ஸ்வர்ணமால்யா, மணிமேகலை, ரம்யா வாக்களித்தனர்!

நாட்டியக் கலைஞரும் நடிகருமான ஸ்வர்ணமால்யா வாக்களித்தார். https://twitter.com/journovivek/status/732055316095885312 தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மணிமேகலை வாக்களித்தார். https://twitter.com/Manivj07/status/732055206242848768 ரம்யா வாக்களித்தார். https://twitter.com/ramyavj/status/732058355565355008

நியூஸ் 7 தமிழ்-தினமலர் கருத்து கணிப்பின் நம்பகத்தன்மை என்ன?

ஊடகங்கள் வெளியிடும் கருத்து கணிப்புகள் குறித்து சில சமூக ஊடக பதிவுகள்... அருணன் முரணான முடிவுகள் சொல்லும் கணிப்புகள்! ஒரு டி வி அதிமுகதான் ஜெயிக்கப் போகிறது என்கிறது! இன்னொரு டி வி திமுக தான் ஜெயிக்கப் போகிறது என்கிறது! வேடிக்கை என்னவென்றால் இரண்டு டி வி  களும் தங்களதே விஞ்ஞானபூர்வமான பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு என்று மார்தட்டிக் கொள்கின்றன. அப்படியெனில் இரண்டும் ஏன் முற்றிலும் முரணான முடிவை சொல்கின்றன? இதிலிருந்தே விஜயகாந்த் சரியாகச் சொன்னதுபோல இது கருத்து  திணிப்பு என்பது உறுதியாகிறதல்லவா? … Continue reading நியூஸ் 7 தமிழ்-தினமலர் கருத்து கணிப்பின் நம்பகத்தன்மை என்ன?

கருத்து கணிப்புகள் எப்படி பொய்த்து போகின்றன? என் டி டீவி பிரணாய் ராய் அனுபவம்!

தேர்தல் காலத்தில் கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்துள்ளன. தங்களுக்கு சாதகமாக இருந்தால் கொண்டாடுவதும், எதிராக இருந்தால் வெளியிட்ட ஊடகங்கள் மீது சேற்றை வாரிப் பூசுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. கருத்து கணிப்புகள் நடைபெற இருக்கும் தேர்தலில் எத்தகைய தாக்கத்தை செலுத்தப் போகின்றன? கருத்து கணிப்புகள் மெய்யாகின்றனவா? என்பதை பேசும் முன் கருத்து கணிப்பு குறித்து இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றின் சமீபத்திய அனுபவத்தைப் பார்ப்போம். “உலகளாவிய அளவில் கருத்து கணிப்புகள் பொய்த்து வருகின்றன. கிரீஸ், துருக்கி, பிரிட்டன் … Continue reading கருத்து கணிப்புகள் எப்படி பொய்த்து போகின்றன? என் டி டீவி பிரணாய் ராய் அனுபவம்!

இஸ்லாமிய கைதிகள் விடுதலை; மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை 130 தலைப்புகளில், 80 பக்கங்கள் கொண்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: முழு அறிக்கையும் இங்கே படிக்கலாம்... ஒரு கட்சி ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, கூட்டணி அரசு அமைக்கப்படும். அதிமுக திமுக உண்மையான மக்கள் நல அரசாக இல்லாமல் கார்ப்பரேட் ஆதரவு அரசாகவே இயங்கின. உண்மையான மக்கள் நல அரசை தேமுதிக - மநகூ- தமாகா ஆட்சி வழங்கும். விவசாய கடன்கள் உடனே ரத்து செய்யப்படும். விவசாயிகளுக்கு கடன் நிவாரணச் சட்டம் … Continue reading இஸ்லாமிய கைதிகள் விடுதலை; மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை

தேவர் சமாதிக்குச் சென்று சேர்த்த புகழை வைகோ இப்படியா இழப்பது?

ஸ்டாலின் ராஜாங்கம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்பதற்காக அதீத நடுநிலை, தன்னை முன்னிறுத்தல், இவற்றுக்கான மிகை உணர்ச்சி போன்றவற்றால் வைகோவுக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டிருப்பதே அனுபவம்.ஆனால் சூழ்நிலைகளுக்கேற்ப பார்த்து பார்த்து திட்டமிடுபவர்களை காட்டிலும் வைகோவின் கவன ஈர்ப்பு அரசியல் அவர் அறிந்தோ அறியாமலோ சில வேளைகளில் நேர்மறை அம்சங்களை நோக்கியும் நகர்த்திவிடுகிறது போலும். இத்தேர்தலில் கருணாநிதி மீது சாதிய வசை,மறுநாளே அதற்கு நேரெதிர் முனையில் நின்று மன்னிப்பு, பிரச்சார கூட்டத்தில்(மதுரை) முத்துராமலிங்கத்தேவர், காமராசர், இம்மானுவேல் சார்ந்த நடுநிலை … Continue reading தேவர் சமாதிக்குச் சென்று சேர்த்த புகழை வைகோ இப்படியா இழப்பது?

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களைப் பாதிக்கும் எந்தப் போராட்டத்தில் திமுக பங்கெடுத்தது?

 முகிலன் தி.மு.க.வினர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடங்குளம் அணு உலையை எதிர்த்த போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவோம் என அறிவித்து உள்ளனர். கூடங்குளம் அணு உலை பிரச்சினையில் கடந்த 1987 முதல் தொடர்ந்து நடந்து வரும் போராட்டமும், கடந்த 2011 ஆகஸ்டு முதல் கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருப்பதும், பாசிச ஜெயலலிதா அரசு எங்கள் மீது போட்டுள்ள நூற்றுக்கணக்காண பொய் வழக்குகளை திரும்பப் பெற வைப்பதற்காக … Continue reading கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களைப் பாதிக்கும் எந்தப் போராட்டத்தில் திமுக பங்கெடுத்தது?

எங்கிருந்து வந்தது முதலை? விளம்பர தட்டியில் தெறிக்க விட்ட பாமகவினர்…

பாமக திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் நேற்று அக்கட்சியின் , மதுரவாயல் தொகுதி செயல் வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடந்த தனியார் திருமண மண்டபத்திற்குள் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டியில் "முதலமைச்சர் வேட்பாளர்" என்பதற்கு பதிலாக "முதலை"மைச்சர்,  என்று எழுதப்பட்டிருந்தது கூட்டத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது .   கூட்டத்திற்கு வந்த மாவட்ட செயலாளர் டெல்லி பாபு, அந்த தவறை சுட்டிக்காட்டியதை அடுத்து, பேப்பர் ஒட்டி "முதலை"  மறைக்கப்பட்டது.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு: ஜெயலலிதா

வருகிற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகினார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், அதிமுக மீண்டும் ஆட்சி வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார். https://twitter.com/Ram_TNIE/status/718774321393455104

காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதி?

 வரும் மே மாதம் 16-ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1. திருத்தணி 2. அம்பத்தூர் 3. ராயபுரம் 4. மயிலாப்பூர் 5. மதுரவாயல் 6. ஆற்காடு 7. ஸ்ரீபெரும்புதூர் 8. ஓசூர் 9. கலசபாக்கம் 10.செய்யாறு 11.ஆத்தூர் 12.சங்ககிரி 13.நாமக்கல் 14.கோபிச்செட்டிப்பாளையம் 15.உதகமண்டலம் 16.காங்கயம் 17.தாராபுரம் 18.சூலூர் 19.கோவை தெற்கு 20.வேடச்சந்தூர் 21.கரூர் 22.திருச்சி கிழக்கு 23.முசிறி 24.ஜெயங்கொண்டம் 25.காட்டுமன்னார்கோவில் 26.வேதாரண்யம் … Continue reading காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதி?

கேட்ட தொகுதியை திமுக தரவில்லை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட முடிவு

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இன்று 41 இடங்கள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டன. அதில் அரவக் குறிச்சி தொகுதி இடம்பெறவில்லை. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, தேர்தல் தேதி அறிவித்தவுடன் அரவக் குறிச்சி தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்கினார். தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட அவருக்கு திமுக அரவக் குறிச்சியை ஒதுக்கும் என்றே சொல்லப்பட்டது.  ஆனால், அறிவிப்பில் அந்தத் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து தனது முகநூலில் ஜோதிமணி, “அரவக்குறிச்சி தொகுதியில் மட்டுமே போட்டியிடும் எனது முடிவில் எந்த மாற்றமும் … Continue reading கேட்ட தொகுதியை திமுக தரவில்லை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி சுயேச்சையாக போட்டியிட முடிவு

திமுக தலைவர் கருணாநிதி தாயுள்ளத்துடன் என்னை மன்னிக்க வேண்டும்: வைகோ

திமுக தலைவர் கருணாநிதி தாயுள்ளத்தோடு என்னை மன்னிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று 6.4.2016 ஆம் நாளன்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விளக்கம் அளித்தேன். அக்கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும், சில மாவட்டச் செயலாளர்களும் அக்கட்சித் தலைமை சட்டமன்றத் தேர்தல் குறித்து மார்ச் 23 ஆம் தேதியன்று எடுத்த முடிவுக்கு … Continue reading திமுக தலைவர் கருணாநிதி தாயுள்ளத்துடன் என்னை மன்னிக்க வேண்டும்: வைகோ

‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்

வா. மணிகண்டன் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை ஐவர் அணி காலி செய்யப்பட்டுவிட்டது. சென்னையை விட்டு விரட்டியடிக்கப்பட்ட செந்தில்பாலாஜி காணாமல் போய்விடுவார். ராஜேந்திர பாலாஜி, ராமஜெயம் போன்ற வாட்ஸ்-அப் புகழ் வேட்பாளர்களுக்கு இடமிருக்காது என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்ற செயல்பாடற்ற ஆட்சியின் அத்தனை கழிசடைத்தனங்களும் எம்.எல்.ஏக்களாலும் மந்திரிகளாலும்தான் செய்யப்பட்டவையே தவிர அம்மா ஒரு அப்பாவி எனவும் அவருக்கும் கடந்த ஐந்தாண்டுகளின் அசமஞ்சத்தனத்துக்கும் சம்பந்தமேயில்லை என்று கட்டமைக்கப்பட்ட … Continue reading ‘அடேயப்பா…234 தொகுதியிலும் இரட்டை இலையா?’; ஊடகங்கள் கட்டமைக்கும் அம்மா எனும் புனித பிம்பம்

அதிமுக வேட்பாளர் பட்டியல்: 33 பெண்களில் 10 பேர் தனி தொகுதிகளில் போட்டி!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 33 பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் பத்து பேர் தனி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ஒருவர் பழங்குடிகளுகான தொகுதியில் போட்டியிடுகிறார்.  அதுபோல மத சிறுபான்மையின பெண்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆர். கே. நகர் - ஜெ. ஜெயலலிதா  ஆயிரம் விளக்கு - வளர்மதி அண்ணா நகர் -  கோகுல இந்திரா 4 .  மண்ணச்சநல்லூர் - பரமேஸ்வரி முருகன்  திருச்சிராப்பள்ளி (மேற்கு)- டாக்டர் எஸ்.. தமிழரசி 6.  தியாகராயநகர் - சரஸ்வதி ரெங்கசாமி 7. காஞ்சிபுரம் - மைதிலி திருநாவுக்கரசு … Continue reading அதிமுக வேட்பாளர் பட்டியல்: 33 பெண்களில் 10 பேர் தனி தொகுதிகளில் போட்டி!

#ஆடியோ: அதிகாரியிடம் ‘மரியாதை’யாக பேசிய செல்வி ராமஜெயத்துக்கு அதிமுக செய்த ‘மரியாதை’! 

புவனகிரி வட்டாட்சியராக இருப்பவர் ராஜவேல். இவரிடம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவும், முன்னால் அமைச்சருமான செல்வி ராமஜெயம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். கடந்த ஆண்டு பெய்த கன மழை பெருவெள்ளத்தால் கடலூர் மாவட்டமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ள நிவாரணம் குறித்து வட்டாட்சியரிடம் எம்.எல்.ஏ கேட்டுள்ளார். பல பகுதிகளில் வெள்ள நிவாரணமே வரவில்லை. எங்களுக்குக் கெட்ட பெயர் வர வேண்டும் என்றே நடக்கிறீர்களா என்று ஆரம்பத்தில் நிதானமாகப் பேசுகிறார். அதற்கு வட்டாட்சியர் மேடம் நீங்க எதுவா … Continue reading #ஆடியோ: அதிகாரியிடம் ‘மரியாதை’யாக பேசிய செல்வி ராமஜெயத்துக்கு அதிமுக செய்த ‘மரியாதை’! 

ஜி.கே. வாசனுக்கு அதிமுக கூட்டணியில் இடமில்லை!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. கே. வாசன், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிவந்தன். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அதிமுக 227 தொகுதிகளிலும் தோழமைக் கட்சிகள் ஏழு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதில் தாமக இடம்பெறவில்லை. எனவே, அதிமுக உடனான தாமக கூட்டணிக்கான வாய்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கருணாஸ், சரத்குமாருக்கு அதிமுக தொகுதி ஒதுக்கீடு

நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியிலும் நடிகர் கருணாஸ் திருவாடாணை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ஆர். கே. நகர் தொகுதியில் மீண்டும் ஜெயலலிதா;அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

மே 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. மீண்டும் ஆர். கே. நகர் தொகுதியில் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். அதிமுக 227 தொகுதிகளிலும் தோழமைக் கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. புதுச்சேரியில் 30 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஜெ ஜெயலலிதா கும்மிடிபூண்டி - கே.எஸ். விஜயகுமார் பொன்னேரி (தனி) - சிறுணியம் பி.பலராமன் திருத்தணி - பி.எம்.நரசிம்மன் திருவள்ளூர் - ஏ.பாஸ்கரன் பூந்தமல்லி … Continue reading ஆர். கே. நகர் தொகுதியில் மீண்டும் ஜெயலலிதா;அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

‘போட்டீங்களா’ : ஆர்ஜே. பாலாஜியின் இரட்டை அர்த்த வீடியோ இறுதியில் எதை வலியுறுத்துகிறது?

வரவிருக்கிற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் ஓட்டுப் போடுவது, காசுக்கு ஒட்டுப் போடக் கூடாது அல்லது ஓட்டுப் போடாதீர்கள் என பலவகையிலும் விழிப்புணர்வு  பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஓட்டுப் போடுவது குறித்து ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் ‘போட்டீங்களா’ என்ற பெயரில் இரட்டை அர்த்தம் தொனிக்கும் ‘விழிப்புணர்வு’ பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார். http://www.youtube.com/watch?v=bGk9u3hIlyc இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனம் கிளம்பியிருக்கிறது. ஓசை செல்லா ‪#‎ஆர்ஜேபாலஜிக்கு_கண்டனம்‬ : மொழி என்பது ஒருவித உணர்வின்பால் மக்களின் அன்றாட உபயோகத்தின் பால் … Continue reading ‘போட்டீங்களா’ : ஆர்ஜே. பாலாஜியின் இரட்டை அர்த்த வீடியோ இறுதியில் எதை வலியுறுத்துகிறது?

திருமண மண்டபத்தில் கூட தீண்டாமை: காங்கேயம் அதிமுக எம் எல் ஏ நடராஜனுக்குச் சொந்தமான மண்டபத்தில் தலித் திருமணங்கள் நடத்த முடியாது!

தமிழகத்தின் கொங்கு மண்டலம் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளை அரங்கேற்றுவதில் தனி முத்திரை பதித்துவருகிறது. தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலைப் பேட்டை சங்கர் என சாதிய வன்மத்துக்கு தலித் இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கொங்கு பகுதியில் நிலவிவரும் சாதியம், தீண்டாமை குறித்து புலனாய்வு செய்தி ஒன்றை வழங்கியிருக்கிறது. இதில், கொங்குமண்டலத்தின் பல பகுதிகள் குறிப்பாக, வெள்ளக் கோயில், காங்கேயம் போன்ற பகுதிகளில் தலித்துகள் கோயில்களில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டு வருவதாகவும் ஒடுக்கும் … Continue reading திருமண மண்டபத்தில் கூட தீண்டாமை: காங்கேயம் அதிமுக எம் எல் ஏ நடராஜனுக்குச் சொந்தமான மண்டபத்தில் தலித் திருமணங்கள் நடத்த முடியாது!

இந்தியாவின் ஹெல்மெட் “அம்மா”வா?- அதிமுக.வினரின் தேர்தல் அட்ராசிட்டி !!!

திண்டிவனம் அருகே ஓமந்தூரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியின் பின் பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஹெல்மெட், குக்கர்கள் போன்ற பரிசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பறக்கும் படை அதிகாரி யுவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஹெல்மெட், குக்கர் ஆகியன ஆங்காங்கே சிதறி கிடந்தன. அவை அனைத்திலும் ஜெயலலிதாவின் படம் ஒட்டப்பட்டு … Continue reading இந்தியாவின் ஹெல்மெட் “அம்மா”வா?- அதிமுக.வினரின் தேர்தல் அட்ராசிட்டி !!!

குஷ்பூவுக்கு எதிராக களமிறங்கும் கி. வீரலட்சுமி!

நடைபெற இருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலில் குஷ்புவுக்கு எதிராக களமிறங்கப் போவதாக தெரிவித்திருக்கிறார் மிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி. தன்னுடைய நிலைத் தகவலில், “காங்கிரஸ் கட்சியை சார்ந்த நடிகை குஷ்புவை எதிர்த்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உங்கள் அன்பு சகோதரி போட்டியிடுகிறேன் உறவுகளே” என  தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி  தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக சாலை;காயாத சிமென்ட்டில் வழுக்கி விழும் மக்கள் : சென்னை மாநகராட்சியின் தேர்தல் நேர இம்சைகள் !!!

தேர்தல் வருவதை ஒட்டி, சென்னை முழுவதும் சிதைந்து சீரழிந்து கிடந்த சாலைகளை செப்பனிடும் பணியில் சென்னை மாநகராட்சி மும்முரமாக இறங்கியுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சியின் ஆர்வக்கோளாறு காரணமாக, காயாத பச்சை சிமென்ட்டில் கால் பதித்து நடந்து, வழுக்கி விழுந்து என்று, பொது மக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். அமிஞ்ஜிக்கரை பகுதியில் உள்ள அருணாச்சலபுரத்தில் இரண்டு நாட்களுக்கு முன், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நள்ளிரவில் சாலை போடத்துவங்கி, அதிகாலை நான்கு மணியளவில் அந்த பணியை முடித்திருக்கின்றனர் மாநகராட்சி … Continue reading இரவோடு இரவாக சாலை;காயாத சிமென்ட்டில் வழுக்கி விழும் மக்கள் : சென்னை மாநகராட்சியின் தேர்தல் நேர இம்சைகள் !!!

சிறுமிக்கு பச்சை குத்திய விவகாரம்: ஒ.பி.எஸ் உட்பட ஐந்து அமைச்சர்கள் மீது மனித உரிமை மீறல் புகார்!!

கடந்த மாதம் 24 ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அதில் ஒருபகுதியாக சென்னை வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் கண்ணீரும் கம்பலையுமாக பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் முதல்வர் … Continue reading சிறுமிக்கு பச்சை குத்திய விவகாரம்: ஒ.பி.எஸ் உட்பட ஐந்து அமைச்சர்கள் மீது மனித உரிமை மீறல் புகார்!!

ஊர் சுவரில் ஒட்டியதுபோக பெயர்ப்பலகையை ஆக்கிரமித்த ”அன்புமணி ஆகிய நான்…”

அண்மையில் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணியை முன்னிலைப்படுத்தி வெளியிடப்பட்ட போஸ்டர் சோளிங்கர் அருகே ஐப்பேடு கிராம பெயர்ப் பலகையின் மேல் ஒட்டப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு தாங்கள் மாற்றாக இருப்போம் என சொல்லிக்கொள்ளும் பாமக, அதே வழியில் பொது இடங்களிலும் அதற்கு மேலே போய் பெயர்ப் பலகையிலும் போஸ்டர் ஒட்டியிருப்பதை சமூக ஊடகங்கள் பகடி செய்கின்றன. படம்:Surendran Sugi

#Exclusive: அம்மா ப்ரீஃப்கேஸ்;செருப்பில்லாத பாதம்;தனிமுத்திரையுடன் ஐந்தாவது பட்ஜெட்டை நிறைவு செய்த ஓ.பி.எஸ்!

2011 முதல் 2016 வரையிலான ஆட்சியில், நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பற்றிய கட்டுரை அல்ல இது. பட்ஜெட் தாக்கலின் போது, அறிமுகபடுத்தப்பட்ட அம்மா ப்ரீஃப்கேஸ், செருப்பில்லாத தன்னடக்கம் பற்றிய கட்டுரை. 2011-2012-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது. அந்த ஆண்டு, நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தன்னுடைய காலில் செருப்புடன் இருந்திருக்கிறார். பட்ஜெட் பேப்பர்கள் அடங்கிய ப்ரீஃப்கேஸில் முதலமைச்சர் ஜெயலலிதா படம் இடம்பெற்றது அந்த ஆண்டில்தான். 2012-2013 -ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது.  நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் … Continue reading #Exclusive: அம்மா ப்ரீஃப்கேஸ்;செருப்பில்லாத பாதம்;தனிமுத்திரையுடன் ஐந்தாவது பட்ஜெட்டை நிறைவு செய்த ஓ.பி.எஸ்!