திருமுருகன் காந்தி ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனத்திலோ, அல்லது அரசின் ஒப்பந்த தொழிலையோ, அரசியல்வாதியாகவோ மாறி மக்கள் விரோத நகர்வுகளை செய்வதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். இந்நிலையில் ஓய்வு பெற்ற பின்னரும், தங்களது பணியை நிறுத்தாமல் அரசு நிறுவனங்கள் மக்கள் விரோத அரசியலை செய்வதை தடுக்க சில முன்னாள் அரசு பொறியாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. முல்லைப்பெரியாறு அணைக்காக்கும் ஆவணப்படத்தினை முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செய்தார்கள். இன்றும் தொடர்கிறார்கள். அவர்கள் … Continue reading ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!
Tag: தனியார்மயம்
சென்னை பள்ளிகளில் உங்கள் பிள்ளையை விற்க போகிறீர்களா?; அப்படியெனில் விலையைத் தெரிந்து கொள்ளுங்கள் !!!
சென்னையில் உள்ள பிரபல பள்ளிகளில், புது வருடத்திற்கான சேர்க்கை தொடங்கி விட்டது. விண்ணப்பங்களை வாங்குவதற்காக இரவும் பகலுமாக சாலையில் தவம் கிடக்கும் பெற்றோர்களின் புகைப்படங்களை பத்திரிக்கைகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும். விண்ணப்பம் பெறும் பெற்றோர்கள் எல்லாம், தங்கள் பிள்ளைகளுக்கு அந்த பள்ளிகளில் இடம் வாங்கி விடுகிறார்களா ? என்றால் இல்லை. அடித்து பிடித்து முதலில் நின்று விண்ணப்பம் வாங்கினால் கூட, "கையெழுத்திட்ட வெற்று காசோலையோடு" நிற்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்குதான் அங்கு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. சென்னையின் பிரபல … Continue reading சென்னை பள்ளிகளில் உங்கள் பிள்ளையை விற்க போகிறீர்களா?; அப்படியெனில் விலையைத் தெரிந்து கொள்ளுங்கள் !!!
ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி
நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜவஹர் லால்நேரு பல்லைக் கழகம் மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் ஆகியவற்றில் நடை பெற்றுவரும் நிகழ்வுகளால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து குறுகிய கால விவாதம் வியாழன் அன்று நடை பெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசினார். அதன் தமிழாக்கத்தை தீக்கதிர் வெளியிட்டிருக்கிறது. உரையின் முக்கியத்துவம் கருதி அதை இங்கே நன்றியுடன் மறுபதிப்பு செய்கிறோம். தமிழாக்கம்: ச. வீரமணி “நான் இந்தப் பிரச்சனைகள் மீது மிகவும் பொறுக்கமுடியாத மன வேதனை, மனக் கவலை … Continue reading ஸ்மிருதி இரானியின் ‘நாடக உரை’க்கு விளக்கவுரை தந்த சீதாராம் யெச்சூரி
உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!
2007-ஆம் ஆண்டு சென்னை தி. நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனை மருத்துவர் பழனி ரவிச்சந்திரன் அப்பாவிகளை ஏமாற்றி சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு பிடிபட்டார். அவுட் லுக் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் 471 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் ரூ. 100 கோடிக்கு மேல் இதன் மூலம் பணம் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பாரதிராஜா மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. சென்னை கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர். இவரது மனைவி அமுதா (35). தி.நகரில் … Continue reading உஷார்!:கிட்னி திருட்டுக்கு புகழ்பெற்ற பாரதிராஜா மருத்துமனை இப்போது, உடல் எடை குறைப்பு சிகிச்சையில் இறங்கியிருக்கிறது!
ரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது விவகாரம், சத்தீஸ்கரில் போராளிகள், பத்திரிகையாளர் மீது தாக்குதல், ஜாட் சமூகத்தினரின் போராட்டம் என ஊடகங்கள் பரப்பரக்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஒரு முக்கியமான செய்தியை ஊடகங்கள் ‘கண்டுகொள்ளாமல்’ இருக்கின்றன. கண்டுகொள்ளவில்லை என்பதைவிட, அது தம் எஜமானர் விஷயத்தில் தலையிடுவது போன்றதாகிவிடும் என்கிற பயமும் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் பெரிய ஊடக குழுமங்களில் ஒன்றான நெட்வொர்க் 18 குழுமத்தின் முதலீட்டாளர் முகேஷ் அம்பானி குறித்து செய்திகள் வெளியிடுவதில் கலக்கம் … Continue reading ரிலையன்ஸ் உருவாக்கும் இராணுவம்: இந்திய இராணுவத்தில் பணியாற்றிய 16 ஆயிரம் வீரர்கள் தேர்வு!