவரது தாயார் அடைந்திருக்கும் துயரத்தை உணர்வதாக குறிப்பிட்டார். தற்கொலைக்கு பின்னணியில் இருக்கும் அரசியல் காரணங்களைவிட, ஒரு தாய் மகனை இழந்திருக்கும் வேதனைதான் வெளிப்படுவதாக மோடி குறிப்பிட்டார். இதற்கு கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் த டெலகிராஃப் நாளிதழ். தாங்க முடியாத … Continue reading “தாங்க முடியாத வலி என்கிறீர்கள், இவ்வளவு மெதுவாகவா உணர்வீர்கள்?” மோடியின் இரங்கலை பகடி செய்யும் டெலிகிராஃப்!

என் ஆளுமையை சிதைத்த கல்லூரி வாழ்க்கை: சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான எழுத்தாளரின் அனுபவம்!

மீனா சோமு என் கதை... தற்போது NIT என்று சொல்லப்படுகிற Regional Engineering College- இல் பொறியியல் படித்தவள். என் குடும்பத்தில், உறவில் எங்கள் அப்பா, அம்மா ஆகியோரின் உறவுகளில் முதல் பொறியியல் பட்டதாரி நான் தான். என் அப்பா, அவரது கிராமத்தில் முதல் முதுகலை பட்டம் பெற்றவர். அந்த கிராமத்தில் அக்ரஹார பிள்ளைகள், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடையாத போதும்,பத்தாம் வகுப்பை பெயில் ஆகாமல் பாஸ் செய்த பிள்ளையை, படிக்காத பெற்றோரும், படிப்புவாசனையற்ற உற்றாரும் பெருமையோடு … Continue reading என் ஆளுமையை சிதைத்த கல்லூரி வாழ்க்கை: சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான எழுத்தாளரின் அனுபவம்!