அரசியலிருந்து விலகுவதாக அறிவித்த தமிழருவி மணியன், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். இதில் “விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?" என்று கம்யூனிஸ்டுகள் குறித்து காட்டமாக பேசினார் தமிழருவி மணியன். மணியனின் இந்தப் பேச்சுக்கு பேரா. அருணன் அளித்திருக்கும் பதில்: “நேற்று ஒரு டி வி பேட்டியில் "எம் ஜி ஆர், விஜயகாந்த் என்று நடிகர்கள் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும் ?" என்று கேலியாக கேட்டார் தமிழருவிமணியன். கடந்த மக்களவைத் தேர்தலில் பா ஜ … Continue reading “விஜயகாந்த் பின்னால் சென்ற கம்யூனிஸ்டுகளிடம் எங்கே இருக்கிறார்கள் மார்க்ஸும் எங்கெல்சும்?” என்ற தமிழருவி மணியனுக்கு ஒரு பதில்
குறிச்சொல்: தமிழருவி மணியன்
“இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை” : தமிழருவி மணியன்
பொது வாழ்வை விட்டுப் போகிறேன்… என்ற தலைப்பில் தமிழருவி மணியன் அளித்துள்ள அறிக்கை: நட்சத்திரங்கள் இல்லாத இரவு நேரத்து வானம், சங்கீத மொழி பேசி சலசலத்து ஓடுவதற்குத் தண்ணீரின்றிக் காய்ந்து கிடக்கும் ஓடை, இலைகள் உதிர்ந்து கிளைகளோடு மட்டும் காட்சிதரும் ஒற்றை மரம் ஆகியவற்றைப் போன்றதுதான் என் அரசியல் வாழ்வும். உண்மை பேசினால் உயரமுடியாது என்று உணர்ந்த பின்பும், பொய்யை விலை பேசி விற்பவருக்குத் தான் பதவியும் அதிகாரமும் வந்து சேரும் என்பதைப் பூரணமாக அறிந்த பின்பும், நேர்மையுடன் … Continue reading “இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை” : தமிழருவி மணியன்
“வேதனையும் விரக்தியும் மேலெழுந்து நிற்கின்றன”
தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கருத்து: ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 1984 முதல் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் தமிழகத்து ஆட்சி நாற்காலியில் மாறி மாறி அமரும் சூழல் இன்று முறியடிக்கப்பட்டு அ.தி.மு.க.,வே மீண்டும் ஆட்சியில் தொடரும் நிலை வாய்த்திருக்கிறது. இது முதல்வர் ஜெயலலிதாவின் அதீத நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றாலும் இந்த முடிவு ஆரோக்கியமான அரசியல் நடவடிக்கைகளையும், ஊழலற்ற ஆட்சிமுறையையும், நேர்த்தியான நிர்வாகத்திறனையும் ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க … Continue reading “வேதனையும் விரக்தியும் மேலெழுந்து நிற்கின்றன”
ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?
யுவகிருஷ்ணா தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது. இனி ஜெயா அரசு காபந்து அரசுதான். இன்னுமா விகடனாருக்கு பயம்? அண்ணன் ப.திருமாவேலன் அவர்கள் இவ்வார விகடனில் எழுதியிருக்கும் ’இன்னும் எத்தனை நாடகங்கள்?’ கட்டுரை, ஜெயலலிதாவையும் கலைஞரையும் ஈழப்பிரச்சினையில் ஒரே தராசில் சரிக்கு சமமாக நிறுத்திவைக்க முயற்சிக்கிறது. மநகூ என்கிற அதிமுகவின் ‘பீ’ டீம் செய்யும் அதே வேலையைதான் விகடனும் செய்கிறது. ஈழப்பிரச்சினையில் கலைஞர் என்ன சொல்கிறாரோ, அதற்கு நேரெதிரான கருத்தை ஜெ. சொல்லுவார் என்று கட்டுரை சொல்கிறது. உண்மைதான். … Continue reading ஈழப்பிரச்சினையை வணிகமாக்கும் ஊடகங்கள்: திமுகவையும் அதிமுகவையும் ஒரே கோட்டில் நிறுத்துவது சரியா?
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தவர் ஜெயலலிதா: தமிழருவி மணியன்
“இன்று முதல்வராக இருக்கும் ஜெயலலிதா 2001ல் 2-வது முறையாகப் பொறுப்பேற்ற பின்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு ஆகமங்களில் முறையாகப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்ததோடு நில்லாமல் ஆகமப்பயிற்சி வகுப்புகள் ஆலயங்களில் அரங்கேறுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.” என்று தெரிவித்திருக்கிறார் காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று காலம் முழுவதும் பெரியார் குரல் கொடுத்தார். அரசியல் ரீதியாக … Continue reading அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தவர் ஜெயலலிதா: தமிழருவி மணியன்