அதிமுகவின் வெற்றிகரமான தோல்விக்கு என்ன காரணம்? | அருண் நெடுஞ்செழியன்

அருண் நெடுஞ்செழியன் இந்த மீம்ஸ் சிரிக்க வைத்தது போல உண்மையான காரணம் குறித்தும் சிந்திக்க வைப்பதாக உள்ளது.. இருநூறு தொகுதிக்கு மேலே வென்று திமுக கூட்டணி கிளீன் ஸ்வீப் செய்யும் என எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையிலே சுமார் 160 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருப்பதும் சுமார் 75 தொகுதிகளில் அஇஅதிமுக முன்னிலை பெற்றுள்ளதும் எடப்பாடி ஆட்சிக்கு ஒரு வெற்றிகரமான தோல்வியாக அமைகிறது.அதிமுகவில் ஜெயலலிதா இல்லாமல், பத்தாண்டு கால ஆளும்கட்சி எதிர்ப்புணர்வை எதிர்கொண்டும், பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தும் பாஜகவை … Continue reading அதிமுகவின் வெற்றிகரமான தோல்விக்கு என்ன காரணம்? | அருண் நெடுஞ்செழியன்

சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?

நரேன் ராஜகோபாலன்முட்டாளாக போகும் தமிழக வாக்காளனுக்கு, ஒன்றும் செய்ய முடியாத, கையறு நிலையில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு குடிமகன் எழுதுவது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக வேட்பாளரும், இளைஞரணி தலைவருமான திரு. எஸ். உதயநிதி வேட்பு மனு தாக்கலின் போது சமர்பித்த affidavit விவரங்களை நேற்று பதிந்து இருந்தேன். சிரிக்கிறதுக்கான மேட்டர் இல்லை அது, ரொம்ப சீரியசான மேட்டர். உதயநிதி சமர்ப்பித்ததில் அவருடைய வருவாய் ரூ. 1,50,17,700 (2017-18) ரூ. 4,00,090 (2018-19) ரூ. 4,89,520 (2019-20) என்று சொல்லப்பட்டு … Continue reading சினிமாவில் நடிக்க உதயநிதி ரூ. 30 ஆயிரம்தான் சம்பளம் வாங்கினாரா?

இப்போது ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும். ஏன் தெரியுமா?

க.ராஜீவ் காந்தி'ரஜினியாக இருப்பதன் கஷ்டம் ரஜினிக்கு தான் தெரியும்...' இந்த வாக்கியம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது ரஜினியை அதிகமாகவே பிடிக்கிறது. காரணம் அவர் எடுத்த முடிவுக்கு பின்னால் இருக்கும் துணிச்சல். உண்மையில் ரஜினி கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்குவதைவிட இப்படி வரவில்லை என்று அறிவிக்கத் தான் அதிக துணிச்சல் தேவைப்பட்டது. காரணம் ரஜினியை சூழ்ந்திருந்த நெருக்கடி. டிசம்பர் 3ந்தேதி அரசியல் கட்சியை அறிவித்தபோது ரஜினியை கவனித்தவர்களால் இதை உணர முடியும். வழக்கமான ரஜினியாகவே அப்போது அல்ல... … Continue reading இப்போது ரஜினியை ஆதரித்தே ஆகவேண்டும். ஏன் தெரியுமா?

#அரசியல்வாதியின் அன்பு: பணியிலிருந்து ஓய்வுபெறும் மனைவிக்கு ஜி.ராமகிருஷ்ணன் என்ன செய்தார்?

பணியிலிருந்து ஓய்வு பெறும் தன் மனைவிக்கு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்த மரியாதை இது... “எனக்கும், வாழ்க்கைத் துணைவியார் ரீடாவுக்கும் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி திருமணமானது. அன்றுவரை வழக்கறிஞராக இருந்தவன், திருமணமான அடுத்த நாளில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானேன். கட்சியிலிருந்து பெறும் ஊதியம் (அலவன்ஸ்) மட்டுமே வாழ்க்கைக்கு என்ற நிலையில், எனது துணைவியார் 1984 ஆம் ஆண்டு நூலகராக பணியைத் தொடங்கினார். … Continue reading #அரசியல்வாதியின் அன்பு: பணியிலிருந்து ஓய்வுபெறும் மனைவிக்கு ஜி.ராமகிருஷ்ணன் என்ன செய்தார்?