“இஸ்லாமியர்கள் பொதுச் சமூகத்துடன் இணைந்து இருப்பதன் மூலம்தான் இந்துத்துவாவை வெற்றி கொள்ள முடியும்”: கோம்பை எஸ். அன்வர்

இஸ்லாமியர்கள், பொதுச் சமூகத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலமாகத்தான் எதிர் சக்திகளை வெற்றி கொள்ள முடியும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. உதாரணமாக பத்தொன்பது சதவிகித முஸ்லிம்கள் வாழும் உபியில், முஸ்லிம்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு அரசியல் வெற்றி காண முடியும் என்பது அண்மையில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. அப்படியிருக்க ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவான தமிழகத்தில் யோசிக்க வேண்டும்.