சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின்கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்தலித்திய அமைப்பினர்…!!!

சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின் கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்தலித்திய அமைப்பினர்…!!! தருமபுரி பாலனையும், ஏ.எம் கே- வையும் இணைத்துக் கொள்வோம்…!!! சீனிவாசராவ்ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன்மணலூர் மணியம்மைவாட்டாடாகுடி இரணியன்ஜாம்பவானோடை சிவராமன் இவர்கள் யாருமே தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல.கீழத்தஞ்சையில் இவர்களின் ஈகம் என்பது, ஏதோ சமூக அடுக்கில் ஆதிக்கச் சாதியில் பிறந்து விளிம்புநிலையில் உள்ளோரை மீட்க வந்த மீட்பர்களாக அவர்கள் களத்தில் நிற்கவில்லை. மாறாக,கம்யூனிச சித்தாந்தந்தை ஏற்றும் , கட்சித் திட்டங்களை முன்வைத்தும் களத்தில் நின்று சமூகசமத்துவத்தை முன்னெடுத்தவர்கள். எழுத்தாளர் அழகியபெரியவன் … Continue reading சாதி தீண்டாமை ஒழிப்பில் கம்யூனிஸ்டுகளின்கால் தூசுக்கு ஆகமாட்டார்கள்தலித்திய அமைப்பினர்…!!!

தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்” | பகுதி – 2

ப.ஜெயசீலன்  "revenge is the purest human emotion" தலித் சினிமாக்களில் தவிர்க்கமுடியாத ஒரு கூறாக "counter narrative" இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். தங்களை பற்றிய உண்மைக்கு புறம்பான பொது சித்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் அல்லது மறுக்கும் அல்லது சிதைக்கும் முனைப்பை தலித்திய கலை, இலக்கிய, சினிமாவில் நீங்கள் காணலாம். தலித்துகள் பற்றிய மிக விஸ்தாரமான, நுணுக்கமான, தேர்ந்த கதையாடல்கள் பார்ப்பனிய சனாதனத்தை உள்வாங்கி பார்பனியர்களால், சாதி ஹிந்துக்களால் ஏன் தலித்துகளாலேயே  உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த கதையாடல்கள் எல்லாமும் … Continue reading தலை துண்டிக்கப்பட்ட கடவுள்களின் புதல்வன் “கர்ணன்” | பகுதி – 2

திமுக: நம்பகமான கூட்டாளியா?

ஸ்டாலின் ராஜாங்கம் அதிமுக பெரும்பான்மை பலம் பெற்றிருக்கிறது. திமுக வலிமையான எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது. தலித் கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது இடதுசாரிகள் கூட இல்லாத சட்டசபையாகியிருக்கிறது. இது தொடர்பாக பொறுமையாக பின்னால் எழுத வேண்டும். இப்போதைக்கு சிறு கணக்கீடு மட்டும் இங்கே. இத்தேர்தலில் தலித் தலைவர்கள் குறைந்த வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். திருமாவளவன் 87,டாக்டர் கிருஷ்ணசாமி 493,சிவகாமி 6853 ஆகிய வாக்குகள் வித்தியாசங்களிலேயே தோற்றிருக்கின்றார்கள். திருமாவளவனுக்கு காட்டுமன்னார்கோயிலும் கிருஷ்ணசாமிக்கு ஒட்டப்பிடாரமும் செல்வாக்கான தொகுதிகள். தங்களுக்கிருக்கும் ஓட்டுகளோடு மற்றொரு கட்சியின் … Continue reading திமுக: நம்பகமான கூட்டாளியா?

வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!

அன்பு செல்வம் தலைவர் திருமா அவர்களுக்கு பாராட்டுக்கள்! தலைவர் வெற்றியடைந்திருந்தால் அதீத மகிழ்ச்சியே. ஆனாலும் தன‌க்கான தனித்தன்மையோடு வெற்றிக்கு மிக அருகில் இணையாகத் தான் இருக்கிறார் (48450 / 48363). கிட்டத்தட்ட அனைத்து ம.ந. கூட்டணித் தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு, கிடைத்த சொற்ப நேரத்தில் தனது தொகுதி மக்களிடமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, சொந்த சமூகத்தைச் சார்ந்தவரையே எதிர்கொண்டு களத்தில் நிற்க வேண்டியிருக்கிறதே அது மிகவும் துயரமானது. எனினும் அதையும் கடந்து அவர் பெற்ற வாக்குகள் இத்தனையென்றால் … Continue reading வெற்றி, தோல்வியை வைத்து விமர்சிக்காதீர்!

#தலித்வரலாற்றுமாதம் “நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”: தொல். திருமாவளவன்

ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்களிடம் 1998 செப்டம்பர் மாதத்தில் நான் பதிவுசெய்த நேர்காணலின் ஒரு பகுதி * தலித் அரசியலுக்குள் நீங்கள் ஈர்க்கப்பட்டது எப்படி? இளமைக்கால அனுபவங்கள் இதற்குக் காரணமா? மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது அம்பேத்கர் இயக்கங்களின் அறிமுகம் கிடைத்தது. சட்டக் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தபோது அய்யனார் என்று ஒரு நண்பர் இருந்தார். வீடூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். காலனி வீடுகள் கட்டுவதற்கு நிலத்திற்காக ஆதிக்க சாதியினரோடு … Continue reading #தலித்வரலாற்றுமாதம் “நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”: தொல். திருமாவளவன்

#தலித்வரலாற்றுமாதம்: வட மாவட்டங்களில் தலித் எழுச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சங்கம்

அன்பு செல்வம் 20 -ஆம் நூற்றாண்டின் தலித் எழுச்சிக்கு சவாலாக அமைந்தது எதுவெனில் மாவீரன் இமானுவேல் சேகரன் படுகொலை. சாதிய அரசியலின் நெடுநல் வாடையோடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட முதல் களப்போராளி படுகொலையின்போது தமிழகத்திற்குள்ளும், வெளியேயும் நிகழ்ந்த போராட்ட ஆதரவுகள் வரலாற்றில் இன்னும் பதிவு செய்யப்படாதது. மாவீரன் கொலையையொட்டி வடக்கே அனல் கொதித்த எழுச்சிக்கு வித்திட்ட ஒரு சங்கம் "தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சங்கம் - 1957". 1957 -ல் தனது கொள்கை கோட்பாடுகளுடன் தொடங்கப்பட்டதும் இச்சங்கம் எடுத்த முதல் … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: வட மாவட்டங்களில் தலித் எழுச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சங்கம்

#தலித்வரலாற்றுமாதம்: தமிழகத்தில் ’ஜெய்பீம்’ முழக்கமிட்ட முன்னோடி பி.வி.கரியமால்!

ஸ்டாலின் ராஜாங்கம்  படத்திலிருப்பவர் பெயர் பி.வி.கரியமால். இப்போதுமிருக்கும் கடந்த தலைமுறை அம்பேத்கரிய அரசியல் தலைவர். எண்பது வயதை நெருங்கும் என்று நினைக்கிறேன். தருமபுரி மாவட்டம் அரூரில் வாழ்ந்துவருகிறார். பாரதீய குடியரசு கட்சி தலைவர். ரோகித் வெமூலா எழுப்பிய பின்னணியில் உணர்ச்சிபூர்வ நிலையை அடைந்திருக்கும் ஜெய்பீம் என்ற முழக்கத்தை இத்தகைய கவனஈர்ப்புக்கு வெளியே நீண்ட நாட்களாக தங்கள் வணக்கம் செலுத்தும் முறைகளிலும் மேடைகளிலும் பயன்படுத்தி வந்தவர்கள் குடியரசுக் கட்யினர் தாம்.இப்போதும் நீலத்துண்டு,ஜெய்பீம் வணக்கத்தோடும் வாழ்கிறார் பி.வி.கே. தலித் அரசியல் … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: தமிழகத்தில் ’ஜெய்பீம்’ முழக்கமிட்ட முன்னோடி பி.வி.கரியமால்!

“அட…இழிசாதி தலித் நாயே!” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை

அண்மையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடலூரில் நடந்த மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் க. தமிழ்மணி. இவர் முகநூலில் பதிவொன்றுக்கு இட்ட கருத்தில் ‘இழிசாதி தலித்தே’ என கடுமையாக பேசியிருக்கிறார். இது முகநூலில் கடும் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறது.   Rajesh Dee இரா. முருகப்பன் சீமானின் சாதி வெறி அடையாளம். அவரது திருமங்கலம் வேட்பாளர். நிச்சயம் இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்படவேண்டும்..இவரது தேர்தல் விண்ணப்பம் … Continue reading “அட…இழிசாதி தலித் நாயே!” சீமான் கட்சி வேட்பாளரின் சமூக நீதி கொள்கை

தலித் தலைமை என்பது அம்பேத்கரிய-மார்க்சிய செயல்பாட்டுத் தளத்தில் அமைய வேண்டும்; ஏன்?

பிரேம் இந்திய அரசியல்-சமூக விடுதலை அரசியல்-பொருளாதார விடுதலை எதுவாக இருந்தாலும் தலித் அரசியலின் (ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல்- சமூக சமத்துவ அரசியல்) அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகே தமக்கான அடுத்த கட்ட இயக்கத்தைத் தொடர முடியும். அடிமைப்பட்ட சமூகம், அடக்கப்பட்ட சமூகம், ஒடுக்கப்பட்டச் சமூகம் என ஒரு அமைப்பை -பல சாதிகளைத்- தமக்குள் வைத்துக்கொண்டுள்ள ஒரு சமூகக்கூட்டம் அடிப்படையில் சமத்துவம், மனித உரிமைகள், அடிப்படை மனித அறங்கள் என எதையும் மதிக்கவில்லை என்பது மிக வெளிப்படையான உண்மை. … Continue reading தலித் தலைமை என்பது அம்பேத்கரிய-மார்க்சிய செயல்பாட்டுத் தளத்தில் அமைய வேண்டும்; ஏன்?

கி.வீரமணி,சுபவீயின் அருந்ததியருக்கான குரல் திராவிட இயக்கத்தை காப்பதற்கான கேடயம்!

ஸ்டாலின் ராஜாங்கம் கி.வீரமணி,சுபவீ போன்றோர் விசிகவை ஆதரிப்பதற்கு உடனடி அரசியல் காரணங்கள் தான் உண்டே தவிர தலித் அரசியலின் வருகை காரணமாக ஏற்பட்ட சுயவிமர்சனத்தினூடான கருத்தியல் மாற்றங்களை ஏற்று ஆதரிக்கவில்லை என்று நான் முன்பு எழுதினேன். அதாவது விசிக திமுக கூட்டணியில் இருந்ததாலேயே ஆதரிக்கிறார்கள் என்பதே நான் எழுதியதன் பொருள். அதைதான் சுபவீ இப்போது நிருபித்துக்கொண்டிருக்கிறார். அதை சில தலித் தோழர்கள் புரிந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஒரு தலித் கட்சிக்கு நிலவும் சூழலில் கூட்டணி எப்படியும் அமையலாம். அது … Continue reading கி.வீரமணி,சுபவீயின் அருந்ததியருக்கான குரல் திராவிட இயக்கத்தை காப்பதற்கான கேடயம்!

கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறையால் மரணித்தவர்களிடமிருந்து ரோஹித் வெமுலாவின் மரணம் எந்தவகையில் வேறுபாடுகிறது?

வெமுலா ரோஹித்தின் தற்கொலை தேசிய அளவில் செய்தியாகியிருக்கிறது. தேசத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் புரையோடிப்போயிருக்கிற ஜாதியின் கோர முகம் மீண்டும் வெளித்தெரிந்திருக்கிறது. ஊடகங்கள் அந்த மாணவனை 'தலித் ஸ்காலர்' என்று அடையாளப்படுத்துகின்றன. அவன் தூக்கை நெருங்குவதற்கு முன்னால், எழுதி வைத்தக் கடிதத்தில் ''வெறுமையாக உணர்கிறேன்; அதுதான் மிகவும் கொடுமையாக இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறான். அதில் அவ்வளவு உண்மை இருக்கிறது. இந்த சமூகம் ஒரு தலித்துக்கு எப்போதும் கையளிப்பது இந்த வெறுமையைத்தான். ஆனால் இது ஏன் ஒரு ஆராய்ச்சி மாணவனை … Continue reading கல்வி நிலையங்களில் ஒடுக்குமுறையால் மரணித்தவர்களிடமிருந்து ரோஹித் வெமுலாவின் மரணம் எந்தவகையில் வேறுபாடுகிறது?

#தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

மதிவண்ணன் பத்திரிக்கையாள நண்பரொருவர் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற விவாதத்தில் உங்கள் கருத்து என்ன எனக் கேடடார்;. அவரிடம்; சொன்னதும் சொல்ல நினைத்ததுமான சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் தலித் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கருத்து எனக்கு உடன்பாடானதே. இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்வதென்றால் ஒடுக்குமுறையில் உச்சபட்சத்தை அனுபவிக்கின்றதும் உற்பத்தியில் உடல் உழைப்பில் நற்பண்புகளில் முதன்மை இடத்தை வகிப்பதுமான அருந்ததியர் வகுப்பில் ஒருவர் முதல்வர் ஆவது கருத்தியல் ரீதியில் பொருத்தமான ஒன்று. நடைமுறையில் … Continue reading #தலித்முதல்வர் விவாதம்: சுபவீயின் கேள்வி புறக்கணிக்கக்கூடியதா?

தலித் முதல்வர்: சிலர் வேண்டுமென்றே கூட்டணியில் குழப்பம் உண்டாக்க முயல்கின்றனர்: திருமாவளவன் விளக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் ‘தலித் முதல்வர்’ என்ற விவாதம் குறித்து விளக்க அளித்திருக்கிறார். “மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, 'முதல்வர் வேட்பாளர்' குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளோம். கூட்டணியின் 'குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை' முன்வைத்து மக்களைச் சந்திப்பது என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இந்நிலையில், "தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?" … Continue reading தலித் முதல்வர்: சிலர் வேண்டுமென்றே கூட்டணியில் குழப்பம் உண்டாக்க முயல்கின்றனர்: திருமாவளவன் விளக்கம்