மலக்குழியில் இறங்குவதை ஈடுபாட்டோடு செய்யச் சொல்கிறார் ’ஈஷா’ ஜக்கி வாசுதேவ்

“ஒரு செயலில் உங்கள் ஈடுபாடு 100 சதவிகிதம் இல்லையென்றால், அந்த செயலால் உங்களுக்கோ, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கோ எந்தப்பயனும் இல்லை” ஜக்கியின் இந்தப் ‘பொன்’ மொழியையும் அதை சுட்ட மலக்குழியில் இறங்கிய ஒரு மனிதரின் படத்தையும் தாங்கிய பேனர் கோவை பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களை மலக்குழிக்குள் இறக்குவதை தடுக்க கடுமையான சட்டங்கள் வந்துவிட்டன. ஆனாலும் விதியை மீறி பல தொழிலாளர்கள் மலக்குழிக்குள் இறக்கப்படுவதும் அவர்கள் மரணத்தை தழுவதும் தொடர்கதையாகிவருகிறது. இதையும் படியுங்கள்: மலக்குழியில் மாய்ந்த மனிதர்களின் வாழ்க்கையை பின் … Continue reading மலக்குழியில் இறங்குவதை ஈடுபாட்டோடு செய்யச் சொல்கிறார் ’ஈஷா’ ஜக்கி வாசுதேவ்

#தலித்வரலாற்றுமாதம்: தலித்துகளுக்கு எதற்கு தனிக் கட்சி?

அன்பு செல்வம் தங்களுக்கென தனித்த அரசியல் வேண்டுமென முடிவெடுத்த தலைவர்களான ஆ.சக்திதாசன், எல். இளையபெருமாள் மற்றும் அவர்களது சமகால தோழர்கள் திராவிட, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து வெளியேறி 1988 -ல் ஸ்காம் என்கிற ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கத்தை உருவாக்கினார்கள். இதன் நோக்கமே 1989 பொதுத்தேர்தலில் 44 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டுமென எடுத்த முடிவுதான் காரணம். அதனால் அந்த தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட கட்சிகளுக்கும் வேலை செய்வதில்லை என முடிவெடுத்திருந்த நிலையில் தி.மு.க சார்பில் … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: தலித்துகளுக்கு எதற்கு தனிக் கட்சி?

#தலித்வரலாற்றுமாதம்:கிறிஸ்தவத்தில் சாதி ஒழிப்புக்கான நாயகன் காரல் ஆக்ஸ்!

Anbu Selvam கிறிஸ்தவத்தில் சாதி ஒழிப்புக்கான நாயகன் : காரல் ஆக்ஸ் (1863 - 2013) அண்ணன் கஜேந்திரன் அய்யாத்துரை அவர்களின் முன்னுரையோடு 2007 -ல் வெளியான "வரலாற்றின் வழிமறிப்பு சீகன்பால்கு" என்கிற நூலில் ஒரு பெயராக பதிவு செய்யப்பட்ட "ஓக்ஸ்" இவர்தான். காலனிய ஆட்சியின்போது கிறிஸ்தவ நலனுக்காக தலித் மீது அக்கறை கொண்டவர்களின் பட்டியலில் இடம் பெற்ற கால்டுவெல், கார்னல் ஆல்காட், சார்லஸ் மீட், எல்லீஸ், சூல்ட்ஸ் போன்ற அருட்பணியாளர்களின் வரிசையில் வருபவர். கிறிஸ்டோபர் ஏர்னஸ்டோ … Continue reading #தலித்வரலாற்றுமாதம்:கிறிஸ்தவத்தில் சாதி ஒழிப்புக்கான நாயகன் காரல் ஆக்ஸ்!

#தலித்வரலாற்றுமாதம் “நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”: தொல். திருமாவளவன்

ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்களிடம் 1998 செப்டம்பர் மாதத்தில் நான் பதிவுசெய்த நேர்காணலின் ஒரு பகுதி * தலித் அரசியலுக்குள் நீங்கள் ஈர்க்கப்பட்டது எப்படி? இளமைக்கால அனுபவங்கள் இதற்குக் காரணமா? மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது அம்பேத்கர் இயக்கங்களின் அறிமுகம் கிடைத்தது. சட்டக் கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தபோது அய்யனார் என்று ஒரு நண்பர் இருந்தார். வீடூருக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். காலனி வீடுகள் கட்டுவதற்கு நிலத்திற்காக ஆதிக்க சாதியினரோடு … Continue reading #தலித்வரலாற்றுமாதம் “நான் அனுபவித்த சாதிக் கொடுமைகள் கொஞ்சம்தான் ”: தொல். திருமாவளவன்

#தலித்வரலாற்றுமாதம்: வட மாவட்டங்களில் தலித் எழுச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சங்கம்

அன்பு செல்வம் 20 -ஆம் நூற்றாண்டின் தலித் எழுச்சிக்கு சவாலாக அமைந்தது எதுவெனில் மாவீரன் இமானுவேல் சேகரன் படுகொலை. சாதிய அரசியலின் நெடுநல் வாடையோடு திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட முதல் களப்போராளி படுகொலையின்போது தமிழகத்திற்குள்ளும், வெளியேயும் நிகழ்ந்த போராட்ட ஆதரவுகள் வரலாற்றில் இன்னும் பதிவு செய்யப்படாதது. மாவீரன் கொலையையொட்டி வடக்கே அனல் கொதித்த எழுச்சிக்கு வித்திட்ட ஒரு சங்கம் "தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சங்கம் - 1957". 1957 -ல் தனது கொள்கை கோட்பாடுகளுடன் தொடங்கப்பட்டதும் இச்சங்கம் எடுத்த முதல் … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: வட மாவட்டங்களில் தலித் எழுச்சிக்கு வித்திட்ட தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் சங்கம்

#தலித்வரலாற்றுமாதம்: தமிழகத்தில் ’ஜெய்பீம்’ முழக்கமிட்ட முன்னோடி பி.வி.கரியமால்!

ஸ்டாலின் ராஜாங்கம்  படத்திலிருப்பவர் பெயர் பி.வி.கரியமால். இப்போதுமிருக்கும் கடந்த தலைமுறை அம்பேத்கரிய அரசியல் தலைவர். எண்பது வயதை நெருங்கும் என்று நினைக்கிறேன். தருமபுரி மாவட்டம் அரூரில் வாழ்ந்துவருகிறார். பாரதீய குடியரசு கட்சி தலைவர். ரோகித் வெமூலா எழுப்பிய பின்னணியில் உணர்ச்சிபூர்வ நிலையை அடைந்திருக்கும் ஜெய்பீம் என்ற முழக்கத்தை இத்தகைய கவனஈர்ப்புக்கு வெளியே நீண்ட நாட்களாக தங்கள் வணக்கம் செலுத்தும் முறைகளிலும் மேடைகளிலும் பயன்படுத்தி வந்தவர்கள் குடியரசுக் கட்யினர் தாம்.இப்போதும் நீலத்துண்டு,ஜெய்பீம் வணக்கத்தோடும் வாழ்கிறார் பி.வி.கே. தலித் அரசியல் … Continue reading #தலித்வரலாற்றுமாதம்: தமிழகத்தில் ’ஜெய்பீம்’ முழக்கமிட்ட முன்னோடி பி.வி.கரியமால்!