திராவிடம் மொழியா? திராவிடம் இனமா? திராவிடம் நாடா?

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னைப் பற்றிய குறிப்பில் தி திரவிடியன் ஸ்டாக் என்ற குறிப்பை சேர்த்தார். இது சர்ச்சையான நிலையில், தி திரவிடியன் ஸ்டாக் என்ற தலைப்பில் முரசொலியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கட்டுரை எழுதியிருந்தார். இதுகுறித்து தோழர் தியாகு ஆற்றியுள்ள எதிர்வினை: தோழர் சுபவீ … Continue reading திராவிடம் மொழியா? திராவிடம் இனமா? திராவிடம் நாடா?

ஆர். எஸ். எஸ்.காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்!

ஆழி. செந்தில்நாதன் 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 - உலகத் தாய்மொழிகள் நாளுக்காக புது தில்லியில் ஜந்தர் மந்தரில் ஒரு ஆர்பாட்டம் நடத்துவதற்காக வேலைசெய்துகொண்டிருந்த நேரம்... அதே ஜந்தர் மந்தரில் ஒரு டென்ட் கொட்டாய் இருந்தது. அதில் பாரதிய பாஷா அண்டோலனோ என்னவோ பெயரில் கொஞ்சம் பேர் வருடக்கணக்காக உண்ணாவிரதம் (ஆள் மாற்றி ஆள் மாற்றி) இருக்கிறார்கள். இந்திய மொழிகளுக்காக குரல் கொடுக்கிறார்களாம். எங்களோடு களத்தில் இருந்த ஒரு தோழர் அவர்களைப் பார்த்து எங்களுடைய … Continue reading ஆர். எஸ். எஸ்.காரன் “தமிழ் வாழ்க!” என்று சொன்னால்கூட அதற்கு “தமிழ் ஒழிக!” என்றுதான் அர்த்தம்!

தமிழ் ஒரு சூழல் மொழி

நக்கீரன் ஒவ்வொரு மொழியும் அது பேசப்படும் நிலத்தின் சூழலில் இருந்தே உருவாகிறது. ஒரு நிலத்தின் சூழல் அழியும்போது அங்குப் பேசப்படும் மொழியும் அழிகிறது. காலனி ஆதிக்கத்தால் பிடுங்கப்பட்ட தம் நிலத்தை இழந்த பல பழங்குடிகள் அத்தோடு தம் சூழலையும் இழந்ததால் படிப்படியாக மொழியையும் இழந்தனர். பல மொழிகள் பேசுவதற்கு ஆளின்றி இறந்துவிட்டன. ஆகவே மொழியும் சூழலும் வேறு வேறு அல்ல. அவ்வகையில் தமிழ் ஒரு சூழல் மொழியாகும். உயிரினவளம் மிகுந்த ஒரு நிலத்தில் தோன்றும் ஒரு மொழி … Continue reading தமிழ் ஒரு சூழல் மொழி

செம்மொழி நிறுவன முத்திரையில் தமிழ் இல்லை: தமிழாய்வு அலுவலகத்திலேயே இந்த நிலையா?!!

செம்மொழித் தமிழாய்வை வளர்க்கும் நோக்குடன் 2007 ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  நிறுவியதுதான் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம். பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஆவணப்படுத்துவதையும் பாதுகாப்பதையும் இந்நிறுவனம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் தமிழ் இல்லை என்பது தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Maraimalai Ilakkuvanar எங்கும் தமிழ்??எதிலும் தமிழ்?? ஏங்கும் தமிழ்!தூங்கும் தமிழன்! செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலக … Continue reading செம்மொழி நிறுவன முத்திரையில் தமிழ் இல்லை: தமிழாய்வு அலுவலகத்திலேயே இந்த நிலையா?!!

மிதரக மகிழுந்து தேர்வு: துபாயில் அசத்தும் தூய தமிழ்

துபாயில் ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகள் ஆங்கிலம், அரபி, உருது ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வந்தன. இதனை மேலும் எளிதாக்கும் வகையில், தமிழ், மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய நான்கு இந்திய மொழிகள் உள்பட ஏழு மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஜூன் மாதம் துபாய் அரசு அறிவித்தது. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான 30 நிமிட தேர்வை தமிழில் எழுதலாம் என்றும்  போக்குவரத்து விதிகள் தொடர்பான உரைகளும் தமிழில் அளிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தது. அந்த சட்டம் … Continue reading மிதரக மகிழுந்து தேர்வு: துபாயில் அசத்தும் தூய தமிழ்