தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்: அன்புமணி

தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசின் நிதிச்செயல்பாடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான வினாக்களை எழுப்பியிருக்கிறது. இந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் நியாயமானவை; தமிழகத்தின் நிதிநிலைமை உயிரோட்டத்துடன் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக நாடித்துடிப்பை சோதித்து பார்க்கும் நோக்கம் கொண்டவை. ஆனால், இந்த வினாக்களுக்கு தமிழக அரசிடம் பதில் இல்லை என்பது தான் சோகம். … Continue reading தமிழக நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்: அன்புமணி

பத்தி: காவிரி, பாலாறு பிரச்சினையைவிட சசிகலா புஷ்பாவை சிறையில் அடைப்பதுதான் தமிழக அரசுக்கு முக்கியமா?

ஜி. கார்ல் மார்க்ஸ் ஜெயலலிதாவின் ஆட்சி என்பது அதிகார துஷ்பிரயோகத்துக்கு எப்போதுமே பெயர் போனது. கிட்டத்தட்ட அதுவொரு சர்வாதிகார ஆட்சி. அதே சமயம் சுரண்டப்படும் மக்களின் முன்னால், அதுவரை அதிகாரத்தை சுவைத்துக்கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி செருப்பால் அடிப்பதன் மூலம் மக்களை கிளுகிளுப்புக்கு உள்ளாக்குவதும் அவரது வாடிக்கை. இது அவரது எல்லா ஆட்சிக் காலத்திலும் நடக்கும். இதற்கு சமீபத்திய உதாரணம் சசிகலா புஷ்பா விவகாரம். அவரது குடும்பத்தினர் மீது, அவர்களது வீட்டில் வேலை செய்தவர்கள் கொடுத்த பாலியல் அத்துமீறல் … Continue reading பத்தி: காவிரி, பாலாறு பிரச்சினையைவிட சசிகலா புஷ்பாவை சிறையில் அடைப்பதுதான் தமிழக அரசுக்கு முக்கியமா?

மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக பல மாநிலங்கள் நீதிமன்றத்தில் மனு; தமிழக அரசு செய்யவில்லை

அகில இந்திய அளவில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக கர்நாடகா, உத்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திர மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றன. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக அரசு மனுதாக்கல் செய்யவில்லை.

எழுவரை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை செயலர் ராஜிவ் மெஹ்ரிஷிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் கடந்த மார்ச் 2-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரும் ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று விடுவிக்க அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏழு பேரையும் … Continue reading எழுவரை விடுதலை செய்ய முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

#வீடியோ: மலம்கழிக்கும் கூடமாக மொழிப் போர் தியாகி தாளமுத்து நடராசனாரின் நினைவிடம்?

மொழிப் போர் தியாகி தாளமுத்து நடராசனாரின் நினைவிடம் மலம்கழிக்கும் கூடமாக மாறியிருக்கிறது. இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார் தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி. தமிழக அரசு உடனடியாக பராமரிப்புப் பணிகளைச் செய்யாவிட்டால், சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் வீரலட்சுமி சொல்லியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=w6xfqiMkQJw

#வீடியோ: மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் போலீஸின் அடக்குமுறையை இந்தப் பெண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பாருங்கள்!

அரசு பணிகளில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு, உதவித்தொகையை ரூ.1000-இருந்து ரூ 5000 ஆக உயர்த்த வேண்டும் உட்பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் திங்கள் கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சென்னை காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு, திங்கள் கிழமை மாலை வேப்பேரியில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு குடிநீர், கழிப்பறை, உணவு ஆகிய அடிப்படை வசதிகள் எதுவும் அவர்களுக்கு செய்து தரப்படவில்லை என … Continue reading #வீடியோ: மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் போலீஸின் அடக்குமுறையை இந்தப் பெண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பாருங்கள்!

‘வெள்ள பாதிப்புக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண உதவி போதுமானது அல்ல!’

“தமிழ்நாட்டில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை அரசு அறிவித்திருக்கிறது. வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த நிவாரண உதவி யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதை விட மிகவும் குறைவாகும். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது”